12.
ராம் தனுவின் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் முன்பே அவனைத் தடுத்து நிறுத்தினான் கிருஷ்..
" மாமா நீங்க "
" போதும் ராம் நீ எதுவும் சொல்லத் தேவையில்லை.. உனக்கு நான் இருக்கேனு ஞாபகமே இல்லைல.. ஆனா என்னால இருக்க முடியலயே
நானும் உங்கோட வந்து பேசறேன் வாடா" என்றபடி அவனை உள்ளே அழைத்துச் சென்றான்..
அவனது கண்டிப்பான குரலில் தந்தையின் அரவணைப்பை ராமினால் உணர முடிந்தது.
வீட்டினுள்
ரேவதியோ மேட்ரிமோனியில் தனுவுக்கு வரன்களை பார்த்துக் கொண்டிருந்தார்.. கிருஷைப் பார்த்ததும் சிரித்த அவர் முகம் ராமினைப் பார்த்ததும் வெறுப்பினைக் கக்கியது..
" வாங்க உட்காருங்க.. ராணிம்மா ரெண்டு காபி எடுத்துட்டு வா " என்றவர் அவர்கள் அருகே அமர்ந்தார்..
" நல்லாருக்கிங்களா சித்தி" என்ற கேள்விக்கு வெறும் தலையை மட்டும் ஆட்டினார்..
" சித்தி ..சித்தப்பா எங்க அவர்கிட்ட முக்கியமான விசயம் பேசனும் "
" இந்த வீட்ல முக்கியமான எல்லா விசயத்துலயும் நான் தான் முடிவு எடுப்பேன் என்னனு சொல்லு"
சிறிது தயக்கத்துடன் " சித்தி உங்களுக்கே தெரியும் தனுவுக்கு கல்யாண வயசு வந்துடுச்சு..அதான் "
என்றதும் " நானும் அதத்தான் நினைச்சேன். அவளுக்கு நல்ல படிச்ச நல்ல குடும்பத்த சேர்ந்த பணக்கார மாப்பிள்ளையா இருந்தா சொல்லு " என்றார்..
" நீங்க கேட்டமாறியே எல்லாத் தகுதியோட நம்ம வீட்லயே மாப்பிள்ளை இருக்கறாரே சித்தி " என்றதும் கிருஷை முரைக்க ஆரம்பித்தார்..
" ஓ நீ ராம சொல்றியா.. அவனுக்கு தான் அவனோட அத்தை பொண்ணு.. அதான் டாக்டர் பொண்ணு .. நிலாக் கல்யாணத்துக்கு கூட அவங்க அம்மாவோட வந்தாளே..அட அவளுக்காக என் பொண்ணக் கூட அவமானப் படுத்துனீங்களே..அவள விட்டுட்டு எதுக்கு என் பொண்ண கேக்கறீங்க.. அதான் அவ தெளிவா நான் பார்க்குற பையன கட்டிக்கறேனு சொல்லிட்டாளே..இன்னுமா அவ மனச காயப்படுத்த நினைக்கறீங்க " என்று கோபமாக கூறவும்,
" சித்தி ப்ளீஷ் ரெண்டு பேரும் விரும்புறாங்க.. நாம தான அவங்" என்று அவன் பேசி முடிப்பதற்குள் "போதும் நிறுத்து கிருஷ்.. இதுவே தனு உன் தங்கச்சியா இருந்தா இப்படி பேசுவியா.. இவனுக்குனு சொந்தமா ஒரு வீடு இருக்கா..அவனே அக்கா வீட்ல தெண்டமா இருக்கான்..இதுல என் பொண்ணும் அங்க வந்து அவமானப்படனுமா "
" இல்ல சித்தி அவனும் கை நிறைய சம்பாதிக்கறான்.. நிலாவோட கல்யாணத்துக்கு எல்லா செலவும் அவன்தான் பண்ணான்.. நான் எவ்ளோ சொல்லியும் கேட்கல.. அவன் சம்பாதிக்கறத எங்க கிட்ட அப்படியே கொண்டுவந்து தந்துருவான்.. அவன் ஒன்னும் ஓசி சோறு சாப்பிடல.. ப்ளீஷ் அவன தப்பா நினைக்காதீங்க "
" இப்படி சம்பாதிக்கற அத்தனையும் அக்காவுக்கும் தங்கச்சிக்குமே செலவு செஞ்சா என் பொண்ணு என்ன பிச்சை எடுப்பாளா..
அவ்ளோ நல்லப் பையன் ஒன்னும் எங்களுக்கு தேவையில்லை.. நீங்க வெளிய போலாம் " என்று கைகளை வாசல் நோக்கி நீட்டவும் கிருஷிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை..
பின்பு ரேவதியே பேச்சைத் தொடர்ந்தார்..
"இவன் ஊர்ல இருக்கற பொண்ணுங்களோட கூத்தடிப்பான்.. அதை நாங்க பார்த்துட்டும் பார்க்காதமாறி என் பொண்ண கட்டிக் கொடுக்கனுமா.. ஆனாலும் சொல்லக் கூடாது.. அக்கா தங்கச்சி இவன்னு எல்லாரும் நல்லா பணக்கார வீடா பார்த்துதான் வலை விரிக்கறாங்க.. என்ன குடும்பமோ என்ன எழவோ தெரியல " என சளித்துக் கொள்ள,
கிருஷிற்கு சுள்ளென்று கோபம் வந்தது..ஆனாலும் இப்போது தான் ஆத்திரத்தில் வார்த்தையை விட்டால் இன்னும் நிலைமை மோசமாகும் என்பதால் பொறுமை காத்தான்..
ஆனால் ராம் தனது சகோதரிகளைப் பற்றி தவறாக கூறியதும் துடிதுடித்துப் போனான்..
இவ்வளவுநேரம் அமைதியாக இருந்த ராம் " மாமா எனக்காக நீங்க அவமானப்படாதீங்க.. வாங்க போலாம் " எனக் கூப்பிட கிருஷோ அவனை அமைதியாக இருக்கும்படிக் கூறினான்..
" சித்தி ஆரம்பத்தில இருந்தே இவன உங்களுக்கு பிடிக்காது அதான் இப்படி பேசறீங்க..நீங்களும் எத்தனையோ தடவை அவன கேவலமா பேசிருக்கீங்க.. ஆனா அவன் உங்ககிட்ட தரக்குறைவா எதாவது பேசி இருக்கானா.எங்கம்மாக்கு என்ன மரியாதை கொடுக்கறானோ அதேதான் உங்களுக்கும் கொடுக்கறான்.. அவன் நினைச்சிருந்தா தனு அவன விரும்பும் போதே அவள கல்யாணம் பண்ணிருக்கலாம்.. ஆனா அவளே பின்னாடி வந்தும் நம்ப குடும்பத்துக்குள்ள எந்தப் பிரச்சனையும் வரக்கூடாதுனு ஒதுங்கிப் போனான்.. இப்பக்கூட உங்க கிட்ட சம்மதம் வாங்கதான் வந்தானே தவிர வேற எந்த தவறான வழியையும் தேர்ந்தெடுக்கல..இப்பவாது அவன் எவ்ளோ நல்லவனு புரிஞ்சுக்கோங்க
.உங்க பிடிவாதத்துக்காக தனுவோட காதல அழிச்சிடாதீங்க.. அவ உங்க மேல இருக்குற நம்பிக்கைலதான் உங்களையே மாப்பிள்ளை பார்க்க சொல்லிருக்கா. அதே மாறி நீங்களும் அவளுக்கு பிடிச்ச வாழ்க்கைய தான அமைச்சு தரனும்..ராம் என்னோட மச்சானால சப்போர்ட் பண்ணல.. உண்மையாவே அவனமாறி பொறுப்பான பையன் கிடைக்கறது கஷ்டம்.. அவன் தனுவுக்கு மட்டும் நல்ல கணவனா இருக்க மாட்டான்.. உங்களுக்கும் ஒரு பையனா இருந்து பார்த்துக்குவான்.. அதை நான் உறுதியா சொல்வேன்..
இதுக்கு மேல உங்க இஷ்டம்..
ராம் போலாம் வாடா " என கிருஷ் எழுந்திரிக்க, ரேவதி யோசிக்க துவங்கினார்..
இருவரும் வாசல் நோக்கி செல்ல " ஒரு நிமிடம் " என்ற குரலில் இருவரும் நின்றனர்..
" எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்.." என்றார்
இதைக் கேட்டதும் இருவரும் சந்தோசப்பட, ஆனால் அது நிலைக்காதமாறி " ஆனா அதுக்கு நான் சொல்ற கன்டிசனுக்கு நீங்க ஒத்துக்கனும் "
" என்ன சித்தி " என்று கிருஷ் சந்தோசமாக கேட்க
" ராம் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கனும்.. அது மட்டுமில்ல கல்யாணத்துக்கு பிறகு உங்க குடும்பத்தோட எந்த ஒட்டு உறவும் வைக்க கூடாது. ஒருவேளை தனுவே இதுக்கு சம்மதிக்கலைனாலும் நீ இதுல மாறக்கூடாது..
அது மட்டுமில்லாம இந்த உண்மை கல்யாணம் முடியற வரை உங்க ரெண்டு பேரத் தவிர வேற யார்க்கும் தெரியக்கூடாதுனு உங்க அக்கா பொண்ணு அக்சரா மேல சத்தியம் பண்ணனும் " என்றார் ஈவு இரக்கம் இல்லாமல்..
" இவனோட தன்மானத்து வித்துதான் இவன் காதல் சேரனும்னு எந்த அவசியமும் இல்ல.. வாடா போலாம் " என்று ராமின் கையைப் பிடித்து இழுத்து சென்றான் கிருஷ்..
ராமிற்கு அவர் சொன்னதை நினைத்துப் பார்க்கையிலே இதயமே நின்று விடும் போல இருந்தது.. தனது உயிரே மீராக்காவும் அக்சுவும் தான் என நினைத்துக் கொண்டிருக்க அவர்களை விட்டுச் செல்ல எப்படி சம்மதிப்பான். கிருஷ் அவனுக்கு மாமா மட்டும் அல்ல.. ஒரு நண்பனாக வழிகாட்டியாக தந்தையாக என யாவுமாக இருக்கிறான்.. அவனைப் பிரிய எப்படி மனம் வரும்..
இந்த ஏழு வருடங்களாக கிருஷை விட ஒரு படிமேலே பெற்ற குழந்தையாக தன்னை வைத்து பார்த்துக் கொண்ட கீதாவையும் ராஜனையும் விட்டுச் செல்ல நினைத்தால் அதைவிட பெரிய பாவம் வேறெதுவுமில்லை..
அதேசமயம் தன்னிடமிருந்து அழுதுகொண்டே தனு
சென்ற காட்சியும் உயிரைப் பிழிந்து எடுத்தது..
மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தனுவை மறக்க முயற்சித்தான்.. ஆனால் பாவம் தனுவிற்கு இது எதுவும் தெரிய வாய்ப்பில்லை..
அவளும் தனக்காக மட்டுமே இருக்கும் தனது தாய் தந்தைக்காக,
அடுத்த நாள்
தனது தாய் ரேவதி பார்த்த மாப்பிள்ளைக்காக தயராகிக் கொண்டிருந்தாள் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு,
விதி இவர்களை சேர்க்குமா?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro