Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

3.திட்டம்

தங்களது ஆராய்ச்சிக்கு உதவ மறுத்த ஊர்த்தலைவரிடம் ராமின் சகோதரி தான் காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் என்று கூறிதான்  சக்தி அவரிடம் சம்மதம் வாங்கினான்.. அதனால் அவர்கள் மூவருக்கும் தடபுடலான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

ராம் உணவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க அந்த மெல்லிய கொலுசொலி மீண்டும் கேட்டது.. வழக்கம் போல இதையும் பிரம்மை என்று கருதியவன் சாப்பிடத்துவங்க அந்த ஒலி இன்னும் சத்தமாகக் கேட்க ஆரம்பித்தது.

" அம்மணி அன்னநடை போட்டுத்தான் வருவீங்களோ.அதை உள்ள வெச்சிட்டு  வேலையப்பாரு "என தலைவர் அதட்டலில் அந்தப்புறம் திரும்பியவனின் விழிகளில் விழுந்தாள் அவனது தேவதை..

மஞ்சள் நிற தாவணியில் கையில் மாம்பழக்கூடையுடன் நின்றிருந்தாள்.. அவள் அந்தக் கூடையை உள்ளே வைக்க செல்ல " தம்பிங்களா எங்க தோட்டத்து மாம்பழம் தேன் மாறி இனிக்கும்.. ஏய் ஆளுக்கொரு மாம்பழத்தை இலைல வை " என அவர்களிடம் சிரித்தும் அந்தப் பெண்ணிடம் கோபமாகவும் கூறினார்..

அவள் அருகே வந்து யாரையும் பாராமல் தனது வேலையை முடித்துவிட்டு உள்ளே சென்றதையே பார்த்துக் கொண்டிருந்தவன் மெதுவாக " சார் இந்தப் பொண்ணு உங்க மகளா" எனக் கேட்டான் ராம்..

அதற்கு அவன் கேட்கக் கூடாததை கேட்டது போல முகத்தை சுளித்து " ச்சேச்ச எனக்கு ரெண்டும் பையன்பா..இவ எங்க வீட்டு வேலைக்காரி மக. அவ ஆத்தா இறந்தப்பொறகு இங்கயே  எடுபுடி வேலை செஞ்சிட்டு இருக்காவய்யா.. நானும் தெண்டத்துக்கு சோறுபோட்டு வளர்க்கேன் . " என்றார்..

தன்னைப் போல இவளும் தாய் தந்தையை இழந்தவள் என்னும் போது
அவனுக்கு வாயில் வைத்த சாதம் அப்படியே இறங்க மறுத்தது..

" பார்க்க சின்னப்பொண்ணா இருக்கா.. படிக்க வைக்கலாம்ல " என அவன் வினவ, தீனா அவன் காதில் " டேய் அவ என்ன அவர் பொண்ணாடா.. ஏன்டா அவ்ளோ கொஷ்டின் கேக்கற.. இது கிராமம்டா.. பார்த்து நடந்துக்கோ டின்னு கட்டிடுவாங்கா.. " என எச்சரித்தான்..

அதை கேளாத பஞ்சாயத்து தலைவரோ " பொம்பளப்புள்ளைக்கு படிப்பெதுக்கய்யா.. எம்பசங்களே எட்டாப்பு தாண்டல.. அந்தக்கழுதை அதுக்குமேல படிச்சா எகத்தாளமா நடந்துவாக்குனு தாய்யா பள்ளிக்கோடத்துக்கு தாட்டல.. ஆறேழு வருசமா இங்கதா வேலை செய்யறா..
,என்ன நல்லா சமையல் வேலைலாம் செய்வா.. அதான் வீட்டோடயே வெச்சிருக்கேன்." என்றவர் அவர்களிடம் நெருங்கி வந்து " வெள்ளத்தோலா வேறப்போயிட்டாளா என்பையனும் ஆசப்பட்டுடான். அதான் வைகாசில கண்ணாலம் பண்ணிடலாம்னு இருக்கேன்.. " என்று சிரித்துக் கொண்டார்..

இந்த திருமணத்தில் அவளுக்கும் விருப்பம் இருக்குமோ என மனம் வருந்தினான்.. இருப்பினும் இந்த அடிமை வாழ்வை அவள்மட்டும் எவ்வாறு விரும்புவாள் என சிறுநம்பிக்கை மட்டும் இருந்தது..
அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்துவர அவன் மட்டும் அவள் உள்ளே சென்ற அறையின் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான்..

தீனாவும் சக்தியும் அவனை வழுக்கட்டாயமாகவே இழுத்துச் சென்றனர்..

தீனா ராமைத் தனியாக அழைத்து
" ராம் நீ அந்தப் பொண்ண விரும்பறியாடா " என தீனா நேரடியாக கேட்க, அவனும் ஆமென்றே தலையாட்டினான்..

" ஏன்டா உம்பின்னாடி அத்தனைப் பொண்ணுங்க சுத்தும்போது எட்டாவது கூட படிக்காத பட்டிக்காடு தான் வேணுமாடா.. உன்னை காத்து கருப்பு ஒன்னும் அடிக்கலியே " என்றான் கடுப்போடு..

" ப்ளீஸ்டா நான் என்னைப் பண்றதுனே தெரியமாட்டீங்குது.. அவ பாவம்டா.. அந்தப்பையன பார்த்தல்ல..சரியான குடிகாரனா இருக்கான்.. அவன் வயசென்ன.. அவ வயசென்ன.. நான் அவகிட்ட ஒரே தடவை தான் பேசுனாப் போதும்.. அவ என்னை கல்யாணம் பண்ணாட்டியும் பரவாலை.. இந்த நரகத்துல இருந்து அவள வெளியக் கூட்டிட்டு போயிடுவேன்டா.. " என புலம்ப ஆரம்பித்தான்..

" அடேய் என்னடா நாம ஒழுங்கா வீடுசேர வேண்டாமா.. ஊர்விட்டு ஊர்வந்து நல்ல வேளைடா " என அவன் அலுத்துக்கொள்ள

" நீ என்ன வேணா சொல்லிக்கோ இன்னைக்கு சாயங்காலம் அவள பார்த்து பேசப் போறேன்.. " என்றான் உறுதியாக..

" ராம் நீயாடா இப்படிப்பேசற.. உங்க வீட்ல உன்னை அநியாயத்துக்கு நம்புறாங்க..  உன் தங்கச்சிக்கு வேற கல்யாணம் இந்த நேரத்துல இது உனக்கு தேவைதானானு யோசிச்சுக்கோ.. " என்றான் தீனா..

" நான் நல்லா யோசிச்டேன்.. அவ சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்குறேன்.. இல்லைனா அவ வாழ்க்கைக்கு எது தேவையோ அது செஞ்சுக்கொடுப்பேன். இதுக்கு மேல பிரச்சினை வந்தா அக்காகிட்ட சொல்லி சால்வ் பண்ணிக்குறேன்.." என்றவன் அவசரமாக வெளியேறினான்..

தனது நண்பனிடத்தில் வீராப்பாய் பேசிவிட்டு வந்தாலும் அவனுக்கும் சற்று உறுத்தலாகத்தான் இருந்தது..
எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்காதவன் இவள் விசயத்தில் என்ன ஆனாலும் பரவாயில்லை என துணிந்து செயல்பட்டான்..

விறுவிறுவென தலைவரது வீட்டினை நோக்கி வந்தபின் தான்
அவளின் பெயர்கூட தெரியாமல் என்ன செய்வது என யோசிக்கலானான்.. அந்த நேரம் அவள் வீட்டின் பின்புறத்தில் துணியினைக் காயவைத்துக் கொண்டிருந்தாள்..
அப்போது பள்ளி முடிந்து சில மாணவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.. அவர்களில் ஒருவனை அழைத்து அவளைக் கைகாட்டி அவனிடம் வரச் சொன்னான்..
அந்த சிறுவனும் அவ்வாறே செய்ய யார் தன்னை அழைக்கிறார்கள் என்ற யோசனையில் அவள் வந்து நின்றாள்..

அவள் அவனையே கேள்வியாய் பார்க்க, அவனோ அந்த விழிகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தான்..அந்த விழிகள் யாரோடையது என சந்தேகம் எழுந்து கொண்டே இருந்தது..
அவன் அமைதியாக இருக்கவும் திரும்பி செல்ல எத்தனித்தவளை கைப்பிடித்து தடுத்தான்..

" ஏங்க ஒரு நிமிசம் நான் சொல்றத கேளுங்க.. இங்க இருக்குறது உங்களுக்கு சேப் இல்ல.. நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம்.. எங்கோட வந்துடுங்க.உங்களை கல்யா " என அவன் பேசி முடிப்பதற்குள் அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்..

ஒற்றை அடி என்றாலும் நன்றாக வீட்டு வேலை செய்த கை என்பதால் அது காதுவரை ஜிவ்வென்றது.. அவன் பேச துவங்க அதற்குள் " யோவ் என்ன தைரியமிருந்தா என் கையப் பிடிச்சு இழுப்ப.. நீ கூப்டா உன்பின்னாடியே வர நான் உம்மோட பொஞ்சாதியா.. இல்லை வேறெதாச்சும் நினைச்சியா.. மருவாதையா ஊர் போயி சேரு.. எங்க
ஐயாக்கு மட்டும் தெரிஞ்சுது தலைய சீவிடுவாரு.. " என பொரிந்து தள்ளினாள்..

கன்னத்தில் கைவைத்த படியே அதிர்ச்சியாக அவளைப் பார்க்க " யோவ் கருவாயா..  நீ இன்னும் கிளம்பலியா தடியா " என சொல்லிக் கொண்டே கீழே எதையோ தேடியவள் கையில் பெரிய உருட்டுக்கட்டையை எடுக்க அதைக் கண்ட ராமின் கண்களோ பயத்தில் அகல விரிந்தது..

அவள் அடிக்க கையை ஓங்க அதற்குள் தீனாவும் சக்தியும் வந்து அவள் கையிலிருந்த கட்டையை வாங்கி தூரப் போட்டனர்..

" சிஸ்டர் சாரி .. எக்ஸ்டீரிம்லி ரியல்லி வெரி சாரி.. ப்ளீஷ் கத்தாததீங்க.. அவன் ரொம்ப நல்லவன்தான்.. ஏதோ தெரியாம அவசரப்பட்டுடான்.. ப்ளீஸ் அய்யாக்கிட்ட சொல்லிடாதம்மா.. நான் இவனக் கூட்டிட்டு போறேன்.. நீ உள்ள போமா " என தீனா கெஞ்ச அவளும் சாந்தமானாள்..

திரும்பி சென்றவள் மீண்டும் ராமைப் பார்த்து " மறுக்கா இந்தப் பக்கம் உன்னைப் பார்த்தேன்.. இளநீ சீவரமாறி சீவிடுவேன்.. பொளச்சுப்போ " என ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்துவிட்டுச் சென்றாள்..

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனை

" ராம் என்னடா பண்ண.. சும்மா பேசிட்டு வரேனு தான சொன்ன..அந்தப் பொண்ணு கோபப்படறத பார்த்தா அப்படி தெரிலயே " என தீனா சந்தேகமாய் கேட்க,

"  தீனா உண்மையாவே நான் எதும் பண்லடா.. வெறும் கைய மட்டும்தான் பிடிச்சேன்..அதுக்கே அடிச்சிட்டா " என்ற ராமின் பதிலுக்கு, " அடிக்காம பின்ன கொஞ்சுவாளா.. ஏன்டா நம்மூர் பொண்ணுங்கள பார்த்தாலே சண்டைக்கு வருவாளுக.. நீ கைய வேற பிடிச்சிருக்க.. லவ்வ பொறுமையா சொல்லனும்டா.. உங்க மாமா டெக்னிக்லாம் உனக்கு ஒத்து வராது.. பேசாம கால்ல விழுந்துடு.. உன் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்திருப்பாங்க.. அவங்களை எல்லாம் எப்படி இன்சல்ட் பண்ணி துரத்தி விட்ட..அந்தப் பாவம்தான் இப்போ சுத்தி சுத்தி இந்தப் பொண்ணோட ரூபத்துல அடிக்குது.. " என்றான் தீனா..

சக்தியும் தன் பங்கிற்கு " நான் கூட நீ லவ் சொல்ல கிளம்பிட்டனு அவன் சொன்னப்பக்கூட படையப்பா ரஜினி மாறி நீ பேச்சு வராம திக்குவ, அவளும் வசுந்தரா மாறி தலையக் குமிஞ்சிட்டே பேசிட்டு இருப்பானு நினைச்சேன்.. ஆனா இங்க வந்து பார்த்தா தான தெரிஞ்சுது வடிலேலு கோவைசரளா மாறி அடி வெளுத்து வாங்கறானு"என கிண்டல் செய்தான்..

ஆனால் அதை பொருட்படுத்தாமல் "
டேய் நல்லவேளைடா நான் அவள ரொம்ப சாப்ட் கேரட்க்டர்னு நினைச்சேன்.. ஆனா போல்டா பேசுறதாப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு " என்று இளித்தான் ராம்

அவனது சிரிப்பால் கோபம் கொண்ட சக்தி
" டேய் ராம் நீ சரிப்பட்டு வரமாட்ட.. உங்க அக்காவுக்கு போன் பண்ணி சொல்றேன்.. அப்போதா நீ சும்மா இருப்ப " என அதட்ட,

" டேய் சும்மா இருடா.. நாம போறப்ப உன் தங்கச்சியோட தான் ஊருக்குப் போறோம்.. இன்னைக்கு நைட்டே அவளத் தூக்குறோம் சரியா "  என்றான் ராம்..

" உனக்கு மூளைகான மழுங்குப் போச்சாடா..இப்போ அவ உங்கிட்ட என்னை சொல்லிட்டு போனானு நியாபகம் இருக்கா.. கொலை பண்ணிருவேனு மிரட்டிட்டு போயிருக்கா.. பொண்ணத்தூக்குனா போலிஸ் கேஸ்ஸாகிடும்.. வீனா கெட்டபேரு வாங்காத" என சக்தி எச்சரிக்க,

" நாம தூக்குனதான.. அவளே வந்தா "என கண்சிமிட்டினான் ராம்

" ராம் அவ எப்படிடா வருவா.. வீணா பகல்கனவு காணற வேலைய விட்டுட்டு
வீட்டுக்கு போலாம் வாடா " என தீனா கூற,

" ஏன்டா இதான் உங்க பிரண்ட்சிப்பா .. நான் என்ன எல்லார் பின்னாடியுமா சுத்தரேன்.அவ ரொம்ப பாவம்டா.. என்ன மாறியே அவளுக்கும் அப்பா அம்மா இல்ல.. எனக்காது அக்கா நிலாலாம் இருந்தாங்க..ஆனா அவளுக்குனு யாருமே இல்லடா " என சீரியசாக பேசவும் நண்பர்களும் ஒத்துக் கொண்டனர்..

" தேங்க்ஸ்டா.. சக்தி நம்ம கிளாஸ் நேகா தேனி தான.. அவள கால் பண்ணி இங்க வரச் சொல்லுடா " என்றவன் தனது திட்டத்தை விளக்கினான்..

அவர்களும் இந்த திட்டம் ஒத்துவரும் என நம்பி அப்படியே செய்ய முயற்சித்தனர்..

" அப்போ எல்லாம் ஓகே.. இதே இடத்துக்கு நைட் வந்துடுங்க " என்று ராம் தீவிரமாக கூற அவர்களும் சரி என்றனர்.

இவர்கள் ஒன்றை திட்டமிட விதி இவர்களுக்கு வேறு திட்டத்தினைப் போட்டது..

ராம் தான் நினைத்ததை அடைவானா இல்லை ஆபத்தில் மாட்டிக் கொள்வானா? என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro