Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 6

சைத்தான்யாவின் முகத்தில் யதீஷை கண்டதும் ஒரு புன்னகையை சூடிக் கொண்டது..

அலுவலக விடயங்களை பேசி முடித்ததும் சாதாரணமாய் இருவரும் உரையாட யதீஷிற்கு சைத்தான்யாவின் வெளிப்படையான குணமும் நட்பான பேச்சும் மிகவும் பிடித்திருந்தது...

ஒரு மணி நேரம் போனதே தெரியாமல் ஏதேதோ உரையாடி கொண்டிருந்தவர்களுக்கு குளிர் பானம் எடுத்து வந்த ஊழியரின் கடிகாரத்தில் நன்பகல் மணி பனிரெண்டானதாக டிக்டிக் என கேட்ட சத்தத்திலே நேரத்தை கவனித்தனர்...

சைத்தான்யா : இட்ஸ் கெட்டிங் லேட் யதீஷ்.. டோன்ட் டேக் மி ராங் .. நா கெளம்பனும் என கடிகாரத்தை பார்த்தவாறு எழுந்தவனுடன் எழுந்து கொண்ட யதீஷ்

யதீஷ் : இட்ஸ் ஓக்கே சைத்தான்யா . ஐ கன் அண்டர்ஸ்டண் என புன்னகையுடன் கூற ஒரு சிறிய அணைப்பின் பின் சைத்தான்யா அங்கிருந்து வெளியேறச் சென்றான்... யதீஷ் அவனை வழியனுப்ப அவனுடனே வர திடீரென தன் கார் சாவியை காணாமல் அதை அவையில் தான் வைத்திருக்க வேண்டுமென மீண்டும் சைத்தான்யா அந்த அவைக்குள் நுழைந்தான்...

யதீஷின் மடிக்கணினி பையின் அருகிலிருந்த தன் கார் சாவியை எடுத்து கொண்ட சைத்தான்யா எதற்சையாய் யதீஷின் மடிக்கணினி பையிலிருந்து ஒரு புத்தகம் நீட்டி கொண்டிருப்பதை கண்டான்...

மதி மர்மம்

அதை ஒரு நொடி சமைந்து நின்று கண்டவனுக்கு ஏதேதோ நினைவலைகள் மோதி விட்டுச் செல்ல அவனை மேலும் சிந்திக்க விடாது அந்த அறைக்குள் நுழைந்த யதீஷ் கதவிடையே நின்று கொண்டே " சைத்தான்யா " என அழைத்தான்..

சைத்தான்யா : யா யா ஹியர்.. இருக்கு யதீஷ்.. சோ நா கெளம்புறேன் பாய் .. வில் மீட் யு சூன் என படபடவென கூறி விட்டு வெளியேற யதீஷும் எதையும் கவனிக்காமல் அவனை பின் தொடர்ந்து வந்து அவனை வழியனுப்பினான்...

தன் காரின் கன்னடி வாயிலாக யதீஷை நோக்கிய சைத்தான்யாவின் புருவங்கள் முடிச்சிட அடுத்த சில நொடிகளில் அவன் கார் அருகிலிருந்த ஒரு புத்தக கடையில் நின்றது..

அவனுக்கு உதவியாய் வந்திருந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் " இவன் ஃபைல்ஸ படிக்கிரத விட்டு எப்போ புக்கு படிக்க ஆரம்பிச்சான் " என்பதை போல் பார்க்க இவனை பொருட்டாய் காணாமல் அந்த புத்தகக்கடைக்குள் சென்ற சைத்தான்யா அடுத்த கால்மணி நேரத்தில் நெற்றியை நீவியவாறு வெறுங்கையுடன் வெளியே வந்தான்...

அவன் தேடி வந்த புத்தகம் அங்கில்லை.. ஆனால் அவன் தேடும் பதில்கள் அனைத்தும் அதில் தான் இருக்கக்கூடுமென ஆணித்திரமாய் அவன் நம்பினான்..

இதை அறியாத யதீஷோ அப்புத்தகத்தை கரத்தில் வைத்து கொண்டு திருப்பி திருப்பி பார்த்து கொண்டிருக்க அவன் மூளைக்குள் இதை யார் தான் எழுதியிருப்பார்.. இந்த நான் யாரோ என்ற நபர் உண்மையில் யார் என்ற கேள்வி குடைந்தடிக்க இந்த கேள்விக்கு உரியவளோ ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாய் எழுதி கொண்டிருந்தாள்...

ஐந்தரையடி உயரம்.. கொலு கொலு கன்னம்.. முகத்தில் அவ்வப்போது வந்து விழும் நீண்ட கார்கூந்தல் என வெண்பஞ்சு மேகம் போன்ற அழகி இருவத்திமூன்று வயதான சனா

அவள் தீவிரமாய் ஏதோ எழுதி கொண்டிருக்க சடாரென கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஒரு ஆறடி ஆண்

அவனை கண்டு கொள்ளாமல் எழுதி கொண்டிருந்தவளின் அருகில் கடுகடுத்தவாறு அமர்ந்தவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கழுத்தில் கிடந்த ஒரு டாலர் சாதாரண நீல நிறத்தில் இருப்பதை கண்டு கொண்டு ஒரு முறை யோசனையாய் கண்மணிகளை சுழற்றி விட்டு பின் ஐடியாவை பிடித்தவளாய் உடனே எழுந்து நின்றாள்...

அவள் மடியில் தலை சாய்க்க எழுந்தவன் திடீரென சனா எழுந்ததும் அவளை ஏமாற்றத்துடன் நிமிர்ந்து நோக்க அவள் கூறிய வார்த்தைகள் அவனை கோவமாக்கியது

சனா : வெல்கம் ப்ரின்ஸ்.. உங்கள நா இப்போ தான் கவனிச்சேன் சாரி.. எதுக்காக இங்க வந்துருகீங்க என மிக பவ்யமாய் கேட்க அவள் உதிர்த்த ப்ரின்ஸ் என்ற வார்த்தையும் அவள் கொடுத்த மரியாதையும் அடங்கிய கோவத்தை கிளரி விட்டது...

ப்ரின்ஸ் : நீயும் என்ன இரிட்டேட் பன்னாத டி என அவன் பல்லை கடித்தபடி மெதுவாய் கூற அவளோ

சனா : இல்ல இல்ல ப்ரின்ஸ்.. நான் என் ட்யூட்டிய தான் செய்றேன்.. உங்கள ரெஸ்பெக்ட் பன்றதும் எனக்கு கடமை தானே.. நீங்க தானே இந்த மன்ஷனோட ப்ரின்ஸ்..

ப்ரின்ஸ் : ஹாஆ.. வேணும்னே செய்யாத டி.. எனக்கு கோவம் தான் வரும்..

சனா : சரி சரி உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க ப்ரின்ஸ்.. நா தாராளமா செய்வேன் ...

ப்ரின்ஸ் : தயவு செஞ்சு என்ன தனியா விடு அதுவே போதும் என்க

சனா : உங்க உத்தரவு படியே ப்ரின்ஸ் என அங்கிருந்து சென்றவளையும் அவள் கட்டிலில் வைத்திருந்த காகிதத்தையும் கண்டவனின் முகத்தில் சிறு புன்னகை மலர அவனது அதரங்கள் " இராட்சசி " தானாகவே என முனுமுனுத்தது...

தன் அடர்ந்த கேசத்தை கோதி விட்டு நிமிர்ந்தவன் அவனது தோற்றத்தை நேரெதிரில் இருந்த கன்னாடியில் காணவும் சரியாக அவன் உடல் ஒரு முறை அதிர்ந்தது... தன் ஜெர்கினுள் இருந்த தட்டையான செல்பேசியை எடுத்தவன் அதில் ஒளிர்ந்த பெயரை கண்டு அந்த அழைப்பிற்கு பதில் அளித்தான்...

அப்புறம் : டேய் மச்சான் என அப்புறத்திலிருந்து எடுத்த எடுப்பிலே ஒரு குரல் வேகமாய் கத்த சற்று அந்த செல்பேசியை காதை விடு தள்ளி பிடித்தவன்

ப்ரின்ஸ் : ஏன் டா ஏன்.. எனக்கிருக்க இரெண்டு காதுல ஒன்ன பன்சராக்கலாம்னு பாக்குறியா...

அப்புறம் : அய்யோ இல்லடா மச்சான்.. உன் தங்கச்சி கிட்டேந்து தப்பிச்சு ஓடி வந்தேனா.. அந்த ஃபீல்ல உனக்கு ஃபோன் பன்னேன்.. நீ எடுத்த உடனே கத்தீட்டேன்...

ப்ரின்ஸ் : ஹ்ம் சரி டா என்ன விஷயம் சொல்லு.. திடீர்னு காள் பன்னீர்க்க

அப்புறம் : ஹ்ம் காரணமாத்தான் டா.. அதுக்கு முன்னாடி நீ எப்டி இருக்கு

ப்ரின்ஸ் : ம்ம் இருக்கேன் இருக்கேன் என சலித்து கொண்டதும்

அப்புறம் : ஏன் டா இப்டி சலிச்சிக்கிர...

ப்ரின்ஸ் : ம்க்கும் இவரு என்ன எப்போ அவரு பையன்னு தத்தெடுத்தாரோ அப்போலேந்து நா நல்லா இல்ல டா என கோவம் துளிர் விட கூறியவனை சமாதானம் செய்ய வழியறியாமல்

அப்புறம் : சரி டா கூல்.. டென்ஸ் ஆகாத.. குட்டிமா எங்க

ப்ரின்ஸ் : அவளுக்கென்ன என்ன இன்னும் காண்டேத்தி விட்டு எங்கையோ போய்ட்டா

அப்புறம் : சரி தான்.. அப்போ சாரு அதுக்காக தான் இப்டி குதிக்கிறீங்களோ

ப்ரின்ஸ் : நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு டா...

அப்புறம் : ம்ம் ம்ம் ஒரு க்லூ கெடச்சிருக்கு டா எங்களுக்கு.. மூணு வர்ஷத்துக்கு முன்னாடி

ப்ரின்ஸ் : மச்சான் இரு.. இதுல பேசுரது நமக்கு ஃசேபில்ல.. என அவனுக்கு நடுவிலே தடுப்பு வைத்தவன் அவன் ஜெர்கினிலிருந்து ஒரு கடிகாரத்தை எடுத்து அவனது வலது கரத்தில் மாட்டிக் கொள்ள சில நொடிகளில் அவன் ப்லூட்டூத்தில் இப்போது குரல் கேட்டது

அப்புறம் : கனெக்ட் பன்னிய இல்லையாடா

ப்ரின்ஸ் : பன்னிட்டேன் பன்னிட்டேன் இப்போ சொல்லு... என தன் செல்பேசியை மீண்டும் ஜெர்கினில் வைத்து விட்டு தன்  முழு கை சட்டையை இழுத்து விட்டு அவனது ஸ்மார்ட் வாட்சை உடையினால் மறைத்தான்..

அப்புறம் : ஹ்ம் மூணு வர்ஷத்துக்கு முன்னாடி நீ குடுத்த ஃபைல்லேந்து ஒரே ஒரு டாக்குமென்ட் மட்டும் கண்டுப்புடிச்சிருக்கோம்...

ப்ரின்ஸ் : ஹ்ம் அதுக்கென்ன டா என கேட்டவனின் நினைவலைகளில் அவனுக்கு மட்டுமே தெரிந்த சில பல விஷயங்கள் வந்து சென்றன

அப்புறம் : அதுல தனக்கு இரெண்டு பசங்க இருந்ததா மட்டும் தான் டா இருக்கு

ப்ரின்ஸ் : நான் எதிர்பாத்தது தான்..

அப்புறம் : ஹ்ம் நாங்க வேணும்னா இன்னும் ஃபர்தரா தேடுரோம் டா... நீ ஏன் தேட சொல்றேன்னு சொல்லேன்...

ப்ரின்ஸ் : நேரம் வரும் போது சொல்றேன் டா

அப்புறம் : டேய் டீ கடைல யாருக்கு டீ ஆத்துரோம்னு தெரிஞ்சு ஆத்துனா ஒரு திருப்தி இருக்கும்...எவனுக்கு ஆத்துரோம் ஏன் ஆத்துரோம்னே தெரியாம ஆத்தீட்டே இருந்தா எப்டி டா...

ப்ரின்ஸ் : உன் எக்ஸம்ப்பில்ல தீய வைக்க.. அதுக்கான நேரம் இது இல்ல மச்சான்.. நா நெனைக்கிரது உண்மை தான்னா நா நேர்ல வந்து சொல்றேன்.. அதோட அத மொத்த கேக்க வேண்டியதோ தெரிஞ்சிக்க வேண்டிதோ நாம இல்ல...

அப்புறம் : ஹ்ம்ம் சரி ஏதோ சொல்ற... சரி டா நா அப்ரம் பேசுறேன் உன் தங்கச்சி கத்திக்கிட்டு இருக்கா..

ப்ரின்ஸ் : ஹ்ம் என் தங்கச்சிய ரொம்ப காண்டாக்காத டா.. அப்ரம் நா வந்து உதைப்பேன்... என புன்னகையுடன் கூறிட

அப்புறம் : அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இதே வேலை வை டா ஃபோன என புலம்பி கொண்டே காளை கட் செய்தான்..

தன் நண்பனின் புலம்பலில் தனிச்சையாய் ப்ரின்சின் முகத்தில் சிரிப்பென்ற பூ பூக்க அவன் சிரிப்பதை கதவிலிருந்து எட்டி கொண்டு பார்த்த சனா அங்கிருந்து மனநிறைவுடன் செல்ல அவள் கண்டதை தன் முன்னிருந்த கன்னாடி வாயிலாக கண்டு அவள் சென்றதும் அவளை திரும்பி பார்த்தான்...

கேத்ரியனும் சித்தாராவும் அன்று மதிய வேளையில் தமிழ்நாட்டில் கால் பதித்தனர்..

கேத்ரியன் அவளது பழைய செல்பேசியை திறந்த அடுத்த நொடி சுனாமி வந்ததை போல் அவளது இன்பாக்ஸ் பல குரறுஞ்செயதிகள் என்ற பெயரில் வந்திருந்த பெரும் பெரும் பராக்ரப் செய்திகளால் மூழ்கியது..

அதை பெருமூச்சுடன் கண்ட கேத்ரியன் அந்த சிம்மை கலட்டி இரண்டாய் உடைத்து தூக்கியெறிந்தாள்... அவளது செய்கையை பார்த்து கொண்டிருந்த சித்தாராவின் எண்ண அலைகளில் அந்த எண்ணை என்றும் கேத்ரியன் தனக்கு கிடைத்த லக்கி நம்பர் என கூறுவது வந்துச் சென்றது

கேத்ரியன் : புது ஃபோன் வாங்கியாச்சுல்ல டி அதான்.. பழச தூக்கிப் போட்டுட்டேன்..

சித்தாரா : நா கேக்கவே இல்லையே டி

கேத்ரியன் : சொன்னேன் அவ்ளோ தான் என்றவளை சற்று விசித்திரமாய் நோக்கிய சித்தாரா

சித்தாரா : நா டக்ஸி கிடைக்கிதான்னு பாக்குறேன்.. என்று விட்டு செல்ல தன் நிலையை எண்ணி நொந்து கொண்ட கேத்ரியன்

கேத்ரியன் : பேக்குன்னு நினைச்சிருப்பா.. சரி அதான நானு விடு.. அவ சேஃப்ட்டிக்கு முன்னாடி இதெல்லாம் பெருசில்ல என தனக்குத் தானே கூறிக் கொண்டிருந்தளை சித்தாரா தூரத்தில் இன்னும் விசித்திரமாய் பார்ப்பதை கண்டதும் தனியாய் பேசுவதை நிறுத்தி கொண்டாள்...

அவ்விடம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் விடு விட்டு எரிந்து கொண்டாருக்க அவை அனைத்திற்கும் இடையில் ஒரு குட்டி கரடி பொம்மை தன் கண் முன் காட்டப் பட்ட காட்சியை விதியே என பாவமாய் பார்த்து கொண்டிருக்க அக்குட்டி கரடி பொம்மையின் முன் முகத்தை சுருக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்...

அவள் : என்ன டா பாக்குர.. என்ன பாக்குர...உனக்காக ஒருத்தி இரெண்டு வர்ஷமா காத்துட்டு இருக்கேன்.. நா இருக்க பக்கம் எட்டி பாத்தியா டா நீ... நா வேற எவனையாவது கல்யாணம் பன்னிட்டு போனா தான் நீ என்ன கவனிப்பியோ என அந்த கரடியிடம் கேட்க அதுவோ " தேவதான் எனக்கு " என அவளையே பர்த்து கொண்டு அமர்ந்திருந்தது...

அவள் : என்ன டா பதில் சொல்ல முடியாம முளிக்கிரியா... லெஃப்ட் அண் ரைட்டு விட்டு பல்ல கலட்டி குடுத்துடுவேன் பதில் சொல்லு டா என அந்த கரடியை எவனோ ஒருவனை மனதில் வைத்து கொண்டு வருத்தெடுக்க அதை அதற்கு மேலும் கேட்க இயலாமல் " ஹே போதும் டி.. நீ நேரா போய் அவன் கிட்ட கேட்டா கூட அவன் மட்டும் தான் காதுல கேக்க முடியாம நிப்பான்.. இப்டி அவன் கிட்ட சொல்லாம அவனையும் பாக்காம சும்மா சும்மா இப்டி பொம்மை கிட்ட கத்தி எங்க காத புண்ணாக்குர " என கத்தி கொண்டே அந்த அறைக்குள் காதை பொத்தியபடி வந்தனை அவள் திரும்பி முறைத்தாள்...

அவன் : என்னா.. உன் முறைப்புக்கு பயப்புடுர ஆளு நா இல்ல ஆமா

அவள் : ம்க்கும் நீ எல்லாம் என்ன டா ப்ரெண்டு.. ஃப்ரெண்டு அவ லவ்வர பிரிஞ்சிசு இருக்காளே அவள சேத்து வப்போம்ன்னு தோனுதா உனக்கு

அவன் : என்ன என்ன வேணா செய்ய சொல்லு செய்றேன்.. மாமா வேலைக்கு மட்டும் கூப்டாத

அவள் : அடிங்கு போடா வெளிய என அந்த கரடி பொம்மையை தூக்கி எறிய அவன் இவள் பத்திரகாளி உருவை எடுத்ததை உணர்ந்து வெளியே ஓடவும் அந்த பாவப்பட்ட கரடி பொம்மை அவனை அடிக்காமலே சென்று கீழே விழுந்தது...

உடனே ஓடிச் சென்று அதை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்து கொண்ட அவள் அதனிடம் கண்ணீர் விடாத குறையாய் மண்ணிப்பு வேண்டினாள்...

இவள் இவ்வாறு தரையில் அமர்ந்து அந்த கரடி பொம்மையை அணைத்திருப்பதை அந்த வளாகத்தின் ஓரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தாள் ஒருவள்...

ஐந்தடி உயரம்.. அழகான கண்கள்.. சிறகடித்து பறப்பதை போல் அழகான புன்னகை சூடிய இதழ்.. செதுக்கிவைத்த அழகியவள்.. அவள் அபி

அபியின் கண்கள் கரடி பொம்மையை கட்டிப்பிடித்திருப்பவளின் மீதே இருக்க சரியாக அந்த நேரம் அவளது கைகடிகாரம் ஒரு வித்யாசமான ஒலி எழுப்பி அபியை மட்டுமல்லாது அந்த வளாகத்திலிருந்த அனைவரையும் திடுக்கிட செய்தது...

மதிய நேரத்தில் எங்கேனும் செல்லலாம் என முடிவெடுத்து காரில் உளாவிக் கொண்டிருந்த யதீஷ்ஷின் கண்களில் சைத்தான்யா சென்று வந்த அதே புத்தகக்கடை தென்பட்டது..

அதை கண்டு கண்கள் மின்ன காரை பார்க் செய்து விட்டு உள்ளே சென்றவன் அங்கிருந்த கடை உரிமையாளரிடம் " நான் யாரோ " என்றவர் எழுதிய புத்தகம் இருக்கிறதா என கேட்டதற்கு அவர் இவனை பைத்தியமா என்பதை போல் பார்த்தார்..

முதலில் அவரின் பார்வைக்கு அர்த்தம் புரியாது நின்ற யதீஷ் பின் தான் கேட்ட கேள்வியை ரீவண் செய்து பார்த்து விட்டு அவர் பார்த்த பார்வை ஒன்றும் தவறில்லை தான் என அசடு வழிய ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு உள்ளே சென்றான்..

பின்ன பேருடன் கேட்டாலே சில புத்தகம் கிடைக்காது... இதில் நான் யாரோ என கேட்டால் அவரும் என்ன செய்வார்

பல புத்தகங்களையும் பார்த்தவாறு சுற்றி வந்தவன் கதை புத்தங்களின் பகுதியை கடைகாரரின் அருகிலே வைத்து கொண்டு பல நிமிடம் களித்தே கண்டு பிடித்து புத்தகத்தை தேடத் தொடங்கினான்...

அவனை அங்குள்ள புத்தகங்கள் ஈர்த்ததோ இல்லையோ திடீரென ஒரு குரல் காந்தத்தை விடவும் வேகமாய் அவனது செவிகளை இழுத்தது

சற்று அவன் நின்றிருந்த இடத்திலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்த யதீஷ் அங்கு " நான் யாரோ என்ற ரைட்டர் எழுதிய புத்தகமிருக்கா " என கேட்டு தான் முன்பு வாங்கிய அதே ரியக்ஷனை வாங்கி நின்ற கேத்ரியனை கண்டு ஆனந்த அதிர்ச்சியடைந்தான்..

கேத்ரியன் அவள் நின்றிருந்த இடத்திலிருந்து மெதுவாய் நகர்ந்து புத்தக வரிசை பக்கம் செல்ல அவரோ " இந்த காலத்து புள்ளைங்களுக்கு என்ன தான் ஆச்சோ.. எழுத்தாளர் பேர பாரு நான் யாரோவாம் ... " என புலம்பியபடி தன் வேலையை பார்க்கச் சென்றார்...

அவர் கூறுவதை கேட்டுக் கொண்டே யதீஷ் நின்ற புத்தக வரிசையின் மறு புறம் நின்ற படி அந்த புத்தகங்களை உன்னிப்பாய் பார்ப்பதை போல் பார்த்து கொண்டிருந்தவள் திடீரென கேட்ட சிரிப்பு சத்தத்தில் சற்று முளித்து விட்டு யோசிக்காமல் அவள் முன்பிருந்த இரு புத்தகத்தை எடுக்க.. அங்கே தெரிந்த யதீஷின் முகத்தை கண்டதும் கண்களை விரித்தார்...

அந்த கடைகாரரின் புலம்பல்களால் தன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த யதீஷ் திடீரென புத்தகம் நகரும் சத்தத்தில் நிமிர யதீஷும் கேத்ரியனும் இப்போது நேருக்கு நேர் அந்த புத்தகங்களுக்கு இடையே முளித்த படி நோக்கிக் கொண்டனர்....

தேடல் தொடரும்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro