பாகம் 23

அன்று காலை சைட்டில் நடந்தது:
காலையில் வெறும் ஆய்வு என தொடங்கிய விவகாரம் பூதாகாரமாக, சென்னை கிளையின் மேனேஜர், ரங்கநாதன் மிகவும் பதறி போனார். அவரின் பதற்றம் அர்ஜுனும் இன்ன பிற இளம் பணியாளர்களின் வாழ்வு பாதிக்க படக்கூடாது என்பதால். மும்பை அலுவலகத்தின் டைரக்டர்களை தொடர்பில் வைத்து தகவலை பரிமாறி கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் டைரக்டர் தாமோதரை தலையிடும் படி கேட்டுக்கொண்டார்.
ஜே. என் க்ரூப்பின் எதிரி மற்றும் தங்களின் போட்டி கம்பெனியினர் சேர்ந்து செய்யும் சதி வேலை என உணர்ந்த டைரக்டர் தாமோதர், தனிவிமானம் மூலம் மும்பையிலிருந்து புறப்பட்டிருந்தார், வக்கீலுடன்.
ஆனால் இந்த சதியில் தங்கள் பணியாளர்கள் இருவரை குறிவைப்பது ஏன் என்பது அவருக்கு விளங்கவில்லை.
ஆறுதலான விஷயம், அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் ஜே.என் குரூப்பின் டைரக்டர் இது எதையும் நம்பவில்லை என்பதே.
"Illegal practice எதுவும் எங்க தரப்பிலோ R & M Associates தரப்பிலோ நடக்கலை சார். அப்படி பண்ணி என்ன லாபம் சொல்லுங்க? இது நிச்சயம் திட்டமிட்ட சதி."
அவன் வாக்குமூலத்தில் உறுதியும், அவர்கள் தரப்பு கோப்புகளில் (file) எந்த குளறுபடியும் இல்லாதது அதிகாரிகளுக்கு உறுத்தலாக இருந்தது. "ஒருத்தன் நேர்மையா இருந்தாகூட சந்தேகமா பாக்கறீங்க, அப்ப நீங்களே தப்பு பண்றதுக்கு தூண்டுற மாதிரி தானே அர்த்தம்?" அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல் விலகினர்.
ஜே. என் க்ரூப் வழக்கமாக செய்யும் ஏற்றுமதி இறக்குமதி மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிக்க எண்ணி இந்த ஷாப்பிங்க் மால் கட்டும் முயற்சியில் இறங்கியிருந்தான். அதில் ஆரம்பம் முதலே எதிர்ப்புகளும் எச்சரிக்கைகளும் இருந்தன. இருப்பினும் இதில் முனைப்போடு இருந்தான். தனது செல்வாக்கை பிரயோகித்திருந்தான் இதன் பின்னணியை கண்டறிய.
வழக்கமாக எல்லா விஷயத்திற்கும் பெரிதும் உணர்ச்சிவசப்படும் தம்பி இன்று மிகவும் சாந்தமாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது விஷ்வாவிற்கு.
"அந்த நந்தகோபால் மேல எனக்கு நம்பிக்கை இல்லை அர்ஜுன்."
அவன் அதிர்ந்து விழிக்கவும்
"யாரா இருந்தாலும் தன் பிஸினஸை காப்பாத்த தான் பார்ப்பான். அதுவும் பெரிய ஆளுங்க.."
அவன் இவர்களை நோக்கி வருவதை பார்த்து பேச்சை நிறுத்தினான்.
"அர்ஜுன், உங்களுக்கு லாயர் யாராவது தெரியுமா?" அவனின் ஒரு கேள்வியே விஷ்வாவிற்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட போதுமானதாக இருந்தது, அடை மழையாக பொழிந்தான்.
"ஏன் மிஸ்டர் நந்தகோபால், உங்க பக்கத்து பிரச்சினை முடிஞ்சதும் இவனை பலி கடா ஆக்கிட்டு உங்க லாயர் க்ளியரா வாதாடலை அதனால எங்களால ஹெல்ப் பண்ண முடியலைனு கைகழுவி விடவா?"
"மிஸ்டர்..." இடையிட்டவனை சற்றும் மதியாமல் விஷ்வா கோபமும் வெறுப்பும் கலந்த குரலில் தம்பிக்காகவென வாக்குவாதத்தை தொடர்ந்தான்.
"ஸாரி ஸார் என்ன பண்ணுறது நாங்க நேர்மையான நடுதட்டு மக்கள் உழைச்சு சம்பாதிச்ச சொந்த காசுல மட்டுமே வாழறவங்க, எங்களுக்கு தப்பும் பண்ண தெரியாது அதனால லாயரும் தெரியாது" என விஸ்வநாதன் தம்பி மீது இருந்த பாசத்தில், தன்னிலை மறந்து சீறினான்.
"டேய் விசு! அவரு க்ளையண்ட் அவர் கிட்ட போய்.." என அவனை தடுக்க முயன்றான் அர்ஜுன்.
ரௌத்திரம் அவன் கண்களில் குடியேரியது தம்பியை நோக்கி திரும்பினான்.
"க்ளையண்டா இருந்தா நியாயம் கேட்க கூடாதா? சமூகத்துல முக்கிய புள்ளி அதனால அவரை கண்டு பயப்படணுமா? எல்லாருக்கும் வக்காலத்து வாங்கு டா. ஆனா உன்னை பத்தி மட்டும் யோசிக்காத, வாட்ச்மேன் பாவம் ஏழை படிக்காதவன்; நம்ம கம்பெனி டைரக்டர்ஸ் எல்லாம் ரொம்ப honourable, ஸ்டாப்பை விட்டு கொடுக்க மாட்டாங்க; இவரு மிஸ்டர் நந்தகோபால், ஜென்டில்மேன். பெரிய ஏற்றுமதி நிறுவனத்தோட டைரக்டர், கோடிஸ்வரர் மாதிரி இல்லை... இன்னும் எல்லாரை பத்தியும் யோசி ஆனா உனக்கு என்ன ஆப்பு ரெடியாகி இருக்குனு நீ இன்னும் ரியலைஸ் பண்ணலை பாரு பைத்தியக்காரா. உன்னை கம்பி எண்ண வைக்க ஸ்கெட்ச் ரெடியாகியிருக்கு டா. அதுவும் வெளிய வரமுடியாத படி... நீ இன்னுமா..."
ஆற்றாமையும் ஆத்திரமும் ஒரு சேர முஷ்ட்டியை மடக்கி தன்னை கட்டுப்படுத்த பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். மெல்ல அர்ஜுனின் கண்ணில் பதின் பருவத்து விஷ்வா மீண்டும் உரு பெற்று கொண்டிருந்தான்.
"விஷ்வா ப்ளீஸ்! கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு டா.." என அவன் முடிக்கும் முன்பே,
கொத்தாக தம்பியின் சட்டை காலரை பற்றி இழுத்து,
"என்னது ரிலாக்ஸா? வர சண்டே, உனக்கு நிச்சயதார்த்தம் அதுவாச்சும் ஞாபகம் இருக்கா? உன்னை ஒருத்தி ஐஞ்சு வருஷமா உசிரா நினைச்சுட்டு காத்துகிட்டு இருக்கா நினைவு இருக்கா? உனக்கு ஏதாவது பிரச்சனைனா நான் எந்த மூஞ்சியை வைச்சிகிட்டு அவளையும் சித்தப்பா, சித்தியையும் ஃபேஸ் பண்ணுவேன்?"
அடிக்குரலில் சீறினான் விஷ்வா, சட்டென அவனை விடுவித்து அங்கிருந்து சென்றுவிட்டான்.
அர்ஜுனுக்கு சில நிமிடங்கள் தேவைபட்டது சுதாரித்து கொள்ள. அவன் தோளை தொட்டார், "உங்க பிரதரா அவரு?"
"யெஸ்... யெஸ் ஸார். ஸாரி.. அவன் என் மேல இருக்குற அக்கறைல..." தடுமாறினான்.
"இட்ஸ் ஓகே!" அவன் தோளில் சமாதானமாக தட்டி "பணம் சொத்து சம்பாதிச்சிடலாம் அர்ஜுன் ஆனா உறவுகள், பந்தம், சகோதர பாசம், தூய்மையான அன்பு, காதல் இதெல்லாம் இப்படி எங்கேயாவது பார்த்து தெரிஞ்சுக்கிற அளவு அபூர்வமா போச்சு. நெஞ்சை நிமிர்த்தி கர்வமா இருங்க இப்படி ஒரு உறவு உங்களுக்கு இருக்குனு. "
சிறிது கனத்த மௌனத்திற்கு பிறகு," உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கா? உங்க பிரதர் சொல்றது சரி தான் உங்க ரெண்டு பேரையும் டார்கெட் பண்றாங்க. இது புரிஞ்சதால தான் லாயர் தெரியுமான்னு... "
யோசனையில் இருவரும் ஆழ்ந்திருக்க விஷ்வா அருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை.
"ஸாரி ஸார்... நான் உங்களை..."
"பரவாயில்லை விஷ்வா" அவன் புஜத்தில் நட்பாக தட்டி
"இப்ப இதை பத்தி பேச வேண்டாம். உங்களோடது நியாயமான கோபம். I understand".
'ரௌத்திரம், நியாயக் கோபம்ன்னு பாரதி சொன்னதுக்காக பொசுக்கு பொசுக்குனு, ரயில் இஞ்சின் மாதிரி காது மூக்குல புகை வர அளவுக்கு அப்படி என்ன கோபம் சிவா எப்ப பாரு?' அவனின் செல்லம்மாவின் கண்டிக்கும் குரல் மனதில் ஒலிக்க, கண்களை கரித்தது கண்ணீர் துளி.
"By the way I'm Prakash Nandagopal, J.N Group of Companies தற்போதைய டைரக்டர்." விஷ்வாவை நோக்கி ஒரு புன்னகையோடு கைநீட்ட அவனும் கைநீட்டினான்.
"விஷ்வநாதன், R &M Associates ஆர்கிடெக்ட், அர்ஜுனோட அண்ணன். இதைவிட பெருசா.."
"You are proud of who you are, அதே மாதிரி இருங்க. அது பெரிய வரம்". லேசான புன்முறுவல் அவன் முகத்தில்.
"யூ ஆர் ரைட் விஷ்வா, அர்ஜுன் or உங்க ஃபேமிலிக்கு யாரோ வேண்டாதவங்க நிச்சயமா இதுல involved. ப்ளீஸ் யோசிங்க. என்னால ஆன எல்லா உதவியும் நான் பண்றேன், டிரஸ்ட் மீ!"
விஷ்வாவின் கரத்தை அழுத்தமாக பற்றி கூறிவிட்டு நகர்ந்தான்.
இருவரும் யோசனையிலும் கவலையிலும் ஆழ்ந்திருக்க, ரங்கநாதன் அவர்கள் அருகே வந்தார்.
"சார்... நான்..." பதட்டத்தில் தடுமாறினான்.
"தாமோதர் இஸ் கம்மிங்க் ஹியர். தைரியமா இரு நீங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணலைன்னு தெரியும். உனக்கு மட்டும் இல்லை, நம்ம கம்பெனிக்கும் ஏற்பட்ட களங்கம் இது. அதுவும் மல்டிநேஷன்ல் கம்பெனி ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கிற நேரத்துல.." ஆதரவாக பேசிவிட்டு நகர்ந்தார்.
✴✴✴✴
அரை மணி நேர மௌனத்திற்கு பிறகு, பொறி தட்டியது அர்ஜுனுக்கு.
"விசு இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்ச புதுசுல நம்ம கம்பெனி ப்ராஜக்ட் மேனேஜர் ஒரு ஆளு கொஞ்சம் சீனியர், ஃபிராடு வேலை பண்ணான் டா.." ஆர்வமானான் விஷ்வா.
"foundation போட்ட டைம்ல, மெடீரியல்ஸ் வாங்கறது, லேபரர்ஸோட கூலி. இதுலலாம் முறைகேடு நடந்தது. அவனோட ரெண்டு மூணு பேரு இன்வால்வ்டு"
"அப்புறம்?" அவசர படுத்தினான் விஷ்வா.
"லேபர்ஸ் கம்பிளையண்ட் பண்ணதும் நான், சங்கர் ஸ்டீபன் மூணு பேரும் கண்காணிச்சோம் அவனை கேள்வி கேட்டப்ப, நீங்கள்ளாம் இன்னைக்கு வேலைக்கு சேர்ந்த பசங்க. உங்க கேரியரே இல்லாம அழிச்சுருவேன்னு மிரட்டுனான். சங்கர் பயந்துட்டான், ஸ்டீபனும் நானும் சேர்ந்து எவிடன்ஸ் கலெக்ட் பண்ணி ரங்கநாதன் ஸார்கிட்ட குடுத்தோம். அவனையும் அவன் ஆளுங்களையும் வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அரெஸ்ட்டும் பண்ணாங்க. இந்த கம்பெனிக்கு பத்து வருஷமா உழைச்சு உயர்த்திருக்கேன், என்னைய நம்பாம... அந்த ரெகுலர் சினிமா டயலாக் அடிச்சான். ஒரு வேளை அவன்..."
"அவன் பேரு டீடெய்ல்ஸ் சொல்லு சட்டுனு" என சொல்லி அவன் சொன்னதை மொபைலில் குறித்து கொண்டு, "நீ இந்த விஷயத்தை ரங்கநாதன் ஸாருக்கும், மிஸ்டர் பிரகாஷுக்கும் சொல்லு சீக்கிரம்" அவசரபடுத்திவிட்டு ஓடினான்.
அனைவரையும் விட்டு சற்று விலகி சென்றான் விஷ்வா. மூன்று பேரை அழைத்து கான்ஃபிரன்ஸ் காலில் போட்டு சைட்டில் நடக்கும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்தான், பின் அர்ஜுன் கூறிய பழைய மேனேஜர் பற்றிய விவரங்களையும் கொடுத்தான்.
அமன்தீப் முதலில் பேசினான், "விஷ்வா, நான் என் சைட்லேருந்து என்ன பண்ண முடியும்னு பாக்கறேன், எனிவே மூர்த்தி அங்கிள் உங்க கூட வர்க் பண்றதுல சந்தோஷம் தான் ஆனா, இந்த சிச்சுவேஷன்ல..."
குரலை கனைத்துகொண்டு பேசதொடங்கினார் மூர்த்தி.
"விஷ்வா, அர்ஜுன் மட்டும் இல்லை இதுல நானும் சம்மந்த பட்டிருக்கேன். நாங்க ரெண்டு பேரும் target னு போன வாரமே தகவல்".
குரலில் சலனமில்லாமல் பேசிமுடித்தார் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி சாம்பமூர்த்தி எனும் மூர்த்தி.
"சித்தப்பா..."
"மூர்த்தி.." சுரேஷின் குரல் மூன்றாவது லைனில் இருப்பதை உணர்த்தியது.
சைட்டில் மாறு வேடத்தில் சில ஆட்கள் பாதுகாப்பிற்காக இருப்பதாக கூறியவர் வீட்டையும் கண்காணிக்க ஆட்கள் இருப்பதை உறுதி படுத்தினார்.
"சித்தப்பா, சுகந்தி வீட்டுல ஷம்மு, பூரணி மூணு பேரும் தனியா இருக்காங்க. அம்மா, சித்தி பத்மா அத்தை எல்லாரும் கடைக்கு போயிருக்காங்க" என பதறினான்.
"சரி நீ ஷம்முவுக்கு போன் பண்ணி அவங்களை அங்கேருந்து அவ வீட்டுக்கு போக சொல்லு, அமர் வீடு ஃஸேப் தான் பிரச்சினை இல்லை. அவனுக்கு ஆல்ரெடி விஷயம் தெரியும்."
சுரேஷ் இடைபட்டு, "நான் கடைக்கு போயிருக்குறவங்களை பாத்துக்கறேன் மூர்த்தி. நான் கிளம்பிட்டேன், அவங்களை வேற வேலை இருக்குனு அழைச்சுகிட்டு போறேன். மூர்த்தி.." என தயங்கியவர், "பத்திரிக்கை துறையில உன்னோட துறையில நாம பாக்காத மிரட்டல், உயிர் பயம் எதுவும் இல்லை... ஆனா என் மக ன்னு வரும்போது மனசு புத்தி ரெண்டும் தடுமாறுது. மாப்பிள்ளை பத்திரம்."
உணர்ச்சியற்ற குரலில் பேசியவர் அதற்கு மேல் முடியாமல் போனை வைத்துவிட்டார்.
வலித்தது விஷ்வாவிற்கு, "ஏன் சித்தப்பா?" குரல் பிசிரடிக்க, கண்கள் தானாக சுழன்று தம்பியை தேடியது.
"பெரிய ப்ராஜக்ட்னா கண்டிப்பா இந்த மாதிரி பிரச்சினைகள் வரும். ஊழல், லஞ்சம், போட்டி, பழிவாங்கல்... இந்த மாதிரி சிச்சுவேஷனை தான் பயன் படுத்துவாங்க பழிவாங்க. அந்த ஆளு அர்ஜுனால வேலை போயி ஜெயில் தண்டனை அடைஞ்சதும் அடுத்து இதை தான் செய்வான்னு யூகிச்சேன். ஆனா நான் சாதாரண அரசாங்க அதிகாரி தான் பா எனக்கு லிமிடட் பவர் தான். என் புள்ளைய பாதுகாக்க பர்ஸ்னல் ஃபேவர்ல முடிஞ்ச ஏற்பாடு பண்ணியிருக்கேன். எனக்கோ அர்ஜுனுக்கோ பாதிப்பு இருக்கலாம்னு முன்கூட்டியே தகவல் வந்திடுச்சு, அதனால தான் அன்னைக்கு லீவு போட்டேன் வீட்டுல கொஞ்சம் பாதுகாப்பு ஏற்பாடு பாக்க நம்ம வீட்டுல கேமரா செட் பண்ணியிருக்கு. அப்பறம் நம்ம ஜோசப் அவன் பையன் அல்போன்ஸ் ரெண்டு பேரையும் அலர்ட்டா இருக்க சொல்லியிருக்கேன்".
"அவங்க.."
"அப்பன் புள்ளை ரெண்டு பேரும் ஆர்மியில இருந்தவங்க. அல்போன்ஸ் அடிபட்டதால சர்வீஸ்லேந்து விலகிட்டான். அவன் இப்ப போலீஸ் இன்ஃபார்மர். போதுமா? நீ அர்ஜுன் கூட இரு, தைரியமா இரு. எங்களுக்கு கிடைச்ச தகவல் படி தான் எல்லாம் நடக்குது".
"அப்படீன்னா?" அதிர்ந்தான் விஷ்வா.
"யெஸ் அர்ஜுன் is bait, அதாவது தூண்டில் புழு. அவங்களை வெளிய கொண்டுவர. என்னை பணிய வைக்க அர்ஜுனை டார்கெட் பண்றாங்க."
விஷ்வாவிற்க்கு சினம் தலைக்கேறியது. அவரை திட்டவும் முடியாமல் அமைதியடையவும் முடியாமல் தவித்தான்.
"எனக்கு அப்ப அப்ப அப்டேட் பண்ணு, அர்ஜுனுக்கு தெரிய வேண்டாம் டா, ஏற்கனவே என்னை எம்டன் னு தான் சொல்றான் அப்புறம் என்னை வெறுத்து ஒதுக்கிடுவான். அர்ஜுனை உன் கண் பார்வைலேருந்து விலக்காத தம்பி" தந்தையாக அவர் குரல் தோய்ந்து ஒலிக்க விஷ்வாவிற்கு சங்கடமானது.
விருட்டென அர்ஜுனை நோக்கி சென்றான், 'எங்க போன என்பது போல் அர்ஜுன் சைகை காட்ட அம்மா அழைத்ததாக பதில் சைகை காட்டினான். ஷம்மு அவர்கள் வீட்டை சென்றடைந்ததாக மெஸேஜ் கிட்டியதும் சிறிது நிம்மதி அடைந்தான். சுகந்தியின் தந்தை சுரேஷிடமும் அந்த தகவலை தெரிவித்தான். அவரும் கடையை எட்டி விட்டதாகவும் அன்னையர்கள் மூவரையும் பார்த்து கொள்வதாக தெரிவித்தார்.
பெண்கள் மூவரிடமும் குரியர் என்ற சொன்னவன் உண்மையில் கொணடு வந்தது, பணக் கட்டை. அர்ஜுன் லஞ்சம் பெற்றதாக சிக்கவைப்பது அவர்களின் யோசனை. ஜோசப் அவனை பிடித்து விசாரிக்க, பிடிபடும் பயத்தில் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவும் அவனை போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார் ஜோசப்.
அன்று மாலை வரை அவர்களின் திட்டம் அனைத்தும் நிறைவேறாமல் போக, அடுத்த நாளைக்கான திட்டம் ஆயத்தமானது.
அடுத்த நாளும் ரெய்டு மற்றும் விசாரணை தொடரும் என அறிவித்தனர் அதிகாரிகள். வணிக வளாகம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
வீட்டை நோக்கி பயணப்பட்டனர் அர்ஜுனும் விஷ்வாவும் அலுவலக பேருந்தில், பகல் முழுதும் பதட்டத்தில் கழித்திருந்த அர்ஜுன், அயற்ச்சியின் மிகுதியால் தமயனின் தோள் சாய்ந்து உறங்கி போனான்.
காலையில் தன்னவளிடம் காதலை உறைத்தபின் அதுபற்றி மறந்துவிட்டதை அப்போதுதான் உணர்ந்தான் விஷ்வா. நிலைமையை அவளிடம் விளக்க முடியாவிட்டாலும் மன்னிப்பு கேட்கும் நோக்கத்தில் மொபைலை கையில் எடுத்தவனுக்கு ஆச்சரியம். அவளிடமிருந்து வந்திருந்த பதில்.
'சிவா நீ காலைல மெஸேஜா டைப் பண்ணின எல்லாத்தையும் நான் உன் வாய் மொழியா கேக்கணும். மன்னிப்பை தவிர மத்த எல்லாத்தையும். இன்னும் வேற எதுவும் சொல்ல பாக்கி இருந்தால் அதையும். மனசுல சொல்லாம பூட்டி வெச்சிருக்கிறதை நீ இனிமே என் கிட்ட சொல்லலாம், என் கிட்ட மட்டும் தான் சொல்லலாம் என்றைக்கும், எப்போதும், ஆயுள் முழுசும்!'
அந்த வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கை மனதில் இருந்த கவலைகளை தற்காலிகமாக தூரவிரட்டியது.

Date: 13 Jan 2022
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro