தேடல் - 47
டிவினுக்கு எழ உதவி செய்த ரியா அவனை மேலும் கீழும் பார்க்க அவன் வேகமாய் மூச்சை இழுத்து விட்டு கொண்டிருக்க ராவனா ஓடி வந்து அவனோடு ஒன்றியிருந்தாள்.... ராவனாவை அணைத்த படி சுற்றி எங்கிலும் நோக்கிய டிவின் தன் பதட்டம் நினைவு வந்தவனாக
டிவின் : டேய்... ஒரு... பெரிய... பிரச்சனை டா
மித்ரான் : அது எங்களுக்கே தெரியும் டா... நீ இந்த நேரத்துல எங்க போய் ஊரு சுத்தீட்டு வர என மடிக்கணினியை விட்டு கண்ணை எடுக்காமலே அவன் கேட்க டிவின் தெரியுமா என ஒரு நொடி முளாத்து விட்டு பின்னர் தெளிவடைந்தான்...
டிவின் : முளுசா கேளு டா... இப்போ நாம ப்லக் ஹோல நோக்கி இழுக்கப்பட்டுட்டு இருக்கோம் என வாலும் இன்றி தலையுமின்றி இவன் மொட்டையாய் கூற மற்றவர்கள் அதிர்ச்சியில் அவனை வாயை திறந்து நோக்கினர்...
சக்தி : என்னடா உளறுற... ஹையோ எப்டி டா நா உங்களுக்கு புரிய வைப்பேன் என இவன் மீண்டும் ஏதோ வாயெடுக்க தொடங்கும் முன் சரியாக கீழே எதோ உடைந்து நொருங்கும் சத்தத்தோடு யாரி மட்டும் ப்ரஜினின் அலரல் அனைவரின் காதையும் கிளிக்க அடுத்த நொடி டிவின் இறக்கை இன்றி கீழே பறந்திருந்தான்...
வீட்டின் நடுவில் சைத்தான்யா முபல்லனை பிடித்தபடி நின்றிருக்க அவர்கள் முன் வேதவள்ளி கேடையம் போல் நின்றிருக்கவும் அவருக்கு நேராக சத்யா கோவத்தில் வெறிப்பிடித்தவனை போல் ஒரு உடைந்த கன்னாடி பூத்தொட்டியோடு நின்றிருந்தான்...
அவன் தாராவின் அறையில் குழந்தைகளை சமாதானம் செய்து கொண்டிருந்த போது வீட்டின் மணி விடாது அடித்ததால் குழந்தைகளை ஒரு சோபாவில் அமர வைத்து விட்டு கதவை திறந்தவன் முபல்லனை கண்டதும் வேறு மாறியாக மாறிவிட்டிருந்தான்...
ஆனால் எப்போது அந்த கன்னாடி உடைந்த சத்தத்தில் குழந்தைகள் அலரினரோ அதை அப்படியே போட்டு விட்டு பதறி போய் இவன் குழந்தைகளிடம் ஓடி வர அந்நேரத்திற்கு டிவின் அங்கு வந்திருந்தான்..
சோபாவை விட்டு இறங்கி கீழே தவழ்ந்து வந்திருந்த யாரியை அவன் தூக்க முணையவும் அவள் இன்னமும் கத்தி அழ ப்ரஜினை தூக்கி சமாதானம் செய்யத் தொடங்கியிருந்த சத்யா வேகமாய் ப்ரஜினை டிவினிடம் கொடுத்து விட்டு குனிந்து யாரியை தூக்கினான்...
குழந்தைகளோடு அவர்களை கண்ட சைத்தான்யாவின் மனம் ஒரு நொடி கனைந்தது... குழந்தைகளிருக்கும் வீட்டிலா அசம்பாவிதம் நிகழ காத்திருந்தோம் என அவன் எண்ணுகையிலே அவனின் நல்மனம் நெருடத் தொடங்கியது...
ஆனால் அது சில நொடிகள் தான்... ப்ரஜின் சமாதானம் ஆன அடுத்த நொடியே முபல்லனை நோக்கி விருவிருவென வவந்த டிவின் அவன் கழுத்தை பிடித்து நெரிக்க முபல்லனுக்கு ஒன்றும் புரியவில்லை...
டிவின் : என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க... உங்க அப்பா பிரதமரா இருந்தா உனக்கு அவ்ளோ தைரியமா... நீ செஞ்ச முட்டாள் தனத்தால ஒருத்தி அங்க வாழ்கைக்கும் சாவுக்கும் நடுவுல போரடீட்டு இருக்கா டா... அவ உயிரோட இருக்காளான்னு கூட தெரியல அவளுக்கு மட்டும் எதாவது ஆச்சு என அவன் ஒரு எல்லைக்கு மேல் செல்ல விடாமல் சக்தி மற்றும் ஷ்ரவன் அவனை பின் இழுத்திருந்தனர்...
ஸ்வத்தி : டேய் அண்ணா என்ன டா ஒளறுர... எந்த பொண்ணு... இவன் என்ன செஞ்சான்...
டிவின் : இவன் என்ன டா செய்யல... இவனால இப்போ மூணு கிரகமும் அழிய போகுது.. பூமி மெடர்மானுக்கு கூட ஏதோ என்ன ஆகுதுன்னு தெரியிது... வியோனாருக்கு மட்டும் நாங்க கனிச்சே பாக்க முடியாத படி எதாவது ஆச்சுன்னா- என அவன் பேசிக் கொண்டிருந்த போதே
அரானா : டேய் வியோனார பத்தி உனக்கெப்டி தெரியும்...
டிவின் : நா இப்போ அங்கேந்து தான் டி வரேன்... நிரன தேடி போனேன்... இப்போ நிரன் நிலாக்கு போய்ர்க்கான்...
ஃத்வருண் : அப்போ வியோனார்னு ஒரு கிரகம் உண்மையாவே இருக்கா... என அதிர்ச்சியுடன் வினவ
டிவின் : ஏன் டா இல்லாம...இல்லாம தான் அவங்க அந்த டாகேகுமென்ட்ல எழுதி வச்சிர்க்காங்களா... அது இயகையோட அவ்ளோ ழகா இருந்துச்சு டா... இவன் இவன்.. இவனால இப்போ என மீண்டும் அடிக்க செல்ல சக்தியும் ஷ்ரவனும் அவனை படாத பாடு பட்டு அடக்கி வைக்கும் போது முபல்லன் மனதுடைந்து போயிருந்தான்...
முபல்லன் : நா செஞ்சதெல்லாம் மன்னிச்சிருங்க ப்லீஸ்... இப்போ எனக்கு உங்க உதவி வேணும்... நா பெரிய தப்புப் பண்ணிட்டேன்.. அது எல்லாத்துக்கும் நா தண்டனை ஏத்துக்குறேன்... பட் ப்லீஸ் இப்போ எனக்கு உங்க உதவி வேணும்... தயவு செஞ்சு என்ன ஒதுக்காதீக்கக... என இவ்வாறு அழுவானென அவர்கள் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.. கோவத்தில் அவன் தலையை மீண்டும் பிளக்க தயாரான சத்யாவும் அவனை உண்டு இல்லையென செய்ய வந்த டிவினுமே ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தனர்...
அனாமிக்கா : நீங்க என்ன செஞ்சீங்க... என்ன ப்ராப்லம்னு தெளிவா சொல்லுங்க ப்லீஸ்...இப்போ நடக்குர சேன்ஜஸ்க்கும் உங்களுக்கும் சம்மந்தம் இருக்கா... என மெதுவாய் வினவ முபல்லன் ஒன்று விடாமல் முதலில் இருந்து அனைத்தையும் அவர்களுக்கு கூறத் தொடங்கினான்...
நிலவு
நிரனின் அறையில் மீண்டும் முன்பை போலவே லியான் மற்றும் நிரன் தோன்றியிருக்க வேகமாய் தன் ஆராய்ச்சி கூடத்திற்குள் சென்ற நிரனை பின் தொடரவிருந்த லியானின் பார்வை அந்த அறையை ஒரு முறை சுற்றி வந்தது...
அழகிய கரு நீல நிறத்தாலான சுவற்றில் கம்பீரமாய் மாட்டப்பட்டிருந்த நிரனின் பட்டங்களிடையே நிரன் அஜிம்சனாவின் புகைபடமொன்றிருக்க அதை சுற்றி அவர்கள் குடும்பத்தின் ஒவ்வொரு படமும் அலங்கரிக்கப்பட்டிருக்க அதில் அவனவளின் முகம் மாத்திரம் அவனுக்கு பளிச்சிட்டு தெரிந்தது...
தாராவின் முகத்தில் முன்பு தான் கண்ட ஒரு நிம்மதியும் புன்னகையும் இல்லாததை கவனித்த லியானுக்கு அவளின் நிம்மதி பறிபோனதே அவனால் தான் என்பதை அவன் மனம் எடுத்துரைத்து நொந்துக் கொள்ளச் செய்தது...
அதை மீண்டும் அலசிப் பார்த்தவனின் கண்கள் அனைவரிடமும் மானசீகமாய் மன்னிப்பு கேட்க ஒவ்வொருவரின் கண்களிலும் ஏதோ ஒன்று இன்னும் காணாமலே உள்ளதை போன்றொரு உணர்வு தெரிந்தது...
அதில் கொஞ்சமேனும் சிரிக்காமல் ஜடமாய் நின்றிருந்த அரானாவின் முகம் அவனின் இதயத்தை யாரோ ஈட்டியால் தைப்பதை போலொரு வலியை பரிசளிக்க தன் இதயத்தை ஒரு முறை குத்தி அதை சரி செய்தவன் கனத்த மனதுடன் அங்கிருந்து வலுக்கட்டாயமாய் தன் கண்களை பிரித்தெடுத்தான்...
அங்கங்கு அனைத்தும் சிதறி கிடந்தது... முன்பை போல் காகிதங்கள் அல்ல... சாதாரணமாய் அவனின் வீட்டில் உள்ள பொருட்கள்...
அதை எண்ணியபடியே நிரனின் ஆராய்ச்சி கூடத்திற்குள் நுழைந்த லியானை தேட நிரன் ஒரு பெரிய திரையின் முன் கை கட்டி நின்று கொண்டிருந்தான்... அவனின் இயந்திரம் க்ரவிஸ் சிஸ்டமை ரீஸ்டார்ட் செய்து விட்டு " வெல்கம் ஹோம் சைன்ட்டிஸ் ஃபாஹிர் நிரன்.. வெல்கம் ஸைன்ட்டிஸ் லியான் " என்றது...
நிரன் அதற்கு நன்றி கூறியதோடு ஏதேதோ கட்டளை பிறப்பித்து கொண்டு அவனின் கரங்கள் முன் ஏதுவாய் தோன்றிய டிஜிட்டல் திரையின் கீபோர்டில் எதையை தட்டத் தொடங்கியிருந்தான்...
சில வினாடிகளிலே நிரன் ஷரூராவின் கடிகாரத்தை ட்ரக் செய்து அது இறுதியாய் அந்த சிறையில் ஷட் ஔன் ஆகியதை கண்டுப்பிடித்தான்....
நிரன் : டேய் ஷரூரா அந்த கேஜ்ல தான் இருந்துர்க்காங்க... ஆனா இப்போ அவங்க அங்க இல்ல....
லியான் : அங்க இல்லனா வேற எங்க டா இருப்பா...
நிரன் : தெரியல டா... தேடுவோம்
தமிழகம்
முபல்லன் சொல்லி முடித்த பின்னும் அனைவரும் ஒரு வித சிந்தையில் ஆழ்ந்திருக்க முதல் ஆளாக அரானா அவனை நிமிர்ந்து நோக்கினாள்...
அரானா : நடந்தது நடந்துடுச்சு... இப்போ நாம அத நெனச்சு அழுது புலம்புறதுல பிரயோஜனம் இல்ல... நீங்க கோமாக்கு போனது உங்க தப்பும் இல்ல... சோ இத தடுக்க எதாவது வலி இருந்தா சொல்லுங்க..
முபல்லனுக்கு ஆச்சர்யமாக இருந்தது... உண்மையிலே இவர்கள் தன்னை நம்புகின்றனர் என்ற நிம்மதியிலிருந்தான்...
முபல்லன் : அது அது எனக்குத் தெரியல... ஆனா இந்த ப்லகோஹோலோட ரேஸ் நம்ம பூமி மேல படுரதுக்கு முன்னாடியே நாம பன்றத பண்ணியாகனும்... அது மேல பரவீடுச்சுன்னா வித் இன் செக்கெண்ஸ் நாம ப்லக்லுக்குள்ள போய்டுவோம்...
டிவின் : ஒரு நிமிஷம்.. அது ப்லக் ஹோல் இல்ல... அது வொயிட் ஹோலா மாறிடுச்சு என்கவும் அனைவரும் வெள்ளை துளையா என குழப்பத்திலும் ஆச்சர்யத்திலும் அவனை நோக்க டிவின் அதை அமோதித்து வெள்ளை துளையை பற்றி விளக்கமளித்தான்...
மீனா : ஹே அப்டி பாத்தா பூமிய எப்டி வொயிட் ஹோல் இழுக்கும்... அதுவே உள்ள இருக்குர எல்லாத்தையும் வெளிய தள்ளுரது தானே...
தில்வியா : உண்மை தான்.. ஆனா வொயிட் ஹோலுக்கும் ஒரு சிங்குலரிட்டி இருக்கு.. சிங்குலரிட்டில தான் க்ரவிட்டியோட க்ரேட் ஃபோர்ஸ் இருக்கும்... இப்போ பூமிய நோக்கி அந்த ஹோல் ஈர்க்கப்படுது... முபல்லன் சொல்றது வச்சு பாத்தா அந்த ரேஸ் பூமிய தொட்ட உடனே உலகம் க்ரவிட்டி புல்னால இழுக்கப்படும்... சோ என்ன நடக்கும்னு நம்மளால நிச்சயமா சொல்ல முடியாது... நாம ஆர்பிட்ட விட்டு தாண்டுனாலே பிரச்சனை தான்... சோ ஆர்பிட்ட தாண்டி வொயிட் ஹோல் குள்ள போனாலும் ஆபத்து... அதுக்குள்ள போகாம ஆர்பிட்ட மட்டும் தாண்டுனாலும் ஆபத்து தான்...
நரா : அப்போ நாம என்ன தான் செய்றது....
சத்யா : அத டிஃப்யூஸெல்லாம் பண்ண முடியாதா... எதுவும் வழி இல்லையா...
முபல்லன் : இல்ல.. அது ஆட்டோமேட்டிக் மூடுக்கு போய்ட்டதால மன்வெலா நம்மளால ஒன்னும் பண்ண முடியாது... ஆனா நம்ம அந்த ரேடார அழிச்சா வேணா நமக்கு எதாவது வாய்ப்பு கிடைக்கும்...
அனைவரும் : அது எப்டி அழிக்கிறது...
முபல்லன் : எப்டியாவது... மெடர்மான் பூமி இரெண்டுத்துலையும் ஒரே கப்பசிட்டி கொண்ட ரேடார் தான் இருக்கு... சோ இரெண்டுத்துல ஒன்னு அழிச்சாலும் இன்னோன்னு அழிஞ்சிடும்... அப்ரம் நாம சேஃப்...
டிவின் : டேய் என்ன வியோனார லைன்ல விட்டுட்ட அத யாரு காப்பாத்துவா என திடீரென சத்தமெழுப்ப முபல்லனுக்கு தான் வியோனாரென்றால் என்னவென்றே தெரியாதே...
சைத்தான்யா : என்ன சொல்ல வரீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்...
டிவின் : பூமி மெடர்மான்ல செட் பண்ண மாரி வியோனார்ல செட் பண்ண ரேடார எப்டி நிறுத்துறது...
முபல்லன் : இல்ல...நா அப்டி எங்கையும் ரேடார் வைக்கல...
டிவின் : ஹே நீ மூணு ரேடார் தானே செஞ்ச...
முபல்லன் : ஆமா ஆனா.. ஆனா இரெண்டு நா மெடர்மான்லையே தான் வச்சேன்... ஒன்னு தான் தவறுதலா பூமில விழுந்துடுச்சு...
மித்ரான் : இரெண்டு மெடர்மான்ல வச்சியா ஏன் டா... என அதிர்ச்சியாய் வினவ அவன் திக்கித் தினறினான்...
முபல்லன் : தெ..ரிய..ல.. நா.. மற..ந்து.. போய்..
ஆர்வின் : சரி ஓக்கே விடுங்க... நாம பேசீட்டே இருக்க வேணா... வாங்க வேகமாய் ரிசர்ச்ச ஸ்டார்ட் பண்ணுவோம் இன்னும் மூன்ற மணி நேரம் தான் இருக்கு என முபல்லனை அழைத்த படி மாடிக்குச் சென்றான்...
அனைவரும் அவனை பின் தொடர சைத்தான்யா ரியா மற்றும் யதீஷ் மாத்திரமே அங்கேயே நின்றிருந்தனர்...
தேடல் தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro