தேடல் - 3
கேத்ரியனை மீண்டும் பார்க்க வேண்டும் என மனம் அவனை நச்சரித்தது...
யதீஷ் : டேய் என்னடா ஆச்சு உனக்கு... வெக்கமா இல்ல.. அரைமணி நேரம் கண்ணு தெரியாதவன் மாரியே உக்காந்து அவள பாத்துர்க்க... திரும்ப வேற பாக்கனுமா... என கேட்டதற்கு வெட்கமே இல்லாமல் தலையாட்டியது அவன் மனது...
யதீஷ் : ம்ஹும் அவ என்ன கவனிச்சா கேவலமா போய்டும் டா.. நாம பக்கத்துல இருக்க வேற எதாவது இடத்துக்கு போகலாம்.. அவள நா ஃபாலோ பன்ன போறதில்ல..
யதீஷ் ம.வ : ம்ச் அப்ரம் நீ என் உயிர வாங்குவடா... இப்போவே அவள போய் பாரு நீ...
யதீஷ் : ஷட் அப்.. நாம அங்க போக போறதில்ல
யதீஷ் ம.வ : மச்சான் மச்சான்.. அவ எனக்காக பிறந்தவ டா.. என் சோல்மேட்ட என் கிட்டேந்து பிரிச்சிராத டா...
யதீஷ் : தோ பாரு இதெல்லாம் டூ மச் சொல்லிட்டேன்...
யதீஷ் ம.வ : டேய் சொன்னா கேளு டா.. வா டா
யதீஷ் : முடியாது... ஜஸ்ட் அவள பாக்கனும்னு தோனுனதால தான் நான் வந்தேன்.. சோல்மேட்டெல்லாம் ஒன்னும் இல்ல..
யதீஷ் ம.வ : ம்ச் ஒரு காதல பிரிச்ச பாவம் உனக்கு வேணாம்டா...
யதீஷ் : ரொம்ப பன்னாத ... அப்டியே அது காதலா இருந்தாலும்.. என் காதல நா பிரிச்சா தப்பில்ல.. என தனக்கு தானே பேசியவாறு அங்கிருந்து எழுந்து சென்றான்...
யதீஷ் ம.வ : அவ தான் என் காதலி .. நா முடிவு பன்னிட்டேன்...
யதீஷ் : அதுக்கு நா ஒத்துக்கனும்...
யதீஷ் ம.வ : நீ ஒத்துக்குவ...
யதீஷ் : மாட்டேன்...
யதீஷ் ம.வ : உனக்குன்னு ஒரு நேரம் வரும்.. அப்போ ஒத்துக்குவ..
யதீஷ் : ம்ச் வாய்க்கு வந்தத பேசாத டா.. இட்ஸ் ஜஸ்ட் அ ஸ்மால் ஃபீல்.. அது வாழ்க்க முழுக்க இருக்காது.. அவ யாருன்னு கூட எனக்கு தெரியாது..
யதீஷ் ம.வ : அவ உனக்காக பிறந்தவ டா...
யதீஷ் : ஷட் அப்
யதீஷ் ம.வ : அவ உனக்காக பிறந்தவ தான்.. நீ நம்பலன்னா அத அவளே உனக்கு உணர்த்துவா...
யதீஷ் : டேய் லூசா நீ..
யதீஷ் ம.வ : நீ தான் லூசு.. அவள இதே நாள்ள நீ இன்னும் பல முறை மீட் பன்னவ.. அப்போ உனக்கு என்னோட காதல் புரியும்...
யதீஷ் : நா போய் அவள பாத்தா தான அவ ப்ரூவ் பன்னுவா...
யதீஷ் ம.வ :நீ அவள தேடி போக வேண்டாம்.. அவ உன்ன தேடி வருவா பாரு...
யதீஷ் : ஸ்டாப் ப்லபரிங்.. இதெல்லாம் என் வாழ்கைல நடக்க போறதில்ல.. இரெண்டு முறை அவள மீட் பன்னதால திரும்ப திரும்ப மீட் பன்னுவேன்னு இல்ல.. என தனக்கு தானே பேசி கொண்டு அருகிலிருந்த கடற்கரைக்கு வந்திருந்தான் யதீஷ்..
அவன் மனசாட்சி " இந்த மண்டகாசயம் என்ன சொன்னாலும் திருந்தாது " என கரித்து கொட்டிவிட்டு எப்போதோ சென்றிருந்தது...
மாலை நேரமென்பதால் கொஞ்சம் கூட்டமிருந்தது.. அங்கங்கு சில குடும்பங்களும் சில காதலர்களும் சில நண்பர்களும் அமர்ந்து அல்லது அலைகளில் கால் நனைத்தபடி நேரத்தை அருமையாய் களித்தனர்...
அந்த இனிமையான கடல் அலைகளின் இரைச்சல் காதுகளை நிறைக்க மெதுவாய் அந்த கடலின் இரைச்சலான சூழலை தன் கண்களுள்ளும் மனதிலுள்ளும் இழுத்து கொண்டான்..
மிருதுவான அந்த குளிர் காற்றில் யதீஷின் கேசம் அலைந்தாட... கண்களை மென்மையாய் திறந்தவனின் முன் சரியாக தன் தோழியை துரத்தி கொண்டு கடலலை அருகில் ஓடினாள் கேத்ரியன்..
ஒரு நொடி அவள் தன்னை கடந்து சென்றதில் யதீஷின் இதயம் நின்று துடிக்க அவன் மனம் ஒரு மூலையில் நின்று கொண்டு " எப்புடி எங்க ஃப்யூச்சர் ப்ரெடிக்ஷன் " என கேட்டு சிரித்தது...
யதீஷின் கண்கள் அவன் மனசாட்சியை கண்டு கொண்டதை போல் தெரியவில்லை.. அந்த அழகான அந்தி சாயும் தருணத்தில் கேத்ரியனின் அழகான சிரிப்பும் அவள் குழந்தை போல் விளையாடும் அழகும் யதீஷின் மனதில் பொக்கிஷமாய் பதுங்கியது...
தான் ஒரு பெண்ணை இவ்வாறு பார்ப்பது பெரிய பாவமென பல நிமிடங்கள் பின் உணர்ந்து கொண்ட யதீஷ் கடினப்பட்டு தன் கண்களை அவளிடமிருந்து பிரித்து கொண்டான்..
இவன் விதியோ அல்ல விதி அவனுக்கு செய்த சதியோ இவன் தன் பார்வையை திருப்பி கொண்ட மறு நொடி கேத்ரியன் இவனை கவனித்தாள்...
தன் பெரிய கன்னாடியை தன் விரலால் சரி செய்து கொண்ட கேத்ரியன் தன் கண்களை சுருக்கி யதீஷை நோட்டமிட்டாள்...
தன் பின்னந்தலையில் மெதுவாய் தட்டி கொண்ட யதீஷ் பின் இரு கைகளையும் பன்ட் பக்கெட்டினில் நுழைத்து கொண்டு கடற்கரையிலிருந்து நடந்து சென்றான்...
அவனை விசித்திரமாய் பார்த்து கொண்டிருந்த தோழியின் மீது நீரை கைகளால் அடித்தாள் கேத்ரியனின் தோழி.. அழகுக்கு பஞ்சமில்லாத அழகியவள்.. மெலிந்த தேகம்.. எதையோ இழந்து அதை மீட்டெடுக்க வழியில்லாது செயலிழந்திருந்த அழகிய கண்கள்..மென்மையான குணம் கொண்ட கேத்ரியனின் சிறு வயது தோழி சித்தாரா..
கேத்ரியன் : ஹே .. ஆல்ரெடி நா நனஞ்சிட்டேன்.. சும்மா இரு டி...
சித்தாரா : மச்சி யாரது.. காலைலேந்து உன் பின்னாடி அவங்கள பாத்துக்குட்டு இருக்கேன்...
கேத்ரியன் : காலைலேந்தா...
சித்தாரா : பின்ன... மார்னிங் ப்லட்ஃபார்மல.. அஃப்ட்டர்நூன் பப்லிக்கேஷன்ல... அதே நூன் டைம்ல பார்க்.. தென் இன் தி ஈவ்னிங் ஹி ஈஸ் ப்ராபப்லி ஹியர்..
கேத்ரியன் : நா கவனிக்கவே இல்லையேடி...
சித்தாரா : நானும் கவனிக்கல மச்சி.. பட் இப்போ அவங்கள இங்க பாத்துட்டு சும்மா இன்னைக்கு நடந்ததெல்லாம் யோசிச்சு பாத்தேன்..
கேத்ரியன் : ஹ்ம் மே பி இட் குட் நாட் பீ லைக் தட்.. கோயின்சிடென்சா இருக்கும் மச்சி...
சித்தாரா : மைட் பி..
கேத்ரியன் : ஓக்கே தென் ஐஸ்க்ரீம் பார்லர்க்கு போவோமா.. பக்கத்து ஸ்ட்றீட்லயே ஒன்னு இருக்கு... என முகத்தை சுருக்கி கேட்க...
சித்தாரா : ஹான் எவன் என்ன கவலைல இருந்தா உனக்கென்ன.. நீ உன் வேலைல சரியா இருப்ப டி.. என சிரித்த சித்தாரா கேத்ரியனுடன் அவள் கூறிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றாள்...
உள்ளே ஓடி சென்ற கேத்ரியன் வேகவேகமாய் பல ப்லேவர்களை கடைகாரரிடம் அடுக்கி கொண்டிருக்க.. இதை போல் சில ஐஸ்க்ரீம் பிரியர்களே மனதை வெளிப்படுத்தி தங்களின் விருப்பத்தை தெரிவிப்பதால் அந்த கடைகாரருமே மகிழ்ச்சியுடன் அவள் கேட்ட அனைத்தையும் சேர்த்து ஒரு ஸ்கூப்பாய் அவளிடம் கொடுத்தார்...
அதை கண்டதும் வாழை பழத்தை பத்து நாள் பின் கண்ட குரங்கை போல் சிரித்த தன் தோழியை சிரித்தவாறே பார்த்த சித்தாரா ஒரே ஒரு ப்லக் கரன்ட் பேப்பர் கோன் மட்டும் வாங்கி கொண்டு கேத்ரியன் அமர்ந்த டேபிலிலே சென்று அமர்ந்தாள்...
கேத்ரியன் சுற்று புறம் எதையும் காணாமல் முகநூலில் ஒரு ஸ்டோரியை போட்டு விட்டு அவள் உண்டு அவள் ஐஸ்க்ரீம் உண்டென அமர்ந்திருந்தாள்... கண்ணாடி ஜன்னலருகில் அமர்ந்திருந்ததால் தன் ஐஸ்க்ரீமை சுவைத்து கொண்டு மெதுவாய் இருளை பரப்ப தொடங்கியிருந்த விண்ணை தன் கண்களால் நிறப்ப முயன்று கொண்டிருந்தாள் சித்தாரா...
இவ்விருவரும் இவ்வாறு வெவ்வேறு உலகில் சஞ்சரித்து தங்களை மறந்து கொண்டிருக்கும் போது சரியாக ஃபோனில் கேத்ரியனின் முகநூல் பக்கத்தை கண்டு இளநகை பூக்க அதே ஐஸ்க்ரீம் பார்லருக்குள் நுழைந்தான் யதீஷ்..
தன் முகநூல் பக்கத்தில் கடலில் அடித்த ஆட்டத்தையும் கடல் அலைகள் எம்பி வரும் அழகிய படத்தையும் பதிப்பித்திருந்தாள் கேத்ரியன்..
இப்போது மீண்டும் ஒரு நோட்டிஃபை வர அதை திறந்து பார்த்த யதீஷ் கடைகாரரிடம் " வன்னிலா வித் சாக்லேட் " என கூறிவிட்டு தன் பார்வையை அந்த படத்தில் பதித்தான்...
எச்சில் ஊர வைப்பதை போல் இருந்த ஐஸ்க்ரீமை படமெடுத்து " சில் வித் ஐஸ்க்ரீம் " என கேத்ரியன் பதிப்பித்திருந்தாள்..
அவள் பதிப்பித்த படத்தில் இதே கடையின் லோகோ தெரிவதை கண்டு கடைகாரர் கொடுத்த ஐஸ்க்ரீமை வாகியவாறு சுற்றி பார்த்த யதீஷ் அந்த கடையின் இறுதியில் அமர்ந்திருந்த கேத்ரியனையும் அவள் முன் அமர்ந்திருந்த சித்தாராவையும் கவனித்தான்...
சென்ற முறை போல் இப்போது யதீஷ் அதிர்ச்சியடையவில்லை.. அதற்கு பதிலாய் அவனின் வசீகரமான புன்னகை அவனது வதனத்தில் இலையோடியது...
அந்த புன்னகையில் கவனம் சிதறிய கேத்ரியன் நிமிர்ந்து நோக்க அவளின் கண்ணாடியில் பிரதிபளித்த யதீஷின் முகத்தை கண்டு ஆச்சர்யமானாள்...
சித்தாரா : மச்சி உன் ஆளு இங்கையும் வந்துட்டாங்க போல என நக்கலாய் கூற இதை கேட்டு சித்தாராவை முறைத்த கேத்ரியன்
கேத்ரியன் : கொன்னுடுவேன்.. என்ன டி புதுசா ஆளு கீளுங்குர...
சித்தாரா : ஜஸ்ட் கிஃட்டிங் மச்சி.. சும்மா சொன்னேன் .. கூல்...
கேத்ரியன் : சரி வா நாம கெளம்பளாம்...
சித்தாரா : ஹோய் பேபி ஏன் பயப்புர நீ..
கேத்ரியன் : பயமா நானா.. இல்ல டி
சித்தாரா : அப்ரம் ஏன் போகலாம்ங்குர
கேத்ரியன் : ஹ்ம் தேவையில்லாத பிரச்சனை வேண்டாமேன்னு தான்
சித்தாரா : மச்சி... நாம எதுவும் செய்யாதவற நமக்கும் எந்த பிராப்லமும் இருக்காது... யு என்ஜாய் யுவர் ஐஸ்க்ரீம் என தன் தோழியை சகஜமாக்கினாள்...
தன்னை பற்றி தான் உரையாடுகின்றனர் என்பதை அறியாது தன் செல்பேசியை நெஞ்சோரமாய் வைத்து க்ளிக் செய்தான்.. திடீரென ஃப்லஷ்லைட் எரியவும் யதீஷ் அவ்ச் என்ற சத்தத்துடன் முளித்து விட்டு உடனே ஃபோனை செக் செய்ய அவன் செல்பேசியிலிருந்து பாய்ந்த ஃப்லஷ்லைட் சரியாக கேத்ரியனின் கண்ணாடியில் பட்டுத் தெறித்தது...
சித்தாராவும் கேத்ரியனும் நிமிர்ந்து நோக்க சித்தாரா கேத்ரியனை தடுக்கும் முன் கோவத்தில் பல்லை கடித்த கேத்ரியன் உடனே எழுந்து யதீஷிடம் சென்றாள்...
தன் ஃபோனை பார்த்து கொண்டிருந்த யதீஷ் தன் காலருகில் நிழலாடுவதை கவனிக்கும் முன் அவன் கரத்திலிருந்த அவனது செல்பேசியை அந்த நிழலுக்கு சொந்தகாரியான அவன் மனதின் நாயகி பறித்திருந்தாள்..
யதீஷ் சற்று மிரட்சியுடன் அவளை நோக்க அவன் ஃபோனின் கலரியை ஓப்பன் செய்து பார்த்த கேத்ரியன் பின் அதே கோவத்துடன் அந்த ஃபோனை டேபிலிலே வைத்து விட்டு வெளியே விருவிருவென நடந்து சென்றாள்...
சித்தாரா ஹே கேத்ரியன் என கத்தியபடி அவள் பின்னே ஓட ... நம் யதீஷோ ஒரு சில நொடிகளுக்கு பேயறைந்ததை போல் உறைந்து அமர்ந்திருந்தான்...
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே... புடிச்சிருக்கும்னு நம்புறேன்.. பீ சேஃப்.. கீப் யுவர் ஹெல்த் ஸ்ற்றாங்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro