தேடல் - 33
அஜிம்சனாவையே அனைவரும் சுற்றி நின்று அந்த காகிதங்களை நோக்கி கொண்டிருக்க அஜிம்சனா ஏதோ நினைவு வந்தவளாக நிரனை தொடர்பு கொள்ள முயன்றாள்...
சத்யா : என்ன பண்ண போற அஜிமா...
அஜிம்சனா : நிரனுக்கு பூமிக்கு வர சொல்லனும் அண்ணா... அவன் ஏதோ ஒரு விஷயத்த வர்ஷக் கணக்கா நம்ம கிட்டேந்து மறச்சிக்கிட்டு இருக்கான்... அது என்னன்னு கேக்கனும்.. அதோட அது நாம தேடுர விஷத்தோட ஒத்து போகும்னு நெனக்கிறேன்...
நரா : என்ன டி சொல்ல வர...
ராவனா : நானும் கவனிச்சேன் டி... நிரன் அண்ணா இந்த டாக்குமென்ட் பத்தி பேச ஆரம்ச்சதுலேந்தே நெர்வசா தான் இருந்தான்... லியான் அண்ணா வச்சத நாம கண்டுப்புடிச்ச கொஞ்ச நாள்ளையே ஏதேதோ சொல்லி தன்னந்தனியா மெடர்மான்க்கு போய்ட்டான்... டஸ் இட் மேக் சென்ஸ்???
அஜிம்சனா : எக்ஸக்ட்லி.. பட் அதோட நாங்க நிலாலேந்து வர்ரதுக்கு முன்னாடி நிரனோட லப்ல நா ம்யோரா நா அத பாதி தான் படிச்சேன் ஏன்னா அவன் கிட்ட நிறைய டாக்குமென்ட்ஸ் இருந்துச்சு... எல்லாமே மிக்ஸாயிருந்ததால நா எத கரெக்ட்டா படிச்சேன்னு கூட எனக்கு புரியல...
தில்வியா : உனக்கு நியாபகம் இருக்குரத சொல்லு டி
அஜிம்சனா : ம்ம்ம் சரியா புரியல டி எனக்கு... ஏதோ ஒரு கிரகம் கிட்ட தட்ட ஒரு 25 வர்ஷத்துல பேரழிவ சந்திக்கும்... அந்த ஒரு சம்பவத்துனால மூன்று கிரகத்தோரும் அழிவாங்கன்னு இருந்துச்சு...
தாரா : மூன்று கிரகமா... அப்போ இத எழுதுனவங்களுக்கு பிரவஞ்சத்துல இருக்க மூணு கிரகத்துல மனிதர்கள் இருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கா???
அரானா : இதனால என்ன தாரா...பூமிலையும் மெடர்மான் னையும் தான வேற உயிர்வாழ் கிரகங்கள் இருக்குரது தெரியாது... நிலால உள்ளவங்களுக்குத் தான் தெரியுமே...
" ஆனா தானே நிலால உள்ளவங்களுக்கு பூமி மெடர்மான பத்தி தெரிஞ்சு முழுசா இருவது வர்ஷம் கூட ஆகலையே" என சத்யா மனதில் எண்ணி கொண்டான்...
ஃத்வருண் : நாமநிரனே உடனே கான்ட்டக்ட் பண்ணனும்...
மித்ரான் : ஆனா முடிலையே... செர்வர் எதுனாலையோ சரி இல்ல டா....
சக்தி : எல்லாரோடதுமா... அதுக்கு வாய்ப்பே இல்லையே மச்சான்...
அரானா : நமக்கில்ல அண்ணா... நிரன் அண்ணாக்கு தான் செர்வர் கனெக்ட் ஆகல...
ஸ்வத்திக்கா : பெட்டர் அதுக்கு முன்னாடி இந்த டாக்குமென்ட் எப்போ எழுதப்பட்டதுன்னு நாம செக் பன்னா நல்லா இருக்கும்... ஒருவேளை அவங்க உண்மையாவே எதாவது அழிவ குறிப்பிற்றுந்தா நாம அதுக்கு கண்டிப்பா முன்னெச்செரிக்கையா இருக்கனும்...
ராவனா : அப்சல்யூட்லி ரைட்.. அஜி நீ பாத்த டாக்குமென்ட் எத்தன வர்ஷம் முன்னாடி எழுதப்பட்டதுன்னு உனக்குத் தெரியுமா...
அஜிம்சனா : அதெப்புடி டி எனக்கு தெரியுப்... ஆனா பாக்குரதுக்கு பத்து பனஞ்சு வர்ஷம் ஆன மாரி தான் இருந்துச்சு.. என யோசனையோடே கூறினாள்...
மீனா : சரி இதுக்கு முதல்ல டைமிங்க கண்டுப்புடிப்போம்... நீங்க போய் நிரன் அண்ணாவ ட்ரேஸ் பன்னுங்க.. ஷ்ரவன் அண்ணா ஃபோன் பன்னான்... அஞ்சு பேரும் இங்க தான் வந்துக்குட்டு இருக்காங்களாம்...
அனாமிக்கா : ஹ்ம்ம்ம் நிரன் அண்ணா கிட்ட ம்யோரா டாகுமென்ட் இருந்தும் அத எதுக்காக நம்ம கிட்டேந்து அவன் மறைக்கனும்...
ஆர்வின் : கண்டிப்பா எதாவது ஒரு காரணம் இருக்கும்... பாப்போம்...
தன் தோழன்களை அணைத்த படி கண்ணீர் சிந்திய லியான் அவர்களை விட்டு பிரிந்து நின்று கொண்டான்...
நிரன் : சரி சொல்லு டா... எப்டி தப்பிச்ச... உண்மையாவே அன்னைக்கு என்ன தான் ஆச்சு...
டிவின் : அதோட இந்த முபல்லன் இருந்தானே உனக்கு நியாபகம் இருக்கா... அவன் தான் உன்ன கொன்னுட்டான்னு சத்யா கடந்து வெறியாய்ட்டான் டா ஒருநாளு... அவன் செத்துட்டான்னு சொன்னாலும் கேக்கல-
லியான் : இல்லடா அவன் இன்னும் உயிரோட தான் இருக்கான்... கோமால இருக்கான்...
நிரன் : கோமாலையா என்ன டா சொல்ற...
டிவின் : அப்போ சத்யா சொன்னதும் உண்மை தானா... நாங்க காலைல கண்டுப்புடிச்ச சிக்னல அனுப்புனதெல்லாம் முபல்லன் தானா
லியான் : இல்லடா.. இல்லடா... சத்யா சொன்னது உண்மையா தெரியல... ஆனா சிக்னலுக்கு காரணம் மூபல்லனில்ல... நாங்க தான்... ஷரூரா பூமிக்கும் நிலாக்கும் வந்துட்டு அங்கேந்து கிளம்புரப்போலாம் ஸ்பேஸுக்கு சிக்னல் வருது அதான்...
டிவின் : எல்லாம் சரி... அப்ரம் கூட தெரிஞ்சிக்களாம்.. நாங்க கேட்டத முதல்ல சொல்லு...
லியான் : ஹ்ம்ம்ம்ம் நா உயிர் பிழைச்சதுக்கு காரணமே வட்ரன் தான் மச்சான்... என பெருமூச்சுடன் கூற
நிரன் : தெளிவா சொல்லேன் டி என பொருமை இழந்தவனாய் கத்த அவர்களிருவரையும் அமர வைத்த லியான் உண்மையில் நடந்தவையை கூறத் தொடங்கினான்....
லியான் : அன்னைக்கு நிரன் நீ வீட்ட விட்டு போனதுமே உன் டிவைஸ் க்ரவிஸ் கூட நா வட்ரன தேட ஆரம்பிச்சேன்... ஆனா அப்போ நிலமை கை மீறி போய்ர்ந்துச்சு டா... வட்ரன இழுக்குர அளவு மக்னெட்டிக் ஃபோர்ஸ் நிலால இல்ல... அதனால தான் க்ரவிஸ கொஞ்சம் மாத்தி விட்டுட்டு நா உனக்கு தெரியாம நிலால விட்டு வெளிய ஸ்பேசுக்கு வந்தேன்...
நிரன் : இட் மீன்ஸ் உன் தங்கக்சி ஃபோன் பண்ணி நானும் அவளும் எதுக்கு டா விண்வெளிக்கு போனன்னு ட்டு கத்து கத்தும் போது நீ வெளியவே போலன்னு சொல்லீட்டு அங்க தான் இருந்துர்க்க... என கோவமாய் கேட்க
லியான் : ஆமா டா... இதோ பாரு கோவத்துல அடிச்சீன்னா சொல்ல வந்தத மறந்துடுவேன் ஆமா
டிவின் : நீரு இரு டா ... இவன் மொதல்ல சொல்லி முடிக்கிட்டும் என நிரனை அசுவாசப்படுத்தி விட்டு நிரனுக்கு தொடருமாறு கண் காட்டினான்...
லியான் : ஹ்ம்ம் நா வெளிய போனதுக்கு அப்ரம் வட்ரனோட பவர ஃத்வருணும் தாராவும் குறைச்சதால பண்ணதால அது கிட்ட போனதுக்கப்ரம் கிட்ட இழுத்து சீக்கிரமே டிஅக்டிவேட் பண்ணேன்... அந்த எரிக்கல் வர்ர வேகத்துக்கு அத இரண்டாக்கனும்னா அதோட வேகத்த விட வட்ரனோட வேகம் இரு மடங்கா அதிகமாகனும்... அப்டி ஒரு வேகத்துல போனா எரிக்கல்ல இரெண்டாக்குரது மட்டுமில்லாம வட்ரன் அது போற டரெக்ஷனையே நா மாத்தாம விடுரதால வேற எதாவது ஒரு ஆப்ஜக்ட் ஆர் மே பி கிரகத்த கூட தாக்க வாய்ப்பு இருக்கு... அப்டி ஒன்னு நடக்கக் கூடாது... வட்ரன் எரிக்கல்ல தாண்டி போனதும் உங்க கிட்ட கடைசியா சொல்லீட்டு நா போனேன்... அதோட அது போற வேகத்துக்கு நானும் அது பின்னாடியே இழுக்கப்படுவேன்னும் எனக்கு தெரியும்... அன்னைக்கு வட்ரன டிஅக்டிவேட் பன்றத விட என் உயிர் எனக்கு பெருசா தெரியல... என்ன வட்ரன் கொஞ்ச நேரத்துலையே ப்லக் ஹோல்க்குள்ள இழுத்துடுச்சு... ஐ மீன் ப்லக்ஹோல் எங்க இரெண்டு பேரையும் இழுத்துடுச்சு... இப்டி ஒரு சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவேன்னு தெரிஞ்சு தான் பூமில இருக்கும் போதே என்னாலான ஏற்பாட செஞ்சிட்டு போனேன்... நா உயிரோட வந்தா மேற்கொண்டு அந்த புதிர்களுக்கு விடை கிடைக்கிர மாரியும் வரலன்னா என்னோடையே அழிஞ்சு போற மாரியும்...
தொடர்ந்து சொல் என அவர்கள் தலையசைப்பை மட்டும் கொடுக்க லியான் மீண்டும் தொடர்ந்தான்...
லியான் : ப்லக்ஹோல்க்குள்ள போனா நா வெளிய வர்ரதுக்கு அஞ்சு வர்ஷம் ஆகும்னு நா கணக்கு பண்ணேன்... ஆனா.... மூணு வர்ஷத்துலையே வந்துட்டேன்....
டிவின் : அது எப்டி டா வந்த
தீரா : ஏன் அவன் வந்தது புடிக்கலையா உனக்கு...
டிவின் : குட்டச்சி இருக்குர காண்டுக்கு உன்ன எங்கையாவது விட்டுட்டு வந்துடுவேன் ஓடி போய்டு
தீரா : போங்க பா எல்லாரும் என்ன துரத்துரதுலையே தான் குறியா இருக்கீங்க... நானே எங்கையாவது போறேன்... போயி ட்விஸ்ட்டு வக்கிறேன் என புலம்பி கொண்டே சென்றவளை ஷரூரா மட்டும் தான் புதிய உயிரினமென நோக்கி கொண்டிருந்தாள்...
தீரா : அவள பொருத்த வர நா ஏலியன் தானே அப்ரமென்ன...
லியான் : போய்த் தொல அந்த பக்கம்... நீங்க கேழுங்க டா...
தனது மடிக்கணினி முன் நகத்தை வெடுக்கு வெடுக்கென கடித்து இழுத்த படி அமர்ந்திருந்த தில்விவா டீன் டீன் டீன் என அவள் மடிக்கணினி சத்தமெழுப்பியதும் ஆர்வமாய் சில பல சொடுக்கிகளை சொடுக்கி ஆவலாய் எதிர் பதிலுக்கு காத்திருக்க அந்த மடிக்கணினியிலிருந்து எதிர்பட்ட பதிலில் கத்தியே மொத்த குடும்பத்தையும் ஒரே நிமிடத்தில் அவளறையில் கூட்டியிருந்தாள்...
அப்போதே வீட்டிற்கு வந்திருந்த ஷ்ரவன் வினய் யதீஷ் மீரா மற்றும் ரியாவும் அனைவரும் சற்று பதட்டத்தோடு பார்க்கும் எதையோ கேள்வியுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்...
மித்ரான் : அப்டீன்னா... அந்த டாக்குமென்ட் எழுதியே 25 வர்ஷம் ஆகுதா... இப்போ தான் எதாவது நடக்க போகுதா...
அரானா : இது அதுக்கும் மேல பழசா இருக்கும்னு நெனச்சோம்.. இது என்ன சரியா 25 வர்ஷத்துல நிக்கிது... இதுக்கு என்ன அர்த்தம் அப்போ... திரும்பவும் எரிக்கல் எதாவது வர போகுதா... அதுல யார நாம இழக்கனும் என உணர்ச்சி வசத்தில் குரலெழுப்பி கத்த அவளின் கண்ணீர் ததும்பிய விழிகள் மீண்டும் சத்யாவின் குற்ற உணர்ச்சியை தூண்டி விட்டது...
ஒரு நொடிக்கும் மேலாக அங்கு நிற்க இயலது அறையை விட்டு விருட்டென வெளியேறினாள் அரானா... அனைவரும் சத்யாவை பார்க்கவும் அவனும் எங்கோ வெறித்த படி நின்றிருந்தான்...
தாரா : நா போய் அராவ சமாதானம் படுத்துறேன்.. நீங்க என்ன பிரச்சனைன்னு சீக்கிரம் கண்டுப்புடிங்க
சத்யா : ம்ஹும் வேண்டாம் என அவளை வெறுமையாய் பார்க்க
வினய் : அவ அழுதுட்டே இருக்கனும்னு விதியா டா என அவளின் னழுகைக்கு இவனும் ஒரு காரணம் என்னும் கோவத்தில் கேட்க இடவலதாய் தலையசைத்த சத்யா
சத்யா : நா அராட்டா பேசுறேன்... நீங்க என்னன்னு பாருங்க என்று விட்டு அறையை விடேடு வெளியேறியவனை எவரும் தடுக்கவில்லை...
பின்ன அவனாக வந்து மூன்று வருடத்திற்கு பிறகு பேசுகிறேன் என்கிறான்... அவர்களை ஏன் பிரித்து கொண்டு....
சக்தி : ஓக்கே டா நாம டைம வேஸ்ட் பண்ண வேண்டாம்... இந்த இயர்ல எதாவது நடக்க போகுதா இல்ல கூடிய சீக்கிரத்துல எதாவது நடக்க போகுதான்னு நமக்கு தெரியாது... நாம எது பண்ணாலும் அத சீக்கிரம் பண்ணனும்...
வினய் : வர்ஷம் பொறந்து ஒரு மாசமாகல ... ஏன் என பாவமாய் கேட்க
மீனா : சாரி ப்ரதர் பிப்ரவரி பொறந்தாச்சு... ஒரு மாசமாகிடுச்சு...
வினய் : ரொம்ப முக்கியம் இப்போ இந்த விளக்கம்...
ஆர்யன் : டேய் சும்மா இருங்க... இந்த விஷயம் லீக்கு தெரியுமான்னு கூடத் தெரியல... அவனோட தியாகத்துக்காகவாவது நாம ஒரு தீர்வ கண்டு புடிக்கனும்...
தாரா : அண்ணா.. அவன் தியாகி தான்... ஆனா அவன் பணையம் வச்சானே ஒழிய அவன் உயிர தியாகம் பண்ணல என உரக்க கத்த வேண்டும் போலிருந்த எண்ணத்தை தனக்குள்ளே மூடி புதைத்து விட்டு மேற்கூறியவைகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினாள்...
தற்போதே வந்திருந்த ஐவரும் ம்யோரா மொழி பற்றி நாகரிகம் பற்றி அதை அஜிம்சனா அறிவாள் என்பது பற்றி அதில் ஒரு பாகம் இல்லை என்பதை பற்றி நிரன் ஒரு ம்யோரா கோப்பை வேறு வைத்திருக்கிறான் என்பது வரை கூறி மூடித்தனர்...
தேடல் தொடரும்...
ஹாலோஓஓஓஓஓ .... யூடிக்காக காத்துக்குற்றுந்த அனைவருக்கும் நன்றி.. நா ஸ்கூல் போகவும் ஸ்டார்ட் பன்னீட்டேன்... ஒன்ஸ் இன் டூ டேஸ் உங்களுக்கு யூடி வந்துடும்.. அதோட நாம கிட்டத்தட்ட இந்த எக்ஸ்ப்லனேஸனயெல்லாம் முடிச்சிட்டு... எண்டிங்க நெருங்குகிற்றுக்கோம்னு தெரிவிக்க விரும்புகிறேன்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro