Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 48

தமிழகம்

யதீஷ் மற்றும் சைத்தான்யா ஒருவரை ஒருவர் பார்க்காமல் தயங்கியபடி தள்ளி நிற்க ஒரு பெருமூச்சுடன் சைத்தான்யவின் முன் சென்று நின்றாள் ரியா...

ரியா : சைத்தான்யா... எனக்கு தெரியும் நீங்க எங்க மேல கோவமா இருக்கீங்க.. அதுக்கு உங்ககிட்ட வலிடான ரீசன் இருக்கு... ஆனா யதீஷ் மேல எந்த தப்பும் இல்ல சைத்தான்யா... அவருக்கு எங்கள பத்தி அன்னைக்கு என்ன காப்பாத்துர வர எதுவுமே தெரியாது... அவருக்கும் எனக்கும் அதுக்கு முன்னாடி வர எந்த சம்மந்தமும் இல்ல... என்ன காப்பாத்தனும்ங்குர ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அன்னைக்கு உங்கள எதிர்த்தாரு... உங்க அப்பா சாவுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... இந்த ஒரு வர்ஷத்துல அவரு குற்ற உணர்ச்சியில ரொம்பவே கஷ்டப் பட்டுட்டாரு.. ப்லீஸ் அவர புரிஞ்சிக்கோங்க... எங்களையும் முடிஞ்சா மன்னிச்சிடுங்க ... சாரி என இவ்விருவரையும் திரும்பியும் பாராது அவள் மாடிக்குச் செல்ல அவளை பாவமாய் திரும்பி பார்த்த யதீஷ் கண்களில் ஒரு நிம்மதி தெரிந்தது...

சைத்தான்யா : யதீஷ்... ஐம் ரியலி சாரி..

யதீஷ் : ஐயோ உங்க மேல எந்த தப்புமே இல்ல சைத்தான்யா.. நா உங்களுக்கு புரிய வைக்கனும்னு தான் நினைச்சேன்... நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கன்னா எனக்கு அதுவே போதும்

சைத்தான்யா : அதில்ல-

யதீஷ் : ஆமா பத்து நிமிஷத்துல எப்டி சைத்தான்யா இங்க வந்தீங்க.. நீங்க உங்க வீட்லேந்து வந்துருந்தாலும் இல்ல ஆபிஸ்லேந்து வந்துருந்தாலும் ஒரு மணி நேரம் ஆகுமே... கார்லையா வந்தீங்க...

சைத்தான்யா : அது... இது ரேஸ் நடக்குர ஃபீல்டுனு தெரிஞ்சிது யதீஷ்.. இங்க ரேஸ் கார்ஸுக்கு மட்டும் தான் வேகத்துக்கு பர்மிஷன்... சோ ... ரேஸ்ல இருந்த என் ஃப்ரெண்ட் கார்ல வந்தோம்... தோ அங்க நிக்கிதே... என தலையை தேய்த்தபடி கூறினான்...

பத்து நிமிடத்தில் பறந்து வரும் அளவிற்கு என்ன காரடா இருக்கிறதென்பதை போல திரும்பி பார்த்த யதீஷ் வாயிலில் நின்ற ஒரு ரேஸ் காரை கவனித்தான்... அதில் ஓட்டுனர் பகுதியில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் பாதி போட்டியிலிருந்து பாதியிலே வந்ததை போல அந்த காரை உரும விட்டுக் கொண்டு காத்திருந்தவன்
"எஸ்.ஏ.3" என்ற பெயரை யதீஷ் முழுதாய் உச்சரிக்கும் முன் சைத்தான்யவிற்கு ஒரு பார்வையளித்து விட்டு அங்கிருந்து மின்னலென விடைப்பெற்றான்...

மாடியில் அனைவரும் பரபரப்பாய் ஒவ்வொரு வேலையில் மூழ்கியிருக்க முபல்லனை ஓரிடத்தில் அமர வைத்து விட்டு அவன் கூற கூற மித்ரானும் டிவினும் பூமியிலும் மெடர்மானிலும் எவ்விடத்தில் ரேடார் பொருத்தப்பட்டுள்ளதென தேடி அலசி கொண்டிருந்தனர்...

அன்னை வேதவள்ளி பயந்ததை போல அவரின் மகனை அவர்கள் எதுவும் செய்திருக்கவில்லை... அதற்கு பதில் அவனிடம் அவர்களின் குழந்தைகளை ஒப்படைத்திருந்தனர்... முபல்லனுக்கே ஆச்சர்யம் தான்.. ஏனெனில் சயானா அவன் நின்று கொண்டு கட்டிட்டு இத்தனை நாளாய் வாராமலிருந்த அவனின் தலையை ஒரு பொம்மை சீப்பை வைத்து வாரிக் கொண்டிருந்தாள்... ப்ரஜின் அவன் மடியில் அமர்ந்து கொண்டு சத்யா என்றேனும் வாதாடியதை கனவில் பார்த்ததை போல வாயில் ஒரு ஊட்டியை வைத்து கொண்டு இவர்களுக்கு புரியாத அவனின் பாஷையில் யாரிடமோ வாதாடிக் கொண்டிருந்தான்...

யாரி அவனை மதித்தால் தானே... அவள் பாட்டிற்கு அவன் முன் குறுக்கும் நெடுக்கும் ஊரிக் கொண்டிருந்தாள்... சத்யாவின் பார்வை அவ்வப்போது இவர்களிடம் வந்து வந்து செல்ல ப்ரஜினின் விவாதங்களை நீதிபதி கணக்காய் பொருமையாய் கேட்டு கொண்டிருந்த முபல்லன் புதிதாய் தெரிந்தான்...

அரானா : அவர நம்பலாம் சத்யா... உன் மருமகள முறைச்சிட்டு இருக்கன்னு நினைச்சு அவ முறைக்கிறா பாரு உன்ன.. என அவனின் தோளை பற்றி திருப்பி விட அப்போதே யாரி தன்னை முறைத்து கொண்டிருந்ததை கவனித்தான் சத்யா..

அரானா புன்னகையோடு அந்த அறையை விட்டு வெளியேறினாள்... தாராவின் அறையை நோக்கி சென்றவள் கீழே யதீஷ் மற்றும் சைத்தான்யா புன்னகையோடு உரையாடி கொண்டிருப்பதை கண்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்...

இந்த ஒரு வருடத்தில் சைத்தான்யா யதீஷை ஒதுக்கிய போது யதீஷை டவும் மற்றவர்கள் தான் பெருந்துயர் அடைந்திருந்தனர்...

தாரா கூறிய ஏதோ ஒரு சார்ஜரை எடுக்க வந்த அரானா வேறேதோ ஒரு பழகிய ஒலியை கேட்டு திரும்பி பார்க்க அவளின் கண்களிக்கு முன் பாதி மூடப்பட்ட நிலையில் சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது...

நிலவு

நிரன் ஒரு பக்கம் லியான் ஒரு பக்கம் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக ஷரூராவை அந்த முழு கிரகத்திலூம் தேடி கொண்டிருந்தனர்... நொடிகள் கடக்கக் கடக்க லியானின் பொருமை காற்றில் பறக்கத் தொடங்கியது..

லியான் : நிரன் உன் அப்பா மட்டும் என் கண்ல பட்டா இப்போ அவர உண்டு இல்லனு ஆக்கீடுவேன் ... என கோவத்தில் அவன் எல்லையை கடந்ததை உணர்ந்து நிரன் அமைதி காக்க வேலையில் ஒருவரது கவனமாவது இருத்தல் வேண்டுமல்லவா...

லியான் தன் தலைக்கு பின் அந்த நிலவே காதை மூடிக் கொள்ளும் அளவு கத்திக் கொண்டிருந்தாலும் நிரன் தன் காதுகளில் கேட்டு கொண்டிருந்த யாரியின் முதல் சிரிப்பு சத்தத்தில் மட்டும் கவனம் பதித்து எதுவும் நடவாததை போல் அமர்ந்திருந்தான்...

அது அஜிம்சனா அவனுக்களித்த ஒரு எண்ணம் தான்... குரோபடரான் ராஜா இந்த இரண்டு வருடத்தில் காட்டுக் கத்து கத்தும் போதெல்லாம் வேலையில் மட்டும் கவனம் செலுத்த அவனுக்கு தனி இயர் பீஸ் செய்து கொடுத்திருந்தாள்...

அதில் சில நேரம் யாரியின் சிரிப்பும் ஒவ்வொரு முறை அஜிம்சனா அவள் பேசிய சிறு சிறு வார்த்தைகளை தனித் தனியாய் சேகரித்த ரேகார்டுகளும் குழுமியிருந்தது...

லியான் கத்தி கத்தி அவனே சென்று அவன் இருக்கையில் அமர்ந்த போது தீவிரத்தின் பலனாய் " கெடச்சிடுச்சு " என பட்டென எழுந்து நின்றான் நிரன்...

தமிழகம்

ஒரு வழியாக மெடர்மானில் உள்ள ரேடார் பூமியை போலவே ஒரு வெட்டவளியான பகுதியில் ஆழப் புதைந்திருப்பதை மித்ரான் கண்டுப்புடிக்க அதிலும் பூமியில் உள்ள ரேடாரிலும் ஒரே சக்தி தான் இருக்கிறதென்று முபல்லனை வைத்து அறிந்து கொண்டவர்கள் மெடர்மானில் உள்ள ரேடாரை தான் அழித்தாக வேண்டுமென்ற முடிவுக்கு வந்தனர்...

ரியா : முபல்லன் ஆர் யு ஷ்யுர்... இப்போ எதாவது வச்சு அந்த ரேடார அழிக்கிறதால அது ப்லஸ்ட் ஆகாது இல்லையா...

முபல்லன் : அது ப்லஸ்ட் ஆகாது மா.. அந்தளவுக்கு அதுக்கு பவரில்ல...

சத்யா : பவரில்லாததால தான் கிரகத்தையே இப்போ சாவுக்கிட்ட அழச்சிட்டு போய்ட்டு இருக்குதோ என முனுமுனுத்தாலும் முபல்லனுக்கு அது தெளிவாகவே கேட்டது...

தாரா : சத்யா சும்மா இரு... முபல்லன் இந்த ஃபீல்ட சுத்தி மூணாவது ரேடார நீங்க வைக்கிலல்ல...

முபல்லன் : இல்லங்க மூணாவது ரேடாரும் அங்க தான் இருக்கு...

டிவின் : தாராமா... அவன் மூணாவது ரேடார் பத்தி எது சொன்னாலும் நீ காதுல வாங்கிக்காத... அது இருக்க வேண்டிய இடத்துல இருக்கு... இது இரெண்ட முதல்ல முடிக்கனும் நாம என டிவின் உறுதியாய் கூறியதும் முபல்லனின் குழப்பத்தை ரேகை படர்ந்த முகத்தை கண்ட தாரா தன் தமையன் கூறியதையே செயல் படுத்தினாள்...

ஸ்வத்தி : ஏ நரா... எனக்கு சிக்னல் தப்பாவே வந்துக்குட்டு இருக்கு டி.. மெடர்மான் டெக்னாலஜி எங்கையுமே வொர்க் ஆகல...ஆனா எனக்கு இந்த சிக்னல் டிடெக்ட்டார் ஏதோ ஒன்னு பூமிய சுத்தீட்டு இருக்குன்னு சொன்னதையே சொல்லி கடுப்படிச்சிட்டு இருக்கு என அலுப்போடு நராவை அழைக்க இவ்வாறெல்லாம் நடக்காதே என்ற குழப்பத்தோடு எழுந்து வந்த நரா அவளும் அந்த சிக்னலை கவனிக்க தொடங்கினாள்...

ஷ்ரவன் : எதாவது சட்டிலைட்டா இருக்கும்... அதான் நூறு நூத்தம்பது சட்டிலைட் இருக்கே பூமிய சுத்தி...

அனாமிக்கா : அப்டி பாத்தா அது பூமியோட டெக்னோன்னு தெரிஞ்சிற்குமே... ஆனா அது இல்லையே

நரா : இது எங்கையோ நா நல்லா கேட்ட சிக்னல் மாறி இருக்கு.. ஆனா என்னன்னு தான் தெரியல... கொஞ்சம்கேட்ட மாரி இருக்கு... கொஞ்சம் கேக்காத மாரியும் இருக்கு...

மீனா : ஏன் டி நீ அஞ்சாறு வர்ஷமா எத்தனையோ சிக்னல கேற்றுக்க.. இது எப்டி உனக்கு நல்லா கேட்டதா இருக்கும்...

இதற்கு இடையில் தாராவும் இவர்கள் எதை பற்றி பேசுகின்றனர் என குழப்பத்தில் ஆர்வினின் மடிக்கணினியை நோக்க பூமியை மெல்லிய கோடாய் ஒரு பச்சை கதிர் சூழ்ந்திருப்பதை கண்டு " ஹே இது ஏதோ பச்சை கலர் ரேஸா இருக்கு " என இடையில் குரல் கொடுத்தாள்...

நரா : இல்ல டி எனக்கு தெரியும் நிறையவே கேட்ட சிக்னல் தான் இது என சிந்திக்க சிந்திக்க பல சிக்னல்களும் கருவிகளும் வந்து சென்றது அவளது நினைவில்...

இதன் இடையில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஐந்து வருடங்கள் முன்பு வட்ரனை முதல் முறையாய் பூமிக்கு ஏவும் முன்பாக லியான் பரிசோதித்து கொண்டிருந்த போது அதன் ஒவ்வொரு அசைவையும் சிக்னல் மூலமாக தினம் அவள் கண்காணித்த அந்த நினைவும் முதல் முறை பூமியை சுற்றிய வட்ரனை பச்சை நிற கதிர்களாகத் தான் தாரா கண்டுப்பிடித்தாள் என்பதையும் கருத்தில் கொண்டு இப்போது அவள் கூறியதும் நினைவில் வந்து செல்ல இவள் அதிர்ச்சியோடு " இது வட்ரன் " என கத்தவும் அதே நேரம் அரானா லியானின் மடிட்கணினியோடு " வட்ரன் இன்னும் ஸ்பேஸ்ல அக்டிவா தான் இருக்கு " என கத்தி கொண்டே உள்ளே நுழையவும் " வட்ரனுக்கு இன்னும் ஒன்னும் ஆகல " என இறுதியாய் ஷரூரா கூறியதும் டிவினிக்கு நினைவில் வந்தது...

சக்தி : என்ன டா சொல்ற...

டிவின் : நா எப்டி இத மறந்தேன்... கய்ஸ் வட்ரன் ஈஸ் ஸ்டில் அக்டிவ்... நா அத சுத்தமா மறந்துட்டேன்...

ஃத்வருண் : இதத்தான டா நீ முதல்லையே சொல்லீர்க்கனும்... தாரா மா.. நா ரெடி நீ ரெடியா என அவனின் மடிக்கணினியை இவன் எடுக்க அரானா அதிர்ச்சியில் அமர்ந்திருந்த தாராவின் கரத்திலிருந்த டப்லெட்டை பிடுங்கி விட்டு அவளிடம் லியானின் மடிக்கணினியை கொடுக்க அதன் திரையில் புதிய அடையாளத்துடன் மிளிர்ந்தது வட்ரன்...

தேடல் தொடரும்...

ஹலோ இதயங்களே...அடுத்த யூடி நைட் வந்துடும்... வெயிட் அண் ரீட்...டாட்டா..

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro