Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 58

மெடர்மான்

நிலத்தில் சரிந்த இருவரையும் நோக்கி மற்ற ஏழ்வரும் பதட்டத்தோடு ஓடி வர மீரா பயத்தில் கத்தி அழவே தொடங்கியிருக்க ஒரு கத்தலுடன் இடையை இறுக்கி பிடித்தபடி ஒரு கையை ஊன்றி எழுந்தான் ஃத்வருண்...

இன்னமும் சக்தி நிலத்திலே படுத்திருக்க அவனை மெதுவாய் உலுக்கி மீரா அழ பல்லை கடித்து கொண்டு அவளை நோக்கிய ஃத்வருண் தங்களை சுற்றி நோக்க வெடித்து சிதறிய அந்த ரேடாரின் பகுதிகளில் ஒன்று ஆழமாய் ஃத்வருணின் தோள் பகுதியை கிளித்திருந்தது...

மீராவின் உலுக்கலில் பட்டென கண்களை திறந்த சக்தி சடாரென எழுந்தமர அவன் எழுந்த வேகத்திற்கு மீண்டும் கீழே விழும் முன் அவனை மித்ரான் தாங்கி பிடித்தான்...

சக்தியின் முதுகில் ஒரு கம்பி சொருகிக் கொண்டிருந்தது... அதை மித்ரான் வேகமாய் பிடுங்கி எறிய சக்தி கையை இறுக்கி பிடித்து கொண்டு வேகபெருமூச்சுகள் விட அழுது கொண்டே இருந்த மீராவை ஃத்வருண் ஒரு கரத்தால் அணைத்து சமாதானம் செய்ய முயன்றான்..

" டேய் டேய் நா நல்லா இருக்கேன் டா... எதாவது ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போங்க.. " என சக்தியே அவனின் சட்டையை களட்டி முதுகில் கட்டி கொள்ள இவனுக்கு முதலுதுவி கூட செய்ய இயலாமல் அனைவரும் பதறி கொண்டிருந்தனர்...

" ஏ செய் ஏன் இப்போ எல்லாம் குதியா குதிச்சிட்டு இருக்கீங்க... சும்மா இருங்க மொதல்ல " என சக்தி பொருமை இழந்து ஒரு அதட்டு அதட்டவும் இவர்கள் அனைவரும் கப்சிப்பென வாயை மூடி கொண்டு அவனை நோக்கினர்... " டேய் மொதல்ல ஒரு கர்சிஃப கைல கட்டித் தொலடா அப்டியே உக்காந்துருக்கான் " என சக்தி ஃத்வருணை திட்டிக் கொண்டே அவன் மெதுவாய் எழுந்து நிற்க " ஏன் டா அண்ணா அப்போ நா அழுததெல்லாம் வேஸ்ட்டா? " என மீரா கண்ணீரோடே கேட்டாள்...

" அய்யோ நாங்க நல்லா தான் இருக்கோம் பாப்பா... எந்திரி நீ... ஏன் அழுகுர வா பூமிக்கு போக வேண்டியது தான் " என சக்தி அவளை பேசவே விடாமல் எழுப்பி நிற்க வைத்து மற்றவர்களுக்கும் கண் காட்ட ஃத்வருண் சக்தி கூறியதை போலவே கை குட்டையால் தன் கரத்திலிருந்த காயத்தின் மீது இறுக்கி கட்டிவிட்டு எழுந்து நின்றான்...

" ஹே என்னாச்சு ஏன் டி அது திடீர்னு வெடிச்சிது? " என ஸ்வத்திக்கா கேட்க " நாம கட் பண்ண ஒயர்  க்ரவிட்டேஷ்னல் புல்க்கானது இல்ல... நா மொதல்ல சொன்ன மாறியே க்ரவிட்டிய குறிக்கிறது... அது மணுக்குள்ள ஒரு குறிப்பிட்ட டெம்ப்பரேச்சரோட தான் இருக்கனும்... நாம க்ரவிட்டிய கட் பண்ணதும் அது ஃப்லோட்டாக ஆரம்ச்சிருக்கு... அதான் டெம்ப்பரேச்சர் இன்னும் அதிகமாகி வெடிச்சிடுச்சு " என அரானா விளக்கமளிக்க " சரி நடந்தது நடந்துடுச்சு... கெளம்பளாம் நாம... டேய் மெடர்மானுக்கு போனானுங்களே.. அவனுங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க டா... முபல்லன் அங்க போனும்னு சொன்னதே சரி இல்ல " என மித்ரான் கூறி கொண்டே சக்திக்கு நடக்க உதவினான்...

அங்கிருந்து பூமிக்கு கிளம்பும் முன்பாகவே சக்தி ஷரூரா வீட்டிற்கு செல்ல வேண்டுமென கட்டளையிட ஷரூரா என்ற பெயரை கேட்டதும் மீண்டும் ஒரு பெயர் தெரியா உணர்வினில் ஆழ்ந்தான்... சக்தியின் மனதினில் என்ன இருந்ததென்று அவன் தான் அறிவான்...

மெடர்மான்

முபல்லனை யதீஷ் மற்றும் ஷ்ரவன் இரு புறத்திலும் பார்த்து விட்டு ' இவன இங்க அழச்சிட்டே வந்துருக்க கூடாதோ ' என்பதை போல் ஒருவரையொருவர் பார்த்து கொள்ள முபல்லனோ முகமெல்லாம் பல்லாக விஷமமான சிரிப்புடன் வட்ரனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான்...

அவன் ஓரடி எடுத்து வைத்த அடுத்த நொடி ஷ்ரவனின் கடிகாரத்தில் ஒரு ஒலி எழும்ப சில நொடிகளிலே " டேய் வியோனார காப்பாத்தியாச்சு டா... அங்கேந்து பூமிக்கு கெளம்புங்க... எல்லாம் முடிஞ்சிது " என்ற டிவினின் குரல் வந்து சென்றது...

ஷ்ரவன் " முபல்லன்...நாம கெளம்பளாம்.. எல்லால் அங்க சரி பண்ணீட்டாங்க " என முபல்லனை நோக்கி குரல் கொடுக்க அவன் திரும்பாது வட்ரனை நோக்கியவாறு ஏதோ தீவிரமாய் சிந்தித்து கொண்டிருந்தான்...

" நாம போகலாம் முபல்லன்... " என யதீஷும் அவன் பங்கிற்கு ஷ்ரவனை பார்த்தபடியே குரல் விடுக்க இவர்கள் எதிர்பார்த்தபடியே வட்ரனை தூக்கிய முபல்லன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான்...

" இவன நம்பி வந்தது ரொம்ப தப்பா போச்சு டா " என ஷ்ரவன் அவனை நோக்கி ஓட யதீஷும் தன் நிலை பெற்று அவர்களை பின் தொடர்ந்து ஓடினான்... தன் கருவி ஒன்றின் மூலமாக வட்ரனை தூக்கி கொண்டு ஓடிய முபல்லன் எளிதாய் ஒரு பாதைக்குள் நுழையும் முன்பாக ஷ்ரவன் அவனின் காலை தடுக்கி விட அவன் விழுந்த வேகத்திற்கு அவனின் மேலமர்ந்து தன் முதுகிலிருந்த அந்த கையிறை யதீஷிடம் தூக்கி எறிந்தான் ஷ்ரவன்...

யதீஷிற்கு சொல்லொன்றும் தேவை படவில்லை... ஷ்ரவன் முபல்லனை திருப்பிய உடனே யதீஷ் அவனை வட்ரனோடே அந்த கயிறினால் இருக்கி கட்டியிருந்தான்...

முபல்லன் அந்த கையிறிலிருந்து விடுபட திமிற ஷ்ரவனும் யதீஷும் மூச்சு வாங்கியபடி அவனை முறைத்து கொண்டிருந்தனர்... " என்ன கலட்டி விடுங்க... நா தெரியாம பண்ணீட்டேன்.. " என முபல்லன் கெஞ்ச அவனை அறைய துடிக்கும் கரத்தை இறுக்கி மூடி " தெரியாம செய்யிரத இரெண்டு மூணு முறை பண்ண மாட்டாங்க டா " என கூறி கொண்டிருக்கும் போதே முபல்லன் வேகமாய் திமிற யதீஷ் ஒரு கோவத்தில் பளாறென ஒரு அறை அறைந்தான்...அதற்கே வட்ரனோடு தலை மோதி முபல்லன் மயக்கத்திற்குள் ஆழ்ந்திருந்தான்...

தமிழகம்

அஜிம்சனா ஷரூராவிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை... ஷரூரா ஒரு ஏக்கத்தோடே அந்த இடம் முழுவதும் பார்வையை சுழல விட தாராவை எங்கும் காணாமல் சோர்ந்தாலும் லியானையும் காணவில்லையே என பதைபதைப்பாய் இவள் பார்வையை சுழல விட " யார தேடுறீங்க ஷரூரா?? " என்ற ரியாவின் கேள்வியில் " அது... வந்து... லியான் அண்ணா மாரியே அவங்க ட்வின் இருப்பாங்கன்னு நிரன் அண்ணா சொன்னாரு... அதான் அவர தேடுறேன் " என மழுப்பியவளை நிரனும் நோக்கினான்...

" ஓஹ் லியான பாத்துர்க்கியா நீ? " என வினய் எதார்த்தமாய் கேட்கவும் " ஹான் பாத்துர்கேன் பாத்துர்கேன் " அவளை மேற்கொண்டு இவர்கள் கேள்வி கேட்கும் முன்பாக ஷரூராவின் கண்கள் அந்த அறைக்குள் நுழைந்த சத்யாவை அடைந்திருந்தது...

அடுத்த பத்தே நிமிடத்தில் அங்கு மெடர்மான் சென்றிருந்த அனைவரும் முன் வர அவர்களோடு சக்தி மற்றும் ஃத்வருண் இருவரும் காயத்திற்கு தக்க பரிசோதனையும் செய்து விட்டு வந்திருந்தனர்...

சோர்வில் வந்த உடனே ஒரு சோபாவில் சாயப் போன சக்தி கேட்ட ஒரு அலரலில் தடுமாறி பலத்த சத்தத்துடன் கீழே விழ அனைவரையும் உலுக்குவதை போல அலரிய ஷரூரா கண்கள் நிறம்பிய கடல் போன்ற கண்ணீருடன் அவளின் அதிர்ச்சிக்கு சற்றும் குறைவில்லாத அதிர்ச்சியை தாங்கியிருந்த ஃத்வருணின் முன் நின்றிருந்தாள்...

ஷரூராவின் அலரலில் குழந்தைகளை விட்டு விட்டு வந்த தில்வியா தன்னவனை கண்டதும் " ஹையோ ஃத்வருண் என்னாச்சு உனக்கு? " என பதறி போய் அவனிடம் ஓடி வர அனைவரின் கவனமும் ஃத்வருணிடம் சென்றது...

" ஹே எனக்கு ஒன்னும் இல்ல டி... ஐம் ஃபைன்... ஒரு சின்ன அக்சிடென்ட் ஆயிடுச்சு... " என அமைதி படுத்தி கொண்டே ஷரூராவை அவன் பார்க்க அவளோ " சாரி ஃபார் தி ட்ரபுல்... நா உங்கள எங்கையோ பாத்த மாரி இருந்துச்சு.. ஐ மீன் உங்கள பாத்ததும் வேற யயாரோ நினைவுல வந்துட்டாங்க... ஐம் ரியலி சாரி " என ஷரூரா அழுது கொண்டே கூறவும் தாரா அவளின் தோளை பற்றி " நீங்க தான் ஷரூராவா... தன்க் கார்ட்.. யு ஆர் சேஃப் " எனக் கூறி புன்னகைத்தாள்...

தாராவை கண்டதும் ஷரூராவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... பேந்தபேந்த முளித்தபடி அவள் அனைவரையும் பார்க்க மெதுவாய் தன் கையே தனக்கு உதவியென்ற முன்னோக்கத்துடன் ஒரு சோபாவை பிடித்து கொண்டு எழுந்த சக்தி தான் பத்திரப்படுத்திய அந்த புகைபடத்தை எடுத்து ஷரூராவின் முகத்திற்கு நேராக காட்டி " இதுல உள்ள குழந்தை நீயா மா?? " என கேட்க ஒரு நொடி அந்த புகைபடத்தை ஷரூரா அதிர்ச்சியோடு பார்க்க அவள் பின் நின்றிருந்த தாரா " டேய் அண்ணா அதுல இரெண்டு கொழந்தை இருக்கு.. யார கேக்குர நீ?? " என கேள்வி எழுப்பினாள்...

" ஆமா அது நான் தான்...  இது என் ஃபமிலி ஃபோட்டோ... ஒன்னு என்னோட சிஸ்டர்...அப்ரம் கீழ நிக்கிரது என்னோட காணாம போன ப்ரதர் " என ஷரூரா தாராவின் பதிலுக்கு முன்பாக ஷரூரா பதில் கொடுக்க இவர்களை அமைதியாய் பார்த்து கொண்டிருந்த அஜிம்சனா " இருந்த சந்தேகமெல்லாம் போய்டுச்சு... கன்ஃபார்ம் இவ என் தங்கச்சி தான் " என முடிவே செய்திருந்தாள்..

நிலா

ஷரூராவை பார்த்து விட்டு அந்த மாளிகையை விட்டு வெளியேறிய லியான் தன் கடிகாரம் இப்போதிருக்கும் விலாசத்தை அறிய அவனின் இரகசிய ட்ரக்கரை உயிர்பித்து விலாசத்தை தேட சில நிமிடங்களிலே அதை கண்டுபிடித்தான்...

ஒரு சடுதியான வீதியினுள் பின்னும் முன்னும் பார்த்தபடி அவசர அவசரமாய் எங்கோ சென்று கொண்டிருந்த அதே பெண்மணி ஒரு வளைவில் சரியாக திரும்பும் போது அந்த கட்டிடத்தின் மேல் நின்றிருந்த லியான் தன் ட்ரக்கரை கண்டு உறுதி செய்து விட்டு அவரை பின் தொடர்ந்து ஒவ்வொரு கட்டிடமாய் தாண்டி குதிக்க மீண்டும் ஒரு வளைவை சந்தித்த அப்பெண்மணியின் முன் ஒரு பெருமூச்சுடன் இரும்பு கம்பியை பிடித்து கொண்டு கீழே இறங்கினான்...

திடுதிபுவென தன் முன் வந்து குதித்தவனை கண்டு அப்பெண்மணி பயந்து பின் நகர லியான் மூச்சு விட கூட எண்ணமின்றி " ஏரண் அனுப்புன அந்த குழந்தை யாரு? " என கேள்வியை முன் வைத்தான்...

தேடல் தொடரும்...

ஹேய் ஹாய் இதயங்களே... இன்னைக்கு ஏதோ ஒரு அவசரத்துல கதை எழுதீர்க்கேன் சாரி... நாளைக்கு வேற யூடி குடுக்குறேன்... குட் நைட்.. டாட்டா..

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro