17
திருமண நாள் நெருங்கிக் கொண்டு இருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மண்டபத்தின் வாசலில் வந்திறங்கினான் ராம்..
கண்ணீரை மட்டும் சொந்தமாக்கி கொண்டிருந்தவள் அவன் வருகை அறிந்து வெளியே வந்தாள்.. அழுதழுது கண்கள் சிவந்திருக்க முகம் சற்று வீங்கியிருந்தது.. மீராவிடம் அருகே சென்று " அக்கா சாரிக்கா.. அவசரத்துல இன்பார்ம் பண்ண மறந்துட்டேன். நான் பஸ் ஸ்டேண்ட்ல ஆரவ பார்த்தேன்க்கா.. அவன் தப்பிச்சு போகக் கூடாதுன்னு பின்னாடி பாலோ பண்ணிட்டு போனேன்.. ஆனா " என அவன் தொடங்கும்போது மீரா அவனை சரமாறியாக அடிக்கத் துவங்கியிருந்தாள்..
கிருஷ் அவளை சமாதனப்படுத்த முயல, ராம் " அக்கா ப்ளீஷ் அவனால உனக்கெதாவது ஆகிடும்னு தான் பயந்துட்டேன்.. உன்னை டென்சன் பண்ணக்கூடாதுன்னு தான் எதும் சொல்லல.. " என அவன் சொல்ல இந்த முறை ஓங்கியறைவது கிருஷின் முறையானது..
இதுவரை யாரிடமும் அடி வாங்காதவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க " ஏன்டா கல்யாண நாள பக்கத்துல வெச்சிட்டு நீ பாட்டுக்கு போறியே இந்தப் பொண்ணப் பத்தி நினைச்சு பார்த்தியா.. நீ வருவியா மாட்டியான்னு துடிச்சிட்டு இருந்தாளே அவளுக்கு என்ன சொல்ல போற.. " என்று கிருஷ் கேட்கவும் தான் அவன் தனுவினை பார்த்தான்..
அவள் செய்த தவறுக்கு அவள் சற்று வருந்தட்டும் என நினைத்தவன் கணக்கு தப்பானது.. குற்றவுணர்ச்சியில் அவன் அவளைப் பார்க்க, அவளோ அவனைக் காணாமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
அனைவரும் இருவரும் பேசித் தீர்க்கட்டும் என அமைதியாகினர்..
மெதுவாக அவளிடம் நெருங்க கை நீட்டி அவனைத் தடுத்தவள் " இனி என் பக்கத்துல வராத ராம்.. அந்த உரிமை உனக்கில்ல.. " என்று கோபமாக சொல்லவும் அப்படியே விக்கித்துப் போனான். தனுவா தன்னிடம் இப்படி பேசுகிறாள் என நம்ப முடியாமல் பார்த்தான்..
" தனு சாரிடா.. நான் ஏதோ ஒரு வேகத்துல உன்னை தப்பா புரிஞ்சிகிட்டேன்.. ஆனா "
" வேணா ராம் .. இனி புரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்ல. எப்போ கல்யாணம் நிக்கட்டும்னு சொல்லாம போனியோ அப்பவே உன் காதலோட ஆழத்தை நான் புரிஞ்சிட்டேன்.. என்மேல உனக்கு அவ்ளோதான் நம்பிக்கைல.. நீ என்னை எல்லாரும் தப்பா நினைக்கும்போது சந்தேகப்பட்டிருந்தா கூட நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன்.. ஆனா எங்கோட பழகியும் என்னைப் பத்தி எல்லா தெரிஞ்சும் என்னை சந்தேகப்பட்டல ராம்.. எனக்கு அதை நினைக்கும் போது எப்படி இருக்கு தெரியுமா .. என்னை நினைக்கவே எனக்கு அறுவெறுப்பா இருக்கு..
உன் கண்ணுக்கு நான் அவ்ளோ கெட்டவளா தெரிஞ்சனா.. உனக்கு உங்கக்கா தான் முக்கியம்னு தெரிஞ்சுதான் உன்னை காதலிச்சேன்.. நாம எல்லாரும் ஒரே குடும்பம்னு தான் நான் எப்பவும் நினைப்பேன். ஆனா நீ என்னை மட்டும் ...
என்னை மட்டும் எப்பவும் பிரிச்சுதான பார்க்கிற.. போதும். இனிமே என்னால
எதையும் பொறுத்துக்க முடியாது.. நான் சராசரி பொண்ணுதான ராம்.. என்னால தெய்வ பிறவியா மாறி உன்னை மன்னிக்கலாம் முடியாது..
நாம பிரிஞ்சிடலாம். " என ஆதங்கமும் அழுகையுடனும் கலந்து கூற,
" தனு ப்ளீஷ் நான் தப்பு பண்ணிட்டேன்.. அதுக்காக என்னை விட்டு போய்டாதடா.. என்னை எவ்ளோ வேணா திட்டு.. அடி.. என்னை விட்டு போகாதடா. நம்ம காதலுக்காக ப்ளீஷ்" என மண்டியிட்டு அவன் கதற,
" அந்தக் காதலுக்காக தான உனக்கு ஒரு சான்ஸ் கொடுத்தேன்.. அதும் என் காதலுக்காக ராம்.. ஏன்னா உனக்கு வந்ததுக்கு பேர் காதல் இல்ல. வெறும்
குற்றவுணர்ச்சி தான்.. நீ என்னை உண்மையா காதலிச்சிருந்தா நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது..
நான் உன் பின்னாடி பத்து வருசமா சுத்துனதால என்மேல வந்த இரக்கம் தான்.. நமக்காக ஒருத்தி காத்திருக்கும்போது வேற யாரையும் விரும்பக்கூடாதுன்னு உன்னோட நல்லவன்கிற மனசாட்சி சொன்னதால தான் என்னை காதலிக்க டிரை பண்ணிருக்க.. உன்னை பத்தி எனக்கு முழுசா தெரியும் ராம் எனக்கு.. படத்துல கூட ஹீரோ ஹீரோயின விட ஹீரோவ விட்டுக் கொடுக்கற செகன்ட் ஹீரோயினத்தான் உனக்கு எப்பவும் பிடிக்கும்.. அதேமாறி தான் என்னையும் உனக்கு பிடிச்சது..உன்னை சின்ன வயசுல இருந்தே பாத்து புரிஞ்சி்க்கிட்டதுல சொல்றேன்.. உண்மையா நீ காதலிச்சது என்னை இல்ல. சிவானியத் தான்..
ஆனா உன் அக்கா மேல இருக்குற பாசத்தால அவளை உன்னால ஏத்துக்க முடியல. இல்லைன்னா நான் உன் கண்ணுக்கு எப்பவும் தெரிஞ்சிருக்க மாட்டேன்.. ப்ளீஷ் என்னைக் காயப்படுத்துன மாறி அவளையும் காயப்படுத்தாத.. "
ராம் அதிர்ச்சியாக இல்லையென தலையை ஆட்டவும்
"ஒருவேளை நீ என்னை உண்மையாவே விரும்பிருந்தாலும்
நான் உன்னை இப்போ வெறுக்கிறேன் ராம்.. அடியோட வெறுக்கிறேன் " என கத்திக் கொண்டு அழுதாள்..
" தனு இப்படிலா பேசாதடா.. நீ எனக்கு வேணும்டா.. உன்னைத் தவிர வேறுயாரையும் என்னால நினைச்சுப் பார்க்க முடியாது.. நான் உங்கம்மா மேல இருக்கற கோபத்துல "
" ஸ்டாப் இட் ராம்.. என்னைப் பத்தி பேசற உரிமையே உனக்கில்லாதப்ப என் அம்மாவ பத்தி பேச எந்த தகுதியும் இல்ல.. அவங்க என்ன தப்பு பண்ணாங்க.. பெத்த பொண்ணு கூடவே இருக்கனும்னு நினைச்சது தப்பா... உனக்கு உங்க அக்கா மாறி தான்.. எனக்கு எங்கம்மா.. நீ மட்டும் மீராண்ணிக்காக எதையும் செய்வ.. எங்கம்மா அவங்க பொண்ணுக்காக செய்றது மட்டும் குத்தமா..
" என்றவள் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு..
" நானும் எங்கம்மா மேல கோபமா இருந்தேன்தான். ஆனா எப்போ இந்த சுயநல உலகத்த நல்லா புரிஞ்சிகிட்டனோ அதுல இருந்து எதுவும் தப்பில்லைன்னு கத்துக்கிட்டேன். "
" அப்போ நம்ம காதல் " என இயலாமையோடு அவன் கேட்க..
" இதை நீ என்னை சந்தேகப்பட்டு நான் கஷ்டப்படனும்னு யாருக்கும் சொல்லாம போனியே அப்போ யோசிச்சிருக்கனும்.. கல்யாணம் நிக்கறது உனக்கு அவ்ளோ விளையாட்டா இருக்குல..உன்னோட ஊர் போற்றும் உயர்ந்த குணம் எங்க போச்சு ராம்....
.நீ கேட்கலாம் அப்ரோ எதுக்கு மண்டபம் வரைக்கும் வந்தனு. எல்லார் முன்னாடியும் நான் அவமானப்படனும்னு தான நீ ஆசைப்பட்ட அதுக்குத்தான்..என் காதல்தான் நிறைவேறல.. அட்லீஸ்ட் நான் காதலிச்சவனோட ஆசையாச்சும் நிறைவேறட்டுமே.. "
அவள் பேச பேச அதளபாதாளத்திற்கு செல்வதை போல உணர்ந்தான்.
" நான் பண்ணது தப்புதான். ஒத்துக்கறேன். ஆனா அதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை வேணா தனு. உன்னை வேற யாரோடயும் நினைச்சு பார்க்க முடியாதுடா. என்னை விடு ...உன் காதல் உண்மை தான.. அந்தக் காதலுக்காகவாது ஒருதரம் யோசிச்சுப் பாரு தனு " என அவன் கெஞ்ச..
" காதல் வாழ்க்கையோட ஒரு அங்கம் மட்டும்தானே தவிர.. அதுவே வாழ்க்கையாகாது. சுயமரியாதை இல்லாம வெறும் அடிமையா வாழ நான் ஒன்னும் ஆடு மாடு இல்ல.. நான் பண்ண பெரிய தப்பு உன்னை மாறி அக்மார்க் நல்லவன காதலிச்சதுதான்.. ஆனா நீயும் இப்போ நல்லவன் இல்லையே.அதுவரைக்கும் சந்தோஷம். . " என ஏளனமாக அவள் பேச..
அவன் கண்களில் கண்ணீர் வழிய " அப்போ வேற யாரையாச்சும் கல்யாண " அவனால் அந்த வாக்கியத்தை முடிக்க முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க,
அவன் என்ன கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டவளுக்கும் பதில் பேச வரவில்லை தான்..
ஆனாலும் " காதலிச்சவன மட்டும்தான் கல்யாணம் பண்ணனும்னா எல்லாப் பொண்ணுங்களும் தேவதாஸா அலைய வேண்டியதுதான்..
அதுக்குனு அதை நியாயப் படுத்தவும் விரும்பல.. ஆனா அது ஒன்னும் அவ்ளோ பெரிய குத்தமில்லையே.
தப்பான ஒருத்தன காதலிச்ச குத்ததக்காக தெரிஞ்சே புதைக்குழில விழறது முட்டாள்தனம். கல்யாணமான பிறகு சண்டை போட்டு பிரியறத விட இப்பவே பிரிஞ்சிடறது நல்லது தானே..
என்னால இப்போ உடனே கல்யாணம் பண்ண முடியாதுதான்.... ஆனா கண்டிப்பா கொஞ்ச நாள் போன பிறகு என்னை தனுவாவே ஏத்துக்கிட்டு என்னோட கடந்த காலத்தையும் புரிஞ்சிக்கிட்டு வர ஒருத்தர கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்.. இந்த உலகத்துல காதலத் தாண்டியும் நிறைய பிரச்சனை இருக்கு.. நீ அடிக்கடி சொல்வியே பொண்ணுங்க யாரையும் டிபெண்ட் பண்ணி இருக்க கூடாது..
தங்களுக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்கிகனும்னு..
நானும் எனக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டாமா.. போறேன் ராம்.. உன்னை விட்டு நிரந்தரமா. " என்றவளிடம் ஒருவன் கையில் எதையோ கொடுக்க
அதை வாங்கியவள்
தனது தந்தையின் அருகே சென்று " நான் கொஞ்ச நாள் மாமா ஊருக்கு போயிட்டு வரேன்பா.. என்னை மன்னிச்சிடுங்க.. ஆனா கண்டிப்பா நான் திரும்பி வரும்போது உங்க மகளா வருவேன்ப்பா. "
என சொல்லிவிட்டு தன்னை சமாதனப்படுத்த முயன்ற அனைவரையும் கண்டுகொள்ளாமல்
"கௌதம் நீங்க ரெயில்வே ஸ்டேசன்ல என்னை டிராப் பண்றீங்களா. " எனக் கேட்டாள் அந்தப் புதியவனிடம்..
உன்னால் என்னை பற்றி யோசிக்க முடியவில்லை என்னால்
உன்னை தவிர
வேறொன்றும் நினைக்க
முடியவில்லை
பள்ளி பருவத்திலே உன்மீது
காதல் கொண்டு
உன்னை சுற்றியே வந்தேன் ...
உன் கனல் பார்வையாவது என்
மீது திரும்புமா
என காத்து கிடந்தேன்
உன் உலகமே உன் குடும்பத்தை
சுற்றி இருந்த போதும்
உனக்குள் எனக்கான இடம்
கிடைக்கும் என எதிர்பாதது
தவமிருந்தேன்
கல்லூரிக்கு காலடி எடுத்துவைக்கயில்
நீ இல்லாத இடம் என்று விருப்பமே இல்லாமல் படித்தேன்
அக்காவை தெய்வமாய் நினைக்கும்
நீ அவளை நான் வழிபட
நினைக்கமாட்டேன் என எண்ணி என் மீது சந்தேகம் கொண்டாய் ...
என் தாயே என்மீது சந்தேகம்
கொண்டாலும் கவலை
கொள்ளேன் ஆனால் நீ ஒருவன்
கொண்ட சந்தேகத்தால் உயிர்
விடவும் துணிந்தேன்
நீ காதல் சொல்லும் தருணம் அனைத்தையும் மறந்து
உன்னை அப்படியே ஏற்று
கொண்டேன்
ஆனால் நீ என்னையும் என்காதலயும் விளையாட்டு பொம்மையாக
மாற்றிவிட்டாய்
திருமண தேதி குறித்த பின்பு என்னை
விட்டு செல்ல உன் மனம் இடம்
கொடுத்தால் இனி எந்த சூழலில்
நீ என்னை விட்டு செல்வாய்
என்னும் அச்சத்திலே
வாழவேண்டும் ....
இன்று நான் எடுக்கும் முடிவு
நீ தவறாக என்ன கூடும் ஆனால்
என் மனதில் உள்ள வலியும் வேதனையும்
இங்கு எவராலும் உணர முடியாது ....
என்னை நீ காதலிக்கவில்லை என அறிந்தும் உனக்காக காத்திருந்தேன் ஆனால்
நீ காலம் கடந்து காதல் என்று சொல்லி
காரணமே இல்லாமல் கைவிட்டு
செல்ல துணித்துவிட்டாய்
இன்றும் என்னை விட்டு சென்றத்துக்கு காரணமாக இருந்தது என்னால் உன் அக்காவிற்கு ஆபத்து நேர்ந்து விடும் என எண்ணித்தானே ...
ஆனால் ஒன்றை நீ மறந்து விட்டாய்
உன்னை காதலிக்கும் போதே
உன் குடும்பத்தையும் சேர்த்து தான் காதலித்தேன் என்பதை ..
வீட்டோடு மாப்பிள்ளையாக உன்னை இருக்க விடாமல் மணப்பந்தலிலே
நான் நம் வீடு நோக்கி
செல்லத்தான் நினைத்திருந்தேன் .......
இனி ஒருமுறை உன்னையும் நீ சொன்ன காதல் வசனத்தையும் நம்பி உருகமாட்டேன் .....
இதயம் தான் இறந்து விட்டதே இனி எதில்
காதல் வந்து கட்டிக்கொள்ள முடியும்
இப்பவும் உனக்கவே என்னை மாற்றி்கிறேன் நம் காதலை மறந்து வாழ ..
என் மனதை பார்த்தாயா இன்னும் தவறாகவே
நினைக்கிறது நம் காதல் என்று அது என் காதல் மட்டுமே .......
நான் கொண்ட காதலுக்கு பரிசாய் ஒன்று மட்டும் எடுத்து செல்கிறேன்...
உன்னிடம் இருந்து எடுத்து செல்ல எனக்கு எதுவும் இல்லை என்று என்னுகிறாயா
அதுவும் சரி தான் எப்படி இருக்கும் காதலே இல்லாத ஒருவன் காதலிப்போதுபோல் நடித்ததை கூட அறிய முடியாத
பேதை நானே
எனக்காக உன்னிடத்தில் எதுவும் இல்லை இனி நீ எனக்கு இல்லை என்ற நிலை மாறி நான் உனக்கு இல்லையடா ...
எடுத்து செல்கிறேன் உன்னால் மட்டுமே
என் கழுத்தில் ஏற நினைத்த
மாங்கல்யத்தை ....
மாங்கல்யத்தை எடுத்து செல்லவும் தவறாக எண்ணிவிடாதே உனையே நினைத்து வாழப்போகிறேன் என...
அது என் கழுத்தில் ஏற போகிறது என்ன நினைத்து வாங்கியது அல்லவா
அதனால் தான் எடுத்து கொண்டேன் ....
என்னை விரும்பும் ஒருவனால்
நாளை என் கழுத்தில் ஏற
போகும் திருமாங்கல்யம் அது....... .
உன்னை விரும்பிய ஒருத்தியை உதாசீன
படுத்தி சென்றுவிட்டாய் நாளை
நீ விருப்பும் ஒருத்தியயை மணக்கும்
போது இதேபோன்று
மீண்டும் அவள் மனதையும்
உடைத்துவிடாதே
உன் நினைவுகளை மறக்க நினைக்கமாட்டேன்
இனி என் வாழ்க்கை மேம்படுத்த போவதே உன் நினைவு தான்....
நான் உன்னை இழக்கவில்லை நீ தான் என் காதலை இழந்துவிட்டாய் ....
இதுவே நாம் பார்க்கும் கடைசி நொடியாக இருக்கட்டும் ...போகிறேன் இனி நீ என்னை சந்திக்க முடியாத பயணமாய்.....
காதலால் உன்னை கைது செய்து கைகோர்த்து வாழப்போகிறோம் என்று நினைத்த என்னை காதலின் ஆயுள் கைதியாய் மாற்றி ...
நான் உன்மீது கொண்ட காதலுக்கு மரணத்தை கொடுத்துவிட்டாய் ......
நாளை என் வாழ்வில் என் காதல் வாழ்க்கையை மீட்டு எடுக்க ஒருவன் வருவான்..... அவன்
காதல் கொண்டு கைது செய்வான்
அவனுள் ஆயுள் கைதியாய்
சரணடைவேன்......
(
ithuvum naan eluthalinga. Kavitha rani arunlovely oda padaippu.. )
இருவரும் சென்ற பிறகு சிலர் தனுவையும் சிலர் ராமையும் திட்டிச் சென்றனர். ஆனால் ராமோ......
தனுவின் முடிவு சரியா?
ராம் மீ்ண்டும் தனது காதலை அடைவானா அல்லது இழப்பானா.. ? தனுவின் புதிய வாழ்க்கை பயணம் இனிமையாய் அமையுமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro