Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18..

மரகதபுரம்.. முழுக் கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் நகர பழக்க வழக்கங்களை தங்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கும் ஒரு குக்கிராமம்..

இங்கு தனுவின் அன்னை ரேவதியின் ஒன்று விட்ட அண்ணன் பாஸ்கரன் வீட்டிற்குத்தான் தனு வந்திருக்கிறாள்.
வசதியில் குறைந்து சற்று பட்டிக்காட்டானாய் இருக்கும்  பாஸ்கரனை ரேவதிக்கு என்றும் பிடிக்காது.. அதனால் தான் தனுவின் திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை..

பாஸ்கரன் லதா தம்பதியினர் கயல்விழி என்ற ஒரு மகளும் ரஞ்சித் என்ற மகனும் பெற்று ஏழ்மையிலும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.. தனுவுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும்.. வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கே வந்து விடுவாள்..

இன்றும் வந்திருக்கிறாள் தான் தொலைத்த மனநிம்மதியைத் தேடி.. அது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

நாட்கள் அதன்பாட்டில் நகர அதை விரும்பாத ராமோ தனதறைக்குள்ளே முடங்கிக்கிடந்தான்..

என்ன தான் தனுவினைப் பற்றி நன்றாக புரிந்திருந்தாலும் அன்று அவனிருந்த மன நிலையில் எதிர் முனையில் தனு பேசியது தனது மூளையை மழுங்கச் செய்தது.. ஆத்திரத்தில் அவன் செய்த முடிவு அவன் வாழ்வை திசை திருப்பியது..
அவன் செய்த தவறுக்கு ஈவு இரக்கமின்றி தண்டனையை அனுபவிக்கிறான்.

என்ன தான் ராம் தவறு செய்திருந்தாலும் அவனது இழப்பு பேரிழப்பே.. அவளுடன் கழித்த இனிமையான நினைவுகள் அவனை இன்னும் கொடுமை படுத்தின.. அன்னம் ஆகாரம் எதுவும் வேண்டாமல் தன்னையே வறுத்த ஆரம்பித்தான்..
தான் செய்தது எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் உயிருக்குயிராக காதலித்த தன்னையே வேண்டாமென்று ஒதுக்கி தள்ளியிருப்பாள்..
அங்கு அவள் எப்படி இருக்காளோ..
எதேனும் தவறான முடிவை எடுத்து விட்டாளோ என்ற நினைப்பே உயிர் வரை சென்று வலித்தது.

அவன் அவ்வாறு இருக்க
மீராவுக்கோ ராமைத் தான் சரியாக கவனிக்கவில்லையோ என கவலை கொண்டாள்.. இருப்பினும் தனு தங்களை விட்டு சென்றது ராமின் மீதான கோபத்தை அதிகப்படுத்தியது.. அதனாலே ராமிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.. கீதாவும் நிலாவுமே அவனுடன் பேசுவதில்லை..

கிருஷ் தான் யாரை சமாதனப்படுத்துவது என புரியாமல் குழம்பினான்.. ராமின் ஒரே ஆறுதல் அக்சு மட்டுமே..
இன்று ராமிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அவனது அறைக்குச் சென்றான் கிருஷ்....

ராம் சன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..

ராம்.. இப்படியே எத்தனை நாளா இருப்ப.. கொஞ்சம் வெளிய வா..

வேணாம் மாமா.. நான் யார் முகத்திலும் முழிக்க தகுதியானவன் இல்ல

லூசு மாறி பேசுனா ஓங்கி அறைஞ்சிடுவேன் ராஸ்கல்.. அப்படி என்னடா பெரிசா தப்பு பண்ண..  அஞ்சாறு கொலை பண்ணவனே தைரியமா வெளிய சுத்திட்டு இருக்காங்க.. நீ என்னடான்னா இப்படி இருக்க..

ஒரு பொண்ணோட மனச கொன்னதும் கொலை தான் மாமா..

ஓ.. இதெலாம் இப்ப பேசி எந்த புரயோஜனும் இல்ல..
அதை நீ முன்னாடி யோசிச்சிறுக்கனும்..

அவன் அமைதியாகவே இருக்க.. " சரி வா.. தனுக்கிட்ட உன்னை கூட்டிப் போறேன்.. நான் பேசி அவளுக்கு புரிய வைக்கிறேன்.. "என கிருஷ் கேட்க

வெற்று சிரிப்பை உதிர்த்த ராம் " அது அவளோட வாழ்க்கை மாமா.. இனி நாம அதுல தலையிட கூடாது.. "என்றான்..

பைத்தியமா உனக்கு.. அப்போ உனக்கு தனு வேணாமா.

எனக்கு தனு வேணும் மாமா.. ஆனா அவளுக்கு தான் இந்த ராம வேணா..

அப்போ அவள மறக்க உன்னால முடியுமா..

முடியுமானு தெரியல.. ஆனா முயற்சி செய்றேன்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிருஷ் ராமின் சட்டையை இறுகப் பிடித்து "
அப்போ எந்த டேஸ்க்கு டா லவ் பண்ணி தொலைச்ச.. இந்த சின்ன மேட்டருக்காக அவள விட்டு பிரிய நினைக்கிற.. உன் லவ் அவ்ளோ ஸ்டராங்க் இல்லைனா எதுக்குடா கல்யாணத்திக்கு எதுக்கு சம்மதிச்ச . பொண்ணுங்கனா உனக்கு அவ்ளோ கேவலமா போச்சா " என எகிற..

" நான் பொண்ணுங்கள மதிக்கறனால தான் இந்த முடிவெடுத்தேன் மாமா.. நாம விரட்டி விரட்டி காதல திணிக்க பொண்ணுங்க ஒன்னும் குப்பைத் தொட்டி இல்ல.. அவுங்களோட வாழ்க்கைய அவுங்க தான் டிசைட் பண்ணனும்.. நான் இழந்தது அவளோட காதல் மட்டுமில்ல மாமா.. என் மேல அவ வெச்சிருந்த நம்பிக்கைய. அதை என்னால திரும்பி சம்பாதிக்க முடியாது மாமா..
நான் சந்தேகப்பட்ருவனு அவளும்.. அவள தெரியாம தண்டிச்சிருவனோனு நானும் கடைசி வரை பயந்துட்டே இருக்கனுமே தவிர நாங்களா இருக்க முடியாது.. இது ஒத்து வராது மாமா..
.. ப்ளீஸ் விட்ருங்க.. " என ராம் துக்கம் தொண்டையை அடைக்க கூறினான்..

" கடைசியா கேட்கிறேன்.. ராம்.. முடிவா என்ன சொல்ற.. "

" இதுல நான் சொல்ல என்னை இருக்கு மாமா.. தனு இப்போ தான் நான் ஆசைப்பட்ட மாறி சுதந்திரமா வாழப்போறா.. அவ வாழட்டும்.. அவ திரும்பி வர வரை நான் காத்திருப்பேன்.. ஒருவேளை அவளுக்கு என்னை மன்னிச்சு ஏத்துக்க முடியாம வேறொரு வாழ்க்கைய அமைச்சிக்கிட்டாலும் அதுக்கும் நான் தடையா இருக்க மாட்டேன்..
தனுவ பத்தி புரிஞ்சிகிட்டதுல சொல்றேன்.. கண்டிப்பா அவ என்னை ஏத்துக்க மாட்டா..
அதுனால  வேறொருத்தரோட மனைவியாக போற பொண்ண மனசுல நினைக்கறது தப்பு தான. அதான் அவளை மறக்க டிரை பண்ணறேனு சொன்னேன்..அவளை தான் மறக்கறேனே தவிர என் காதல இல்ல  " என்றவனை என்ன சொல்வதென்று தெரியாமல் பார்த்தான் கிருஷ்..

ஏன்டா இவ்வளவு நல்லவனா இருக்க..
என வெறுப்பாய் கேட்க

அதற்கும் சிரித்தவன்
" நானும் அக்கா தங்கச்சியோட பொறந்தவன்தான் மாமா.. அக்காவோட உங்களுக்கு கல்யாணமாகி கூட எனக்கு உங்க மேல சந்தேகம் தான் " என்றதும்

கிருஷ் முரைக்க ஆரம்பிக்க " ஆமா மாமா.. என்ன தான் நீங்க அக்காவ உண்மையா நேசிச்சிருந்தாலும் அக்கா உங்கள மனசாற ஏத்துக்கிட்டாங்களா.. இல்ல குற்றவுணர்ச்சில ஏத்துக்கிட்டாளான்னு சந்தேகம் இருந்துட்டே இருந்துச்சு.. அவ சந்தோசமா இருக்கவும் தான் நிம்மதியா இருக்க முடிஞ்சுது..அதே சந்தேகம் எனக்கும் தனுக்குள்ள வேணானு நினைக்கிறேன்..

அதுக்குனு நான் உங்க காதல குறை சொல்லல மாமா. ஆனா
காதலிச்சவங்களா தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா நாட்டுல ஒவ்வொருத்தருக்கும் 5 6 கல்யாணம் தான் பண்ண வேண்டியிருக்கும்..
நிதர்சனத்த புாிஞ்சிக்க டிரைப்பண்ணுங்க.. காதலிச்சவங்களேயே கல்யாணம் பண்றது நூத்துல ஒருத்தங்களுக்கு தான் நடக்குது.. எனக்கு அந்த குடுப்பனை இல்ல மாமா..
தனுவும் அங்க சந்தோசமா இருக்காலாம்.. தீனா விசாரிச்சு சொன்னான்.. அது போதும் எனக்கு.... என்
வாழ்க்கைல என்ன வேணா நடக்கலாம் மாமா.. எது நடந்தாலும் அதை ஏத்துக்க நான் பழகிட்டேன்...
கல்யாணம் நடக்காம நின்னு போனா ஒரு பொண்ணு எப்படி கஷ்டப்படுவானு தெரிஞ்சும் நான் பண்ண தப்புக்கு இதை நான் தண்டனையா ஏத்துக்கிறேன்..மாமா "

" சரி அவ புது வாழ்க்கைய அமைச்சுக்கிட்டும்.. ஆனா நீ என்ன பண்ண போற. " என்று கோவமாய் வினவ.. இவ்வளவு நேரம் தைரியமாய் வீர வசனம் பேசியவன் தலையை குனிந்து கொண்டான்..

" நான் வேணும்னா சிவானிய " என்ற வாக்கியத்தை முடிக்க விடாமல் " மாமா " எனக் கத்தினான்..

" நான் எப்போதும் சிவானிய அந்த எண்ணத்துல நினைச்சது இல்ல.. தனு தான் என்னை புரிஞ்சிக்காம சிவானியோட சம்மந்தப்படுத்தி பேசுனானா. நீங்களும் அப்படி பேசாதீங்க.. என்னால இதுக்கு மேல தாங்க முடியாது.. " என கண்களில் வலியுடன் கிருஷை பார்க்க..

" சாரிடா ராம்.. சிவானியும் நல்லப் பொண்ணுதான்.. அதுக்காக தான் கேட்டேன்.. வேற எதுமில்ல..சரி அது போகட்டும்..  நீ முக்கியமான ஒருத்தர சந்திக்கனும் வா.. " என்று ராமினை வெளியே அழைத்துச் சென்றான் கிருஷ்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro