Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 8

கேத்ரியன் மற்றும் சித்தாரா இருவரும் இரு வருடமாய் பூட்டி கிடக்கும் அந்த பெரிய வீட்டின் முன் நின்றிருந்தனர்.. அவர்களின் கண்களில் அப்போவா இப்போவா என தெரியாமல் வெளி வரத் துடித்த கண்ணீர் முத்தாய் மின்னிக் கொண்டிருக்க அவர்களின் மனம் பழைய நினைவுகள் அனைத்தையும் நினைவு பெற்று சமைந்திருந்தது...

சித்தாரா : ஹ்ம் நீயும் என் கூட வரியா என அவளை பார்க்காமலே கேட்க அதற்கு ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை நிலை படுத்தி கொண்ட கேத்ரியன்

கேத்ரியன் : நீ போய்ட்டு வா... நா இங்கையே இருக்கேன் என இவளும் திரும்பி நின்று கொண்டாள்.. ஹ்ம் என்ற ஒரு தலையசைப்புடன் முன்னேறி நடந்த சித்தாரா வீட்டின் சாவியை பூட்டிற்குள் இட்டு அக்கதவை திறந்து உள்ளே சென்றாள்...

எதிர் பார்த்திருந்தது தான்.. ஒளிர்ந்த சாயத்தில் என்றும் இதமான உணர்வை தரும் அவ்வீடு இன்று ஒளியின் வழியின்றி இருண்டு கிடந்தது... மூலை முடுக்கெங்கிலும் அந்த வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத வரை தற்காலிகமாய் வீடு கட்டி குடியேறியிருந்த பல சிலந்தி குடும்பங்கள்.. வேண்டா வெறுப்பாக காற்றில் அசைந்து கொண்டிருந்த தீரை சேலைகளில் இருந்து தொடர்ந்து முழு சுவருகளிலும் ஒன்றியிருந்த ஒட்டடைகள் என திகில் படத்திற்கு வாடகை விடுமளவு இருந்த அந்த வீட்டை கண்டு ஒரு பெருமூச்சே சித்தராவிடமிருந்து வந்தது...

வழியில் தடைகளை போல் வந்த ஒட்டடைகளை ஒதுக்கி விட்டு படிகட்டின் வழியாக மேலே சென்ற சித்தாரா அவளது பழைய அறையை கண்டதும் அக்கதவை தள்ளிக் கொண்டு உள்ளே செல்ல அவ்வறைக்கும் கீழிருக்கும் நிலைக்கும் துளியும் வேறுபாடில்லை...

போட்டது போட்ட படி அப்படியே இருந்தது... கலைந்து கிடந்த கட்டில் விரிப்பை அரித்திருந்த பூச்சிகள்.. ஒட்டடைகளாலும் தூசியினாலும் நிறைந்திருந்த சுவருகள்.. புகை மண்டலமென காற்றுபுக வழியின்றி அடைந்து கிடந்தது...

அறையை சுற்றி தன் கண்களை சுழல விட்ட சித்தாரா அந்த சுவருகில் ஒட்டப்பட்டிருந்த தாள்கள் அங்கங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஒரு சில பொம்மைகள் சில விஞ்ஞான பொருட்களென அனைத்தையும் ஏறிட்டவாறு இறுதியாய் அங்கிருந்த மேஜையை காண அவள் எதிர்பார்த்து வந்த பொருள் அங்கிருப்பதாக அவள் மனமும் வலியுறுத்தியது...

சில புத்தகங்கள்.. சிதறி இருந்த தாள்கள்.. அதன் கீழ் ஒரு மடிக்கணினி அதனோடு இணைந்திருந்த ஒரு மின் இணைப்பு அந்த அறையின் சுவரில் இருந்த அடப்ட்டரோடு இணைக்கப்பட்டிருந்தது... அதை கண்ட மறுநொடி அவளின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது...

பின்ன இரண்டு வருடம் ஒரு மடிக்கணினி சார்ஜ் ஏறினால் ... அதன் நிலை என்னவாக இருக்குமென அறியாதவர்களா நாம்...

பதறியடித்து அதனருகில் சென்றவள் அந்த மடிக்கணினி மீதிருந்த அனைத்தையும் தள்ளி விட அதன் பின்னே நிம்மதி பெருமூச்சு விட்டாள்.. அது அவள் தேடி வந்தது அல்ல என்னும் நிம்மதியில்

வேகவேகமாய் அந்த மேஜையின் ஒரு பக்கத்திலிருந்த கதவை திறந்து அதற்குள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட சில காகிதங்களுக்கு மத்தியில் அமைதியாய் ஒடுங்கியிருந்த அந்த மடியணினியை வெளியிலெடுத்தாள்...

அதை கண்டவளுக்கு கண்களில் இருந்து இன்னும் கண்ணீர் ஊற்றெடுத்தது... ஆழ்ந்த மூச்சை இழுத்த சித்தாரா அந்த மடிக்கணினியை எடுத்து கொண்டு அதற்கு மேலும் அங்கு நிற்காமல் கதவை மூடி விட்டு கீழே வந்தாள்...

வாயிலில் தன் தமையனை அழைக்க முயற்சித்து கொண்டிருந்த கேத்ரியன் திடீரென சித்தாரா ஓடி வருவதை கண்டு பதட்டத்துடன் அவளிடம் செல்ல அவளோ ஏதோ ஒன்று கிடைத்து விட்ட சிறு மகிழ்ச்சியில் ஒரு கரத்தால் கேத்ரியனின் கழுத்தை இறுக்கி அணைத்து கொண்டாள்...

அவளது நடவடிக்கையின் காரணம் புரியாவிட்டாலும் எதனாலோ மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என அறிந்த கேத்ரியனும் அவளை அணைத்து அவளின் தலையை கோதினாள்...

கேத்ரியன் : போலாமா

சித்தாரா : ம்ம் என இருவரும் அவர்கள் வந்த டக்ஸியில் ஏறினர்...

வெள்ளை அடிக்காத குறையாக பளிச் பளிச் என மின்னிய ஒரு பெரிய அறையில் தன்னந்தனியாய் ஒரு சுவரை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்

அவனின் சிந்தனைகள் அனைத்தும் பிரவஞ்சம் விட்டு பிரவஞ்சம் தாண்டியிருந்தாலும் கண்கள் அவன் கரத்திலிருந்த காகிதத்திலே நிலைத்திருந்தது...

அது மொத்தமும் ஒரு தெரியாத இல்லை இல்லை இவர்கள் அறியாத ஒரு மொழியினால் நிறப்பப் பட்டிருந்தது... அதிலும் அது ஒரு மொழி தானா அல்ல ஏதேனும் குறியீடா என்று கூட அவனால் பார்க்க முடியவில்லை...

எப்பேர்பட்ட புதிரையும் இரு நிமிடத்தில் கண்டறியும் அவனுக்கு அது புதிராய் தெரியவில்லை.. ஏனெனில் அதை பற்றிய ஏதேனும் ஒரு எண்ணம் அவனுக்கு இருந்தாலே அதை கொண்டு அவனால் விடையை கண்டறிய முடியும்.. அந்த தாளில் உள்ளது என்னவென்றே தெரியாத போது அவனும் என்ன செய்வான்...

அந்த அறையில் திடீரென ஒரு முறுக்கும் ஓசை கேட்க சுவரோடு சுவராய் பதுங்கியிருந்த கதவு மெல்ல வெளி வந்து அதை திறந்து கொண்டு முன்பு ப்ரின்சிடம் உரையாடிய அவனே வெளி வந்தான்...

தலையை திருப்பி அவனை கண்டதும் இவன் மீண்டும் தலையை திருப்பி கொள்ள வந்தவன் ஒரு நீண்ட யோசனையின் பின் வருண் என அழைத்தான்...

வருண் என்ற அவன் மீண்டும் தன் பார்வையை அவன் மீது பதிக்க நண்பனின் முகத்தில் தெரிந்த ஆர்வம் மிகுந்த கேள்விக்கு பெருமூச்சும் ஒரு தலையசைப்பும் தான் வருணிடமிருந்து பதிலாய் வந்தது...

அவன் : இட்ஸ் ஓக்கே மச்சான்.. நாம ட்ரை பன்னலாம்.. நமக்கு எப்போவாவது பதில் கிடைக்கும்.. என ப்ரின்ஸ் கொடுத்த நம்பிக்கையில் அவனையும் தளர அனுமதியளிக்காமல் வருணின் தோளை பற்றி தூக்கிவிட்டான்...

வருண் : ஹ்ம்ம் மித்து எங்க டா.. அவன் கிட்ட இந்த வர்ட்ஸ பத்தி கேக்கனும் டா

அவன் : அவனும் அதுக்கான ரிசர்சுக்கு தான் டா வெளிய போய்ர்க்கான் என கூறி கொண்டிருக்கும் போதே அந்த அறையின் கதவு படாரென திறக்க டெடி பியரிடமிருந்து தப்பிச்சென்ற அவன் அங்கு நின்றிருந்தான்...

வருண் : எதாவது க்லூ கெடச்சிதா மித்து என ஆவலாய் கேட்க மித்து என்ற அவனோ இல்லையென கூற விரும்பாவிட்டாலும் வேறு பதிலும் இல்லையென்பதால் அதே பதிலை கொடுத்தான்...

அவன் : நாம தமிழ்நாட்டுக்கு ஒரு முறை போய்ட்டு வருவோமா...

மித்து : ம்ஹும் அது சேஃபில்லன்னு தெரிஞ்சும் நாம அங்க போக கூடாதுடா...

வருண் : பின்னை என்ன தான் டா பன்றது.. ஒருத்தன மொத்தமா தொலச்சது பத்தாதுன்னு இன்னோருத்தன் எங்க போனான்னே தெரியல.. எதாவது அவன பத்தி தெரிஞ்சுதா.. கண்டுப்புடிக்க முடிஞ்சுதா.. அவன நெனச்சு ஒருத்தி தினம் தினம் அழுதுட்டு இருக்கா... அவளுக்கு எப்டி தான் உண்மைய புரிய வைக்கப் போறோம்...

அவன் : மச்சான் டென்ஷனாகாத டா.. அவ புரிஞ்சிப்பா..

வருண் : ஆமா இரெண்டு வர்ஷமா புரிஞ்சிக்காதவ இப்போ புரிஞ்சிக்க போராளா... அவ பாவம் டா.. எவ்ளோ தான் கஷ்டப்படுவா.. அவ சிரிச்சு மாசக்கணக்காச்சு டா... போடா எல்லா நம்பிக்கையும் போய்டும் போல...

அவன் : நம்ம மேல நமக்கே நம்பிக்கை இல்லனா எப்டி டா.. நம்மள நம்பி தான அவளுங்க இப்போ வர எத பத்தியும் போட்டு குடையாம இருக்காளுங்க. அவளுங்களுக்காகவாவது நாம நம்மள நம்ப வேண்டாமா...

வருண் : எல்லாம் சரி தான் டா.. ஆனா .. அவன பத்தி யோசிச்சியா... நாம எல்லாரும் அங்க இங்கன்னு பிரிஞ்சு இருந்தாலும் ஒன்னா இருக்கோம்... ஆனா அவன்... ஒருத்தர் கூட கான்ட்டக்ட்ல இல்ல.. உலகத்துல இருக்கானான்னு கூட தெரியல...

மித்து : ச.. அவன் அவ்ளோ சீக்கிரம் சாகுர ஆளு இல்ல டா... நம்மளோட இழப்புக்கு பழிவாங்காம அவன் ஓயவே மாட்டான்..

வருண் : அதான் எனக்கு பயமே.. ஒருத்தன இழந்தது பத்தாதா... அவன இழந்ததுக்கு இவன் பழிவாங்க போய் இவனையும் இழந்துடுவோமோன்னு தான் எனக்கு பயமே...

அவன் : அப்டி எதுவும் ஆகாது டா... நம்ம சத்யாக்கு எதுவும் ஆகாது என இவன் வருணை அணைத்து கொண்டு ஆறுதல் படுத்த அடுத்த நொடி அவர்கள் மூவரின் கடிகாரமும் ஒளிர அதிலிருந்து சித்தாராவின் அதே குரல் பழைய நிமிர்த்தலுடன் உரக்க ஒலித்தது...

" திஸ் ஈஸ் தாரா ஃபரம் தமிழ்நாடு.. மித்ரான் ஃத்வருண் டிவின் வினய் சக்தி ஷ்ரவன் ஆர்வின்  நிரன் நரா தில்வியா ராவனா மீரா அனாமிக்கா ஸ்வத்திக்கா மீனா அஜிம்சனா அரானா அண் ரியா.. பூமிக்கு உடனே நீங்க வந்தாகனும்... நம்ம வீட்டுக்கு " என உணர்ச்சி துடைத்த முகத்தில் ஒரு புன்னகையுடன் தன் சிகப்பும் வெள்ளையும் கலந்த கடிகாரத்தை பிடித்து கொண்டு அந்த மடிக்கணினியின் முன் அமர்ந்திருந்தாள் சித்தாரா என்னும் தாரா...

வருண் என்னும் ஃத்வருணும் மித்து என்னும் மித்ரானும் ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ள தன் தங்கையின் குரலை இத்துனை நாட்கள் பின் பழைய துள்ளலுடன் கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்தில் நின்றிருந்தான் வினய்..

அந்த டெடிபியரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தவளின் செவியிலும் அந்த குரல் அச்சு பிசகாமல் ஒலிக்க இந்த ஒரு குரலுக்காய் காத்திருந்ததை போல் தன் கண்ணீரை துடைத்து கொண்டு எழுத்தாள் அரானா..

அவளை அதிர்ச்சியுடன் கேட்ட குரலையும் நம்ப முடியாமல் உறைந்து நின்றாள் அபிமீனா என்னும் மீனா..

அந்த குரலில் தூக்கம் பறக்க எழுந்தமர்ந்த ப்ரின்ஸ் சனா என்னும் அஜிம்சனாவின் கரத்தில் ஒளிர்ந்த அவளது சிகப்பு மற்றும் வெள்ளை கலந்த கடிகாரத்தை கண்கள் மின்ன பார்த்தான் இப்போதைய நிலவின் அரசனின் வளர்ப்பு மகனாய் தத்தெடுக்கப்பட்டிருக்கும் நம் நிரன்..

இவர்கள் அனைவருக்கும் மேலாக துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்து காரிற்குள் மின்னல் வேகத்திற்கு பறந்து கொண்டிருந்த யதீஷ் தன் அருகில் இத்துனை பெயர்களையும் கேட்டு உறைந்து அமர்ந்திருக்க இவ்வளவு நேரமும் பதட்டத்திலும் படபடப்பிலும் அமர்ந்து விட்டு இப்போது கேட்ட எதையும் நம்ப முடியாமல் தன்னையுமறியது வலிந்த கண்ணீருடன் புன்னகைத்தாள் கேத்ரியன் என்னும் ரியா...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... எல்லாரையும் இப்டியே கொழப்பீட்டு போனா கதை போரடிச்சிடும்னு தான் என்ன நடந்துச்சுன்னே சொல்லாம டக்குன்னு லேட்டா வர வேண்டிய ட்விஸ்ட்ட முன்னாடியே வச்சிட்டேன்.... இனிமே உங்களுக்கே ஒன்னு ஒன்னா புரிஞ்சிடும்... அடுத்த யூடி கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும்.. ஹிஹிஹி பாப்போம் புடிக்கிதான்னு... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro