16.
சிவானியின் வீட்டிலிருந்து வந்த ராமிற்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. தனது வீட்டில் மீராவினை பழி வாங்குவதாக இருந்தால் யாராக இருக்கும் என யோசித்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய பாவமாக தோன்றியது.. சிவானியும் பொய் சொல்வதாகத் தெரியவில்லை
எண்ணெயை கீழே கொட்டி சினிமாத் தனமாக பழி வாங்க நினைத்தது யார் என யோசிக்கும் போது திடீரென மனதில் மின்னல் வெட்ட அவனது அலைபேசியில் தான் கடைசியாக பதிவு செய்த காணொளியை எடுத்துப் பார்த்தான்..
அதில் தனுவும் அக்சுவும் ஜானகியை பழி வாங்க, இரவு
ஜானகியின் தட்டில் யாருக்கும் தெரியாமல் காரத்தினை சேர்க்க
திட்டம் போட்டதை பார்க்கவும்,
ஒருவேளை தனுதான் சிவானியை பழி வாங்க செய்திருப்பாளோ என ஒரு நொடி நினைத்தவன் ' அவள் மீராவை தள்ளிவிட நினைக்கவில்லை என்றுதான் கூறினாளே தவிர ஜானகியை பழி வாங்க நினைக்கவில்லை என அவள் கூறவே இல்லையே என தோன்றியது..
ஏற்கனவே அவளை மொத்தக் குடும்பமும் சந்தேகப்பட்ட வேதனையிலிருந்தே அவள் இன்னும் வெளிவரவில்லை. தானும் அவளை சந்தேகப்படுகிறேன் எனத் தெரிந்தால் மனம் வெறுத்துவிடுவாள் என நினைத்து அவளிடம் இதைப் பற்றி கேட்க நினைத்தவன் அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அவனிற்கு தற்போது சிவானியின்மீது மீரா அக்காவிற்கு கெடுதல் செய்ய நினைத்ததிற்கான கோபம் குறைந்திருந்த பட்சத்தில் தனுவும் அக்சுவும் ஜானகியை கஷ்டப்படுத்த வேண்டுமென்றே சமையலில் வேண்டாத பொருளைக் கலப்பது, அவள் துவைத்து வைத்த துணிகளை கசக்கி கீழே போட்டது என அப்போது செய்த சிறுசிறு விளையாட்டுத் தனங்கள் அப்போது சிறியதாக தெரிந்தாலும்
இப்போது அவனுக்கு பெரியதாக தோன்றியது..
நேராக வீட்டிற்கு சென்றவன் அக்சுவைத் தனதறைக்கு தூக்கிச் சென்று பொறுமையாக பேச ஆரம்பித்தான்..
" அக்சு.. நான் உங்கிட்ட ஒன்னு கேட்கனும்.. அதுக்கு குட் கேர்ளா பதில் சொல்வியா பேபி.. "
கண்டிப்பா..
அம்மாக்கிட்ட அப்பா கிட்ட யாருக்கும் நான் எதும் சொல்ல மாட்டேன் செல்லம்.. பயப்படாம சொல்லுமா..
அவன் சம்மந்தமில்லாமல் எதுவோ பேச அவனைத் திறுதிறுவென்று பார்த்தவள்
"
இப்போ எதுக்கு நீ சுத்தி வளைக்குற மாமு.. எப்பவும் போல எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்தீனா நான் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன் என தெளிவாக சொல்ல..
நிம்மதிப் பெருமூச்சை விட்டவன் " அன்னைக்கு ஆயில கொட்னது யாரு .. ப்ளீஷ் அச்சு.. மாமா பாவம்தான.. உனக்குத் தெரிஞ்சத சொல்லு "
இதுவரை விளையாட்டாக எண்ணிக் கொண்டிருந்த அக்சுவின் முகம் பயந்தவாரே மாறவும்.. உண்மையையை ஓரளவு உணர்ந்து கொண்டான்.. அன்றே அக்சு பயத்தில் ரொம்ப அழுதது நினைவு வர
" பயப்படாம சொல்லு.. அக்சு " என அவளை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல " அது நான் வேணும்னு செய்யல மாமு.. ஜானகிய எனக்கு பிடிக்கல.. அதும் கடைசி படில தான் ஊத்துனேன்.. என்னை அம்மாக்கிட்ட காட்டி கொடுத்துடாத.. என்னை அடிச்சிறும்.. " என அவன் மேல் சாய்ந்து கொண்டு அழுக
" நான் சொல்ல மாட்டேன் அக்சு.. ஆனா ஏன் அதை எங்கிட்ட சொல்லல..சிவானிய எல்லாரும் திட்னோம்ல.. அப்போ சொல்லிருக் " அவனை முடிக்க விடாமல்
" எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சி.அதான் நிலாம்மா கல்யாணத்துல நான் அவகிட்ட சாரி சொன்னேன்.. அவதான் யார்கிட்டயும் சொல்ல வேணானு சொன்னா மாமு "
அப்போ நீதான் பண்ணனு சிவானிக்கு தெரியுமா..
ம்ம்
அப்போ தனுக்கு எனக் குரல் நடுங்க கேட்டவனுக்குத்தான் தெரியும் அவளுக்கு எதுவும் தெரியக்கூடாது என மனம் வேண்டிக் கொண்டது..
தனுவுக்கும் தெரியும்
இதற்கு மேல் அவனுக்கு கேட்க எதுவுமில்லை.. அக்சுவை இறக்கி கீழே விட்டவன் பேசாமல் அமைதியாக அப்படியே அமர்ந்தான்..
தனது காதலியை அவன் மனதில் உயர்ந்த இடத்தில் வைத்திருக்க
தனுவும் சராசரி பெண்ணைப் போல நடந்து கொண்டுவிட்டாளே என அவனுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.. அவள் உண்மையை சொல்லியிருந்தாலும் அவன் தனுவை வெறுத்து சிவானியை மன்னிக்கப் போவதில்லை.. ஆனால் தன்னைப் புரிந்து கொள்ளாமல் மறைக்கின்றாளே என்ற எண்ணம் வாட்டி வதைத்தது..
அந்த நேரம் தனுவிடமிருந்து அலைபேசி அழைப்பு வர தற்போது தானிருக்கும் நிலையில் அவளிடம் வன்சொல் பேசிவிடுவோம் என அதை ஏற்க மறுத்தான்.. ஆனால் விடாமல் அழைப்பு வந்து கொண்டேயிருக்க அதை உயிர்பித்து " ஹலோ " என்றான்
மறுமுனையில்
திருமணத்திற்கு தனக்குத் தேவையான புதுத் துணிகளை வாங்க வந்த தனு அவளுக்கு எந்த நிறம் எடுக்கலாமென்று குழப்பமாக இருக்க அதை தெளிவு படுத்த
ராமிற்கு அழைத்துக் கொண்டிருக்க அவன் அழைப்பினை ஏற்றது தெரியாமல் துணியினை ஆராய்ந்து கொண்டிருந்தாள்..
" என்னம்மா தனு.. நீ தேடுன அடிமை மாப்பிள்ளை கிடைச்சிட்டானா.. " என்று ரேவதியின் தோழி சுமதி ( நிலாவின் திருமணத்தில் சந்தித்தவர் ) கேட்க,
அவளோ அன்று அவள் சுமதியின் மகனைத் தட்டிக் கழிக்க தான் பொய்யாக போட்ட நிபந்தனைகளுடன் ராமின் ஞாபகமும் வர வெட்கப்பட்டுக் கொண்டே " ஆமாம் ஆன்ட்டி நான் நினைச்ச மாறியே மாப்பிள்ளை கெடச்சிட்டாங்க.. இப்பவே என்னை உள்ளங்கைல வெச்சு தாங்குறாங்க.. " என்றதும் தான் அதை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த ராமிற்கு அன்று அவள் வீட்டோட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று சொன்னது நினைவில் வந்தது..
" உன்னை விட ரேவதிக்குத் தான் சந்தோசம் போல.. ரொம்ப சிரிச்ச முகமா இருக்கா.. " என சுமதி சோகமாய் அமர்ந்திருந்த ரேவதியினைப் பார்த்து கேலியாக கேட்க..
" பின்ன இருக்காதா ஆன்ட்டி.. அம்மாதான் ராம் எனக்கு கிடைக்க ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க.. அவங்க இல்லைன்னா என் கல்யாணம் நடக்கவே நடக்காது..அதான் ராம் கிட்ட எப்படியோ பேசி அவனை அவன் குடும்பத்துல இருந்து பிரி்ச்சு எங்களோட வர சம்மதிக்க வெச்சாங்க.. அப்படிதானம்மா.." என்றதுமே ஆத்திரத்தில் போனைத் தூக்கி எறிந்தவன் அதேக் கோபத்தோடு தனது உடைகளை பையில் அடுக்கியவன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டே சென்றுவிட்டான்.. எங்கே தானிருந்தால் மீரா தன்னை எப்படியாவது சமாதனப்படுத்தி திருமணத்தை நடத்தி விடுவாள் என்பதால் தான் எங்கு செல்கிறோம் என்பதனை யாருக்கும் தெரிவிக்கவில்லை..
ஆனால் அந்தோ பரிதாபம் ரேவதி தனது கணவரிடம் தனது நிபந்தனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை தனு கேட்டு அவரை வார்த்தையால் அடி வெளுத்து வாங்கியதையோ அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக திருமணத்தன்று தனது தாயின் திட்டத்தை முறியடித்து அவனுடன் கிருஷின் வீட்டிற்கு செல்லலாம் என்ற அவளது மனக்கோட்டையையோ அவன் உடைத்து விட்டு செல்வதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை..
அக்சு வீட்டிலுள்ள அனைவருக்கும் ராம் பையோடு கிளம்பி விட்டதை சொல்ல திக்கென்றானது..
திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ராமினைக் காணாது அனைவரும் தவித்துத்தான் போனார்கள்.. ஆனால் தனுவோ ராமின் மீதான நம்பிக்கையால் ராம் கண்டிப்பாக தன்னைத் தவிக்க விடமாட்டான் என்று திருமண ஏற்பாடுகளை நிறுத்த வேண்டாம் என வற்புறுத்தி நடத்திக் கொண்டிருந்தாள்..
மீராவும் கிருஷும் அவனைத் தேட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் கிடைத்தது எதுவோ வெறும் ராமின் பை மட்டுமே..
அது அவர்களுக்கு இன்னும் பீதியைக் கிழப்பியது..
ரேவதியோ எங்கே ராம் திருமணத்திற்கு வராமல் இருந்துவிட்டால் தனது மானம் போய்விடுமோ என்று சுமதியின் மகனைக் காலில் விழாத குறையாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருந்தார்.. அந்த புதியவனுக்கும் தனுவினை மிகவும் பிடித்து விட அவர்களின் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டான்..
ஏதோ ஒரு வேகத்தில் கிளம்பி வந்த ராம் தனுவின் சொல்லை நம்ப முடியாமல் தவித்துக் கொண்டு பேருந்து நிறுத்ததிலே அமர்ந்து விட்டான்.. திரும்பி போய்விடலாமா என்ற எண்ணத்தில் அவன் இருக்க ' அதும் கடைசி படியில தான் ஊத்தினேன் ' என்ற அக்சுவின் கூற்று மனதில் உதித்தது.. அப்போதுதான் மீரா கடைசி இரண்டாம்படியில் தடுக்கி கீழே விழுந்தது நினைவில் வந்தது.. மனதில் ஒரு தெளிவு பிறக்க சந்தோசமாக எழுந்தவன் அதன்பிறகு எங்கே சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.. அநாதையாக கடந்த அவனது பை தான் அதற்கு சாட்சி..
ராம் எங்கே சென்றான் ? தனுவின் திருமணம் ராமுடன் நடக்குமா ?
புதியவனால் பிரச்சனை எழுமா ? என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro