Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 15

Published: Sep 15, 2021

நரம்பியல் நிபுணர் மற்றும் கௌன்சிலர் இருவரையும் சந்தித்துவிட்டு சில பரிசோதனைகள் முடிந்தபின் பூங்கா காலனியை வந்தடைந்தாள் பூரணி. நேராக சென்றது அர்ஜுன் வீட்டிற்கு, யமுனாவையும் பத்மாவையும் பார்த்து முதலில் மன்னிப்பு கேட்டாள்.

"நான் பண்ணது தப்பு தான், எதோ மனக்குழப்பத்துல உங்க எல்லாரையும் பார்க்க வராம இருந்துட்டேன். ஸாரி பெரிய அம்மு, ஸாரி அம்மு. நான்..." பேச முடியாமல் அழுகை விம்மி வெடித்தது. "அம்மா மாதிரி என்கிட்ட பாசம் காட்டி என்னை பாத்துகிட்ட உங்க மனசை கஷ்டப் படுத்தியிருக்க கூடாது. எனக்கு கில்டியா இருக்கு.. ஸாரி."

பெற்றது கோகிலாவும் பரந்தாமனும் என்றாலும், அவளை வளர்த்ததில் பெரும் பங்கு இந்த இரு குடும்பங்களுக்கும் தான். அழுது சிவந்திருந்த அவள் முகத்தையும் கண்களையும் துடைத்துவிட்டார் பத்மா, அவர்களும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியிருந்தனர். அவளின் பிரிவு அனைவரையும் பாதித்திருந்தது.

"உன் மேல கோவம் இல்லை டா, என்ன காரணம்னு யாருக்கும் தெரியலை. உனக்கும் அர்ஜுனுக்கும் சண்டையா? இல்ல சுகந்திக்கும் உனக்கும் எதாச்சும் மனஸ்தாபமா? வேற யாராவது எதாவது சொன்னாங்களா? ஒரு வேளை நான் தான் என தங்கத்தை கண்டிக்கிறேன் பேர்வழினு எதாச்சும் காயப்படுத்திட்டேனோ? இந்த பெரிய அம்மு அப்படி எதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிக்கடீ என் ராஜாத்தி. இந்த அம்மாவை மறுபடியும் தவிக்கவிட்டுடாத டீ".
அவள் கையை பற்றி குரல் உடைந்து அவர் அழவும், பாய்ந்து அவரை அணைத்து கொண்டு குற்ற உணர்ச்சியில தவித்தாள் பூரணி.

"ஐயோ இல்லை பெரிய அம்மு நீங்களோ அம்முவோ, யாருமே என்னை எதுவுமே ஹர்ட் பண்ணலை. நான் தான் என்னோட யூஷுவல் ப்ராப்ளம்ல கொஞ்சம் அதிகமா கன்பியூஸ் ஆயிட்டேன்" ஆறுதல் கூறி சமாதானம் செய்து அவர்கள் கையால் ஒரு மாதத்திற்கு பிறகு அவள் சாப்பிட்டதும் தான் அந்த தாயுள்ளங்களுக்கு நிம்மதி. சிறிது நேரம் பத்மாவின் மடியில் படுத்து கதையளந்து கொண்டிருந்துவிட்டு அவர் வீட்டு வேலையை கவனிக்க சென்றதும் யமுனாவிடம் தொற்றி கொண்டாள். அவள் சகஜ நிலையில் இருப்பதே அவர்களுக்கு மனதிருப்தி என்பதை அறிந்தவள் கதை அளந்துகொண்டு அவருக்கு வீட்டு வேலையில் உதவினாள்.

"பெரிய அம்மு, ஒரு மாசமா நான் வரலை உங்களுக்கு பயம் விட்டுபோச்சு, ம்ம்ம்... இங்க பாருங்க அண்ணா ரூம்ல எல்லாம் எப்படி கிடக்குன்னு, அண்ணா பாவம் ஆபிஸ் போயிட்டு களைச்சு வராரு இதெல்லாம் கரெக்டா பாத்து செய்ய கூடாது? உங்க பையன் தான?" என அர்ஜுனின் அறையை சுத்தம் செய்ய தொடங்கினாள்.

"அடி போக்கிரி கழுதை! அவன் என்ன குழந்தையா டீ? வேலைக்கு போனா கொம்பா முளைச்சிருக்கு?" என்றவரின் பேச்சு அவளின் அணைப்பில் தடைபட்டது.

"ஹப்பா அந்த போக்கிரி கழுதை கேட்காம காது ஏங்கி போச்சு."

"போடி பைத்தியகாரி" செல்லமாய் சலித்துக் கொண்டவர் கண்கள் கலங்கியது. அம்மு அம்மு என வளைய வந்து அவள் கொஞ்சுவதையும், உடல்நலமில்லாத நேரங்களில் அவள் செய்யும் பணிவிடைகளும், அர்ஜுனோடு சேர்ந்து செய்யும் அழிச்சாட்டியங்களும் எல்லாவற்றிற்கும் ரொம்ப தான் ஏங்கிபோயிருந்தது அந்த தாயுள்ளம்.

"ஹலோ வாட் இஸ் திஸ் அழுகாச்சி படம்? பொறுத்தது போதும் மனோகரா கண்ணாம்பா மாதிரி பொங்கி என்னை பின்னி எடுப்பீங்கனு பாத்தா, இப்படி கண்ணே என் ஷெல்வமே அப்படீன்னு சோக கண்ணாம்பாவா உக்காந்திருக்கீங்க. ஸுட் ஆவலை மிஸஸ். யமுனா. உங்களுக்கு வெடுக்கு வெடுக்குன்னு பேசுற காந்திமதி ரோல் தான் கரெக்ட்" வாய்ஸ் மாடுலேஷனோடு பேசவும் அவர் பொசுக்கென சிரித்துவிட அவளும் சேர்ந்து கொண்டாள்.

~~~~~~

ஷர்மிளா பேடி - சண்டிகரை சொந்த ஊராக கொண்ட அமர்நாத் பேடி (Amarnath Bedi) மற்றும் சுனிதா தம்பதியரின் தவ புதல்வி. பள்ளி முதல் ஆர்கிடெக்ட் படிப்பு வரை விஷ்வாவோடு ஒன்றாக வளர்ந்த உயிர் தோழி அல்லது உயிரை வாங்கும் தோழி. (எப்படினாலும் கரெக்ட்தான்.)

விஷ்வாவின் கூற்று படி 'பத்து வயசுக்கு பிறகு அவளும் வளரலை அவ மூளையும் வளரலை' என அவள் குள்ளமாக இருப்பதை குறிப்பிடுவான்.
அவன் கலாய்த்தால், சண்டிகரின் பஞ்சாபி பதுமை, சென்னையின் தரை லோக்கல் தாரகையாக மாறி காது பொசுங்கும் அளவிற்கு கழுவி ஊற்றுவாள்.

"அந்த கோட்டான் உன்னை எதாச்சும் சொன்னானா பேபி?" ஒரு அடுப்பில் தேநீர் கொதித்து கொண்டிருக்க, இன்னொரு அடுப்பில் எண்ணை சட்டியில் வெங்காய பஜ்ஜி தயாராகியது ஷர்மிளாவின் கைபக்குவத்தில்.

தேநீர் கோப்பையை கழுவியபடி அவள் விழிக்க,

"அதான் டீ விஷ்வா எதும் சண்டை போட்டானா, சரியான உர்ர்ராங்குட்டான் அது, அதான் கேட்டேன்." அவனுக்கு கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்களை நினைத்து சிரித்தாள்.

"அது என்ன கா பேரு கோட்டான்?"

அவளுக்கும் சுகந்திக்கும் ஒரு பஜ்ஜியை ஊட்டிவிட்ட ஷர்மாளா.

"இந்த விளக்கம் வெங்காயமெல்லாம் நல்லா கேளு. அது... எப்ப பாரு அவன் பேஸ்ல (face) உர்ர்ருனு ஒரே எக்ஸ்பிரஷன் தான், அதான் உர்ர்ராங்குட்டான் Orangutan monkey மாதிரி."

வெங்காயத்தை மாவில் பிரட்டி லாவகமாக கீழே சிந்தாமல் எண்ணெயில் போட்டுவிட்டு "ஆந்தையோட ஒரு வகை கோட்டான். எப்பவுமே அதிகமா பேசமாட்டான், என்ன கேட்டாலும் ஜஸ்ட் முழிப்பான், கொஞ்ச நேரம்".

மூவரும் கிளுக்கி சிரித்து கொண்டனர். "ரொம்ப ரிஸர்வ்டு டைப் அவன். அதுவும் டீன் ஏஜ் ல கேர்ள்ஸ் வந்து பேசுனா கொஞ்சம் அன்னீஸியா ஃபீல் பண்ணுவான். எப்படி ரியாக்ட் பண்ணுறதுனு தெரியாது உம்முனு மூஞ்சை வச்சிட்டு முழிப்பான் பாரு, ஹல்க் மாதிரி. பொண்ணுங்க அவன் கோவமா இருக்கான்னு தெரிச்சு ஓடும் ஆனா அந்த கான்ஸ்டிபேட்டட் (constipated) லுக்குகான அர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும்."

அவள் அசால்ட்டாக அவன் கெத்தை தவிடுபொடியாக்க மற்ற இருவரும் அடக்கமாட்டாமல் சிரித்து கொண்டிருந்தனர்.

"மிலி கா, அண்ணாவை பாத்தா யாரா இருந்தாலும் டூ ஸ்டெப்ஸ் பேக் தான். எனக்கும் கூட டெல்லிலேருந்து அவர் வந்தபிறகு கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சு பேச". சுகந்தி தன் மனதில் இருந்ததை சொல்ல

"நீ நம்பிட்டியா? அது வெட்டி ஸீன் டீ பேபி அவனுக்கு ஸ்டிரிக்ட் ஆபிஸர் மேஜர் சுந்தர்ராஜன்னு நினைப்பு."

"பெருத்த அவமானம்! பெருத்த அவமானம்" அர்ஜுன் குரல் கேட்டதும் மூவரும் திரும்பினர். "ஏன் ஷம்ஸு இப்படி டேமேஜ் பண்ற என் அண்ணனை?"

"போடா ஜால்ரா! இதெல்லாம் டேமேஜா? என் ரேஞ்சுக்கு காதுல மினிமம் ரெண்டு சொட்டு ரத்தம் வரணும். அது சரி..." அவள் அடுத்து பேசும் முன்

"அர்ச்சுணா ஸாரி" பூரணி ஓடிவந்து அவனை அணைத்து கொண்டு கண்கலங்கவும், அவளை பார்த்த சந்தோஷத்தில் அவனும் கண்கலங்க பின் சுதாரித்து, அவளை வம்பிழுக்க எண்ணினான். ஷர்மிளாவும் சுகந்தியும் வேண்டாம் என சைகை காட்டினர்.

"அர்ஜுன்..." ஷர்மிளா இழுக்க

"ஐயோ தாயே பரதேவதையே! பஞ்சாபின் பெண் சிங்கமே! நீ பண்ற டார்ச்சர்லாம் அவன் தாங்குவான் அது ஸ்டீல் பாடி. இது நோஞ்சான் பாடி அதுவும் உங்க எல்லாரோடவும் குப்பை கொட்டி நஞ்சு போன பாடி.. என் பொண்டாட்டிகாக பாத்து கருணை காட்டு டீ. அதுவும் கொலை பசியில வேற இருக்கேன்".

கிச்சன் சிங்கில் கைகழுவியபடி, பரிதாபமாய் அர்ஜுன் கெஞ்ச, பூரணியும் சுகந்தியும் பல நாட்களுக்கு பிறகு நடக்கும் இந்த டிராமாவை ரசித்து சிரித்து கொண்டிருந்தனர்.

சுகந்தியை பார்த்த ஷர்மிளா, "பேபி போனா போகுதுன்னு உனக்காக விடுறேன். அந்த குதூப் மினார் எங்கடா?" தட்டில் பஜ்ஜியை அடுக்கி வைத்து கொண்டே கேள்வி எழுப்பினாள்.

பூரணி அதற்குள் தேநீரை வடிகட்டி கோப்பைகளில் ஊற்றியதும், "இரு வரேன்" தன் தம்பிக்கும் தங்கைக்கும் தேநீரையும் பஜ்ஜியையும் டிரேயில் வைத்து எடுத்து சென்றாள் ஷம்மு.

ஷம்மு சென்றதும்,
"சொன்னா அவன் அடிப்பான் சொல்லலைன்னா இது அடிக்கும்... இருக்குற ஒரு உசிரை டிசைன் டிசைனா எடுக்குது பக்கிங்க." முணுமுணுத்தான் அர்ஜுன். "ஏய் பாப்பா, ஐடியா பண்ணி என்னை காப்பாத்து டீ" பூரணியிடம் விண்ணப்பித்தான். அவள் கேள்வியாய் பார்க்கவும்.

"விஷ்வாவும், சந்தீப்பும் இவளுக்கு எதோ சர்ப்ரைஸ் அரேஞ்ச் பண்றேன்னு போயிருக்கானுங்க. இவளை சமாளிக்குற வேலை என்னுது. சில வினாடிகள் யோசித்தாள் பூரணி, "என்னை காவு குடுக்க அனுப்பிட்டு, கலர் பேப்ர் ஒட்டிட்டு இருக்கானுங்க ரெண்டுபேரும். நீ அவளை டைவர்ட் பண்ணி கொஞ்ச நேரம் இங்கேயே புடிச்சி வச்சா உன் மேல இருக்குற கோவம் கேன்சல்".

"ஹய் என் அர்ச்சுணா தான் பெஸ்ட்" அவன் கன்னம் கிள்ளி முத்தம் வைத்ததும்

"ஆஆ.... நெஞ்சு வலிக்குது டீ பாப்பா. அர்ஜுன் உன்னையும் நல்லவன்னு நினைக்குற ஒரு ஜீவன் இருக்கு டா பரவாயில்லை, தர்மம் இன்னும் சாகலை" போலியாக ஆனந்த கண்ணீர் வடித்தான் ஹாலுக்கு சென்று இருக்கையில் அமர்ந்தனர்.

"அஜ்ஜு உன்னை நம்புறதால தானடா நான் லவ் பண்றேன். அப்புறம் யாருமே நம்பாத மாதிரி பேசற?" சுகந்தி முறுக்கிகொண்டாள்.

"அது நீயும் நானும் வேற வேறயா டீ அழகி மா? ஈருடல் ஓர் உயிர் இல்லையா?" அவளை தன்னருகே இருத்தி கொண்டு காதல் கசிந்துருக அவளிடம் குழைந்தான்.

கையில் டிரேயோடு வந்த ஷர்மிளா,
"டேய் ஃப்ராடு டயலாக் அடிச்சே அவளை லாக் பண்ணிவச்சுடு இது ஒரு வாயில்லா பூச்சி. பேபி உனக்கு டிரெய்னிங்க் பத்தலை டீ என் மேரேஜுக்கு முன்ன உங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் ரெடி பண்ணணும்".

பூரணியை தோளோடு அணைத்துகொண்டு அவள் கூறியதும் அர்ஜுன் பதட்டமாக சுகந்தியை தன்னோடு இறுக்கி கொண்டான்.

"ஐயோ நல்லா இருக்குற பொண்ணை கெடுத்துவச்சிருவா போல. ஏன் ஷம்ஸ் நீ என்ன ஏக்தா கபூர் சீரியல் வில்லியா?"

சுகந்தியிடம் "அழகி மா அவகூட சேராத, அவ பேட் கேர்ள் அழகி மா பேட் கேர்ள்." அவள் கன்னத்தில் இதழ் பதிக்க அவள் முகத்தில் பூத்த வெட்க புன்னகையை பூரணி ரசித்தாள் பல முறை இந்த காட்சிகளை பார்த்திருக்கிறாள்.

அதென்ன இன்று மனதின் ஓரமாய்? கண்ணாடியில் ஒரு சின்ன கீறல் போல? ஏக்கமா?

"டேய் தடியா ரொமான்ஸை குறைடா. பச்சை புள்ளையை பக்கத்துல வச்சிட்டு அட்ராசிடி தாங்கலை. சரி நீ கிளம்பு நாங்க ரெடி ஆகணும்."

"ஷம்ஸ் சூடா இஞ்சி டீ போட்டு, தீனி எல்லாத்தையும் கொண்டுவந்து வச்சிட்டு போக சொல்ற தாராள மனசு டீ உனக்கு. எங்களை பிரிக்கிறதுலேயே இரு" முகம் சுருக்கினான்."எங்க போனாலும் அப்பாவோட இன்பார்மர் யாராச்சும் போட்டு குடுத்துடுறாங்க, நீயாச்சு கொஞ்ச நேரம் எங்களை ஃப்ரீயாவிடு டீ".

அவன் தேநீர் குடித்து முடித்ததும் முதுகில் கைவைத்து தள்ளிகொண்டு சென்றாள் ஷம்மு, "ஹட்!" அடுத்து அவள் ஹிந்தியில் முணுமுணுக்க

"உனக்கு புண்ணியமா போகும் திட்டுனா புரியர மாதிரி இங்கலீஷ்ல தமிழ்ல திட்டி தொலை. உங்க பாஷையில திட்டாத".

"அது ஹிந்தி டா மாங்கா, பஞ்சாபி இல்லை".

"ஆங் அது என்ன? இந்தி வராதுக்கு என்னவோ சொல்வாங்களே. நமக்கு இந்தி ஆத்தாலாம் வராது தமிழ் ஆத்தா மாரியாத்தா தான் வரும். நீ கழுவி ஊத்துறதை சிறப்பா தமிழ்லையே ஊத்து. நானும் இருவது வருஷமா துடைச்சிபோட்டு போறா மாதிரி போயிடுறேன்".

"ஹய்யோ" என ஷம்மு தலையில் அடித்துகொள்ள

"நான் உங்களோட குப்பை கொட்டபோறேன்னு டிசைட் பண்ணதுமே இந்த மானம் ஈனம் எல்லாத்தையும் கடவுள் குடுக்காம புடுங்கி வச்சிகிட்டாரு. யூ கண்டின்யூ"

"இடத்தை குடுத்தா மடத்தை புடுங்குற கேஸ் ஆம்பிளைங்கனு சொன்னேன். போதுமா? கெட் அவுட். நான் இங்கிலீஷ்ல திட்டினா காது செவிடாகிடும் பரவாயில்லையா?"

உள்ளே சென்றதும் அறை கதவை தாழிட்டாள். "ஊப்ப்ப்.. இவன் சரியில்லை.. ஏண்டி பய ரொம்ப காய்ஞ்சு போயிருக்கானோ?"

சுகந்தி லேசான வெட்கத்துடன் நெளிந்தாள், இருவரும் அர்த்தபுஷ்டியாக பார்வை பரிமாறி கொள்ள, பூரணி 'பே' வென விழித்தாள்.

"என்னக்கா நடக்குது? என்ன கேட்டீங்க? ஒண்ணுமே புரியலை!"

"பேபி அது கப்பில்ஸ் (couples) டிபார்ட்மெண்ட், நீ நம்ம ஏரியா சிங்கள்ஸ் சங்கத் தலைவியா இருக்க, உனக்கு ஆளு செட் ஆகட்டும் அக்கா டிரெய்ன் பண்றேன்".

"ஆமா பெரிய ஆபிஸ் ப்ரமோஷன் மாதிரி பில்ட் அப். டிரெய்னிங்க் ப்ரொபேஷன்னுட்டு, போ க்கா".

"ஏன் சுகி பேபி இது தேறும்?" ஷர்மிளா தாடையை நீவினாள் சந்தேகமாக.

"கொஞ்சம் கஷ்டம் தான் கா, காலம் பூரா முரட்டு சிங்கிளா இருக்குறதுக்கான பத்து லட்சணமும் இருக்கு கா". இருவரும் மிக சீரியஸாக அவளை ஆராய்ந்து பேசி கொண்டிருந்தனர்.

"ரியலீ?" விழிவிரித்தாள் ஷம்மு.

"யா யா"

"ஓ மை காட்! வாட் ஏ பிட்டி! நேத்து பொறந்த பொடிசுங்கலாம்  பாய் பிரண்டோட சுத்தும் போது, அந்நியாயமா ஒரு சூப்பர் பிகர் சிங்கிளா சாகபோறதை நினைச்சா என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கே ராதா! இதை நான் யார்கிட்ட போய் சொல்லுவேன் ராதா? யாருகிட்ட சொல்லுவேன்?"

"ஆஆ.. இப்படி ஒரு விபரீதம் நீங்கள் இருக்கையில் நடக்க விடலாமா கோபால்?"

"ரெண்டு பேருக்கும் மனசுல சிவாஜி சரோஜா தேவின்னு நினைப்பா? சகிக்கலை" உதட்டை சுழித்தாள் பூரணி.

"ஃப்ளவர் பேபி (பூ குட்டி தாங்க)
எங்க பெர்பாமன்ஸ் முக்கியம் இல்லை, பெர்பாமன்ஸ் மூலமா சொன்ன மெஸேஜ் தான் முக்கியம்".

"ஓ அப்படி என்ன சமுதாயத்தை சீர்தூக்குற மெஸேஜ் உங்க நடிப்பால சொன்னீங்க ரெண்டுபேரும்?"

"ஷேம் ஷேம் பப்பி ஷேம்! விடிய விடிய மில்ஸ் அண்டு பூன் புக் படிச்சுட்டு ரொமான்ஸ் னா என்னானு கேட்குறா டீ!"

"ஐயோ அக்கா அது.."

"மூடு! உன்னை திருத்த நான் சுகு ரெண்டு பேரும் லீவு போட்டு ரிசர்ச் பண்ணி சிலபஸ் ரெடி பண்ணணும். இப்ப கிளம்பு. கலாய்ச்சது போதும்.. ஹப்பா".

"பூரி பாப்பா ஹாப்பி அண்ணாச்சி! அச்சோ அக்கா உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன்" என குதூகலமாக அவளையும்  சுகந்தியையும் அணைத்து கொண்டாள்.

~~~~~~~~~~

சுகந்தி -அர்ஜுன், ஷர்மிளா-சந்தீப், சந்தீப்பின் அண்ணன் அமன்தீப் அவன் மனைவி வீணா, ஷம்முவின் தம்பி ரோஹன் தங்கை ரேஷ்மா, அதோடு நம்ம நாயகன் & நாயகி. இத்தனை பேர் இருந்தும் பிறந்தநாள் விழா வீட்டில் மயான அமைதி, அனைவரது முகத்திலும் அதிர்ச்சி கோபம் குழப்பம். காரணம்?

ஓ! கெஸ்ட் லிஸ்ட்ல இன்னும் ரெண்டு பேரை மிஸ் பண்ணிட்டேன். கெஸ் பண்ணியாச்சா? ஆதர்ஷ் & யாமினி.
ஆதர்ஷ் தன் தங்கை யாமினியை அறைந்ததால் தான் அந்த மயான அமைதி.

[சற்று முன் நடந்தது]

ஆதர்ஷ், விஷ்வா, ஷர்மிளா, சந்தீப் நால்வரும் நெருங்கிய நண்பர்கள், ஒரே வயது. அந்த முறையில் பார்ட்டிக்கு வந்தவன் தங்கையை அழைத்து வந்தான். திருமணம் நிச்சயமான தகவலை நண்பர்களுக்கு தெரிவித்தான்.

"அம்மா சைட்ல டிஸ்டெண்ட் ரிலேடிவ். அண்ணன் தம்பி ரெண்டு பேரும்  கோயமபுத்தூர்ல பெரிய பிஸினஸ் ஃபேமிலி. மூத்தவர் பையனை மினிக்கு கேட்டாங்க, இளையவர் மனைவியும் பொண்ணும் டாக்டராம், அவளை எனக்கு பேசியிருக்கு. ஜாதகம் பொருந்திச்சு ஓகே ஆகிடுச்சு, அப்பா வரதுக்காக வெயிட்டிங்க். இன்னும் பத்து நாளுல எங்கேஜ்மெண்ட். எல்லாரும் வந்துருங்க டா. ஷம்மு நம்ம கேங்குல மத்த ஃபிரண்ட்ஸோட நீ காண்டாக்ட்ல இருக்க தான? டீடெய்ல்ஸ் குடு."

ஓவென குதூகலித்து ஆரவாரம் செய்தனர் அனைவரும் அவன் வருங்கால மனைவியின் புகைபடத்தை மொபைலில் காண்பித்ததும்.

"இது யாமினியோட வுட் பி" என அவன் புகைபடத்தை காட்டியதும், தேநீர் கோப்பைகளுடன் அங்கு வந்த பூரணி இதை கேட்டு அதிர்ந்தாள்.

"வாட்? இது எப்படி? ஏன் ஒத்துகிட்ட யாமினி?"

பூரணி அலறவும் அனைவரும் குழம்பினர். யாமினியின் முகம் வெளிறியது, பூரணியை அவள் எதிர் பார்க்கவில்லை.

"அண்ணா அவளை கம்பல் பண்ணீங்களா?"

"இல்லை பூரணி அவ பிடிச்சு தான் ஒத்துகிட்டா. இன்பாக்ட் எங்க கஸின் கல்யாணத்துக்கு போனப்பவே இவங்க அலையனஸ் ஓகே ஆயிடுச்சு அந்த ஒன்  வீக்ல பேசி முடிவு பண்ணிட்டாங்க."

அதிர்ச்சி கோபம் ஏமாற்றம் வலி என உணர்வுக் கலவையாக கொப்பளித்தது பூரணியின் முகம்.

"அப்ப நீ பொய் சொன்னியா யாமினி? எதுக்கு இவ்வளவு ஏமாத்தணும்? ஏற்கனவே ஒருத்தருக்கு நிச்சயம் பண்ண பிறகு எப்படி இன்னொருத்தரை லவ் பண்றேன்னு ச்சீ.. வெட்காமாயில்லை? ஏன் என்கிட்ட அப்படி சொன்ன? இதுல என்ன லாபம் உனக்கு? உன்னால நான் ஒரு மாசமா.."  பேச முடியாமல் திணறினாள் பூரணி.

அவள் பேசுவதிலிருந்து கடந்த மாதம் நடந்த நிகழ்வுக்கும் யாமினிக்கும் ஏதோ தொடர்பு என்பது அங்கிருந்தவர்களுக்கு புரிந்தது. ஆனால் முழுமையாக விளங்கவில்லை. ஆதர்ஷுக்கு விவரம் தெரியாததால் அவள் பேசியதன் அர்த்தம் விளங்கவில்லை.

"நான்..நான் என்ன சொன்னேன்? நீயா எப்பவும் போல மென்டல் மாதிரி..." அடுத்த சொல் வெளிவரவில்லை. ஏன் சுவாசம் கூட கடக்கவில்லை, விஷ்வா அவள் கழுத்தை பிடித்திருந்தான்.

"ஆதி இவ உன் தங்கச்சினு ஒரே கன்ஸிடரேஷன் தான் என் கையால அடிபடாம இருக்க காரணம். என்ன நடந்துச்சுனு பூரணி சொல்லி முடிக்கிற வரை வாயை தொறந்தானு வை கொல்ல கூட தயங்கமாட்டேன்."

திரும்பி பூரணியிடம் பேசுமாறு ஜாடை காட்டினான்.

"பூரணி சொல்லு மா, மினி என்ன செஞ்சா?" ஆதர்ஷ் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

யாமினி தன்னிடம் பேசிய அத்தனை விஷயங்களையும் அவள் ஒப்பித்து முடிக்க, "ச்சீ" என அருவருத்து தன் கையை விலக்கி கொண்டான் விஷ்வா.

"ஏன் பூரி அவ சொன்னா நீ நம்பிடுவியா? விச்சுவை ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணுச்சா? எங்க.." அவளை நெருங்கி நின்ற அர்ஜுன் உணர்ச்சிவசப்பட்டான்.
விஷ்வா ஜாடை காட்டி அவனை அமைதியாக்கினான்.

"அவளும் நானும் கல்யாணம் பண்ணா நம்ம பழைய ஃபிரண்ட்ஷிப் கன்டின்யூ பண்ண முடியாது, சரியா வராதுன்னு நீயா விலக முடிவு பண்ணிட்ட அதான? இங்க வந்தா என்னை மட்டும் அவாய்ட் பண்ண முடியாது, ஸோ எல்லாரையும்.."

அத்தனை பேர் மத்தியில் அவளை மேலும் சங்கடத்திற்கு  ஆளாக்காமல் அவனே விளக்கம் கொடுக்க அவள் கண்ணீர் மல்க ஆமோதித்து, தலை கவிழ்ந்தாள்.

ஆதர்ஷை நோக்கி, "ஒரு மாசமா இந்த காரணத்தை மனசுல வச்சு எங்க யாரையும் பாக்க வராம, யார் கூடவும் பேசாம, வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்திருக்கா இவ சொன்னதை நம்பி."

பூரணியின் மனநலனை பற்றி அறிந்தவர்களுள் ஆதர்ஷும் ஒருவன், ஒரு மருத்துவனாக அவனின் உள்ளுணர்வு விழித்தது.

"இடியட்! நீயும் ஒரு பொண்ணு தான? அசிங்கமா இருக்குடி. ஏன் இப்படி செஞ்ச? அவளை ஹர்ட் பண்ணியிருக்கியே அவளுக்கு எதாச்சும் ஆடியிருந்தா? ஏன் மினி? சொல்லி தொலை டீ."

விஷ்வாவும் அவளும் அன்று தன்னை கிண்டலடித்தது. தன்னை வெறுத்து ஒதுக்கியது என அனைத்தையும் கூறி அவமானத்திற்கு பழிவாங்க செய்ததாக சொல்லவும் அவள் கன்னத்தை பதம் பார்த்தது ஆதர்ஷின் கை.

தற்போது..

"எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேளு மினி. ஒருத்தர் இல்லை இங்க இருக்கவங்க அத்தனை பேரையும் ஹர்ட் பண்ணியிருக்க. என்னையும் சேர்த்து. என் ஃபிரண்ட்ஸ் முகத்துல இனி நான் முழிக்க முடியாத படி பண்ணிவச்சிருக்கியே. ஃபிரண்ட்ஷிப்னா என்னனு தெரியுமா? உனக்கு பணம் பகட்டு தான் எல்லாம் வாழ்க்கையில. நல்லா அனுபவிக்கபோற".

"டேய்" நணபர்கள் அனைவரின் குரலும் அதட்டலாக ஒலித்தது.

"அறிவு கெட்டவனே! கல்யாணம் ஆகப்போற பொண்ணை, அதுவும் தங்கச்சி. என்ன தப்பு பண்ணினாலும் வாய் தவறி வார்த்தயை விடாத ஆதர்ஷ்" அவனை கண்டித்தாள் ஷம்மு.

அதில் மேலும் தலைகுனிந்தாள் யாமினி. முணுமுணுப்பாக மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

"ஸாரி மா பூரணி, ஸாரி டா விச்சு. எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க." அவமானத்தால் தலைகுனிந்தான் ஆதர்ஷ் "நான் வரேன் ஷம்ஸ் ஸாரி. தங்கையை தொடர்ந்து வெளியேற போனவனை தடுத்தான் விஷ்வா.

அவன் குறிப்பறிந்து, "தர்ஷு (அண்)ணா" பூரணியின் குரல் கேட்டு திரும்பினான் ஆதர்ஷ் "உங்க சிஸ்டர் பண்ண தப்புக்கு உங்க ஃபிரண்டை ஏன் தண்டிக்கிறீங்க? ஷம்முக்கா பாவம், ப்ளீஸ் இருங்க!"

"மெச்சூரிட்டி வயசுல இல்லை மனசுல தான்னு ப்ரூவ் பண்ற".

"டாக்டர்! எமோஷனை குறைங்க டாக்டர்." சிவாஜியின் வாய்ஸ் மாடுலேஷனில் பேசி அர்ஜுன் கிண்டலடித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த சந்தீப் ஆதர்ஷ் வயிற்றில் விளையாட்டாய் குத்தி, "டேய் bugger! பேச்சிலர் பார்ட்டி எப்ப? கஞ்சூஸ் ஃபெல்லோ (fellow) எதாவது எக்ஸ்க்யூஸ் சொன்ன.." பெண்கள் இருப்பதை கருதி காதில் கிசுகிசுத்தான்.

"ஷம்மு மா..." அர்ஜுன் வாய் திறக்க

"ஏண்டா அர்ஜுன் பேச்சிலர்ஸ் பார்ட்டில சரக்கு வேணும்னா ஓப்பனா கேளு. ஏன் சுகந்திக்கு பயப்படுறியா?" விஷ்வா அவன் கழுத்தை வளைத்து கொண்டான்.

"ஏதேய்? நானா பேச்சிலர் பார்ட்டியா? சரக்கா? அடே கிராதகா!"

"ஆமா நீதான் கேட்ட" என கோரஸாய் விஷ்வா, ஆதர்ஷ், சந்தீப், அமன் அனைவரும் மொழிய, எதிரே சுகந்தியும் ஷம்முவும் முறைத்துகொண்டு நின்றனர். இவர்கள் திருவிளையாடலை புரிந்து கொண்ட பூரணி, அவர்கள் மீண்டும் இயல்பாக மாறுவதை கண்டு புன்னகை பூக்க, விஷ்வாவின் விழிகள் அவளை தீண்டி சென்றன.

"ஏன் கைய்ஸ் எனக்கென்னவோ சுகந்தி மதுரை இல்லைனாலும் அட்லீஸ்ட் மயிலாப்பூரை எரிக்கிற அளவுக்கு கோவமா இருக்குறாப்ல தெரியுது. உங்களுக்கும் அப்படி தான் தோணுதா?" யோசனையாய் தாடையை நீவி விஷ்வா நண்பர்களை நோட்டம் விட்டான். ம்ம்ம் என தலையசைத்து அவர்களும் ஆமோதித்தனர்.

அவர்களை பார்த்த அர்ஜுன்,
"நல்லா பொங்கலுக்கு வாசல்ல வந்த பூம்பூம் மாடு மாதிரி இருக்கீங்க டா, ரெண்டு கொம்பும் அதுல ரிப்பனும் தான் மிஸ்ஸிங்க்."

சுகந்தியின் பக்கம் திரும்ப அவள் நெற்றிகண்ணை திறக்க ஆயத்தமாகி கொண்டிருந்தாள்.

"ஐயோ! கோவில் திருவிழாவுக்கு பலி குடுப்பாங்க. நீங்க என்னடா பிறந்த நாளைக்கெல்லாம் பலி குடுக்கறீங்க? நீயெல்லாம் அண்ணனாடா? துரோகி, பரதேசி, பன்னாடை!"

அவனை திட்டிவிட்டு அவளை நோக்கி "ஐயோ! பாக்குறாளே பாக்குறாளே! நான் பார்ட்டி கேட்கலை டீ, சதி பண்றானுங்க டீ." அவள் கோவமாக வெளியே செல்ல "பேபி மா பிலீவ் மீ" என வடிவேலு பாணியில் அழாதகுறையாக விரட்டியவன் வாசலில் நின்று திரும்பினான்.

"அடேய் விச்சு எனக்கும் ஒரு காலம் வரும் இரு டீ" எச்சரித்துவிட்டு ஓட்டம் எடுத்தான்.

இதையெல்லாம் முதல் முறையாக பார்த்த சந்தீப்பின் அண்ணி வீணா புரிந்ததும் புரியாமலும் திகைக்க, அமன் மனைவிக்கு அவர்களின் லூட்டியை மொழிபெயர்த்தான்.

எல்லோரும் ஹை ஃபை கொடுத்துகொண்டு சிரித்தபடி இருக்கைகளில் அமர்ந்தனர். பல வருடங்களுக்கு பிறகு அவரவர் படிப்பு வேலை, என நித்திய போராட்டங்களுக்கு நடுவே நண்பர்களுடனான தருணத்தை இறுக்கம் தளர்ந்து கலகலப்பாக கொண்டாட துவங்கினர்.

சற்று நேரத்தில் ஷம்மு, "ப்ளடி இடியட்ஸ் இங்க என்னடா மெகா சீரியலா ஓடுது ஆளாளுக்கு ஒரு சப் ப்ளாட் போட்டு தனி டிராக் ஓட்டுறீங்க? மவனே ஃபவ் மினிட்ஸ்ல என்னோட கேக் வரலை.."

"ஏய் குள்ஸ் அடங்கு! சலங்கை கட்டாத சந்திரமுகி..." பேச்சை வளர்த்தான் விஷ்வா. அவன் மொபைல் ஒலிக்க அழைப்பை ஏற்றவன் முகம் மாறியது.

"ஏ சீரயஸா இல்லடா அர்ஜுன். சும்மா விளையாட்டுக்கு தான்டா. டேய் ஸாரி டா."

"---"

"என்ன இல்ல? மொபைலை அவகிட்ட குடு.."

"--"

"வாங்கலையா? சரி கத்தாத இரு நான் வரேன். ஸாரி சொன்னேன்ல. இட் வாஸ் எ ஜோக் அர்ஜுன்". விஷ்வாவின் முகம் இறுகியிருந்தது.

"என்னடா ப்ரோ?" ஷம்மு அவனை உலுக்க.

"சுகந்தி கோவிச்சுகிட்டாளாம், மாடியில உக்காந்திருக்கா, அழறாளாம், பேசமாட்றாளாம். நீங்களே வந்து சமாதானம் பண்ணுங்கனு கத்துறான்."

"ஒரு நேரம் போல இருக்காதுன்னு எத்தனை தரம் சொல்லிருக்கேன் விஷ்வா. எப்ப பாரு விளையாட்டு தான் டா உங்களுக்கு. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ் (useless fellows). அவங்களுக்குள்ள சண்டை வந்துது உங்களை கொன்னுடுவேன் பாத்துக்க".

மற்றவர்கள் முதலில் மாடியேறினர்.

"தீபு யூ ஸ்டார்டட் இட் ரைட்? வா வந்து ஸாரி சொல்லு அவள்ட்ட."

சந்தீப்பை இழுத்து கொண்டு அவர்கள் பின்னே மாடி ஏறினாள்.

"ஒவ்வொருத்தனும் வளர்ந்திருக்கறதை பாரு அகலமா அவஞ்சர்ஸ் ஹீரோ சைஸ்ல ஆனா சண்டையெல்லாம் கின்டர் கார்டன் கிட் மாதிரி.
சின்ன புள்ளைலேர்ந்து இதுங்களுக்கு refree வேலை பாக்குறதே சரியா இருக்கு. வளந்து கெட்டவனுங்களா. முடியலை டா!" மூச்சிறைக்க மாடியில் வந்து நின்றாள்.


வணக்கம் நண்பர்களே!
நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கணும் 🙏🙏🙏🙏
இந்த வானர சேனைக்கு ஒரு சரியான இன்ட்ரோ குடுக்கணும்னு தான் இந்த தாமதம். ❤❤❤❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro