Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 49

தமிழகம்

தாரா : டேய் அண்ணா உனக்காவது அந்த மூணாவது ரேடாரோட லொக்கேஷன் தெரியுமா...

டிவின் : எனக்கும் தெரியாது தாராமா.. நம்ம பூமியோட டெக்னாலஜிய மட்டுமே வச்சு எங்களால வியோனார கண்டுப்புடிக்க முடியாது... வியோனார் வேற ஒரு கலெக்ஸில இருக்கு... மெடர்மானோட பவரும் வேணும்... வேற வழியே இல்ல...

தில்வியா : ஏதோ ஒரு பொண்ணு நிலால மாட்டிக்கிட்டான்னு சொன்னியே அவ யாரு...

டிவின் : அவளும் வியோனார சேந்தவ தான்.. பேரு ஷரூரா.. என அதற்கு மேல் அவன் கூறவில்லை... ஏனெனில் இதற்கு மேல் அவளை பற்றி ஏதேனும் நினைவில் கொண்டு மீண்டும் கோவத்தில் முபல்லனை தாக்கி விடுவோமோ என்ற பயம் அவனுக்கு..

ஆனால் அவன் கூறிய அங்கிருந்த வேறொருவனின் மனதை சற்றே அசைத்திருந்தது... அப்பெயரை கேட்டதும் எதற்சையாய் நிமிர்ந்தவனின் முன் மீரா அமர்ந்திருக்க அவளின் முகத்தில் தெரிந்த குழப்பம் ஏதோ ஒரு வகையில் இவனின் மனதை வாட்டியது...

ஷரூரா என்ற பெயரை கேட்டதுமே அஜிம்சனாவும் நிமிர்ந்து டிவினை நோக்க அவளின் கண்கள் ஏதோ இலக்கில்லா ஓரிடத்தில் நிலைத்து விட்டு மீண்டும் மடிக்கணினிக்குள் பதிந்தது... கண்களை உயர்த்தி குரலை சரி செய்த ஃத்வருண்

ஃத்வருண் : ஓக்கே லிசென் த ப்லன்... நாம மொதல்ல மெடர்மான்ல உள்ள ரேடார டிமான்ஸ்ற்றேட் பண்ண போறேன்... அதே பவர் தான் பூமில இருக்கு... பூமிக்கு கிட்டயே வட்ரன் இருக்குரதால பூமில உள்ளத கூட அழிக்கலாம்.. இரெண்டுத்துல எத அழிச்சாலுமே பவர் போகும்... ஆனா மெடர்மான்ல உள்ளத அழிச்சா மட்டும் தான் மெடர்மானோட எலெக்ற்றானிக் பவர்ஸ் திரும்ப வரும்... இப்போ வட்ரனும் நல்லா இருக்குரது தெரிஞ்சிடுச்சு... சோ உடனே முதல் வேலையா நாம வட்ரன நம்ம கன்ற்றோலுக்கு கொண்டு வரனும் என தாராவை பார்க்க அமோதித்து தலையசைத்த தாரா லியானின் மடிக்கணினியில் தன் கரத்தை பதித்து வேலையை தொடங்கினாள்...

இடையிலே வட்ரனின் வேகம் யூனிட் பவர் என அனைத்தும் மாற்றம் கண்டிருப்பதையும் அவை அனைத்தும் உயர்ந்திருப்பதையும் காண்கையில் லியான் உயிருடன் இருக்க வாய்ப்புகள் அதிகமாகவே தெரிந்தது அவளுக்கு...

ஆர்வின் : மித்ரான் டிவின் இப்போ நீங்க இரெண்டு பேரும் அந்த ரேடாருக்கும் வட்ரனுக்கும் இடைல உள்ள எல்லா விஷயத்தையும் தள்ளி வைக்க போறீங்க... அந்த ரேஸ் பூமி மேல படுரதுக்கு இன்னும் இரெண்டேகால் மணி நேரம் தான் இருக்கு... சீக்கிரம்...

மித்ரான் மற்றும் டிவின் உடனே வட்ரன் அனுப்பப்படப் போகும் பாதைகளை கவனிக்கத் தொடங்கினர்... இவர்களின் கணிப்புப் படி பார்த்தால் மெடர்மானை சாதாரணமாய் ஒரு ஸ்பேஷிப்பில் சென்றடைய ஏறகுறைய பல வருடங்கள் ஆகும்... அப்படியிருக்க வட்ரன் அதன் சிறந்த வேகத்தில் சென்றடைய குறைந்ததேனும் பத்திலிருந்து பனிரெண்டு மணி நேரங்களாகும்... வட்ரனை உபயோகிப்பதை விடுத்து இவர்களுக்கு வேறு வழியுமே இல்லை என்பதால் அறிந்தே விஷப்பரிட்சையில் கால் வைத்தனர்...

தாரா : அண்ணா... நா இத சொன்னா நம்ப மாட்டீங்க... ஆனா வட்ரன் மாடிஃபை ஆகியிருக்கு... வட்ரன் முன்ன விட இப்போ இரெண்டு மடங்கு பவர்ஃபுலா இருக்கு... ஐ ரியலோ டோன்ட் நோ ஹவ்... வட்ரன் 2 ஆ மட்டும் இருந்தது இப்போ வட்ரன் 4. 0 ஆவா இருக்கு... சோ 12 மணி நேரமில்லாம நம்மளால நாழே மணி நேரத்துல மெடர்மான அடைய முடியும்...

அனைவரும் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் இருந்த போது இவ்வளவு நேரமும் குழப்பத்தில் இருந்த சைத்தான்யா

சைத்தான்யா : ஏங்க நமக்கு இன்னும் டைமே இரெண்டு மணி நேரம் முழுசா இல்ல... நாழு மணி நேரத்த குறைக்க முடியாதா என சாதாரணமாய் கேட்க

ரியா : ப்ரோ இங்கேந்து அங்க போக நாழு மணி நேரம் தான் எடுக்கும்னு நாம சந்தோஷப்படனும்...

சைத்தான்யா : ஏன் மா கடல் தாண்டி எங்கையாவது இருக்குதா அந்த இடம் என அப்பாவியாய் கேட்டவனை நோக்கி அனைவரும் கடலத் தாண்டியா என்பதை போல் ஒரு லுக்கு விட அனைவருமே அவனை இப்போது விசித்திரமாய் பார்க்கத் தொடங்கினர்...

முபல்லன் : சைத்தான்யா.. மெடர்மான பத்தி பேசீட்டு இருக்காங்க டா...

சைத்தான்யா : யாரு இல்லன்னா அது இண்டியாலேந்து ரொம்ப தூரமா இருக்கா என இன்னும் அவன் அப்படியே கேட்க வேதவள்ளிக்கு மனம் அப்போதே ஒன்றை எடுத்துரைத்தது...

வேதவள்ளி : கண்ணா... பூமி வியோனார் மாரி மெடர்மானும் ஒரு கிரகம்டா... என்கவும் இப்போது அதிர்ச்சியாக வேண்டியது சைத்தான்யவின் முறையானது... அனைவரும் மெடர்மானை பற்றி உரையாடி கொண்டிருந்த போது சைத்தான்யா மற்றும் யதீஷ் கீழே இருந்ததால் அவன் முன்பு மெடர்மானை பற்றி எதுவும் கேட்டிருக்கவில்லை...

முபல்லன் கூறியதை வைத்து ஏதோ ஒரு தூரத்து நகரம் என்று தான் அவன் யூகித்திருந்தான்... அவனின் மூளையின் ஒரு பகுதியையும் நினைவையும் அவனின் தந்தைகள் அழித்தது இவனின் தவறில்லையே...

யதீஷ் : உங்களுக்கு இது இவ்ளோ நேரத்துல தெரியவே தெரியாதா... என நம்பாமல் கேட்க அனைவரின் பார்வையும் தன் மீதிருப்பதாலோ அல்ல பின்னந்தலையின் அடி ஆழத்தில் சுல்லென எடுத்த வலியினாலோ அவன் தரை மீது பதித்த பார்வையை நகர்த்தவே இல்லை...

முபல்லன் : டேய் தர்மா பரவாயில்ல டா... உனக்கு மெடர்மான் பத்தி நியாபகம் இருக்காது... உனக்கு தெரியலன்னா பிரச்சனை இல்ல...அத பத்தி யோசிக்காத டா என திடீரென அவனின் கரத்தை பிடித்து கூறவும் அந்த திடீர் அழைப்பிலும் அவனின் கண்களில் தேங்கிய கண்ணீரிலும் தலை நிமிர்ந்து நோக்கிய சைத்தான்யா வேறேதுவும் கூறாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்...

சத்யா : உங்க பையனுக்கு என்ன பிரச்சனை அம்மா என சைத்தான்யா சென்ற பாதையை நோக்கியபடி இவன் கேட்க

வேதவள்ளி : பத்து வர்ஷத்துக்கு முன்னாடி வர முபல்லனையும் சைத்தான்யாவையும் நான் ஒன்னா தான் வளத்தேன் ப்பா... ஆனா முபல்லனோட அப்பா முபல்லன மெடர்மானுக்கு அழச்சிட்டு போக வந்தாரு... சைத்தான்யா அதுக்கு ஒத்துக்கல... அதனால அவங்க அப்பா சைத்தான்யாவோட நினைவுலேந்து முபல்லன பத்தி எல்லாத்தையுமே அழிச்சிட்டாரு...அதுக்கப்ரம் சைத்தான்யா ஒரு வர்ஷத்துக்கு அப்ரம் தான் முபல்லன திரும்ப பாத்தான்... அதனால மெடர்மான் பத்தி எதுவும் அவனுக்கு தெரியாது கண்ணா...

முபல்லன் : நா அவன் கூட போறேன் பெரிம்மா என ப்ரஜினை கீழே இறக்கி விட்டுவிட்டு இவன் எழுந்து செல்லவும் ப்ரஜின் தன் விவாதத்தை கேட்கும் அப்பாவி காணுமே என கத்தி அழ முபல்லன் பதறி போய் அவனை திரும்பி பார்க்கவும் சயானா அழகாய் ப்ரஜினை சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்ததை கவனித்தான்...

ஆனால் ப்ரஜினின் அருகிலே அமர்ந்து கொண்டே தன்னை முறைத்து கொண்டிருந்த யாரியை கண்டதும் இவன் தனிச்சையாய் எச்சிலை விழுங்க யாரி அவனை இன்னும் உருத்து முறைக்கத் தொடங்கினாள்...

முபல்லன் பேய் முளி முளிப்பதை கண்டு யதீஷ் வேகமாய் யாரியை தூக்க யாரி இப்போது யதீஷை முறைத்து விட்டு மீண்டும் முபல்லனை முறைக்க திரும்ப முபல்லன் அங்கிருந்து எஸ்ஸாகியிருந்தான்...

மித்ரான் : மச்சான் இப்போ க்லியரா இருக்கு டா என நடந்த களோபரத்தின் பின் இவன் குரல் எடுக்க அனைவரும் அவன் புறம் திரும்பினர்...

இன்னும் சரியாக இரண்டு மணி நேரம் இருக்கையில் தாரா வட்ரனின் முழு கட்டுப்பாட்டை பெற்றிருந்தாள்... அனைவரும் ஒரு நீண்ட பிரார்த்தனையுடன் ஆழ பெருமூச்சு விட்டு விட்டு வெற்றியை நோக்கி அடி எடுத்து வைக்க அதற்கு முதல் புள்ளியாய் வட்ரன் பூமியை விட்டு மறு திசையில் திரும்பியது....

நிலவு

லியான் மற்றும் நிரன் இப்போது தீவிரமாய் குரோபடரான் ராஜாவின்  மாளிகையினுள் நுழைந்து கொண்டிருந்தனர்... ஆராய்ச்சி கூடத்திலே இருந்து ஷரூராவை அந்த மாளிகை முழுவதும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்... ஒரு கட்டத்திற்கு மேல் அதை அப்படியே கை விட்ட நிரன் லியானை அழைத்து கொண்டு நேரடியாய் குரோபடரான் ராஜாவையே பார்க்க முடிவெடுத்து அவனை இழுத்து கொண்டு வந்திருந்தான்...

மனதில் ஒரு பதற்றம் இருந்தாலும் அதை தன் நண்பனுக்காக வெற்றிகரமாய் பூட்டி வைத்து விட்டு வந்தான் அவன்... இவர்ளின் வருகையை குரோபடரான் ராஜாவே எதிர்பார்க்காதிருக்க அவர்களை பிடிக்க வந்த காவலாளிகள் நிரனின் இறுகிய முகத்தை கண்டு தன்னாலே பின் வாங்கினர்... ஏனெனில் அவர்களின் இளவரசன் ராஜாவை தவிர்த்து வேறெவரிடத்திலும் கோவத்தை காட்ட மாட்டான்...

ஆனால் இப்போது அவர்கள் கண் முன் இருக்கும் நிரன் அவன் முன் மூச்சு விட்டாலே கத்தி கிளித்து விட்டுத் தான் மறுவேலை பார்ப்பான் போல என்ற எண்ணத்தை தூண்டுமளவு கொதித்து கொண்டிருந்தான்...

நேராக அந்த அரசவைக்குச் சென்ற நிரனும் லியானும் குரோபடரான் ராஜாவின் சிம்மாசனம் முன்னே நிற்க எங்கோ சென்று விட்டு அப்போதே பல்லை கடித்த படி உள்ளே வந்த குரோபடரான் ராஜா நிரனை கண்டதும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தார்...

குரோபடரான் : ப்ரின்ஸ் நிரன்.. ஒரு வழியா உங்களுக்கு நிலவுக்கு வரனும்னு தோனிடுச்சா... அப்பா நியாபகம் வந்துடுச்சா... வாங்க உள்ள வாங்க என அன்பாய் எப்பொழுதும் போல் வரவேற்க அதை கை நீட்டி நிறுத்திய நிரன்

நிரன் : போதும்... அந்த பொண்ண எங்க வச்சிருக்கீங்க என்ன செஞ்சீங்க அவள...

குரோபடரான் : என்ன பேசுறீங்க நிரன் எந்த பொண்ணு

லியான் : தெரியாத மாரி நடிக்காதீங்க... என் தங்கச்சி எங்க... என அவன் உறுமும் புலியை போல் வினவ லியானை ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு பார்த்த குரோபடரான் ராஜா

குரோபடரான் : தம்பி உன்ன நா இரண்டரை மாசம் (பூமியின் கணக்குப் படி 5 வருடம்) முன்னாடி பாத்தேனே... உனக்கு தங்கச்சி இருக்குரதா நீ சொல்லலையே...

லியான் : நீங்க பாத்தது என் தம்பிய... இப்போ அத கேக்க நா இங்க வரல... என் தங்கச்சி ஷரூரா எங்க... என கேட்டதும் அவரின் முகத்தில் எங்கிருந்தோ திடீரென ஒரு குற்ற உணர்ச்சி வந்து குடி கொண்டது...

குரோபடரான் : ஓஹ் அது உங்க தங்கச்சியா...அந்த பொண்ணுக்கு தலைல அடிப் பட்டுச்சுன்னே ஹாஸ்பிட்டல்ல சேர்க்க சொல்லீருந்தேன் தம்பி... இபோ அங்க தான் போய்ட்டு வந்தேன்... ஆனா அந்த புள்ளைக்கோ ஆக்ஸிஜென் ஒத்துக்கல ... மூச்சு விட கஷ்டப்பட்டுச்சு... எவ்ளோவோ கஷ்டப்பட்டுச்சு ஆனா காப்பாத்த முடியல....

தேடல் தொடரும்...

சப்பா இதுக்கு மேல இன்னைக்கு நோ எனெர்ஜி... நோ ஐடியா... நாளைக்கு யூடியோட வரேங்க இதயங்களே... டாட்டா

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro