முன்கதைச் சுருக்கம்
முன்கதைச் சுருக்கம்:
மீரா - கிருஷ் என்ற காதல்ஜோடி பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.. அவர்களுக்கு உறுதுணையாக கிருஷின் மொத்தக் குடும்பமும் மீராவின் நெருங்கிய உயிர் நண்பன் உதயும் மற்றும் மீராவின் உடன்பிறப்புகளான மீராவின் தம்பி ராம், அவளது தங்கை நிலா என எப்போதும் இருக்கின்றனர்..
தாய் தந்தையினரை இழந்த மீரா தனது சித்தி சித்தப்பா வளர்ப்பில் இருந்தாள்.. ஆரவ் என்ற கொடியவனால் பின்பு அவர்களையும் இழந்தாள்.. சித்தப்பாவின்
பிள்ளைகளான
ராம் மற்றும் நிலாவினை தனது சொந்த தம்பி தங்கைகளாகவே பாவித்து அவர்களுக்காகவே வாழ்ந்தாள்.. இதற்கிடையில் மீராவினை உண்மையாக காதலித்தும் விதியின் விளையாட்டால் அவளைப் பிரிந்த கிருஷ் பின்பு மீண்டும் தனது காதலின் துணைகொண்டு அவள் மனதில் இடம்பிடித்து அவளையே மணம் செய்து கொண்டான். இது தான் முள்ளும் மலரும் கதையின் கரு..
திருமணத்திற்குப் பிறகு ராமும் நிலாவும் கிருஷின் வீட்டிலே தங்கினாலும் ராம் மட்டும் அடம்பிடித்து பள்ளி மற்றும் கல்லூரி
விடுதிக்கு சென்றுவிட்டான்.. அதற்கு காரணம் அவர்கள் மேல் பாசம் இல்லை என்று அர்த்தமில்லை..தனது சகோதரியின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என அவனே யோசித்து எடுத்த முடிவு..
ராம் :
அவன்தான் இந்தக் கதையின் நாயகன்..புகழ்பெற்ற கல்லூரியில் வேளாண்மை பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவன்.
கொஞ்சம் முன்கோபி.. ஆனால் முரடன் இல்லை.. அனைவரிடமும் எளிதாக பழகி நட்பு பாராட்டும் தன்மை உள்ளவன்.. திருமணத்தைப் பற்றி அவன் இன்னும் சிந்திக்கக் கூட துவங்கவில்லை.. அவனுக்கு தனது அக்கா மாமா சொல்வதுதான் வேதவாக்கு. அவர்கள் யாரைச் சொன்னாலும் அவளை வாழ்க்கைத் துணையாக ஏற்கத் தயங்க மாட்டான்..இவ்வாறு
அமைதியாக இருக்கும் இவன் வாழ்வில் இனி நடக்கவிருக்கும் திடீர்சம்பவங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்தும் அவன் எவ்வாறு மீள்வான் என்பதுதான் "காதலால் கைது செய்"
முக்கியக் குறிப்பு :
நல்லவர்கள் கெட்டவர்கள் ஆகலாம். கெட்டவர்கள் நல்லவர்களும் ஆகலாம்..
வணக்கம் நண்பர்களே,
தங்களின் ஆதரவினால் நான் மீண்டும் கதை எழுதத்துவங்கி விட்டேன்.
எனது முதல்கதை முள்ளும் மலரும் கதைக்கு தந்த ஆதரவைப் போலே இந்தக் கதைக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறேன்..
சென்ற கதையினைப் போல அவ்வளவாக சோகமாக இருக்காது என நம்புங்கள் 😍.
காதலால் கைது செய் முள்ளும் மலரும் என்கிற கதையின் இரண்டாம் பாகம்தான். அதனால் அந்தக் கதையினைப் படிக்காதவர்கள் அதைப் படித்துவிட்டு இதனைத் தொடர்ந்தால் எளிதில் புரியும் என நினைக்கிறேன்..
எந்தக் குறை இருந்தாலும் மறுக்காமல் சொல்லுங்கள்..
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
கிருஷின் திருமணம் முடிந்து 5 வருடங்களுக்குப் பிறகு,
" அக்சு பேபி இவ்ளோ அழகா சிரிச்சு மாமாவக் கொல்றியேடி. " என அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ராம்..
" மாமு... ப்போ சு.ம்.மா எச்.சிப் ப.ண்ணா.த .. " என அவனது முகத்தைத் தள்ளிவிட்டாள் அக்சரா...
" போ அக்சு.. உனக்கு இனிமே சாக்கி கிடையாது.. மாமா உங்கிட்ட பேச மாட்டேன் " என அவன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,
" சா.ரி மாமூ பாப்பா பா.வ.ம் " என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமழை பெய்தாள் கிருஷ் மற்றும் மீராவின் மூன்று வயது செல்ல மகள் அக்சரா.. அவளை காற்றுக்கும் கூட வலிக்காமல் தூக்கிப் பிடித்தவன் அவளைத் தட்டாமாலை சுற்ற " வி.டு மா.மா வி.டு " என்றபடியே களுக்கிச் சிரித்தாள்..
அவன் முதுகில் ஒன்று போட்ட நிலா " டேய் என்னடா என் பொண்ண எங்கிட்டத்தாடா.. குட்டி இந்த அம்முக்கிட்ட வாங்க " என கையை நீட்ட, அவளும் தன் சித்தியிடம் தாவ முயல, அதனை அறிந்து கொண்ட ராமோ அக்சுவைத் தூக்கித் தன் தலைமீது வைத்து அவளுக்குப் போக்குக் காட்டிவிட்டு ஓடிக் கொண்டிருந்தான்..
தனு அவர்களை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருக்க " அம்மாடி தனு.. அவனே ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் வந்திருக்கான்.. அவனை இப்பவே ஓட வெச்சிராதடி " என்றபடியே அருகில் வந்து அமர்ந்தாள் நிலா..
தனு கிருஷின் சித்தப்பா மகள்.. விடுமுறை மற்றும் விசேச தினங்களுக்கு மட்டும் இங்கு வருவாள்..ராமினை பத்தாம் வகுப்பிலிருந்தே ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருக்கிறாள்.. ஆனால் ராமின் காத்துதான் அவள்புறம் வீசவே இல்லை..
" என்ன நிலா நீயே இப்படி சொல்ற.. " என சோகமாய் அவள் சொல்ல.. " என்ன சொல்லச் சொல்ற.. நீயும் லவ் பண்றக்கு ஆள் பிடிச்சிருக்கியே.. ஏன்டி உனக்கு உண்மையாவே அந்தக் கருவாயனத்தான் பிடிக்கனுமா.. நீயும் அவன் பின்னாடி ஹட்ச் டாக் மாறி தான் சுத்தற.. ஆனா அவன் திரும்பிக் கூட பார்க்க மாட்டிங்கிறானே.. " என்று சிரித்த நிலாவிடம்,
" எண்ணி ஒரே மாசத்துல அவன என் பின்னாடி சுத்த வைக்கல நான் தனு இல்ல.. "
இதைத்தான் நீ 5 வருசமா சொல்லிக்கிட்டு இருக்க. ஆனா ஒரு முன்னேற்றத்தையும் காணோம்..
என்னது 5 வருசமா... போடி அவனே ஹாஸ்டல்ல தான் படிப்பேன்னு அடம்புடிச்சு வெளிய தங்கிட்டான்.. சரி எதாவது பங்சன்ல பார்க்கலாம்னா வந்தவொடனே சிட்டாப் பறந்திடறான்.. ஏதோ அக்சுவ பார்க்கத்தான் அடிக்கடி வரான்.. அதும் பாரு எங்காச்சும் திரும்புறானானு.. எப்ப பாரு அக்கா அக்கானு மீரா பின்னாடி சுத்தரது இல்ல அக்சு பின்னாடி சுத்தரது.. மூஞ்சயும் மொகரையும் பாரு..ச்சே
சரி சரி ப்பீல் பண்ணாத.. அவனப் பத்தி தான் தெரியும்ல.. கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு இருக்கிறவன் பின்னாடி சுத்துனா இந்த நிலைமை தான். இப்பவே நம்ப கிளாஸ்ல உனக்கு புரோபோஸ் பண்ண 5 பையன்ல ஒருத்தன செலக்ட் பண்ணிக்கோ. என்று நிலா ப்ஃரீ அட்வைஸ் தந்தாள்..
ரொம்ப பேசறடீ.. இப்படியே பேசிட்டு இரு உன் லவ் மேட்டர உங்க அக்காக்கிட்ட போட்டுத் தரேன் என்று தனு எழ,
அவளின் கையைப் பிடித்தவள் " அடி போடி நான் எங்க மாமாக்கிட்டவே பர்மிசன் வாங்கிட்டேன்.. அக்காக்கு எல்லாம் எப்பவே தெரியும் " என்று பழிப்புக் காண்பித்தாள்..
அவளின் பழிப்பை போக்கும் விதமாக " ஆனா ராம்க்கு தெரியாதே.. இதை அவங்கிட்ட சொன்ன உனக்கும் ஆப்பு.. அப்ரோ என்மேலயும் கொஞ்சம் நல்ல எண்ணம் வரும்ல " என தனு கண்ணடிக்க
" அவனுக்கெலாம் மீரா பயப்படலாம். நான் இல்ல.. என்னை மாட்டிவிட நினைச்சில.. பாரு அவன் உன்னைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டான்.. " என பொய்யாக சாபம் விட்டாள்.. பாவம் அவள் சாபம் பளிக்குமோ என நிலாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை..
தனுவின் காதல் கிருஷிற்கும் தெரியாமல் இல்லை.. ஆனால் ராமிற்கு அவளை சுத்தமாக பிடிக்காது என்பதை தெரிந்து அமைதியாக இருந்தான்.. ஆனால் மீராதான் தனது தம்பியின் மீது உள்ள நம்பிக்கையினால் இருவரது படிப்பும் முடிந்தவுடன் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முடிவில் இருந்தாள்..
மீராவின் ஆசையை ராம் நிறைவேற்றுவானா? தனுவின் காதல் கைகூடுமா அல்லது அவளுக்கு போட்டியாக யாரவது வருவார்களா ?நிலாவின் காதல் கைகூடுமா?
என்பதை இனிவரும் அத்தியாயங்களில் பொறுத்திருந்து பார்ப்போம்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro