Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

14..

இருவரும் தங்களது காதல் நிறைவேறிய சந்தோஷத்தில் காலத்தை மறந்து அப்படியே நின்றிருக்க, நிலாதான் வந்து அவர்களை சுயநினைவுக்கு கொண்டுவந்தாள்..

" அடேய் ராம்.. உன்னை போய் எல்லாரும் நல்லவங்கனு சொல்றாங்களே. பேரு தான் ராம் ஆனா பண்றதெலாம் கிருஷ்ணர் வேலை.. " என்றதும் தனுவிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டான்..

" ஹேய்.. அதுக்கெதுக்கு என் பேர யூஷ் பண்ற.. அவனெலாம் அவ்ளோ வொர்த் இல்ல " என்றபடியே கிருஷும் வந்து நிற்க, " மாமா நீங்க கூடவா " என்று சளித்துக் கொண்டான்..

கிருஷை அந்த இடத்தில் பார்த்ததும் தனு அங்கிருந்த செல்ல முயல அவளின் கையை இழுத்துக் பிடித்த கிருஷ் " தனு எல்லார்கிட்டயும் நல்லா பேசுற.. என்னை மட்டும் ஏன்டா ஒதுக்கிவெச்சு பார்க்குற " என பாவமாக கேட்க,

" அதுக்கான ஆன்சர் உங்களுக்கே தெரியும்.. இப்பவும் நீங்க இங்க வந்தது ராம்க்காக தானே தவிர உங்க தங்கச்சிக்காக இல்ல.. நான் எப்பவும் எல்லார்க்கும் ரெண்டாம்பட்சம் தான " என்றவள் ராமை நோக்கி " ராம் இப்பவே சொல்லிடறேன்.. கல்யாணத்துக்கு பிறகு நான் இவங்க வீட்லலாம் இருக்க மாட்டேன்.." என்று கிருஷின் கையை உதறிவிட்டு உள்ளே செல்ல முயல,

" தனு நான் தான் அன்னைக்கே சிவானியப் பத்தி உண்மைய உங்கிட்ட சொல்லிட்டேன்.. ஆனா நீ இன்னும் என்மேல கோபமா இருக்கறது அர்த்தமே இல்ல.. " என்றவன் ராமினை நோக்கி " நீயும்தான் உன்னை இத்தனை வருசம் தவிக்க வெச்ச ராமக்கூட ஏத்துக்கிட்ட.. ஆனா என்னை எதிரியால பார்க்குற.. அண்ணா மேல அவ்ளோ கோபமாடா.. "
என்க,
ராம் கிருஷை  பொய்யாக முரைக்க ஆரம்பித்தான்.

" ஆமா அதுக்கு இப்ப என்ன பண்ண போறீங்க.. வரவர உங்க குடும்பத்துல யாரையும் பார்க்க கூட பிடிக்கல.. கைய விடுங்க.. " என கையை உதறிவிட்டுச் சென்றாள்..

இவ்வளவு நேரம் இருந்த சந்தோசமான சூழல் காற்றில் பறந்தது..
" என்ன மாமா அவ இப்படி சொல்லிட்டு போறா.. இவள நம்பிதான வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ராம் ஒத்துக்கிட்டான்.. பேசாம நாமளே தனுக்கிட்ட அவங்க அம்மா சொன்ன கண்டிசன சொல்லிடலாமா "

" வேண்டாம் நிலா.. அவ இருக்குற மனநிலைமைக்கு என்ன முடிவெடுப்பானு தெரியல.. அவ என்மேல நிறைய பாசம் வெச்சிருக்கா..அதான் நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணலன்னு உடனே எம்மேல கோவமா இருக்கா.. அவ கோபம் நியாயமானது.. கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்.. " என்று கிருஷ் கூற ராம் அமைதியாக அந்த இடத்தை விட்டு நடந்தான்..

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு,
"  ராம் கொஞ்சம் ஓவரா பேசிட்டேனு எனக்கேத் தெரியும்.. சாரி.. ஆனா நான் பேசனது தப்பு இல்ல.. கல்யாணத்துக்கு பிறகு அவங்க என்னையவோ இல்ல உன்னையவோ எதாவது அவமானப்படுத்திடுவாங்களோன்னு  பயமா இருக்கு..
நமக்கும் சுயமரியாதை வேணும்ல ராம்.. சீக்கிரமா தனிவீடு பாரு..உன்னை எங்க அம்மாக்கூட குறை சொல்ல நான் விரும்பல.. நான் தப்பா சொன்னா மன்னிச்சிடு.. ,ஐ லவ் யூ ராம்.. டேக் கேர்..
..." என்ற குறுஞ்செய்தி தனுவிடமிருந்து ராமிற்கு வந்தது.. இதைப் படித்ததும் ராமிற்கு முதன்முறையாக மீராவின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோமோ என எண்ணலானான்.

நேராக நண்பர்கள் வழக்கமாக சந்திக்கும் தேநீர் விடுதிக்குச் சென்றான்..

" ராம் இப்பவே தனுவப் பத்தி தெரிஞ்சிடுச்சுல.. டைம் வேஸ்ட் பண்ணாம கல்யாணத்த நிறுத்திடு..
பொண்ணுங்கள பத்தி உனக்கு தெரியாது மச்சி. அவங்களோட ஹீரோயின் வேசம்லாம் கல்யாணம் வரைக்கும் மட்டும்தான்.. கல்யாணம் மட்டும் ஆச்சு சீரியல் வில்லிங்களா மாறிடுவாங்க..அனுபவசாலி சொல்றேன் கேட்டுக்கோ "என தீனா அட்வைஸ் மழையை பொழிய..

" அடேய் அந்தப் பொண்ணே இப்பதான்டா இவன லவ் பண்ண வெச்சிருக்கு.. அது உனக்கு பொறுக்கலொயாடா.. அவ இப்பக்கூட ராம யாரும் அவமானப்படுத்தக் கூடாதுன்னு தான தனியா வர சொன்னா.. அப்படி இருக்க
வீட்டோட  மாப்பிள்ளையா ராம எப்படிடா ஒத்துக்குவா..
சரி அப்படியே போனாதான் என்னவாம்.. பொண்ணுங்க தான் எப்பவும் விட்டுக் கொடுக்கனுமா..
நாம விட்டுக் கொடுத்தாலும் தப்பில்லடா..
ராம் வீனா இவன் பேச்சக் கேட்டு உன் லைப நீயே அழிச்சிக்காத.. தனு ரொம்ப நல்லப் பொண்ணுடா " என்று சக்தி தீனாவிற்கு எதிராக பேச ராம் குழம்ப ஆரம்பித்தான்.

" இப்போ நான் தனுவ தப்பா சொன்ன மாறி இப்படி பேசற..
ராம்.. உனக்கு மீரா அக்காவோடலாம் கடைசி வரை ஒற்றுமையா இருக்கனும்னா இப்பவே தனுப் பேச்ச கேக்கறத நிறுத்திட்டு நீயே தன்னிச்சையா முடிவெடு.. என்ன தான் பசங்க அம்மா பையனா இருந்தாலும் கடைசில அநாதை ஆசிரமத்துல கொண்டு போய் விடறாங்களே.. ஏன்னு நினைக்கற.. எல்லாம் இந்தமாறி பொண்ணுங்கனால தான். அம்மாவுக்கே இந்த நிலைனா.. அக்காவ பத்திலாம் சொல்லவா வேணும்.. இதுல உங்க அக்கா குடும்பத்த அவுங்க அம்மாக்கு பிடிக்கவே பிடிக்காது.
நல்லா யோசிச்சிக்கோ.. அப்ரோ உன் இஷ்டம்.. "

" டேய் தீனா சும்மா இருடா.. எல்லாரும் உங்க அண்ணி மாறி வில்லியா இருப்பாங்களா.. இல்ல உங்கண்ணா மாறி பொண்டாட்டி பேச்சக் கேட்டு பெத்தவங்கள கண்டுக்காம போயிடுவாங்களா.. இதோ பாரு ராம் உனக்கு நான் அட்வைஸ் பண்ணனும்னு அவசியமே இல்லடா.. ஆனா சொல்ல வேண்டிய அவசியத்துல இருக்கேன்..
ஹீரோன்னா யாருன்னு நினைக்கிற.. உலகத்த காப்பாத்துற அர்ஜூனும் விசாலும், உருகி உருகி காதலிக்கற சாக்லேட் பாய்ஸும்
பண்றக்கு பேரு ஹீரோயிசம் இல்லடா.. நம்மள சுத்தி இருக்குற உறவுகள் எதையும் பிரிஞ்சுபோக விடாம அவங்களுக்கான முக்கியத்துவத்த கொடுத்து பிரச்சினைய சால்வ் பண்ணி எல்லாரையும் சந்தோசமா பார்த்துக்குறவன்தான் ஹீரோ.. ஆனா நிறைய பேர் ஒருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்தவங்கள அவமானப்படுத்துறதால தான் எல்லாரும் தப்பான வழிய தேர்ந்தெடுக்கறாங்க.. பார்த்து நடந்துக்கோ " என சக்தி அவன்தரப்பு வாதத்தை முன்வைக்க தீனா தலை குனிந்து கொண்டான்.

அவன்பேச்சில் சற்று தெளிந்த ராம் " இப்போ என்னடா பண்ணட்டும் " என கேட்க,

யோசிப்பவன் போல பாவனை செய்தவன் ராமின் காதில் எதையோ சொல்ல அவனை முறைத்த ராமின் முகம் சில நொடிகளில் பிரகாசமானது..

இங்கோ தனுவின் சந்தோசத்திற்கு அளவேயில்லை.. அக்சுவுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.
கீதாவும் ராஜனும்தான் தனுவின் காதலை முன்கூட்டியே அறியாததால் மிகவும் வருத்தப்பட்டனர்..

அடுத்த நாளே கல்யாணத்திற்கான வேலைகள் மும்முரமாக நடக்கத்துவங்கின.. ராமும் சக்தி சொன்ன ஆலோசனையை நிறைவேற்ற துவங்கியிருந்தான்..

அந்த நேரம் பார்த்து ராமின் கைபேசி ஒலிக்க அதை காதில் வைத்தவன் கடுப்பாகி போனை துண்டித்தான்.. ஆனால் விடாமல் சிவானியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்து கொண்டிருந்தது.

தொல்லை தாங்காமல் அவன் போனை உயிர்ப்பிக்க " ராம் ப்ளீஷ் நான் சொல்றத  கேளு.. எனக்கு ஒரு சான்ஸ் கொடு.. என் பக்க நியாயத்த
உனக்கு புரிய வைக்கிறேன்.. வெறும் 5 நிமிசம் கொடு ராம் " எனக் கெஞ்சிய சிவானிக்கு " சரி " என்று பதிலளித்தான் ராம்..

ராம் தனது முயற்சியில்  வெற்றி பெறுவானா?.
சிவானியால் எதாவது விபரீதம் நடக்குமா..?  என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro