தேடல் - 50
நிலவு
நண்பர்கள் இருவரும் அதிர்ச்சியில் சிலையாய் குரோபடரான் ராஜாவை பார்க்க நிரனுக்கு வந்த கோவத்தில் எம்பிச் சென்று குரோபடரான் ராஜாவின் கழுத்தை பிடிக்க... நிரனை இன்று அதிக கோபத்தில் கண்டதாலோ என்னவோ வீரர்கள் எவரும் அவனை தடுக்க ஓரடியும் எடுத்து முன் வைக்கவில்லை...
நிரன் : அந்த பொண்ணு உங்களுக்கு என்ன பாவம் செஞ்சா... உங்க தன்னலத்த மட்டும் விடவே மாட்டீங்களா... உங்க புத்துக்கு உரைக்கிதா இல்லையா கிங்.. அந்த பொண்ணுக்கு என்ன பத்தி எதுவுமே தெரியாது... அவள ஏன் நீங்க புடிச்சீங்க..
குரோபடரான் : ப்ரின்ஸ்... நா செஞ்சதுல எந்த தப்பும் இல்ல... நீங்க என் பக்கத்துலேந்தும் யோசிங்க...
நிரன் : எனக்கும் எல்லா பக்கத்துலேந்தும் யோசிக்கனும்னு தெரியும்... ஆனா நீங்க இப்போ செஞ்சிருக்க காரியம் எந்த விதத்துல பாத்தாலும் தப்பு தான்... ஒரு அப்பாவி உயிர எடுக்க உங்களுக்கு யாரு அனுமதி கொடுத்தா... அவள தண்டிக்க உங்களுக்கு யாரி உரிமை கொடுத்தது...
குரோபடரான் : உங்கள பத்தி கேட்டப்போ அந்த பொண்ணு சொல்லீருந்தா இவ்ளோவும் நடந்துருக்காது ப்ரின்ஸ்...
நிரன் : யோவ் உனக்கு புரியிதா இல்லையா.. நா எங்க இருக்கன்னு அவ சொல்லி உனக்கு தெரிஞ்சிட்டா நீ என்ன உன் வழிக்கு கொண்டு வர்ரதுக்காக சித்திரவதை பண்ணி கொன்னாலும் கொன்னுடுவன்னு தெரிஞ்சு எப்டி என்ன பத்தி சொல்லுவா என மீண்டும் மீண்டும் அவர் தன்னை நியாயப்படுத்துவதை போலவே பேசியதில் கோவத்தின் எல்லையை தாண்டி அவரை அழுந்த கீழே தள்ளினான்...
சில வீரர்கள் ஓடி வந்து குரோபடரான் ராஜாவை தூக்க அவர் நடந்ததை சற்றும் நம்ப இயலாமல் நிரனை விழி விரிய நோக்கிக் கொண்டிருந்தார்... உண்மை தான்... அவர் நிரனை உயிர் போகும் அளவிற்கு சித்திரவதை செய்திருக்கிறார்...ஒரு முறை அல்ல இரு முறை சித்திரவதை செய்து படுத்து படுக்கையாக்கினார்... அதில் நிரனை மட்டுமல்லாது அவனின் சரியாதியையும் அத்துனை வலியையும் வேண்டுமென்றே அனுபவிக்க வைத்தார்... அவனின் குடும்பத்தையே அழித்து விடுவேனென மிரட்டியிருக்கிறார்... இவ்வாறு இவர் செய்த பாவங்களில் ஒரு முறை கூட அவன் அவரை மரியாதை குறைவாய் ஒரு வார்த்தை பேசியதில்லை... ஆனால் தன் தவறே இல்லை என அவர் தீர்மானமாய் எண்ணும் ஒரு காரியத்திற்கு நிரன் அவரை நொடியில் தரமட்டமாக்கியது ஒரு உயிர் போகத் தான் காரணமாக இருந்து விட்டோம் என்பதை புத்திக்கு உரைத்துக் கூறியது...
இன்னமும் லியான் அவரை வெறுப்பு நிறைந்த கண்களோடு ஓரசைவுமின்றி பார்த்திருக்க அவனை இழுத்து கொண்டு அங்கிருந்து வேறெங்கோ விரைந்தான் நிரன்...லியானின் தலை அங்கிருந்து மறையும் வரை அவனின் சுட்டெரிக்கும் பார்வை அவர் மீதே படிந்திருக்க அப்பார்யில் கூனிக் குறுகி தலை குனிந்தார் குரோபடரான்.
தமிழகம்
அனைவரும் பரபரப்பின் உட்சியில் பல்லையும் நகத்தையும் மாற்றி மாற்றி கடித்து கொண்டிருக்க யாரியின் முறைப்பில் எழுந்து எழுந்து ஓடப் பார்த்த முபல்லனை ஒரு வழியாக பிடித்து அமர வைத்து விட்டு யாரிரை உறங்க வைத்திருந்தாள் அஜிம்சனா..
இவர்கள் வட்ரனை ஏவி சரியாக ஒரு மணி நேரம் கடந்திருந்தது... இன்னமும் ஒரு மணி நேரமே மீதி இருக்க செய்வதறியாது படபடத்து கொண்டிருந்தவர்களுள் சீரிக் கொண்டு எழுந்த ராவனா " கய்ஸ் வட்ரன் ஃப்லக் ஹோல்.. சை இல்ல வொய்ட் ஹோல தாண்டீடுச்சு " என உரக்கக் கத்தினாள்...
அனைவருமே அவளை நம்ப முடியாமல் பார்க்க வட்ரன் வெறும் ஒரு மணி நேரத்தில் இத்துனை கோடி லைட் இயர்களை தாண்டுமென அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை... இவர்களின் கணக்கை படி பாதி தூரம் கடக்கவே இரண்டு மணி நேரம் எடுத்திருக்கும் ஆனால் வட்ரன் இரு மடங்கு அப்டேட் செய்யப்பட்டிருப்பதால் அதன் வேகம் ஒளியின் அளவை அடைந்திருந்தது...
முபல்லன் : ஒன் ஹவர்லையே ஹாஃப் ஆஃப் தி டிஸ்டன்ஸ் கட்ச் அப் ஆய்டுச்சுன்னா அடுத்த ஒன் ஹவர்குள்ளையே வட்ரன் மெடர்மானையும் ரீச் பண்ணீடும்...
சக்தி : அப்டி பாத்தா நமக்கு சான்ஸஸ் ரொம்ப அதிகமா இருக்கு...
ஃத்வருண் : ஒரு ஒரு ப்ராப்லம் தான்... வட்ரன் ப்லக் ஹோல தாண்ட சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கு...அப்போ மெடர்மான ரீச் பண்ணவும் கரெக்ட்டா ஒன் ஹவர் ஆகும்... ஆனா மெடர்மான் உள்ள அந்த ரேடார ரீச் பன்றதுக்கு இன்னும் கரெக்ட்டா 9 மினிட்ஸ் 25 செக்கெண்ட்ஸ் எடுக்கும்...
ஆர்வின் : நாம இந்த நைன் மினிட்ஸ் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ளையே ரேடார டெமாலிஷ் பண்ணியாகனும்... இல்லனா ப்லக் ஹோலோட ரேஸ் முழுசா நம்ம மேல படர்ந்திடும்... அப்டி மட்டும் ஆய்டுச்சுன்னா நம்ம கிரகங்கள் இழுக்க மட்டும் படாம இருக்குர மொத்த மின்சார சக்தியும் செயலிழந்துடும்...
டிவின் : அப்டீன்னா வட்ரன் பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே மெடர்மான ரீச் பண்ணியாகனும்... அப்டி நடந்தா மட்டும் தான் இப்போ நமக்கு இருக்குர மீதி ஒரு மணி நேரத்துல நம்மளால மூணு கிரகத்தையும் காப்பாத்த முடியும்...
அனாமிக்கா : இங்க ப்ராப்லமே அத எப்டி பன்றது... போன முறை மாரி வட்ரனோட ஸ்பீட யாராலையும் போய் இன்க்ரீஸ் பண்ண முடியாது....
முபல்லன் : ஸ்பேஸ் வரைக்கும் ஏன் போகனும்... வட்ரனோட மொத்த கன்ட்ரோலும் லியானோட லப்டாப்ல இருக்குமே... ஐ கன் பீ ஷ்யுர் அபௌட் டெல்லிங் திஸ்... லியான் அவனோட லப்டாப்ப உங்க கிட்ட விட்டுட்டு போய்ர்க்கான்னா அது ஆபத்துல உதவுரதுக்காக மட்டும் தான் இருக்கும்... வட்ரனோட கேஸ்ல நடக்கவே நடக்காதுங்குரதையும் நம்மளால நடத்தி காட்ட முடியும்...
முபல்லனையும் குறைத்து கூறி விட முடியாது... அவனினௌ அறிவியல் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் எந்த கிரகத்திலும் இல்லை... இவர்களின் உரையாடலில் தன்னிடமிருந்த மடிக்கணினியை அமைதியாய் உறுத்து நோக்கிக் கொண்டிருந்த தாரா திடீரென ஏதோ நினைவு வந்தவளாக வட்ரன் 4.0 என தானாகவே சேமிக்கப் பட்டிருந்த பக்கத்தை தேடத் தொடங்கினாள்...
ஒரு சில நிமிடங்கள் களித்தும் அது பார்வையில் அகப்படாமலே இருக்க அதை ஓரமாய் வைத்து விட்டு வேகமாய் தன் அறையை நோக்கி ஓடினாள்...
மற்றவர்கள் அவளை வித்யாசமாய் பார்க்க ஃத்வருண் மெதுமெதுவாய் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தான்...
ஃத்வருண் : இது இப்டியே போனா நல்லதுல போய் முடியுமான்னே எனக்குத் தெரியல டா... எனக்கு என்ன செய்ய ஏது செய்யன்னே தெரியல... ஒருவேளை நம்ம கணிப்பு மட்டும் சரியா நடக்கலன்னா கோடி கோடியா இறக்கப் போற உயிர்கள காப்பாத்த முடியாத இயலாமைக்கு நாம ஆளாகிடுவோம் என அவன் தலையை பிடித்த படி புலம்ப இவனுக்கு மேலாக முபல்லனின் முகம் கடக்கும் ஒவேவொரு நொடிக்கும் கருத்து கொண்டே போனது...
மீரா : அண்ணா ப்லீஸ்... நீ புலம்புனா உன் கஷ்டம் தீராது... உன்னோட குழப்பம் அதிகரிக்க மட்டும் தான் செய்யும்... நீயே உன்னோட முயற்சிலேந்து பின் வாங்குனா நாங்களாம் என்ன டா செய்வோம்....
அவனும் என்ன செய்வான்.. பெரும்பாலும் இவர்களின் வாழ்கையில் நடந்த பேரிழப்பினால் அவர்களின் வாழ்கை முதல் குணம் வரை அனைத்தும் தலை கீழாகியிருந்தது... ஒரு விஷயத்தை பிடித்து விட்டால் அதை குட்டி கரணமடித்தாவது பெற்றுக் கொள்ளும் தாராவிற்கோ அடம்பிடித்து அவளின் காதலன் உயிரோடு தான் இருக்கிறான் என்பதை மற்றவர்களிடத்தில் நிரூபிக்கத் தெரியவில்லை... பட்டாம்பூச்சியென சிறகடித்து பறந்த அரானா தன் பழைய சிரிப்பை ஒரு முறையேனும் இப்போதும் மீண்டும் கொணர வலு அமையவில்லை... எதையும் விளையாட்டாய் எடுத்து கொள்ளும் டிவினுக்கு லியானை கண்ட போது அவனால் இவர்கள் அனுபவித்த எதுவும் விளையாட்டாய் தெரியவில்லை... கண்ணீர் சிந்தி பழகிடாமல் பலர் பார்த்து பெருமை படும் ஒரு கடுங்கோப வக்கீலாய் சுற்றித்திரிந்த சத்யாவிற்கு லியான் தன் சகோதரன் என தெரிந்த போது உடைந்து போவதைத் தவிர்த்து வேறெந்த வாய்ப்பும் இருக்கவில்லை... எதிலும் தன் முழு முயற்சியையும் கொடுத்து முடித்து விட்டே மறுவேலை பார்க்கும் ஃத்வருணிற்கு இப்போது அவன் மீதே நம்பிக்கை வரவில்லை...
மீனா : வெற்றியோ தோல்வியோ அத நீ சொல்ற மாரி நம்மளோட முயற்சிய எடுத்துட்டு சந்திச்சிக்களாம்.. எந்திரி அண்ணா
மீரா : உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லனாலும் எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு... உடஞ்சு போய் மூலைல முடங்குனா மட்டும் எதுவும் திரும்ப மாறீடாது.... நாம தான் முயற்சி எடுக்கனும் அண்ணா...
தன் கரத்தை பிடித்திருக்கும் மீராவின் கரத்தை இறுக்கி பிடித்த ஃத்வருண் அவளை மெதுவாய் ஏறிட தனக்கு தன் மீதில்லாத நம்பிக்கை தன் மீது இவள் வைத்திருக்கிறாளே என ஒரு நிமிடம் அதியசத்துத் தான் பார்த்தது அவன் மனம்...
தன்னை தேற்ற எண்ணும் இருவரையும் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்த ஃத்வருண் ஒரு புது நம்பிக்கையுடன் எழவும் சரியாக அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் வைத்திருந்த லியானின் வாட்சோடு அந்த அறைக்குள் விரைந்து வந்தாள் தாரா...
தாரா எண்ணியதை போலவே லியானின் அந்த டெக்கரானிக் வாட்சும் செயல் இழந்து தான் இருந்தது... அதை அப்படியே விட்டு விட்டால் அவள் தாரா இல்லையே... ஒரு முடிவுடனே அந்த கடிகாரத்தை எடுத்திருந்தவள் அது ஐந்து வருடத்திற்கும் மேலாக சரியாக உபயோகிக்கப் படாது அவள் செய்யப் போகும் காரியத்தினால் யூனிட் பவர் அதிகரித்து அது வெடித்தாலும் ஆச்சர்யத்திற்கில்லை என்பதை அறிந்தும் எந்த ஒரு தயக்கமும் இன்றி லியானின் மடிக்கணினியோட அந்த கடிகாரத்தை இணைக்க முற்பட்டாள்...
அதை எதற்சையாய் கண்ட ராவனா லியானின் கடிகாரத்தை பிடுங்கினாள்... தன்னை தடுக்கப் பார்க்கிறாளென கத்த வந்த தாரா அவள் செய்த செயலில் அவளை நிமிர்ந்து நோக்கினாள்...
ராவனா " இப்போ நீ செய்ய நெனைக்கிறத செய்... கண்டிப்பா லியான் வாட்சுக்கு ஒன்னுமே ஆகாது " என உறுதியளித்து முன்பே செயலிழந்திருந்த தனது கடிகாரத்தோடு லியானின் கடிகாரத்தோடு இணைத்து கொடுத்தாள்...
அதை வாங்கிய தாரா ஒரு பெருமூச்சோடு லியானின் மடிக்கணினியோடு இணைக்க ராவனாவின் சொல்லினால் அனைவரும் சற்று தள்ளி அமர தாரா அடுத்த நொடியே அவள் அமர்ந்திருந்த மெத்தை மீது சாய அவளுக்கு முன் இருந்த மேஜையில் வைக்கப்பட்டிருந்த இரு கடிகாரங்களும் படார் படாரென வெடித்து சிதறியது...
தேடல் தொடரும்...
ஹலோ இதயங்களே... எல்லாரும் எப்டி இருக்கீங்க.. நான் நல்லா இருக்கேன்... மறுநாளே வந்துருக்க வேண்டிய யூடி ரொம்ப காலதாமதமாகீடுச்சு... ஹிஹிஹி சாரிங்க இதயங்களே... மைண் வேற சரியில்ல... சும்மாவே நா சுமாரா தான் எழுதுவேன்... மைண் சரியில்லாதப்போ எழுதுனா சுத்தம்.... இப்போவே எப்டி இருக்குன்னு தெரியலங்கோ... ரமதான் மாதம் ஆரம்பிச்சிடுச்சு.... போன வர்ஷம் நடுராத்திரி யூடி எழுதி போட்டுட்டு இருந்தேன்...இப்போ எங்க மம்மி என்ன முளிச்சிருக்க விட மாற்றாங்க... அதான் நைட்டும் எழுத முடியல... டைம் கிடைக்கிறப்போ தான் போட முடியும்... பொருத்துக்கோங்க சரியா... ஓக்கே அடுத்த யூடி இதே மாரி எதிர்பார்க்காத நேரம் வரும்... அப்போ பாப்போம்... குட் நைட்... டாட்டா
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro