19..
ராம் யார் வந்தது என அசால்டாக பார்க்க அங்கே வந்தவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்..
ஏனெனில் அங்கு வந்திருந்தது சதுரகிரியில் அவன் சந்தித்த பெரியவர்.
அதே தேஜஸுடன் கம்பீரமாக ஒளிவீச
சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்.. அவனைப் பார்த்து அர்த்தமாக அவர் சிரிக்க அவன் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
ஒன்றை அடைந்தால் ஒன்றை இழப்பாய் என அவர் கூறி இருக்க அவனோ இரண்டையுமே தொலைத்து விட்டான் என மௌனமாய் கண்ணீர் வடித்தான்.. அவனது தலையை ஆதரவாக தடவியவர்
" வருந்தாதே மகனே.. உனது கெட்ட காலம் எல்லாம் நீங்கிவிட்டது.. இனி எல்லாம் உனக்கு வசந்தகாலமே..
நீ பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் காரணம் உனது மனதிலேயே அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டது தான்.. உன் உணர்வுகளை வெளிக்காட்டினாலே உனக்கு வந்த அனைத்து கெடுதல்களும் வந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்து விடும் " என்றவர் அவனிடம் புன்னகையை உதிர்த்து விட்டு பூஜை அறைக்குள் புகுந்து கொண்டார்..
அவனுக்குள் அவனிழந்த தன்னம்பிக்கை மீண்டும் வர புத்துணர்வுடன் அவரை மீண்டும் தேட அங்கே யாருமில்லை.. சுற்றுமுற்றும் பார்த்தவன் அப்போது தான் உணர்ந்தான் கிருஷ் வந்து பேசியதும் அந்தப் பெரியவர் வந்ததும் கனவென்று..
இருந்தும் அவரது வார்த்தைகள் காதில் விழுந்து கொண்டே இருந்தது. முன்பு அவரது வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டது போல இனி இருக்கக் கூடாது என எண்ணி அனைத்தையும் பேசி புரிய வைக்கலாம் என எண்ணி மீராவினை சந்திக்க சென்றான்..
மீரா அவளது அறையில் சோகமாக அமர்ந்திருந்தாள்..
அக்கா... என்று அவனழைத்ததும் அவள் முகத்தினைத் திருப்பிக் கொள்ள.
" அக்கா ப்ளீஷ்கா. நான் தப்பு பண்ணது உண்மைதான்கா.. ஆனா நான் எதையும் வேணும்னே பண்ணலக்கா..
ஏன் எல்லாரும் என்னையவே குறை சொல்றீங்க.. நான் அந்த ஒரு செகன்ட்ல கோபத்துல முடிவெடுத்துட்டன்கா.. மத்தபடி தனுவ கஷ்டப்டடுத்தனும்னு நான் எதும் செய்யல. " என கோபமாக பேசியவன்
" ஏன்கா யாரும் என்னை புரிஞ்சிக்கல..இதெலாம் நான் உனக்காக தானக்கா செஞ்சேன்.. என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி எங்கூட பேசாம இருக்கலாமா..
உன்னை தான் நான் அம்மாவா நினைச்சிருக்கேன்.. ஆனா தனுக்காக உன்னை விட்டு அவங்க வீட்ல தங்க மனசாற நான் ஒத்துக்கிட்டேன்ல..அப்படியிருக்க
தனு அவங்க அம்மா போட்ட கன்டிசன்லாம் தெரிஞ்சும் அவங்களுக்கு சப்போர்டா பேசவும் எனக்கு என்ன பண்றதுன்னே தெரிலக்கா.. அவளே சிரிச்சிட்டு அதை சொல்லும்போது என்னால அதை நம்பாம இருக்க முடியலக்கா..
அந்த நிமிசம் புத்திக்கெட்டுப் போய் அப்படி நடந்துகிட்டேன்னே தவிர கல்யாணத்த நிறுத்தனும்னு நான் நினைக்கவே இல்ல..திரும்பி வர நினைச்சப்ப என்னால அங்க " என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க கண்களில் கண்ணீர் வழிய நின்றான்.... ..
அவனை அந்த நிலையில் பார்த்த மீராவிற்கு
இதுவரை இழுத்துப் பிடித்திருந்த கோபம் காற்றில் பறந்தது.. அவனை குறை சொல்ல காரணம் அவன் என்மேல் வைத்திருந்த பாசம் என்று நினைத்தவள் அதிலிருந்து மீண்டு அவன் நிதர்சனத்தை புரிந்து கொள்ள அவனிடமிருந்து விலகியிருக்க தான் முயற்சி செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என இப்போது தான் புரிய வந்தது.. எதையோ ஒன்றை சொல்ல முடியாமல் தவிக்கிறான் என்பதை புரிந்தவள் அவனை தன் மடியில் தலைவைத்து படுக்க வைத்து தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தாள்..
தனுவ எனக்கு ரொம்ப பிடிக்கும்கா.. ஆனா படிக்குற வயசுல அவ மனசுல ஆசைய வளர்த்த நான் விரும்பல.. அவளோட தகுதி வேற.. என்னோட தகுதி வேறன்னு ஒதுங்கியே இருந்தேன்.. அதே மாறி நான் ஒதுங்கியே இருந்திருந்தா அவளாச்சும் நிம்மதியா இருந்திருப்பா. என்னோட முன் கோபத்தால அவளையும் இழந்துட்டேன்..அவளாச்சும் என்ன நடந்துச்சுனு என்னை கேட்ருக்கலாம்லக்கா.. என் முன்னாடியே வேற ஒருத்தன கட்டிக்கறனு சொல்லிட்டுப் போயிட்டா..எனக்கு நீயும் அவளும் ஒன்னுதான்கா. ஆனா ஏன் அதை புரிஞ்சிக்காம உன்னை மட்டும் பிரிச்சு பேசறா.. அவ எனக்கு வேணும்கா. எதாச்சும் பண்ணுக்கா.. "
அவன் சொல்ல சொல்ல ராம் அவளது கண்களுக்கு குழந்தையாகவே தெரிந்தான்.. அவன் மனதில் உள்ள அத்தனையும் கொட்டித் தீர்க்கட்டும் என அமைதியாக இருந்தாள்..
"நான் உயிருக்குயிரா காதலிச்ச தனுவும் என்னை புரிஞ்சிக்கல.. நீயும் என்னை புரிஞ்சிக்கல..
இப்போ
நிலா..கீதாம்மா.. கிருஷ் மாமான்னு எல்லாரையும் நான் இழந்துட்டேன்கா.. யாரும் இல்லாத அநாதையா நிக்கறேன்
இதெலாத்தையும் யார்கிட்டயாவது சொல்லி மனசு விட்டு அழுகனும்னு தோனுச்சு.. ஆனா அதுக்கு கூட எனக்கு யாருமில்ல.. உண்மையாவே இப்போ எனக்கு அம்மா நியாபகமா இருக்குக்கா. அம்மா இந்நேரம் இருந்திருந்தா என்னை அடிச்சிட்டாவது ஆறுதல் சொல்லியிருப்பாங்கல்ல.. நான் சாப்பிட்டனா.. தூங்கிட்டனானு கேட்ருப்பாங்கல .
அவங்க மடில படுத்து தூங்கனும் போல இருக்குக்கா.. பேசாம நானும் அம்மாக்கிட்டவே போயிரவா.. நான் இல்லைனா யாரும் கண்ணீர் சிந்தக்கூட மாட்டாங்கல்ல.. இப்ப கூட நான் ஏன் இங்க இருக்கேனு கேட்கிறியா அன்னைக்கு நீதான சொன்ன , உன்னோட தம்பினா பிரசவம் முடியற வரைக்குமாச்சும் உங்கோட இருன்னு. அதான் . இல்லைன்னா " என அழுதுகொண்டே
அவன் கூற மீரா அவனது வாயில் கை வைத்து அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் செய்தாள்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாஸ்கரன் லதா தம்பதியினர் தங்களுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை மேற்கொள்ள.. ரஞ்சன் பத்தாம் வகுப்பும் கயல் பண்ணிரெண்டாம் வகுப்பும் பக்கத்திலுள்ள அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்..
தனு ஆரம்பத்தில் சோகமாகவே இருக்க அதைக் கண்டு கயலும் ரஞ்சனும் முயன்று போராடி சகஜநிலைக்கு கொண்டுவந்தனர்..
பகலில் ஆறு கிணத்துமேடு வாய்க்கால் வரப்பு என கவலை மறந்து கயல் மற்றும் அவளது தோழிகளுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தனுவிற்கு இரவினை கடத்த மிகவும் சிரமமாக இருந்தது.. போதாக்குறைக்கு தாறுமாறாக கனவுகளும் வந்து இம்சித்துச் சென்றன..
அடுத்த நாள்
கயலும் ரஞ்சனும் பள்ளிக்குச் சென்றிட ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு நூலகத்திற்கு செல்வதாக சொல்லி சென்றாள்..
செல்லும் வழியில் தான்
தன்னை விட 5 அல்லது 6 வயது சிறிய பெண் கையில் குழந்தையோடு போனதும்.. படிக்கும் வயதில் குழந்தைகள் அட்டைக் கம்பெனிக்கு சென்றதும்.. அதில் ஒரு குழந்தை டிப்டாப்பாக தனியார் பள்ளி வாகனத்திற்காக காத்துக் கொண்டிருந்தததை தனது வயதினை ஒத்த மற்ற குழந்தைகளை ஏக்கமாக பார்த்துக் கொண்டு வேலைக்கு சென்றதும் அவளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது..
அவளது பள்ளிப்பருவம் என்று நினைத்தாலே ராம்தான் கண் முன் வந்தான்.. அத்தோடு ஏனோ தானென்று அவள் படித்ததும் நினைவு வந்தது...
அவள் படித்த பள்ளியும் கல்லூரியும் மேற்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்காக இருந்திருக்க அனைத்து தரமான மக்களிடமும் பழகும் வாய்ப்பு அவ்வளவாக அவளுக்கு கிடைக்கவில்லை.. இதற்கு முன் தான் இந்த ஊருக்கு வந்திருந்தாலும் இரண்டு நாளில் சென்றுவிடுவதால் அவர்களை கூர்ந்து கவனிக்க நேரமும் இருந்தததில்லை..
தலை சற்று பாரமாக உணர, அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தாள்.. ஏனோ சோகமாக பார்த்துச் சென்ற அந்தக் குழந்தையின் முகத்தில் ஆயிரம் ஏக்கம்..இந்த சிறுவயதில் குடும்ப பாரத்தை ஏற்று நடக்கிறதே.. இவர்களுக்காக தான் அரசாங்கம் பல சலுகைகளை ஏற்படுத்தித் தந்துள்ளதே .. இருந்தும் அதை உபயோகிக்காமல் அசாதராணமாக இருக்கிறார்களே என அவர்களது பெற்றோர்களையும் கடிந்து கொண்டாள்.
அதே சோகத்தில் வீட்டிற்குள் நுழைய " ஏங்க இது மோட்டாரு ரெடி பண்ண வெச்சிருந்த பணம்ங்க.. இதையும் செலவு பண்ணிட்டா நாம என்னங்க பண்றது "
" ஏய் என்னடி பேசற..தனு பெரிய இடத்து பொண்ணு.. நாம சாப்பிடற அரிசிய அவ தொட்டுக்கூட பார்க்க மாட்டா.. . பார்த்துக்கலாம்.நம்ம மெக்கானிக் அண்ணாச்சி தான "
ஐயோ அதுக்கு சொல்லலீங்க.. ரஞ்சித் ஸ்கூல்ல டூர் போறாங்களாம்.. அதுக்கு 500 வேணும்னு கேட்டான்.. இதத்தான் கொடுக்கலானு நினைச்சேன்.
ஏன்டி நாம இருக்குற நிலைல அதான் கேடா.. அவன அடுத்து வருசம் போயிக்க சொல்லு.. நான் போய் மளிகை சாமான் வாங்கிட்டு வரேன்....
அவன் ரொம்ப ஆசையா கேட்டாங்க.. பணம் வேணா நம்ம விசாலாட்சி அக்காகிட்ட கேட்டுப்பார்க்கவா..
லதா அவங்களுக்கு ஏற்கனவே விதை நெல்லு வாங்க கொடுத்த காசையே திருப்பிக் கொடுக்கல. அதுக்குள்ள இதை எப்படி கேட்கறது.. வேணும்னா நான் நம்ம சதாக்கிட்ட கேட்டுப்பார்க்கிறேன். நீ தனு பாப்பா வரக்குள்ள சமையல் வேலைய கவனி..
என அவரது மனைவி லதா சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல் வெளியே சென்றார் பாஸ்கரன்.
தனுவிற்கு தான் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என தோன்றியது.. வாழ்க்கை என்றால் காதலும் கல்யாணமும் தான் என கனவு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருந்த தனுவிற்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு தற்போதுதான் புரிய ஆரம்பித்தது..
விதவிதமான உணவோ விலையுயர்ந்த உடையோ என அவள் ஆசைப்பட்டது படாதது என எல்லாமே கேட்ட மாத்திரத்தில் கிடைத்துவிடும் என்பதால் அதனோடு அருமை அவளுக்கு தெரியாமலே போனது..
அவளால் பாஸ்கரன் குடும்பத்திற்கு பணஉதவி தாராளமாக செய்ய முடியும்தான்.. ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்துவிடுவார்கள்.. அதனால் அவர்களுக்கு எதாவது முறையில் உதவ வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..
ஊரை வலம் வரலாம் என்று ஒருநாள் எடுத்த முடிவு அவளுக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருந்தது..
அதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படுமாறு கண்டிப்பாக எதையாவது செய்ய வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபடத்துவங்கிளாள்..
தனுவிற்கு நீங்களும் உதவ நினைத்தால் என்ன செய்யலாம் என உங்களது யோசனைகளை கூறுங்கள்...அதையே செய்துவிடலாம்..
Elorkum vanakam..
Ni inum uyiroda tha irukiyanu ninga kekrathu enaku nallave kekuthu..😀
Inneram pathi peruku storye marainthirukum. Kovikama intha thadavyum mannichringa.. 😢😢😢😊😊
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro