பாகம் 28
Date published: 9 April 2022
Word count: 1608
🦋🦋
டைரியில் எழுதபட்டிருந்ததை படித்ததில், தான் யாரையோ விரும்பியிருக்க கூடும் என்ற அவளது முந்தைய சந்தேகத்தை ஊர்ஜிதபடுத்தியது.
'ஆனா ஒருவேளை அது சிவா இல்லாம வேற யாராச்சும் இருந்தா?'
பதற்றம் தொற்றிகொண்டது, நெஞ்சை அடைத்தது துக்கம், யாருக்கோ துரோகம் இழைத்துவிட்டதாய் உணர்வு.
யோசித்துகொண்டே அடுத்த பக்கத்தை புரட்ட, விஷ்வா மீதான தனது விருப்பத்தை மிக தெளிவாக வெளிப் படுத்தியிருந்தாள் ஒரு கவிதையின் மூலமாக.
🦋🦋🦋
கனவுலகில் புதிதாய் ஓர் உதயம், உன் கால்தடம்,
நினைவுப் பெட்டகத்தில் நிறைந்திருக்கும் பொக்கிஷம், உன் ஞாபகம்
நகரத்தின் பேரிரைச்சலில் ஓர் மௌனம், உன் புன்னகை
தொடும் பூந்தென்றலில் ஓர் ஸ்பரிஸம், உன் தீண்டல்
தகிக்கும் வெயிலில் குளிர்விக்கும் நிழல், உன் அன்பு
நான்கு பேர் மத்தியிலும் நாற்பது பேர் மத்தியிலும் உணர்கிறேன் உன்னை
கை தொடும் தூரத்தில் இருந்தும்
கண்ணாமூச்சி ஏனோ மாயவனே?
கைநீட்டி அழைக்கிறேன்
உனக்காக காத்திருக்கிறேன் என் சிவா..
🦋🦋🦋
இமைக்க மறந்து, சுவாசிக்க மறந்து சிலையாய் சமைந்திருந்தாள் அன்னப்பூரணி. சுற்றம் மறந்து, இயக்கம் மறந்து, நினைவலைகளின் ஊடே தத்தளித்திருந்தாள். தனது யூகம் சரியாக அமைந்துவிட்ட திகைப்பா, அல்லது விஷ்வாவிடம் முன்பிருந்தே காதல் வயப்பட்டிருந்தாள் என்பதால் திகைப்பா? இரண்டுமே தான்!
ஏதோ சடசடக்கும் ஓசை கேட்க நினைவு கலைந்தவள் ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை சமன் செய்து கொண்டாள். மடியில் கிடந்த டைரியின் பக்கங்கள் காற்றில் ஆடியது, ஆனால் சரசரவென கேட்ட ஓசை அதுவல்ல. பக்கங்களை புரட்டியவளின் கண்ணில் பட்டது, பத்திரமாய் பாதுகாக்கபட்ட ஒரு gift paper - வெள்ளி நிறத்தில். அதன் மீது ஒட்டியிருந்த அட்டையில்...
'என் காதல் செல்லம்மாவிற்கு உன் அன்பு சிவாவின் முதல் பரிசு'
காகிதம் காலியாக இருந்தது. அதில் இருந்தது என்ன? நினைவில்லை! அந்த பக்கத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பை வாசித்தாள்.
'இன்று என் பிறந்தநாள், சிவா
ப்ரபோஸ் பண்ணான் ❤
லவ் யூ டூ சிவா ❤ அவன் கொடுத்த பரிசு ஸோ ஸ்பெஷல்...
மிலி அக்காவுக்கு தெரியும் பிகாஸ் சிவாவும் மிலி அக்காவும் நானும் சுகந்தியும் மாதிரி. சுகு கிட்ட சொல்லலைனு கில்டியா இருக்கு.
என் செல்ல சிவா, உன்னை எத்தனை வருஷமா லவ் பண்றேன் தெரியுமா?
Love you, love you, love you so much!'
அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். அதன் கீழே ஒட்டப் பட்டிருந்த புகைப்படத்தில் ஒரு தங்க சங்கிலியில் சதுர ஃபிரேம் போன்ற டாலர், நடுவே இதய வடிவம் அதில் சிகப்பு கல் பதித்திருக்க அதன் கீழே A மற்றும் V வடிவ பென்டன்ட். இருவரின் பெயர்களின் முதல் எழுத்துக்கள்.
அடுத்த போட்டோவில் அவள் கழுத்தில் அந்த சங்கிலியை அணிந்திருக்க அவளை பின்னிருந்து அணைத்து, அவள் உயரத்திற்கு குனிந்து அவள் தோளில் தன் தாடையை ஊன்றி கேமராவை பார்த்து மயக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் விஷ்வா. அவள் முகத்தில் மலர்ந்திருந்தது வெட்க புன்னகை. அந்த புகைப்படத்தை விட்டு விழி அகலவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து டைரியின் பக்கத்தை நனைத்தபோது தான் அழுதுகொண்டிருப்பதை உணர்ந்தாள் பூரணி.
கைகள் அந்த புகைப்படத்தை மெல்ல வருடியது, 'அப்படீன்னா நீ இன்னும் என்னை மறக்கலையா? எனக்காக தான் இங்க வந்தியா சிவா? நான் தான் உன்னை - நம்மை... நம்ம காதலை மறந்துபோய்ட்டேனா? '
துக்கம் நெஞ்சை பிசைந்தது.
மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தபோது, அந்த செயின் என்னவாயிற்று என்ற கேள்வி எழ வீட்டில் ஒரு இடம் விடாமல் தேடியும் கிடைக்கவில்லை. ஏதோ தோன்றியவளாக ஒரு மரப்பெட்டியை தேடி எடுத்தாள். அவளது பரதநாட்டிய சலங்கை ஒரு வெல்வெட் துணியில் சுற்றி வைக்கப்படிருந்தது, அதன் அடியில் பரநாட்டிய நிகழச்சிக்கென வாங்கிய நகைகள். அதனூடே சிறிய துணி பை, அதில் இருந்தது அந்த சங்கிலி. எடுத்து கையில் பத்திரப்படுத்தி கொண்டாள்.
அடுத்த சில பக்கங்களில் இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட தருணங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது. அர்ஜுன் சுகந்தி குடும்பங்கள் ஏதோ கோவிலுக்கு போயிருந்ததை குறிப்பிட்டு, விஷ்வாவிற்கு பரிட்சை அதனால் போகவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.
'கொஞ்ச நாளா மறுபடியும் சிவா அவங்க அப்பா அம்மாவை நினைச்சு டிஸ்டர்ப்டா இருக்கான். இப்படி அவனை பாக்க கஷ்டமா இருக்கு. எனக்கு எக்ஸாம் இருக்கு ஆனாலும் அவனை தனியா விட பயமா இருக்கு அதனால டெய்லி க்ளாஸ் முடிஞ்சு அவனை மீட் பண்ண போறேன்'.
படித்துவிட்டு தான் சின்ன பெண்ணாய் என்ன செய்துவிடுவோம் என சிரிப்பு வந்தாலும், அவன் மீது தான் கொண்டிருந்த நேசம் புரிந்தது.
அடுத்த பதிவு...
'இன்னைக்கு சிவா சூசைட் அடெம்ப்ட் பண்ண இருந்தான். நல்லவேளை எதுவும் ஆகலை, என்னால தடுக்கமுடிஞ்சது. அவங்க அப்பா சந்நியாசம் வாங்க போறதாவும் அந்த வேதனையில முடிவு எடுத்ததாகவும் சொன்னான். பாவம் அவன், அப்பா அம்மா ரெண்டு பேரோட சப்போர்ட் இல்லாம அவனுக்கும் கஷ்டம் தான? இதை அப்ப யோசிக்காம அவனை அடிச்சிட்டேன். பாவம் உடைஞ்சு போய் அழுதான். அவன் அழறதை பாத்தப்ப ரொம்ப வலிச்சுது.
நான் ஏன் அப்படி செஞ்சேன்னு தெரியலை...
நான் அவன் ஆறுதலுக்காக என்று நெற்றியில் மட்டுமே கொடுத்ததை அவன்...
It was our first kiss!'
படித்ததும் கண்கள் அகல விரிய "வாட்" என கத்திவிட்டு வாய்பிளந்து உட்கார்ந்து விட்டாள். கற்பனை குதிரை அக்காட்சியை படு வேகமாக சித்தரித்தது அவள் மனக்கண்ணில். வெட்கத்தில் கன்னங்களில் சூடேற... புத்தகத்தால் முகத்தை மறைத்து கொண்டாள்.
விஷ்வாவின் அப்பா சந்நியாசம் பெறபோவதாகவும், அன்னையின் உடல் நலம் பாதிக்க பட்டிருப்பதாகவும், அவன் சீக்கிரம் அவர்களுக்காக டெல்லி செல்வதாகவும் எழுதியிருந்ததே கடைசி பதிவு.
'அப்படின்னா அந்த சம்பவம் இந்த தேதிக்கு அப்புறம் நடந்திருக்கு அதனால தான் நான் இதுல எதுவும் எழுதலை இந்த டைரி பத்தி நினைவும் இல்லை'.
டைரியை மூடி எடுத்து யார் கண்ணிலும் படாமல் பத்திரப்படுத்தியவள் கையில் இருந்த செயினை பார்த்தாள். கழுத்தில் அணியும் ஆர்வம் தோன்றவே அணிந்து கண்ணாடியில் பார்த்தாள்.
~~~~
தன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு தோழி அழுதுகொண்டிருப்பது எதனால் என்று விளங்காமல் சுகந்தி பார்த்து கொண்டிருந்தாள்.
"பூரி இப்ப என்ன நடந்தது? எதுக்கு மன்னிப்பு கேட்குற? பதில் சொல்லுடி".
வீட்டை சுற்றி நோட்டம் விட்டவள் பேச்சு கொடுத்தபடி அறையை ஒதுக்கி வைக்க உதவி செய்தாள்.
அவளை இழுத்து தன் அருகே உட்கார வைத்துகொண்ட பூரணி ஒரு பெருமூச்செறிந்து, "சுகி என் லைப் ஒரு puzzle, அதில் ஒரு மேஜர் பீஸ் மிஸ்ஸிங் அது இல்லாம லைப் முழுமையடையாதுன்னு சொல்லுவேன் நினைவிருக்கா? அந்த மிஸ்ஸிங் பீஸ் ஆஃப் மை லைப் விஷ்வா தான்."
கண்களில் கண்ணீர் பளபளத்தது. அவளது டைரியை எடுத்து சுகந்தி முன்பு வைத்தாள்.
"என்னோட இந்த பழைய டைரி கிடைச்சுது. டெல்லியில இருந்து வந்தப்புறம் அவனை பார்த்த அன்னிலேருந்தே ரொம்ப அட்ராக்ட் ஆயிட்டேன் ஆனா ஏன்னு புரியலைன்னு சொன்னேனே அன்னிக்கு. அந்த சில நாட்கள்ள அவன் இல்லாம இருக்க முடியாதுங்கற அளவுக்கு வந்திருச்சு..." மென்று விழுங்கினாள்.
"யாமினி அப்படி சொன்னதும், அவரை விட்டுகொடுக்கற வேதனைல உனக்கு எங்க யாரை பத்தியும் நினைக்க தோணலை. சரியா?"
சுகந்தி அவள் சொல்ல நினைத்ததை பூர்த்தி செய்ய, ஆமோதித்து தலையசைத்தாள் பூரணி.
"இவ்வளவு குறுகிய காலகட்டத்துல எப்படி அவன் மேல அவ்வளவு ஈடுபாடுன்னு புரியல. முதல்ல அவன்கிட்ட பேச தயக்கமா இருந்தது அப்புறம் விலகி இருக்கவே பிடிக்கலை. ஏன் ஏன்னு தான் கேள்வி என் மூளையை குடைஞ்சுட்டு இருந்தது. அதுக்கு பதில் - நானும் விஷ்வாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியிருக்கோம் அந்த விபத்துக்கு முன்னாடி. அதுல ஆன மெமரி லாஸ் ல நான் அவனையும் என் காதலையும மறந்து போயிருக்கேன். இதெல்லாம் அந்த டைரில எழுதியிருந்ததால இப்ப தெரிய வந்தது. எங்க விஷயம் ஷம்மு அக்காவுக்கு தெரியும்."
அவள் கையைப் பற்றிகொண்டு, "சுகி, கூட பிறந்ந சிஸ்டரை விட நீ உரிமையா, உண்மையா இருந்து எனக்கு துணையா இருந்திருக்க எல்லா காலத்துலையும். ஆனா, அப்ப நான் இந்த விஷயத்தை ஏன் உன்கிட்ட சொல்லலைனு எனக்கு தெரியலை."
குற்ற உணர்ச்சியில தலைகுனிந்து விசும்பினாள்.
"ஸாரி டா நான் என்ன சமாதானம் சொன்னாலும் நியாயப் படுத்தினாலும், உனக்கு துரோகம் செஞ்சமாதிரி ஒரு உணர்வு." அவள் குரல் கம்மியது, சுகந்தி நெகிழ்ந்தாள்.
"பூ குட்டி, இதுக்கு தான் இவ்வளவு ஃபீல் பண்ணியா?" அவளது தாடையை பிடித்து முகத்தை நிமிரத்தி கண்ணீரை துடைத்தாள், அவள் கைகளை அழுந்தபற்றி கொண்டாள்.
"எல்லாருக்குமே பர்சனல் ஸ்பேஸ்னு ஒண்ணு இருக்கு."
பூரணி மறுத்துபேச முயன்று, சுகந்தியின் அழுத்தமான பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து இடைபடாமல் அவளை பேசவிட்டாள்.
"அந்த பர்சனல் ஸ்பேஸ் எங்கே எது வரைன்னு ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும். என் பூகுட்டி காரணம் இல்லாம எதையும் மறைச்சிருக்க மாட்டான்னு எனக்கு தெரியும், அவளை நான் நம்பறேன். இதை நான் தப்பாவும் எடுத்துகலை. வேண்டாததை மனசுல வச்சுட்டு கன்பியூஸ் ஆகாத. இப்ப நீ உங்க ரெண்டு பேரோட லைப் பத்தி மட்டும் யோசி. அது தான் முக்கியம். நீங்க இதுவரை மிஸ் பண்ணினது எல்லாம் போகட்டும், இனி யாருக்காகவும் எதுக்காகவும் வாழ்க்கையை மிஸ் பண்ணகூடாது. காதல் கைகூடாம போனவங்க எத்தனையோ பேர் உலகத்துல. ஆனா உனக்கும் அண்ணாவுக்கும் கடவுள் ரெண்டாவது வாய்ப்பு குடுத்திருக்காரு. இதுலேருந்தே தெரியலையா you both are meant to be together."
ஆனந்த கண்ணீரோடு அவளை அணைத்துகொண்டு
"கடந்து வந்ததை நினைச்சு கவலைபட்டு டைம் வேஸ்ட் பண்ணாத. நீயும் அண்ணாவும் இனி சந்தோஷமா இருக்கவேண்டிய காலம்." அவளை தன் அணைப்பிலிருந்து விலக்கி, "என் பூகுட்டி என்னோட ஓரகத்தி alias மதனி அச்சோ சுகி பாப்பா ஹாப்பி அண்ணாச்சி"
பூரணியை போல அவள் பேசியதும் இருவரும் கலகலத்து சிரித்தனர்.
~~~~
மகன்கள் இருவரும் வாயிலில் வந்து சிரித்த முகமாக சாதாரணமாக வந்து நின்ற போதும் ஆறுதல் அடையவில்லை யமுனா. ஒரு பாட்டம் பேசி, திட்டி, அழுது, புலம்பி, மூர்த்தியை குற்றம் சாட்டி இவ்வளவையும் செய்து முடித்தார். காவேரியை நினைத்து தான் விஷ்வா அதிகம் பயந்தது ஆனால் அவர் அமைதியாக அர்ஜுனிடம் வந்து,
"அந்த மகாலட்சுமியே உன் பொண்டாட்டி ரூபத்துல உன் கூட இருக்கா டா ராஜா, உனக்கு ஒரு ஆபத்தும் வராது" என கூறி விட்டு ஆதூரமாக அவன் முகத்தையும் தலையையும் வருடி ஆசிர்வதித்தார்.
"யமுனா சும்மா அழுதுட்டு நிக்காத, நான் போனவாட்டி அவனுக்கு ஜுரம் வந்தப்பவே சொன்னேன் வாரத்துல ஒரு நாளாச்சும் சுத்தி போடுனு செஞ்சியா? இப்ப கூட்டிட்டு போய் முதல்ல அதை செய்" அர்ஜுனிடம் "நீ குளிச்சுட்டு வாடா ராஜா".
அக்காவின் சொல்லுக்கு கட்டுபட்டு எழுந்த யமுனா, சட்டென நின்று,
"சாப்பிடலை இல்ல டா ரெண்டு பேரும்?"
என்றார் முகத்தை சேலை தலைப்பில் துடைத்தவாறே.
உண்மையாகவே அப்போது தான் அவர்களுக்குமே நினைவு வந்தது. காலையில் வீட்டில் எனோதானோ என்று சாப்பிட்டு ஓடியது. அதன்பிறகு நடந்தேறிய சம்பவங்களால் பசி என்பதே மறந்திருந்தனர். அடுத்த ரௌண்டு அர்ச்சனை ஆரம்பிக்க கூடும் என்ற பயத்தோடு இல்லை என தலையை ஆட்டினர் இருவரும்.
"முகரையை பாத்தாவே தெரியுது. விச்சு நீயும் குளிச்சிட்டு வா, சேந்து சாப்பிடுங்க. அக்கா ரெண்டு பேருக்கும் சேத்து நீயே திருஷ்டி சுத்திரு. நான் அதுக்குள்ள சாப்பாடு சூடு பண்றேன்".
வீட்டிற்கு வந்ததும் அதுவரை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்திருந்த மனச்சோர்வும், வேதனையும் அவனை ஆக்கிரமித்து கொள்ள, அவன் அறைக்கு சென்று உடை மாற்ற கூட பிடிக்காமல் நாற்காலியில் கண் மூடி அமர்ந்தான் விஷ்வா. சற்றுமுன் காலனி உள்ளே நுழைந்ததும் ஷம்முவை சந்தித்தனர், அவர்கள் வருவது அறிந்து கேட்டின் அருகே நின்றிருந்தாள்.
"எப்படி டா இருக்கீங்க?" என்றாள் ஷம்மு, அமைதி காத்தான் விஷ்வா.
"நத்திங்க் டு வொரி ஷம்ஸ்" அர்ஜுன் ஆசுவாசபடுத்த முயற்சித்தான்.
"அவங்க ரெண்டு பேருக்கும் விஷயம் தெரியும் டா. போன் பண்ணி பேசுங்க." அதிர்ந்தனர் இருவரும்.
"என்கிட்ட எதோ பேச வந்திருக்காங்க ரெண்டு பேரும் அப்ப நானும் தீபுவும் பேசுறதை கேட்டுட்டாங்க.
இருவருக்கும் அப்போது தான் உண்மை நிலவரம் உறைத்தது. சுகந்தி பூரணியைப் பற்றி அவர்கள் அதுவரை யோசித்திருக்கவில்லை. என்ன மன நிலையில் இருக்கிறார்களோ தெரியவில்லை! விஷ்வாவின் முகம் இறுகியது, அவள் மனம் வருத்தமடைய தான் மீண்டும் காரணமாகிட்டதாக உணர்ந்தான்.
"வி தோ பார், கில்டியா ஃபீல் பண்ணும் போது வாயில பூட்டு போட்டுகிட்டா எல்லாம் சரியா ஆகிடுமா?"
அவன் அசைந்து கொடுக்க வில்லை, அவனை பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினாள்.
"வி ஸ்டாப் இட், ரிப்ளை பண்ணு டா. உன்னோட இடியாட்டிக் மேனரிஸம் எனக்கு தெரியும். கில்டியா ஃபீல் பண்ண ஆரம்பிச்சா நார்மல் ஆகுற வரை வாய திறந்து பேச மாட்ட. உன்னோட கோபம், பிடிவாதம் ரெண்டும் தான்டா உனக்கு பெரிய எதிரி"
ஆற்றாமையும் கோபமும் பொங்க நின்றிருந்த ஷர்மிளாவை சங்கடத்தோடு பார்த்தான் அர்ஜுன், தமையனோ அசைந்து கொடுக்கவில்லை.
"இங்க பாரு, என்ன பண்ணுவியோ தெரியாது. உன்னோட இந்த மைண்ட் செட்லேந்து வெளிய வா. விஷயம் தெரிஞ்சு பூரணி அழுதிருந்தா கூட நான் பயப்பட மாட்டேன், ரியாக்ட் பண்ணாம பிரமை பிடிச்ச மாதிரி உள்ள போயிட்டா. இப்ப தான்டா
நார்மல் ஆகிட்டு வரா.
சுகந்தி உடைஞ்சு அழுவறா. நான் யாரை பார்ப்பேன்? எனக்கே இன்னைக்கு பாதி உசிரு போன மாதிரி தான் இருந்தது, உங்க ரெண்டு பேரையும் பாக்கற வரைக்கும்!"
என அவள் அழத் தொடங்கவும் கொஞ்சம் இயல்புக்கு வந்தான் விஷ்வா.
"ஸாரி ஷம்ஸ்!" என்றான் அவள் கையை பிடித்து ஆறுதலாய்.
"நான் அவள்ட்ட பேசறேன் நீ ப்ளீஸ் அழாத, வீட்டுக்கு போ".
புஜத்தில் லேசாக வலி எடுக்க, நினைவு மீண்டான்.
~~~~
அர்ஜன் அன்னையை கட்டிபிடித்து அவன் பாணியில் மன்னிப்பு கேட்டு அவரை சிரிக்க வைக்க முயன்று தோற்று கொண்டிருந்தான். விஷ்வாவை பார்த்ததும்,
"டேய் அண்ணா இன்னிக்கு என் மம்மிக்கும் என் லவ்வருக்கும் செம போட்டி, யாரு எனக்காக பெட்டரா அழுவறாங்கனு."
அவன் முதுகில் படீரென்று அடி வைத்தார் யமுனா.
"எல்லாமே விளையாட்டு தான்டா . கொஞ்சமாச்சும் என் கவலை புரியுதா பாரு. அவளுக்கும் எனக்கும் சண்டை மூட்டி விட பாத்த ராஸ்கல், நீ உங்க அப்பா சமையல் தான் சாப்பிடணும்".
"அவருக்கும் எனக்கும் சுடு தண்ணி மட்டும் தான வெக்க தெரியும்" என அவன் யோசிக்க
"தெரியும். பட்டினி தான் கிடக்கணும்னு பாலிஷா சொன்னேன்".
அர்ஜுன் பரிதாபமாக அண்ணனை பார்க்க, அவன் நேராக சென்று யமுனாவை அணைத்து கொண்டு, "நான் சித்து கட்சி பா" என சரண்டரானான்.
அவரும் கோபம் களைந்து, "ஏன் டா தம்பி இப்படி பண்ணுன?"
"சின்ன காயம் தான் சித்து, இவனுக்கு சின்னபிள்ளையில ஒரு தரம் தகரஷீட் காலுல கிழிச்சுதே அதே அளவு தான் இருக்கு".
அர்ஜுன் "ஹை same pinch டா அண்ணா" சிறு குழந்தை போல கிள்ள அவன் எதிர்பார்த்தபடி யமுனா அவன் பக்கம் திரும்பினார்.
"ஐயோ! இவனை கட்டிகிட்டு அவ என்ன பாடுபட போறாளோ? அபிராமி!" என அவர் இஷ்ட தெய்வத்தை அழைக்க.
"மா உன் மருமக பேரு சுகந்தி, நீ யாரோ அபிராமிய கூப்பிடுற" மேலும் அவரை சீண்டினான்.
அவர் "சீ போடா கிறுக்கா" என்று விட்டு பூஜை அறைக்குள் போய்விட. காவேரி பிள்ளைகள் இருவருக்கும் திருஷ்டி கழித்து முடித்து, திருநீறு இட்டார் நெற்றியில்.
சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்த பின் தான் விஷ்வா உணர்நதான் அடிபட்டிருப்பது வலது கையில், "ஸ்பூன் குடுங்க சித்தி" என்றான் இடது கையால் சாப்பிட எண்ணி.
"உன் ஆளை வேணா வர சொல்லலாமாடா அண்ணா" என்று கிசுகிசுத்தான் அர்ஜுன்.
விஷ்வா புரியாமல் அவனை பார்க்க
"பொண்டாட்டி ஊட்டி விட்டா செம குஜாலா இருக்கும் டா".
"பக்கி வாயை மூட்றா" என அவன் காலை மிதித்தான். இருப்பினும் அவன் சொன்னதை நினைத்து வெட்கத்தோடு சிரித்து விட்டு உட்கார்ந்திருக்க அவன் முக மாறுதல் உள்ளிருந்து வந்த அவன் சித்துவின் கண்ணிலிருந்து தப்பவில்லை.
"ம்மமி வருது, இளிப்பை குறை" என்று அண்ணனை எச்சரிக்கவும் தவறவில்லை அர்ஜுன்.
Hello makale! Reached 1k reads❤❤❤❤❤💐💐💐💐💐
to all the readers...
Overtime la ukandhu one after the other updates edit pannitu iruken.. next one coming up after this in a short while!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro