Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 28

நிரன் : ம்யோரா

லியான் : என்னா ரா...

ஷரூரா : ஷரூரா என அவனை பார்க்க லியான் அவளை முறைத்தான்...

லியான் : லூசு எந்திரிச்சு இங்க வா... என தன் மடிக்கணினி அருகில் அழைக்க... ஷரூராவும் முளித்தபடி மெதுவாய் அவனிடம் ஓடி வந்தாள்...

ஷரூரா : என்ன லி அண்ணா

லியான் : ஷ்ஷ் பப்பு... அவன் என்ன சொல்றான்னு கேளு என ரெக்கார்டிங்கை ஆன் செய்ய அதில் ஒரு நிமிடத்திற்கும் மேலாக காற்றசைவின் சத்தமே மட்டுமே நிலவியிருக்க திடீரென ஒரு பெருமூச்சுடன் " ம்யோரா " என்ற நிரனின் குரல் கேட்டது...

லியான் : சோ வாட்ஸ் தட் என ஷரூராவை பார்க்க ஷரூராவிற்குமே அது யாதென்பது தெரியவில்லை...

ஷரூரா : நோ ஐடியா...

லியான் : நா குடுத்த பேப்பர்ஸ பாத்து நிரன் ஏன் அத சொல்லனும்.. அதோட இவன் அந்த பேப்பரோட ஒரு காப்பி வச்சிர்க்கான்னு ஃத்வருண்க்கு தெரியுமா என தான் கொடுத்ததை தான் நிரன் வைத்திருக்கிறான் என நினைத்து கொண்டு தனக்குத் தானே கேட்டு கொண்டான்...

ஷரூரா : அது இருக்கட்டும்... நானும் ஒரு வர்ஷமா கேட்டுட்டு இருக்கேன்... அந்த டாக்குமென்ட் என்னது லி அண்ணா...

லியான் : ஹ்ம்ம் அது உண்மையாவே என்னன்னு எனக்கு இன்னும் தெளிவா தெரியல ஷரூ... பட் அது என்னன்னு கண்டுப்புடிச்சா... மே பி ஆர் மே நாட் ... மெடர்மான் உண்மையாவே இருவத்தியஞ்சு வர்ஷமா அந்த ஆடிட்டோரியம் உள்ள என்ன மறைக்கிதுன்னு தெரிஞ்சிடும்

ஷரூரா : கொழப்பாத லி அண்ணா என முகத்தை சுருக்க தன் கதிரையில் சாய்ந்து ஒரு கரத்தில் பேனாவை சுற்றியபடி எங்கோ பார்த்து கொண்டிருந்த லியான்...

லியான் : ஹ்ம்ம்ம் எனக்கு அந்த டாக்குமென்ட் நாங்க மெடர்மான் ஆடிட்டோரியம் போனப்போ கெடச்சிது.. ஒன்னு இல்ல.. இரெண்டு கெடச்சிது என ஷரூராவை பார்க்க ஷரூரா அவனை தெளிவாக புரியாது பார்த்தாள்...

லியான் பெருமூச்சுடன் லியான் ஒரு பெரும் மூச்சுடன் ஆறு வருடம் முன்பு நடந்ததை விவரிக்கத் தொடங்கினான்...

அன்று தான் முதல் முதலாக மெடர்மானின் அந்த ஆடிட்டோரியத்திற்குள் நுழைய மெடர்மான் நாயகர்கள் திட்டமிட்டிருந்தனர்... அத்தருணத்தில் இவர்கள் எண்வருமே சாதாரண அறிவியல் மாணவர்கள் மட்டுமே... ஆனால் அறிவில் குறைந்தவர்கள் அல்ல...

அவர்களின் டெலிகேம் மூலமாக மித்ரானின் செயலியை இணைத்து முதல் முறையாய் சட்டத்திற்கு புறம்பாய் சட்டப்படி தடை செய்யப்பட்ட அந்த ஆடிட்டோரியத்திற்குள் டெஸ்ட்டினேஷனை குறி செய்து தயாராகினர்...

மித்ரானின் செயலி இவர்களை குறித்தபடி கிழக்கில் தோன்ற வைக்க ஆடிட்டோரியத்தின் வாயிலை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஆடிட்டோரியத்தின் உட்பகுதியே பல்வேறு பட்ட சிலந்தி வலைகளால் வரவேற்த்தது

அதை அப்போது பெரிதாய் எடுத்து கொள்ளாமல் அவரவரது தேடுதலை தொடங்க அங்கு அவர்கள் இருந்த பத்து நிமிடத்திற்கு உட்பட்டவையை மட்டும் தேடி எடுத்தனர்...

ஆடிட்டோரியம் பாதிக்கும் மேலாக மார்ன் மற்றும் மெடர் என்ற புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களாலே நிறைந்திருந்தது... அவை அனைத்தையும் காண முடியாமல் விரைந்து செயல் பட்டு கொண்டிருந்தவர்கள் இரண்டாம் மாடியில் அந்த அறையின் வெளியே தரையில் பொருத்தப்பட்டிருந்த கதவிற்கு நேரருகே இருந்த ஒரு ஜன்னலருகில் எதையோ விசித்திரமாய் கண்ட லியான் மற்ற எவரும் அங்கில்லாததை கண்டு அதை நெருங்கினான்...

அதை மெல்ல விரலால் வருடி பார்த்தவன் சுவற்றோடு ஒரு ஆழமான மெல்லிய கோடு செல்வதை கண்டு தனது ஒரு நகத்தை அந்த இடுக்கில் புகுத்தி இழுக்க ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் கரத்தை அவன் பட்டென இழுக்கவும் சட்டென அந்த கோட்டின் மறு புறம் கட்டமாய் ஒரு பாகம் பொத்து கொண்டு வெளியே வந்தது...

அதை லியான் கவனிக்கும் முன்பாக சட்டென அந்த இடுக்கிலிருந்து ஏதோ வெளியே பாய ... ஏதோ பூச்சியினால் திடுக்கிட்டு பின் திரும்பிய லியானின் தோள் அந்த பொத்துக்கொண்ட பகுதியோடு அழுந்தப்பட்டது...

நகரும் போது தன் தோள் பகுதி எதிலோ உராசியதை உணர்ந்தே திரும்பிய லியான் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்தது அங்கு...

அவனின் தோளில் எங்கிருந்தோ கன பொழுதில் தீ பற்றியிருந்தது... அதை கண்டு கண்களை அகல விரித்த லியான் உடனே தன் சட்டை அவிழ்த்து கீழே எரிய அந்த சட்டை அவன் கீழே தள்ளி விட்ட எதிலோ விழுவதை கண்டு வேகமாய் அதனருகே சென்றவன் கந்த சட்டை முழுவதும் தீ பரவுவதை கண்டு காலால் மிதித்து அந்த தீயை அணைத்தான்...

இவனின் அரவத்தினால் மற்றவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்து அரவத்தின் திசையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்...

ஆனால் லியான் அந்த தீயை அணைத்த பின்பு தான் அவனின் சட்டைக்கு கீழ் ஒரு க்ளஸ் கவரில் ஏதோ இருப்பதை கண்டான்... அதை எடுத்தவன் பட்டென சூடு தாங்காமல் அதை கீழே விட .... அவன் கண் முன்பே ஒரு தாள் அந்த தீயில் மொத்தமாய் கருகியது

அந்த ஓரிரு இடைவேளையில் அந்த க்லஸ் கவரின் வாயிலாக அது மு முதாய் கருகும் முன் லியானால் இரு வேறு பாதி வார்த்தைகளை மட்டும் தான் பார்க்க முடிந்தது.... " யான், ல "

அதையே விழி விரிய பார்த்து கொண்டிருந்தவனை தில்வியா வந்தெழுப்ப பின்பே தன் நிலை பெற்று அனைவரிடமும் தன் கவனக்குறைவிற்கு திட்டு வாங்கிக் கொண்டே மீண்டும் அவ்விடத்தை ஆராய்ந்தான்...

அனைவரும் நேரத்தை வீணடிக்காமல் வெவ்வேறு புறம் நகரவும் மீண்டும் அதே இடத்திற்கு வந்த லியான் அந்த சுவற்றை மீண்டும் ஆராய்ந்தான்... அதில் பொத்துக்கொண்ட பகுதியில் சொரசொரப்பாய் கருமை நிறத்தில் ஏதோ ஒட்டப்பட்டிருந்தது...

அதை பார்த்து கொண்டிருந்தவனுக்கு வெள்ளையாய் ஏதோ ஒன்று அந்த இடுக்கிலிருந்து எட்டி பார்ப்பதை போல் தோன்ற இப்போதும் ஒரு முன் சிந்தனையும் இன்றி தன் கரத்தை அதில் விட்ட லியான் மேலே திருப்பி நேரத்தை வீணடிக்காமல் ஏதோ கிளியும் சத்தத்துடன் அந்த வெள்ளை நிறத்தில் தெரிந்த ஏதோ ஒன்றை பிரித்தெடுத்தான்...

அதுவும் ஒரு காகிதம்... சற்றே கசங்கி பாழடைந்து மஞ்சள் நிறத்திலிருந்த காகிதம்... கிருக்க பட்டிருக்கிறதா அல்ல கிருக்கிய வெவ்வேறு வடிவத்திலுள்ள எழுத்தை பிய்த்தெடுத்து இதில் ஒட்டி வைத்திருக்கின்றனரா என கேட்டால் லியான் ஒரு ஐடியாவும் இல்லை என தோளை தூக்கி கீழிறக்குவான்... அதை அவன் எடுத்த வேகத்திற்கு மீதி பகுதி கிழிந்து விட்டது போல என நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டு மீண்டும் அதை எடுக்க தன் கரத்தை உள்ளே விட்ட லியான் எவ்வளவு முயன்றும் அவனால் ஒரு எல்லைக்கு மேல் கரத்தை சரியாய் ஏற்ற முடியாது போனது...

அதை எடுக்கிறேனென சுற்றத்தை கவனிக்காமலும் அவனால் இருக்க முடியாது... எனேனில் பல வருடமாய் பூட்டியே கிடக்கும் அந்த கட்டிடத்தில் எந்த மூலையில் எந்த பூச்சியோ அல்ல ஏதுவோ டேரா போட்டு வாழ்கிறதோ... யார் அறிவார்... வேறு வழியில்லாமல் தன் கரத்தை மீண்டும் வெளியிலெடுத்த லியான்...

அந்த நேரம் சரியாக நேரம் முடிந்து அனைவரும் கிளம்பத் தயாராக லியானும் மற்ற ஏழ்வரிடம் இதை பற்றி பெரிதாய் கூறாமல் தன் வீட்டை மீண்டும் அடைந்ந்திருந்தான்....

அதன் பின்பே பூமியில் எக்காரணத்திற்காகவோ அதை சத்யாவின் அறையில் விட்டுவிட்டு நிலவிற்கு கென்றான்...

ஷரூரா : இன்னும் என்ன என்னலாம் செஞ்சிட்டு அவங்கள்ட்ட சொல்லாம வச்சிருக்க நீ என தலையில் வலிப்பதை போலவே கொட்ட அதை தேய்த்து கொண்டே இளித்தான் லியான்...

லியான் : நிறைய பன்னீர்க்கேன்... ஆனா அவங்கள்ட்ட அப்ரம் சொல்லீடுவேன்...

ஷரூரா : ஆனா இத சொல்லலையே நீ...

லியான் : அதான் க்லூ விட்டுட்டு வந்துருக்கேனே... கண்டுப்புடிச்சிடுவானுங்க...

தீரா : ம்க்கும் நீ விட்டுட்டு வர்ர க்லூக்குலாம் என்னல்லா டா யோசிக்க வைக்கிர நீ

லியான் : ஹே கிருக்கி ஹவ் ஆர் யு... எவ்ளோ நாளாச்சு உன்ன பாத்து... சத்யா கூட உன்ன பாக்கனும்னு கேட்டுட்டே இருந்தான்...

தீரா :ஃபைன் ஃபைன்.. நீ எப்டி இருக்க... சரி அது இருக்கடும் எப்போ ஊருக்கு வர போற..

லியான் : உனக்குத் தெரியாதா நா எப்டி இருக்கேன்னு

தீரா : எப்போ டா ஊருக்கு வர போற... அத சொல்லு

லியான் : சீக்கிரமே வரேன்.. போ போய் தடபுடலா விருந்து போடு...

தீரா : ஹான் நான் போடுவேன்... ஆனா நா சமச்சு போட்டா... நீ இப்போ பரலோகத்துலேந்து எமலோகம் போய்டுவ என சாதாரணமாய் கூறவும்

ஷரூரா : டேய் லி அண்ணா அங்கெல்லாம் உன்ன காப்பாத்த என்ன மாரி யாரும் இருக்க மாட்டாங்க டா... என தீராவின் சமையலை உடனடியே நிராகரிக்க வந்த லியானிம் பதறி போய் கூறினாள்...

தீரா : யாரு சொன்னா ... அதெல்லாம் ஒருத்தி இருப்பா...

லியான் : எது நீயா...

தீரா : நானும் இருப்பேன்... ஆனா நா ட்விஸ்ட்டு வக்கிறேங்குர பேருல உன்ன காப்பாத்த மாட்டேன்.. அவ காப்பாத்தி விற்றுவா...

லியான் : யாரு என புரியாது முளிக்க " நானே " என ஷரூராவின் மடிக்கணினியிலிருந்து ஒரு சத்தம் கேட்டது

தீரா வான்மதியை கண்டு அவளை கை காட்ட லியானும் ஷரூராவும் " யாரிந்த ந்யு அட்மிஷன் " என புரியாமல் பார்த்தனர்...

ஷரூரா : யாரிவங்க என் கம்ப்யூட்டர்ல இருக்காங்க...

தீரா : உன் மாமியார்...

வான்மதி : ஏய்ய்ய்

தீரா : நீ தான அன்னைக்கு மருமகளே வா வான்னு வரவேற்த்துட்டு இருந்த

வான்மதி : போடி அந்த பக்கம்... ஹாய் லியான் அண்ணா... ஐம் வான்மதி.. நா எங்க வாசக சங்கம் சார்பா வந்துர்க்கேன்... எப்டி இருக்க நீ... உன்ன இந்த தீரா ரொம்ப கொடுமை படுத்துராளா... சொல்லு அவள வச்சு செஞ்சிடுறேன்...

லியான் : ஹான் ஆமா ஆமா ரொம்ப கொடுமை படுத்துரா வானு என தீராவை பார்த்து நக்கலாய் கூற

தீரா : அடப்பாவி துரோகம் ன்றியா... அஞ்சு வர்ஷம் களிச்சு இப்போ தானடா என்ன பாக்குற...

லியான் : நா பாக்களன்னாலும் நீ என்ன கொடுமை படுத்தீட்டு தானே இருந்த

வான்மதி : யு டோன்ட் வரி நா அவள பாத்துக்குறேன்... உன்ட்ட ஒன்னு கேக்கனுமே... பூமிய விட்டு 54 லைட் இயர் டிஸ்டன்ஸ்ல ஒரு ப்லனெட் இருக்காம்.. அதுல மனுஷங்க வாழ வாய்ப்பிருக்குன்னு ந்யூஸ்ல சொன்னாங்க... உனக்கு அப்டி எதாவது கிரகம் தெரியுமா...

தீரா : அது கண்டிப்பா மெடர்மான் இல்லன்னு மட்டும் எனக்கு தெரியும்...

வான்மதி : உன்ன கேக்கள நானு.. நீ க்லோஸ்...

லியான் : ம்ஹீம் இல்லமா... எனக்கு தெரியல பூமிக்கு வந்ததும் உனக்கு ... ஐ மீன் உங்க எல்லாருக்கும்... நா ரிசர்ச் பன்னீட்டு சொல்றேன்.. ஓக்கே

தீரா : ஓக்கே ஓக்கே ... கெளம்பு கெளம்பு என ஷரூராவின் மடிக்கணியியை அணைக்க வான்மதியின் " டாட்டா பாய் பாய் " ஓடு அந்த ஒளிப்பரப்பு அணைந்தது

ஷரூரா மற்றும் லியான் புரியாது திரும்பி பார்க்க அவர்களின் முன்னும் இடம் காலியாக இருந்தது...

திடீரென அந்த அறைக்குள் நுழைந்த சத்யாவை எதிர்பார்க்காமல் அவன் வாயை பிளந்து பார்க்க... அவன் நடப்பதை யூகிக்கும் முன்பாக முகமிறுக நின்றிருந்த சத்யா பல்லை கடித்து தன் காலால் அவன் முதுகில் உதைத்து அவன் அமர்ந்திருந்த கதிரையோடு கீழே தள்ள கீழே விழுந்தவனின் தலை படாரென தரையில் பட்டு மோத " நோ " என அலரியடித்து கண்களை விழித்தான் முபல்லன்...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களேஏஏஏஏ... டோன்ட் வரி நெக்ஸ்ட் யூடிலேந்து... நிச்சயமா ஸ்டோரி சூடு பிடிக்கும்... ஓக்கேவா... ட்ரஸ்ட் மீ... குட் நைட்... டாட்டா

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro