தேடல் - 52
தங்கள் மேல் நடக்கும் காட்சிகளை வலி நிறைந்த கண்களுடன் பார்த்து கொண்டிருந்த அன்பரசி கண்ணீர் மழ்க தலை குனிந்து அவர் கைகளில் முகம் புதைத்து கண்ணீர் விட்டார்...
அவரின் தோழி என்றோ ஒரு நாள் இவ்வாறு ஒரு ஆபத்து வந்து உலகே அழிய நேரிடுமென கூறியது விட்டு விட்டு மீண்டும் மீண்டும் கேட்க அவரை சமாதானம் செய்யும் நிலமையில் அவரது கணவரும் இல்லை...
கண் முன் நிகழும் உண்மையை மறைத்து அவரால் மட்டும் என்ன பொய் கூறி விட முடியும்?? அவரும் தலை குனிந்து ஒரு வலி நிறைந்த பெருமூச்சை இழுத்து விட்டு அடர்த்தியாய் மாறியிருந்த ஊதா நிற விண்ணை காண நிமிர்ந்தவரின் கண்கள் ஆச்சர்யத்தில் அந்த பெரிய பெரிய நச்சத்திரங்களாய் மாறியிருந்த எரிக்கல்களோடு மின்னியது....
கருமையை மெதுமெதுவாய் சூழ்ந்து வந்த ஊதா நிறம் மெதுமெதுவாய் அடர்த்தி பெற்றிருக்க விண்வெளியின் இருளான வானம் அந்த ஊதா நிறத்தை பின்னுக்கு விரட்டிக் கொண்டிருந்தது....
" இதுக்கு வாய்ப்பே இல்ல!!! " என்ற தன் கணவரின் குரலை கேட்டு தானும் அவரை திரும்பி நோக்கிய அன்பரசி அவரின் முகத்தில் தெரிந்த அப்பட்டமான ஆச்சர்யத்தை கண்டு கண்ணீரை கூட துடைக்க எண்ணமின்றி அப்படியே அன்னாந்து பழைய நிறத்திற்கே மாறிக் கொண்டிருந்த வானத்தை நோக்கினார்...
நிலா
நிரன் தானிருந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்த படி சிந்தித்து கொண்டிருக்க லியான் அமைதியாய் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தான்... இவ்விருவரை அந்த கோட்டை முழுவதும் வீரர்கள் அலசி ஆராய்ந்து தேடி கொண்டிருக்கின்றனர்... எப்போது வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் இங்கு வரலாம் அதற்கு முன் இவர்கள் இங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றாக வேண்டும்... அதற்கு முன்பாக ஷரூராவிற்கு உண்மையிலே என்ன தான் நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நிரன் அந்த சிறையிலிருந்த இரகசிய கமேராக்களை நாசூக்காய் ஹக் செய்திருந்தான்...
அதன் பலன் கிடைக்கவே இவன் குறுக்கும் நெடுக்கும் நடக்க சரியாக அவனது செல்பேசியில் மணி அடித்து வேலை முடிந்ததென வலியுறுத்தப்பட்டது... விரைவாக அதை எடுத்து ஷரூரா இருந்த சிறையின் கமாராவை தேடி எடுத்தவன் என்ன நடக்கிறதென கண் கொத்தி பாம்பாய் பார்க்க லியானும் விரைந்து அவனருகில் வந்தான்...
ஷரூரா அவளின் கடிகாரத்தில் உரையாடி கொண்டிருக்கும் போது அவளின் பின் வந்த ஒருவர் அவளின் தலையில் எதையோ வைத்து அடித்ததை கண்டதும் லியானின் இரத்தம் சூடேறியது...அவரே சில நிமிடங்களுக்கு அவளது டெக்கரான் வாட்சை ஒன்றுமறியாமல் நோண்டி மொத்தமாய் செயழிலக்க வைத்திருக்கிறார் என்பதையும் கவனித்தான்... அதன் பின்னே ஷரூராவை அங்கிருந்து சிலர் வேகமாய் வெளியே அழைத்துச் சென்றிருந்தனர்...
இவர்கள் இதை உன்னிப்பாய் பார்த்து கொண்டிருந்த போது அவர்களிருந்த அறையின் கதவு விகோரமாய் ஆட்டப்பட்டது... வெளியிலிருக்கும் யாரோ அதை திறக்க முயற்சித்து கொண்டிருந்தனர்... நண்பர்கள் இருவரும் மூச்சை இழுத்து பிடித்து கொண்டு அமைதி காத்தபடி ஒருவர் மற்றவரை நோக்க நிரன் பேச்சு குரலை வைத்தும் காலின் நிழலை வைத்து இருவர் வெளியே உள்ளதாய் சைகை செய்ய அதே நேரம் மாயமோ மந்திரமோ அந்த இருவரில் ஷரூராவை தலையில் தாக்கிய விஞ்ஞானியும் இருந்தது இவர்களுக்கு தெரியவில்லை...
இருவரும் மெதுவாய் கதவின் இரு புறமும் நின்று கொள்ள லியான் அருகிலிருந்த ஒரு இரும்பு கதிரையிலிருந்து பிடியை உருவி எடுத்து எச்சரிக்கையாய் நின்றபடி நிரனுக்கு தலையசைக்க நிரன் ஒரு பெருமூச்சுடன் கதவின் தாழ்ப்பாளை மெதுவாய் திறந்து விட்டான்...
அடுத்த நொடி கதவை திறந்தபடி அந்த இரு விஞ்ஞானிகளும் உள்ளே நுழைய அதில் முதலில் வந்தவரை நொடிக் கணக்கில் ஷரூராவை தாக்கியவர் என அடையாளம் கண்ட நிரன்...லியான் பின் வந்தவரின் தலையில் மெதுவாய் அடித்து மட்டையாக்கியதுமே கதவை மீண்டும் பூட்டி விட்டு அவன் இரண்டாமவரை தாக்கும் முன் அந்த இரும்பை பிடித்திருந்தான்...
தமிழகம்
ஒரு நொடி மயான அமைதி நிலவிய அந்த அறைக்குள் கண்கள் மூடி முனுமுனுத்து கொண்டிருந்த வேதவள்ளியின் வேண்டுதல் மட்டும் மெல்லிய ஒலியாய் எதிரொலிக்க நகத்தை கடித்து மூச்சை இழுத்து பிடித்திருந்த முபல்லன் கண்கள் பணிக்க ஒரு இமையமலையையே அவனின் முதுகிலிருந்து இறக்கி வைத்தார் போன்ற நிம்மதியுடன் பெருமூச்சு விட்டு தரையில் மண்டியிட்டு விழுந்தான்...
அந்த சத்தத்தின் பின்னே அனைவரும் ஒரு மணி நேரமும் முடிந்ததாய் ஒரு பெரிய மணி அடிக்க அதற்கு முன்னமே வட்ரன் அந்த ரேடாரை தாக்கியதால் மொத்தமும் மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பியது...
பூமியை மொத்தமாய் கவரவிருந்த அந்த விசைகள் மீண்டும் பின் செல்ல இவர்களை சுற்றியிருந்த அனைவரது செயலிகளும் மீண்டும் தன்னாலே உயிர்த்துக் கொண்டது...
அனைவரும் வெற்றியை உணர்ந்து பெருமூச்சு விட முபல்லன் சைத்தான்யாவை கட்டிக் கொண்டு அழுதே விட்டிருந்தான்.. இன்றைய இரவின் அதிசயத்தை தூங்காமல் பார்க்க வேண்டி காத்திருந்த உலக மக்கள் விண்ணை சூழ்ந்த ஊதா நிறம் விரட்டியடிக்கப் பட்டதை கண்டதும் அது ஏன் நடந்தது எவ்வாறு நடந்ததென்றெல்லாம் யோசிக்காமல் சிலர் நேரம் வீணானதென தங்களையும் ஒரு சிலர் இயற்கையையுமே திட்டி கொண்டு உறங்கச் சென்றனர்...
இவர்களின் செயலிகள் உயிர்த்தது தான் தாமதம் நராவின் சிக்னல் டிடெக்ட்டரின் நொடி கூட அடங்காமல் ஏகப்பட்ட சிக்னல்கள் வந்து குவிந்தது... அந்த டீன் டீன் டீன் என்ற ஒலி இடமெங்கிலும் எதிரொலித்தபடியே இருக்க நரா குழப்பமாய் அவை அனைத்தும் நிலவிலிருந்து வந்திருப்பதை கவனித்தாள்...
டிவின் : அது எல்லாம் ஷரூரா அனுப்புனதா தான் இருக்கனும் என்ற யோசனையோடு சற்றே மனபாரம் இறங்கிய உணர்வுடன் இவன் கதிரையில் சாய்ந்தான்...
ஃத்வருண் : டேய் வியோனார பத்தி என்ன டா தெரியும் உனக்கு.... அங்க வேற ப்ராப்லம்னு சொன்ன...
டிவின் : டேய் அத விடு... ஹே சத்யா நீ லியானோட ட்வின்னாமே டா உனக்கு தெரியுமா என அதிர்ச்சிகரமாய் வினவிவிட்டு அஜிம்சனாவிடமும் அவன் கேட்க வரும் முன்
அஜிம்சனா : அதெல்லாம் தெரியும் அண்ணா... நா அவங்க தங்கச்சின்னும் தான்...ஆனா உனக்கெப்டி இதெல்லாம் தெரியும்... நிரனா சொன்னான்? என சந்தேகமாய் வினவ டிவின் இவர்களுக்கு எப்படி தெரியவந்ததென ஆச்சர்யத்தோடே தலையாட்டினான்...
லியானும் சத்யனும் இரட்டையர்கள் என்ற புதிய தகவலை முபல்லன் சற்றே குழப்பமாய் ஜீரனித்து கொண்டிருந்த போதே இன்னுமோர் அதிர்ச்சியை அவனது வரிசைபட்டியில் ஏற்றி விட்டான் ஷ்ரவன்..
ஷ்ரவன் : அப்போ அந்த எருமைக்கு மெடர் அண் மார்ன் தான் இவனுங்ளோட அம்மா அப்பாங்குரதுலேந்து எல்லாமே முன்னாடியே தெரிஞ்சிர்க்கு அதான என கையின் மடிப்பை ஏற்றி விட்டபடி கோவமாய் கேட்க மெடர் மற்றும் மார்னின் பிள்ளைகள் என்பதை தேட்டதும் முபல்லனின் முகத்தில் ஈயே ஆடவில்லை...
ஒவ்வொரு முறையும் லியானை பார்க்கும் போது மெடரின் நியாபகம் வந்து வந்து செல்வதாகவும் அவளுக்கும் மேலாக இவன் அதிபுத்திசாலியாய் இருக்கிறான் என கூறி கூறி புலம்பிய அவனின் தந்தை கார்மனின் புலம்பல்களை இவன் கவனிக்காமலில்லை...
இவ்விருவரே மார்ன் மற்றும் மெடரின் குழந்தைகளென்றால் தங்களின் தந்தைகள் கொன்ற இரு குழந்தைகள் யாரென்ற குழப்பத்தோடு முபல்லன் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாதிருக்க மெடர் என்ற பெயரை கேட்டதுமே வேதவள்ளி உறைந்து போயிருந்தார்...
அவரும் அறிவாரே... மெடர் என்ற பெண்ணின் வாழ்வையே தன் கணவரும் அவரின் சகோதரரும் சீரழித்து அவள் குடும்பத்தையே அழித்து விட்டு அவளை வைத்தே தொழிலில் முன்னேற்றம் கண்டனர் என்பது... முகம் தெரியாத அப்பெண்ணிடம் இன்று வரை அவர் மானசீகமாய் மன்னிப்பு வேண்டாத நாளே இல்லை...
ஆனால் மற்றவர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்னவோ அந்த அறையில் ஓட்டமும் நடையுமாய் நுழைந்து விட்டு இந்த புதிய செய்தியை கேட்டு அதிர்ந்து நின்ற தேவா மற்றும் அன்பரசி தம்பதியினரின் விம்பங்களே...
அன்பரசி கண்ணீர் மழ்க சத்யாவை பார்க்க அவனுக்கு அவரின் அப்பார்வையின் அர்த்தம் பூரியா விட்டாலும் அவனை வேகமாய் சென்று அணைத்து கொண்டார் அன்பரசி...
அன்பரசி : சத்யா...சத்யா நீ தானா... உன்ன இத்தன வர்ஷமா பக்கத்துலையே வச்சிட்டு தான் இறந்துட்டன்னு தப்பா நெனச்சிட்டு இருந்தனா... ஹையோ சத்யா என்ன மன்னிச்சிடு டா...
சத்யா : அம்மா... என்னாச்சு என்ன சொல்லவரீங்க..
அன்பரசி : உன் அம்மாக்கு செஞ்சு குடுத்த சத்தியத்த என்னால காப்பாத்த முடியல சத்யா... நா உன்ன இழந்துட்டேன்... நீ தான் சத்யான்னே எனக்கு தெரியல டா... என அவர் கதறி கதறி அழ அப்போதே நம் நாயகர்கள் அனைவருக்கும் அந்த டாக்குமென்ட்டில் சத்யனை பூமியில் அன்பரசியிடம் ஒப்படைத்ததாய் இருந்த வாக்கியத்தை நினைவு கூர்ந்தனர்...
அஜிம்சனா : அம்மா ப்லீஸ்... இதுல உங்க மேல எந்த தப்புமே இல்ல... அவன அம்மா அப்பா அவசரத்துல உங்க கிட்ட சேக்காம விட்டுட்டாங்க... அதனால தான் உங்களால அவன கண்டுப்புடிக்க முடியல என அவள் அவரை தேற்ற முயல அதை ஒரு சில நொடிக்கு பின்னே நன்கு புரிந்து கொண்ட அன்பரசி...
அன்பரசி : கண்ணா...நீ தான் என் சுகன்யாவோட பொண்ணா...அவ இறக்குரதுக்கு முன்னாடி எங்கையோ கண் காணாத இடத்துல விட்டுட்டு ... பொண் கொழந்தை என அவர் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் அவளை பிடிக்க அஜிம்சனா பதிலளிக்க ஒரு நொடி தயங்கினாள் என்பது உண்மை தான்... ஆனால் அவளின் அண்ணன் இம்முறை தயங்கி நிற்கவில்லை...
சத்யா : ஆமாம்மா... இவ தான் எங்க தங்கச்சி... லியானுக்கும் எனக்கும் அப்ரமா பொறந்த தங்கச்சி...
அன்பரசி லியான் என்றதும் இன்னும் அதிர்ச்சியாக தாரா அவரின் தோளில் கை வைத்து " நீங்க இறந்துட்டதா நினைச்ச சாகித்யன் தான் அத்தமா லியான் " என கண்ணீர் கடந்த புன்னகையுடன் கூற தேவா மற்றும் தம்பதியினர் இத்துனை வருடமும் குழந்தைகளை அருகிலே வைத்து கொண்டு அவர்களை அடையாளங்காண இயலாத அவர்களின் இயலாமையை எண்ணி உள்ளம் மருகினர்...
லியான் மற்றும் சத்யா என்ன தான் அவர்களின் தந்தை மார்னை அச்சில் வார்த்தார் போல அவரின் கலர் ஜெராக்ஸுகளாய் பிறந்திருந்தாலும் அன்பரசி மற்றும் தேவா மார்னை ஒரு முறையும் நேரில் கண்டதில்லை... அஜிம்சனாவோ மெடரின் முக ஜாடையின்றி அவளின் கண்களை மட்டும் பெற்றுக் கொண்டு பிறந்திருந்தாள்...
டிவின் : தேவாப்பா... மெடர் அண் மார்ன்க்கு என்ன ஆச்சு.. அவங்க ஏன் அவங்களோடு மூணு புள்ளைங்களையும் இப்டி தனித்தனியா பிரிச்சு வச்சிட்டு போனாங்க... என்ன தான் ஆச்சு ... அவங்க உண்மையாவே யாரு???
தேவா : எல்லாத்தையும் சொல்ல வேண்டிய காலமே வந்துடுச்சு கண்ணா... சுகன்யா அதான் மெடர் அங்க அம்மாவோட பால்யஸ்நேகிதி... என அங்கே இவர் கூறத் தொடங்கிய அதே நேரம் நிலவில் நிரன் மற்றும் லியான் அந்த விஞ்ஞானியை மிரட்டி உருட்டி ஷரூராவை அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டுப்பிடித்திருந்தனர்...
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே.... ரொம்பவே லேட்டான யூடி இல்லையா... ஹ்ம்ம்ம்ம் ஓக்கே நெக்ஸ்ட் யூடி நாளைக்கு போடப்படும்... நீங்களும் நம்ம மெடர் அண் மார்ன் பத்தி தெரிஞ்சிக்கப் போறீங்க... ஏன் நானுமே இனிமே தான் சில விஷயங்கள தெரிஞ்சிக்கப் போறேன்... ஹிஹிஹி ஓக்கே இதயங்களே... நா நாளைக்கு கண்டிப்பா யூடி போட ட்ரை பன்றேன்... உங்க தாட்ஸ ஷர் பண்ணுங்க... கதையோட ட்ரக் ஓக்கேவா... எல்லாரும் ஆரம்பத்துல லவ் கேட்டீங்க தான்... ஆனா எங்க இதுவும் கொஞ்சம் பரபரன்னு போற மாரி தான் இருக்கு... முடிஞ்சளவு அங்க இங்கன்னு தான் லவ் காமிக்க முடிஞ்சது... சோ அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க... ஹ்ம்ம்ம் ஓக்கே குட் நைட்... டாட்டா...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro