Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 31

எட்டு வழிச் சாலையில் சீரிப் பாய்ந்து கொண்டிருந்த நாயகர்களின் காரை சில கார்கள் யதீஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முயன்றபடி பின் தொடர்ந்து வர தன் கட்டுப்பாட்டை இழக்கும் ஒரு வேகத்தில் காரை ஓட்டி கொண்டிருந்த யதீஷ் திடீரென பெருமூச்சு விட்டவனாய் ப்ரேக்கை அழுத்தி காரை நிறுத்தினான்...

அவர்கள் முன் சீரி வந்து மண்ணை தேய்த்து கொண்டு நின்றது அந்த கருப்பு காவல் வண்டி... அதிலிருந்து கை துப்பாக்கியுடன் கம்பீரமாய் இறங்கிய ஷ்ரவனை கண்டதும் இந்நாழ்வரும் அசால்ட்டாய் திரும்பி பார்க்க அவர்களை இவ்வளவு நேரமும் தொடர்ந்து வந்த மூன்று கார்களும் ஒரேடியாய் ரிவர்ஸிலே பின் சென்று கொண்டிருந்தது...

வேகமாய் முன் சென்று காருக்குள் அமர்ந்திருந்த வினய் மற்றும் யதீஷிடம் இரு துப்பாக்கிகளை தூக்கி எறிந்த ஷ்ரவன் செல்லும் கார்களை நோக்கி குறி வைக்க யதீஷ் மற்றும் வினயும் ஷ்ரவனை தொடர்ந்து மற்ற இரு கார்களை குறி வைத்தனர்...

ஷ்ரவன் முதல் காரின் முன் டயர்கள் இரண்டையும் ஒரே நொடியில் சுட அவனை தொடர்ந்து யதீஷ் மற்றும் வினயும் மற்ற இரு கார்களின் சக்கரத்தை பன்ச்சராக்கினர்...

உள்ளிருந்தவர்கள் காரை விட்டு விட்டு ஓட அதில் இருவரின் காலை சுட்டு பிடித்த ஷ்ரவன் இறுதியாய் யதீஷ் சுட்ட காரில் வெளியே வர முடியாமல் மாட்டி கொண்ட ஒருவனையும் சேர்த்து பிடித்தான்...

இங்கு வீட்டில் அனைவரும் அஜிம்சனாவை சுற்றி வளைத்து அதிர்ச்சியோடு நின்றிருக்க விட்டால் ஃத்வருணால் திண்டாடிய மற்ற விஞ்ஞானி நாயகர்கள் அவள் காலில் விழுந்து அழுதிருப்பர்...

இன்னும் அஜிம்சனா புரியாது விழித்தபடி நிற்கவும் அதற்கு மேலும் தாமதிக்க விரும்பால்

தாரா : அது என்னன்னு படி சீக்கிரம் டி...

அஜிம்சனா : அதுல என்ன இருக்குன்னே தெரியாம தான் இத வச்சிருந்தீங்களா.. ஆமா என்ன இது...

ஃத்வருண் : இது தான் குட்டிமா லியான் இங்க விட்டுட்டு போனது....

அஜிம்சனா : இதையா... அவனுக்கு இத படிக்கத் தெரியுமா...

மித்ரான் : தெரியல டா... பட் எங்களுக்கு தெரிஞ்ச வர அவனுக்கு இத பத்தி ஒன்னுமே தெரியாது...

சக்தி : இருங்க இருங்க... இது நிலால பேசுர லங்வேஜ்னா.. இது எப்டி லியான்க்கு கெடச்சிது... அவன் நிலாக்கு ஒரு முறை தானே போனான்... போனதுக்கு அப்ரமும் நம்ம கிட்ட திரும்ப வரலையே...

அஜிம்சனா : இது நிலால பேசுர லங்வேஜெல்லாம் இல்ல டா அண்ணா... இது நிலால இருந்த ஒரு பழங்கால நாகரீகத்தோட மொழி.. நிலாவ பொருத்த வர தமிழர் நாகரிகம் வந்த அடுத்து வந்த நாகரீகம் தான் ம்யோரா நாகரிகம்...

ஸ்வத்திக்கா : அனைவரும் ஃப்லஷ்பக்கில் மூழ்குவோம் வாருங்கள்.... என உரக்கக் கூறவும் அதுவும் சரி தான் என்பதை போல அனைவரும் கூற காத்திருப்பவளை நோக்கினர்....

தமிழர் நாகரிகம் நிலவில் தோன்றியே பல கோடி ஆண்டுகள் கடந்திருந்த போது தமிழ் தோன்றிய மிக விரைவில் வெறும் பத்து நபர் கண்ட குழுவினரால் உருவாக்கப்பட்டது தான் ம்யோரா நாகரிகம்..

பத்தே பேர் கொண்டிருந்தாலும் அன்பும் பண்பும் மிக்கவர்கள் அவர்கள் அனைவரும்.. அவர்களது நாகரிகத்தின் ஒரு அதிமுக்கிய பகுதியே அவர்களது மொழி..

எழுத்தின் வடிவமும் தோற்றமும் பார்ப்போரின் கண்களை எளிமையாகவே ஈர்க்கக் கூடியவை.. அது எழுதுபவரின் கைகளில் இல்லை.. அந்த எழுத்தில் இயல்பிலே உள்ளது... அதை எப்பேர் பட்டோர் எழுதினாலும் சரியாய் எழுதினால் ஒரு தனி அழகாய் காட்சி படும்...

அவர்களின் மொழி சொல்வளமும் பொருள் வளமும் எழுத்து வளமும் மிக்கதாகும்.. ஆயினும் எண்ணற்ற மொழிகளுக்கும் நேர் எதிர்... பெரும்பாலும் அனைத்து மொழியிலும் முதல் எழுத்தை இடது/வலது பக்கத்திலிருந்து முதல் வரியில் நேராய் தொடங்குவோம் ஆனால் இம்மொழியானது உருவானதே தலை கீழ் பழக்கத்திற்காய் தான்...

ஒரு பக்கத்தின் இறுதி வரியின் வலது புற ஓரத்திலே இம்மொழியானது எழுதப்படும்...

எடுத்துக்காட்டாக

....மொழி
ம்யோரா பெரும்புள்ளியே நாகரிகத்தின் ம்யோரா.1

இயல்பாக முதல் பக்கத்தில் தொடங்கும் பத்தியானது இரண்டாம் பக்கத்தில் முடிவு பெறும்.. ஆனால் இவர்களின் ம்யோரா மொழியானது இரண்டாம் பக்க இறுதியில் தொடங்கி முதல் பக்கத்தில் முடிவடையும்...

அவர்கள் பெரும்பாலுமே தலை கீழ் பழக்கத்தையே பின் பற்றுபவர்கள்... எத்துனை விசித்திரமான பழக்கம் கொண்டிருந்தாலும் நிலவின் வரலாற்றில் பெரும் பங்கு விதைத்திட்டவர்கள்... பல கோடி ஆண்டுகள் முன்னமே புவி இருப்பதையும் நாம் அதை ஒரு கிரகமாய் பார்ப்பதை போல் நம்மை அவை பார்க்கவில்லை எனவும் கனித்திருந்தனர்....

ம்யோரா நாகரிகத்து மொழியினை பயின்று இதுவரை எவரும் இன்றைய காலத்திற்கு அதை கொண்டு வரவில்லை... கிட்டத்தட்ட வெறும் இரண்டே வருடங்கள் மட்டும் தான் ம்யோரா நாகரிகம் நிலவில் நிலைத்தது... அதன் பின் காலம் மாறிட ம்யோரா நாகரிகம் வாயிலாக உருபெற்ற மக்களும் மாறினர்... அம்மொழியை பயின்று கற்று கொண்ட ஒரு சிலரும் தற்போது உயிருடன் இல்லை... அம்மொழியை புரிந்து கொள்ள கூடிய ஆற்றல் ம்யோரா நாகரிகத்தவர்களுக்கு மட்டுமே உள்ளதென்றும் அவர்களை அன்றி பெரும்பாலும் அம்மொழியினை அக்காலக்கட்டத்திலிருந்து இக்காலக்கட்டம் வரை எவராலுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதும் பேச்சில் இருக்கிறது...

இன்னமும் நிலவின் வரலாற்று நூலகங்களுக்கு மத்தியில் ம்யோரா நாகரிகத்தின் வரலாறு ஒளிந்திருந்தாலும் அவை அனைத்தும் கிருக்கலாகவே காணப்பட்டது.. இன்றும் காணப்படுகிறது... என்ன தான் கூறினாலும் ம்யோரா நாகரிகம் நம் மூதாதையர் வாழ்ந்த காலமதில் போற்றப்பட்டு தலை தூக்கி நின்ற நாகரிகம் என்பதையும் நம்மால் நிராகரிக்க இயலாது...

சக்தி :அப்போ..... உனக்கு எப்டி தெரியும் இந்த லங்வேஜு... நீ அந்த நாகரிகத்த சேந்தவளா... அப்ரம் எப்டி தமிழ் பேசுர...

அஜிம்சனா : நா அந்த நாகரிகத்த சேந்தவள்ளாம் இல்லண்ணா... ஆனா நா சின்ன புள்ளையா இருக்கும் போதே ம்யோரா லங்வேஜ சொல்லி குடுத்துர்க்காங்க... என் அம்மா ம்யோரா இணத்தவர் தான்... மோஸ்ட்டா என் அம்மா ஃபமிலி தான் பரம்பரை பரம்பரையா இந்த மொழிய கத்துக்குட்டு விடாம வந்துட்டு இருந்தாங்க... எனக்கும் கத்துக்குடுத்தாங்க... சின்ன புள்ளைலையே கத்துக்குட்டதால எனக்கு நல்லாவே எழுத படிக்கத் தெரியும்... ஆனா என் குடும்பம் என்ன விட்டு போனதும் நா ம்யோரால படிக்கிரத விட்டுட்டேன்....

தில்வியா : அப்போ இப்பவும் உனக்கு படிக்கத் தெரியும்னு சொன்ன...

அஜிம்சனா : ஆமா தெரியும்... நாங்க நிலாலேந்து இங்க வர்ரதுக்கு முன்னாடி நிரன் என்ன நிலாவோட வரலாற படிக்க சொன்னா... அப்போ தான் ம்யோரா பத்தி திரும்ப படிச்சேன்... அதுல ம்யோரா அல்ஃபபெட்ஸ பாத்ததும் திரும்ப எனக்கு நியாபகம் வந்துடுச்சு.. ஃப்லூவென்ட்டா பேச மறந்துட்டேன்... ஆனா படிச்சிடுவேன்...

நரா : அப்போ இத படிச்சு என்னன்னு சீக்கிரம் சொல்லு டி...

அஜிம்சனா : அது முடியாதே...

அனைவரும் : ஏன்ன்ன்ன்ன்ன் என அனைவரும் கத்த

அஜிம்சனா : இது தான் மாதி கிளிஞ்சிருக்கே... இதோட மறு பாதி வேணும்... அதோட இது முதல் பக்கம்... அப்டீனா இரெண்டாவது பக்கமும் வேணும்... இரெண்டாவது பக்கத்துல தான் தொடக்கமே இருக்கும்...

தில்வியா நரா : மறுபடியும் மொதல்ல இருந்தா என தலையை பிடித்து கொண்டு கீழே அமர்ந்தனர்...

அஜிம்சனா : ஒரு வர்ஷமா கஷ்டப்பட்டதுக்கு என் கிட்ட காச்சிருக்கனும்...

சத்யா : உனக்கு படிக்க தெரியும்னு எங்களுக்கு எப்டி டி தெரியும் குட்டி பிசசே... இந்த டாக்குமென்ட் என்ன தான் சொல்லுதோ என தலையை பிய்க்காத குறையாக பல்லை கடித்தான்....

ஃத்வருண் : அதெல்லாம் சரி... இதுல என் என்னோட பேரு இருக்கு அஜிமா... என அவன் வைத்திருந்த காகிதத்தை நீட்ட அதை குழப்பத்தோடு வாங்கிப் பார்த்த அஜிம்சனா அதில் " ஃத்வருணின் மதி மட்டும் " என தமிழில் எழுதப் பட்டிருப்பதையும் அது " மட்டும் மதி ஃத்வருணின் " என தலை கீழாகவே எழுத பட்டிருப்பதையும் கவனித்தாள்...

தாரா : டேய் அண்ணா... யாரோ இந்த ம்யோரால எழுதீட்டு.... ஏதோ எழுதுரதுக்காக தமிழ்ல எழுதியிருக்காங்க... ஆனா ம்யோரால எழுதுர மாரியே தமிழ்ல பின்னாடிலேந்து ஆரம்பிச்சிருச்சிருக்காங்க... ஆனா அப்டியே விட்டுட்டு போய்ர்க்காங்க...

டிவின் : ஹ்ம்ம்ம்ம் நம்ம எல்லா புதிருக்குமே அந்த மத்த பாகங்கள் கிடைச்சா மட்டும் தான் பதில் கிடைக்கும்...

அனாமிக்கா : மத்த பாகங்கள் இல்ல... ஒரே ஒரு பக்கம் தான்.... இப்போ அஜி வச்சிர்க்குரது தான் முதல் பக்கம்... லாஸ்ட் லைன் ரைட்ல எழுத ஆரம்ச்சிருக்காங்க என அதை சுட்டி காட்ட கூறவும் அனைவருக்கும் ஒரு பாரை கீழிறக்கி வைத்ததை போல் இருந்தது...

இந்த கிளிந்த மறு பக்கம் எங்கிருக்கும் என இவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க அதை முழுதாய் தன்னிடம் வைத்திருக்கும் நிரன் அனைத்தும் புரிந்த பின்னும் மேற் கொண்டு என்ன செய்வதென தெரியாமல் நின்றிருந்தான் மெடர்மானின் ஆடிட்டோரியத்தில்...

அவனின் அருகில் இருந்த மெத்தையில் இன்னும் கவரையே பிரிக்காமல் அந்த இரு டெடிபியர்களும் இவனை பார்த்தபடி அமர்ந்திருக்க அவன் கண்களோ சுவற்றிலிருந்த ஒரு புகைபடத்திலே நிலைத்திருந்தது....

நிரன் : நா என்ன தான் செய்யட்டும்... இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சா உங்க பசங்க எப்டி ரியக்ட் பண்ணுவாங்க... உங்களுக்கு உண்மையாவே என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா என்ன ஆகும்... ஐம் ஸ்டில் கன்ஃப்யூஸ்ட்...

அவன் சோகமாய் அந்த புகைபடத்தை பார்க்க கள்ளம் கபடமின்றி புன்னகைத்து கொண்டிருந்த மெடரின் கண்களில் தன்னவளை நினைவு கொண்டு பெருமூச்சுடன் மீண்டும் அந்த கோப்புகளை எடுத்து கொண்டு அதை வாசிப்பதற்காக அமர்ந்தான்...

அவன் முன் ஒரு காகிதம் ஆங்கிலத்தில் பாதி எழுதபட்டிருந்தது... மற்றொரு கோப்பு முழுவதும் மூன்று பக்கத்தில் ம்யோராவில் மூன்றாவது பக்கத்தில் தொடங்கி முதல் பக்கத்தில் முடிவடைந்திருந்தது.... அதே கோப்பில் ஒரு கிளிந்த தாளும் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது....

நிரன் அந்த ஆங்கில காகிதத்தை எடுக்கவும் சரியாக அவனின் கடிகாரம் பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்பி அவனை திடுக்கிட செய்தது....

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... கதை எங்க போகுதுன்னு தெரியலையா... எனக்கும் தெரியலப்பா... சரி சரி கவலப்படாதீங்க பின்னாடியே போய் எங்க போகுதுன்னு கண்டுப்புடிச்சிடுறேன் ஹிஹிஹி இரெண்டு ஸ்டோரிக்கும் இன்னைக்கு நைட் யூடி போட்டா வேணாம்னு சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்ன்ன்ன் ஹிஹிஹிஹி வில் மீட் யு கய்ஸ் சூன்... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro