Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 22



"அவன் சொன்னது தப்புன்னு தோணுதா? இல்லை சொன்ன விதம் தப்புன்னு தோணுதா?"
ஷர்மிளாவின் முகம் ஏறிட்டவள், தானே அந்த குழப்பத்தில் இருப்பதன் அடையாளமாய் பதிலளித்தாள்.



"தெரியலை கா" நிலையில்லாத பார்வை அவளின் குழம்பிய மனநிலையை உறுதிபடுத்தியது.


தீவிர யோசனையில் ஷம்மு அருகில் அவள் அமரவும் விஷ்வாவிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

"ஸாரி பூரணி! மீட்டிங்க் விட்டு வெளியே வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. நான் இந்த மாதிரி உன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லுவேன்னு நானே எதிர்பார்க்கலை. உன் முகத்தை பார்த்து, நேருக்கு நேரா எல்லாத்தையும் பேசணும்னு நினைச்சிருந்தேன். நீங்க வேற வீட்டுக்கு குடித்தனம் போறதா கேள்விபட்டதுலேருந்தே மனசு ஒரு நிலையில இல்லை. அதான் கட்டுபடுத்த முடியாம...
இப்ப கூட வேலையாவது ஒண்ணாவது போங்கடானு தூக்கிபோட்டுட்டு உன்னை பாக்க ஓடி வரணும்னு தோணுது ஆனா அப்படி பிஹேவ் பண்ண நான் டீன் ஏஜ் பையன் இல்லை, இது சினிமாவும் இல்லை. லேட் பண்ணா, உன்னை மறுபடியும் மிஸ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு."

அவனிடம் வெளிப்பட்ட பரதவிப்பு அவளை அசைத்து பார்த்தது. 'எனக்கும் தான் சிவா..' இதயம் ஏங்கிதவித்தது தன்னை வெளிப் படுத்திகொள்ள, ஆனால் நிதர்சனம் நாவிற்கு கடிவாளமிட்டது.

"அப்படிபட்ட unrealistic expectations எதுவும் என்கிட்ட இல்லை"

அவள் குரலை கேட்டதும், பதற்றம் குறைந்து சற்றே நிதானத்திற்கு வந்தவன் பெரும் ஆவலோடு,
"அப்ப?" என இழுத்து நிறுத்தினான்.


"எனக்கு கொஞ்சம் டைம் வேணும் விஷ்வா. நிறைய கேள்விகள் குழப்பங்கள், இது ஃபோன்ல பேசுற விஷயம் இல்லை. நேர்ல பேசுவோம்."
மிக நிதானமாய் அவள் பேசவும் ஷர்மிளா அதிசயித்தாள். பழைய பூரணியின் சாயல் மெல்ல வெளிப்படுவதாய் ஒரு எண்ணம்.

"ஷ்யூர்.. நான்..." அடுத்து செய்யவேண்டியது என்ன என்ற திணறல் அவனிடம். இப்பொழுதே அல்லது இன்றே சந்திக்கலாமா என அவன் காதல் உள்ளம் துள்ளியது, ஆனால் அது அவளை கலவரப்படுத்தும் என்ற எண்ணத்தில் தயங்கினான்.

"முடிஞ்சா ஈவ்னிங்க் பாக்கலாம்."

"டேய் ப்ரோ" கைபேசியை ஷம்மு பிடுங்கி கொண்டு பேசவும் விஷ்வா சற்றே அதிர்ந்தான்.

"குள்ஸ்? நீ என்ன பண்ற அங்க?"

"ஆங்ங், நீ குடுத்த ஷாக்குல உன் பேபி"

"அக்கா" பூரணி பொய் கோபத்தில் முறைத்தாள்.

"ஹீஹீஹீ.. ஒரு ஃப்ளோல (flow) slip ஆயிடுச்சு டி" அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு "என் பேப்ஸ் ரொம்ப கன்ஃபியூஸ் ஆயிட்டா டா, பத்து வருஷம் பொறுமையா இருந்தவன் இன்னும் ஒரு நாள் பொறுடா. ஈவ்னிங்க் மீட் பண்ண வழி யோசிக்கிறேன்."

✴✴✴

வீட்டு கதவை திறந்த சுகந்திக்கு, செந்தாமரையாய் மலர்ந்திருந்த
தோழியின் முகத் தோற்றம் புதிதாகவும் குழப்பமாகவும் இருந்தது.

"🎶நேற்று இல்லாத
மாற்றம் என்னது?
காற்று என் காதில் ஏதோ
சொன்னது.
இதுதான் காதல் என்பதா?
இளமை பொங்கி விட்டதா?
இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே...🎶

பூரணியின் இடையை கட்டிக் கொண்டு Ball Dance போல ஆட துவங்கினாள் ஷர்மிளா, வீடு முழுவதும் சுற்றி வந்து பாட்டு பாடியபடி.

🎶கடவுள் இல்லை
என்றேன் தாயை காணும்
வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை,
காதல் பொய் என்று
சொன்னேன் இவனை
காணும் வரை🎶

கைபேசியில் இருந்த விஷ்வாவின் புகைப்படத்தை காட்ட பூரணி வெட்கத்தில் தன் இரு கரம் கொண்டு முகம் மறைக்க, ஷர்மிளா சற்றே மூச்சு வாங்கினாள்.
சுகந்தி அதிர்ச்சியில் மலங்க மலங்க விழித்தாள்.

"ஏய்! ஓவர் ஆக்டிங்க் உடம்புக்கு ஆகாது டி சைத்தான்! அந்த உர்ராங்குட்டான் சும்மா லவ் ப்ரபோஸ் பண்ணியிருக்கான் அதுவும் எப்புடி?" இடுப்பில் கைவைத்து தலையை சாய்த்து நக்கலாக வினவினாள்.
"வாட்ஸ்ஆப் மெஸேஜ்ல. நீ இன்னும் அவனுக்கு ரிப்ளை கூட பண்ணலை. அதுக்கே இவ்வளவு பில்ட் அப்பு?

ஊர்ல அவனவன் மூளையை கசக்கி பிழிஞ்சி, ராத்திரி பகலா பிரிபேர் பண்ணி எவ்வளவு effort போட்டு ப்ரபோஸ் பண்றானுங்க. ஆனா இவன்... இன்ஸ்டெண்ட் நூடுல்ஸ் மாதிரி ரெண்டு செகண்ட் வாட்ஸ்ஆப் மெஸேஜ்ல லவ்வை சொல்றான். நீயும் ஷங்கர் பட ஹீரோயின் மாதிரி காஸ்ட்லி கனவு காண்ற... இவனை எல்லாம் சுத்தல்ல விடணும் டி பேபி..."

அவள் உணர்ச்சிவசப்பட்டு பேச, பூரணியின் முகம் சுருங்கியது. சுகந்தி ஒன்றும் விளங்காமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை கவனித்த ஷர்மிளா,

"ஓ! உனக்கு மேட்டர் தெரியாது இல்ல குட்டி சாத்தான்?"
பூரணியின் கைபேசி அவளிடம் கைமாறியது.

"அச்சோ! பூரி! அண்ணா சிக்ஸர் அடிச்சுட்டாரு ஒரே ஷாட்டுல!" என துள்ளி கொண்டு அவளை அணைத்து கொண்டாள்.


"தம்பி கிரிக்கெட் ப்ளேயராம் அக்கா புரூவ் பண்றாங்க. ஐயோ தாங்கல!" என அவள் தலையில் வலிக்காமல் தட்டிவிட்டு படுக்கையில் சரிந்தாள் ஷம்மு.

"சொல்லு டி" என இருவரும் கோரஸாக கூறிவிட்டு
சிரித்துகொண்டனர்.

படுக்கையில் அமர்ந்து, "எனக்கும் அவனை பிடிச்சிருக்கு தான். அவனை பாத்ததும் இத்தனை வருஷம் தோணாத ஒரு உணர்வு எனக்குள்ள. அவனோட பேசறதும், பழகுறதும், எப்படி இருந்ததுனா... விட்ட குறை தொட்ட குறைன்னு சொல்லுவாங்களே அது போல ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் மறுபடி இணைஞ்சது மாதிரி.. எனக்கு சரியா சொல்ல தெரியலை."

நிதர்சனம் உணர்ந்த மற்ற இருவரின் மனதிலும் அலையடித்து கொண்டிருந்தது ஆனந்தம்.

"பூரி அப்ப நீ ஒரு மாசம் விலகியிருந்தது?" சட்டென பொறி தட்டியது சுகந்திக்கு. மூவரும் பார்வை பரிமாறி கொண்டனர்.

"ஒருவிதத்துல யாமினி அப்படி சொன்னப்ப தான் நான் விஷ்வாவை நேசிக்கிறதை உணர்ந்தேன். என் தயக்கத்தையும் மீறி நான் ஒருத்தனை விரும்ப தொடங்க, அது நடக்காதுன்னு உணர்ந்தப்ப, ஏனோ அந்த ஏமாற்றத்துல மத்த எதுவும் கண்ணுக்கு தெரியலை. அவன் இன்னொருத்திக்கு சொந்தமா கற்பனை பண்ணி பார்க்குற தெம்பு கூட இல்லை." கண்கள் தானாய் கண்ணீர் உகுத்தன அந்த வலியை மனம் மீண்டும் உணர்ந்தபோது.

"நேர்ல எப்படி? அவன் ரொம்ப கஷ்பபட்டிருக்கான், he deserves the best life அப்படீன்னு எனக்கு புரிஞ்சது என்னை மாதிரி ஒருத்தியை விட யாமினி தான் நல்ல ஜோடின்னு நம்பினேன். பழகினது கொஞ்ச நாட்கள் தான் ஆனாலும், அவனை பிரிய வேண்டியிருக்கேனு உணர்ந்தப்ப..."
கண்ணாடியாய் மனவலியை பிரதிபலித்தது அவள் முகம்.

"யாரோ என் நினைவுகளை திருப்பி கொடுத்துட்டு சட்டுனு பிடுங்கி வச்சிகிட்டாப்புல இருந்துச்சு. அவன் கூட இருந்தப்ப என் கடந்த காலங்கிற வெற்று இடம் அவனால நிரப்பபட்ட உணர்வு. அது மறுபடியும் வெற்றிடமா ஆகுதேங்கிற வேதனையை என்னால சமாளிக்க முடியலை. இங்க வந்தா அவங்களை பாக்கணும், அது என்னால முடியாதுன்னு
தான் இங்க வரதை அவாய்ட் பண்ணினேன். உங்க எல்லாரையும் விட அந்த நேரத்துல என் சந்தோஷம், சுயநலம் பெருசாயிடுச்சு" ஒரு வருத்தமுறுவல் உதிர்ந்தது.

பெருமூச்செறிந்து,
"ஆறு வருஷம் முன்ன நடந்ததது ஆக்ஸிடெண்ட் இல்லை. Rape attempt.."

பூரணியின் பதிலில்
இருவரும் அதிர்ந்தனர், "பூரணி"

குரல் தழுதழுக்க, "ஒரு முறை என்னோட ட்ரீட்மெண்ட் சமயத்துல, அப்பாவும் அம்மாவும் ஆர்க்யூ பண்ணிட்டு இருந்ததை கேட்டேன். அப்பாவுக்கு பிஸினஸ்ல பிரச்சினை குடுத்த யாரோ ஒரு ஆளு வீட்டுல வந்து தகராறு பண்ணினதாவும், அப்பாவை அவன் அடிக்க இருந்தப்ப நான் அவரை காப்பாத்த முயற்சி செய்தப்போ. அவன் கோவம் என் மேல திரும்பி என்கிட்ட அத்துமீறி..." அழுகை கேவலாக வெடிக்க, அவளை தோள் சாய்த்து தேற்றினார்கள் சுகந்தியும் ஷர்மிளாவும். வார்த்தையால் பகிற இயலாத ஆறுதலை தங்கள் அரவணைப்பின் மூலம் பகிர்ந்துகொண்டனர். சிறிது நேரம் வருத்தமும் மௌனமும் மட்டுமே ஆட்சி செய்தது அவ்விடத்தில்.

"விபரீதமா எதுவும் நடக்கலை ஆனா அவன் போகும்போது என் தலையில அடிச்சு காயப்படுத்தியிருக்கான். அதுல தான் மெமரி லாஸ்."

ஆறுதல் சொல்ல வார்த்தைகளற்று அழுகையில் கரைந்தனர் மூவரும். தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக அவள் அனுபவித்த வேதனைகள் அனைத்தும் மீண்டும் நினைவுக்கு வந்து, வேதனையளித்தது.

சற்றே தன்னை சுதாரித்து கொண்ட பூரணி,
"ஆனா அக்கா இந்த சம்பவத்துல எதோ மிஸ் ஆகுற உணர்வு."

ஷம்முவும் சுகந்தியும் புரியாமல் விழித்தனர். "அதாவது எதையோ எல்லாரும் சொல்லாம மறைக்கிற மாதிரி. அவங்க முழூசா அந்த சம்பவத்தை பத்தி பேசலை. அப்ப ஆதங்கத்துல அம்மா ஏதோ பேச, அப்பா கோவப்பட்டு அவங்களை அடிச்சிட்டாரு. அதுல தான் நான் கோவிச்சுட்டு அவரு கிட்ட இத்தனை வருஷம் பேசலை."

கண்ணில் கசிந்திருந்த ஈரத்தை துடைத்துவிட்டு பழைய நினைவையும் ஒதுக்கிவிட்டு நிமிர்ந்தாள்.

"நீ களங்கபட்டவன்னு நினைச்சு தயங்குறியா பூரணி?" சுகந்தி கேட்டதும் ஷர்மிளா அதிர்ந்து அவளையும் பூரணியையும் மாறி மாறி பார்த்தாள்.
அவளது மௌனம் சந்தேகத்தை உறுதிபடுதியது.
"பூகுட்டி! எதுவும் நடக்கலையேடி அப்புறம் ஏன்?"

"ஆனா அதுக்காக அவன்கிட்ட விஷயத்தை மறைக்கிறது தவறு. அவன் என்னை ஏத்துக்கலைன்னாலும் அதை தாங்கும் பக்குவம் எனக்கு வேணாமா?"

"ப்ரோ அப்படிபட்டவன் இல்லைடி..."

"வேணாம் கா. அவன் நல்லவன் தான். ஆனா நீங்க அதை எனக்கு இப்ப புரிய வைக்க பேசி, நானும் ரொம்ப நம்பிக்கையை வளத்துட்டு பின்னாடி எதுவும் நடக்கலன்னா.." அசாத்திய அமைதி நிலவியது சுகந்தியின் வீட்டில் சிறிது நேரம். அதை கலைக்கும் விதமாக ஷர்மிளாவின் கைபேசி அழைப்பைவிடுத்தது.

"சொல்லு... ம்... ம்... சரி... ஓகே."

அழைப்பு துண்டிக்கபட்டது. சில வினாடி யோசனைக்கு பிறகு, "ரெண்டு பேரும் வாங்க என் வீட்டுக்கு." அவர்கள் குழப்பத்தில் நிற்க. "அட ஒண்ணுமில்லை டி... என் ப்ரெண்டு ஒருத்தி designer ன்னு சொன்னேனே, அவ இப்ப வரா, என்னோட வெட்டிங்க் டிரஸ் மெஷர்மெண்ட் எடுக்க..."

படி இறங்குகயில் அர்ஜுன் வீட்டு வாயிலில் யாரோ ஒரு ஆள் நிற்கவும், "யாரு நீங்க?" என அதிகார தோரணையில் வினவினாள் ஷம்மு.

"அது.. பார்சல்.. குரியர் மேம். நீங்க இந்த வீடா?"

"இல்லை நான்..." சுகந்தி பதில் கூறும் முன் அவளை இடையிட்டாள் ஷம்மு.

"நாங்க மாடி வீடு. இந்த வீட்டு ஆளுங்க வெளிய போயிருக்காங்க. ஆளு இல்லைனா குரியர் வாட்ச்மேன்கிட்ட தான் ஹாண்ட் ஓவர் பண்ணனும். அதான் ரூல்ஸ். நீங்க அங்க குடுங்க."

அவளின் பதிலில் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர் சுகந்தியும் பூரணியும். மீண்டும் சுகந்தி ஏதோ கேட்க வர, "நீ என்ன சின்ன புள்ளையா டி வாயை மூடிட்டு வா. அடுத்தவங்க வீட்டு தலைவலி நமக்கு எதுக்கு. யோவ் உனக்கு ஒரு தரம் சொன்னா புரியாதா? போ.." அவள் அதிகார தோரணையில் அவன் சற்று மிரண்டான்.

எதிர்ப்ளாக்கில் வேலை செய்துகொண்டிருந்த ஜோசப் கண்ணில் படவும், "ஜோசப் அங்கிள்..." உரக்க அவரை அழைத்து, "கீழ் வீட்டுக்கு குரியர் பாத்து வாங்கி வைங்க." அவள் வீட்டை நோக்கி சென்றனர்.

"அக்கா ஏன் அப்படி பண்ணீங்க? அர்ஜுன் வீட்டுக்கு..." சுகந்தி வருத்ததோடு கேள்வியெழுப்ப

"சுகு அக்கா காரணமில்லாம பண்ணலை. அந்த பார்சல்ல பேர், அட்ரஸ் எதுவுமே இல்லை. நாம பாக்கலைன்னா அவன் அங்க வச்சிட்டு போயிருப்பான் இல்ல நம்ம வாங்கியிருந்தாலும் ஆபத்து தான்."
சுகந்தி முகத்தில் பீதி பரவவும், "பயப்படாத ஜோசப் அங்கிள் பாத்துக்குவாரு" அவளை சமாதினப்படுத்தினாலும் யார் எதனால் என்ற பயம் மூவரையும் நிம்மதியிழக்க செய்தது.


ஷர்மிளாவின் தோழி வந்ததும் ஆடை வடிவமைப்பில் கவனம் திரும்பினாலும் மூவருக்கும் முழுமையாக அதில் மனம் லயிக்கவில்லை.

✴✴✴

"மிஸ்டர் அர்ஜுன், ரெக்கார்ட்ஸ் படி நீங்க தான் மெடீரியல் இன்சார்ஜ். இந்த கலப்பட சிமெண்டும், தரமில்லாத அங்கீகரிக்கபடாத hollow blocks, இதெல்லாம் இங்க கோடோனுக்கு உங்களை அறியாம எப்படி வந்துச்சு? இதுக்கான டெலிவரி ஷீட்ல உங்க கையெழுத்து தான இருக்கு. அதோடு பல எலக்ட்ரிகல் ஃபிட்டிங்க்ஸ் கொள்முதல் செய்ததற்கான பில் இருக்கு ஆனா பொருட்கள் இந்த சைட்டுல உபயோகப்படுத்திய ஆதாரம் இல்லை. What do you have to say for these discrepancies Mr Mallikarjun?"

ஒரு பக்கம் அர்ஜுனுக்கு நெருக்கடி ஏற்பட மறுமுனையில் ஸ்டீபன் சிக்கி கொண்டான்.

"Who is Stephen Devasagayam?" மற்றுமொரு அதிகாரி அழைக்க, ஸ்டீபன் எழுந்து நின்றான். "நீங்க லஞ்சம் வாங்கினதா புகார் வந்திருக்கு உங்க வீட்டை சோதனை போடணும்." இவர்களின் அலுவலகத்தினர் அனைவரும் அதிர்ந்தனர்.

போலி ஆவணங்கள் பல சிக்கத்தொடங்கின அதிகாரிகளின் ஆய்வில். அர்ஜுனையும் ஸ்டீபனையும் குறிவைத்து அனைத்து அவணங்களும் ஜோடிக்கபட்டிருந்தன.

"ரீசெண்டா எங்கேஜ்மெண்ட் ஆச்சுன்னு கேள்விபட்டேன். ஒருவேளை ஆடம்பர கல்யாணத்துகாக ஆசைபட்டு.." அந்த அதிகாரி அவன் கோபத்தை தூண்டும் விதமாக கேள்வி எழுப்பியதும்

"நீங்க என் வீட்டை சோதனை போடணும் அவ்வளவு தான? வாங்க சார்." நான்கு அதிகாரிகள் சகிதம் ஸ்டீபனின் வீடு நோக்கி பயணப்பட்டார்.

மற்றுமொரு குழு ஆவணங்களோடு R & M Associates சென்னை அலுவலகத்தில் ரெய்டு நடத்தவென்று புறப்பட்டனர். அந்த வணிகவளாகம் மொத்தமாக வருமானவரிதுறை அதிகாரிகள் கைப்பற்றினர். அங்கிருந்த பணியாட்கள் அனைவரும் வெளியேற்றபட, அரசு அதிகாரிகள் அவர்களது ஆட்களை பாதுகாப்பிற்கு நியமித்தனர். R & M Associates நிறுவனத்திற்கு சொந்தமான கட்டுமான பொருட்கள் அனைத்தும் கைபற்றபட்டது.

வணிகவளாகம் திறப்புக்கு முன்னரே இப்படிபட்ட சிக்கல் எழ, ஊடகங்களுக்கு செய்தி பரவாமல் இருக்க அந்த வளாகத்தின் உரிமையாளர் தனது செல்வாக்கை உபயோகித்திருந்தார். அடுத்தநாளும் ரெய்டு தொடரும் என்ற எச்சரிக்கையை விடுத்துவிட்டு சென்றனர் அதிகாரிகள்.


தான் பணியாற்றும் முதல் ப்ராஜக்ட்டிலேயே இப்படி பட்ட அவப்பெயர், பழி என மனமொடிந்து போனான் அர்ஜுன். அவன் தோளில் அழுத்தத்தை உணர்ந்தவன் நிமிரவும் அவனுடைய மேலதிகாரி ரங்கநாதன் நின்றிருந்தார். "சார்" பதட்டமானான் அர்ஜுன்.

Date: 4th January 2022

வணக்கம் தோழமைகளே!
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏❤
எல்லாரோட குடும்பத்துலையும் மட்டற்ற மகிழ்ச்சி, ஆரோக்கியம், நிம்மதி, அன்பு, மனஅமைதி நிறைந்து இருக்க என் வாழ்த்துக்கள் & பிரார்த்தனைகள்!
Take care!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro