தேடல் - 26
அந்த அலைக்கழிக்கும் மாலை வேளையில் அசதியாய் வீட்டிற்குள் நுழைந்த ஷ்ரவனை மகிழ்ச்சியில் முக்குள்ளிக்க செய்யவே " மாமா " என அவனை நோக்கி ஓடி வந்து அவன் கால்களை அணைத்து கொண்டாள் மூன்று வயதான சனாயா
ஷ்ரவன் புன்னகையுடன் சயானாவை தூக்கி கொஞ்ச அவளை துரத்தியபடியே வந்த ஸ்வத்திக்காவும் ஷ்ரவனை இடித்து நின்றாள்...
அவர்களை கலைப்பதை போலவே வாயிலில் ஒரு காரின் டயர் க்ரீச்சிடும் சத்தம் கேட்க ஷ்ரவனிடமிருந்து இறங்கி " யதுப்பா " என அழகாய் தன் கீச் கூரலில் கத்தி கொண்டே சனாயா வெளியே ஓட அவள் குட்டி காலடி தடத்தை கேட்டு கொண்டே தன் காரை விட்டிறங்கிய யதீஷ் அவளை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்...
யதீஷ் : பேபி டால் என்ன பன்றீங்க சாபாட்டாச்சா என கேட்க அதுக்கு தலையை டிங்கு டிங்கென ஆட்டினாள் அவள்...
சனாயா : வா வா யதுப்பா என்ன தூக்கீட்டு போ... ரைடு போலாம் என அடம் பிடிக்க யதீஷ் அதற்கு ஒத்துக்கொள்ளும் முன்பாக
ஸ்வத்திக்கா : அடியேய் இப்போ தான உன் யதுப்பா வீட்டுக்குள்ளையே வந்தாரு... அதுக்குள்ள எங்க ஓடுர... நைட்டு ரைடு போலாம் உள்ள வா...
சனாயா : வர மாட்டேன் போ ..
யதீஷ் : பேபிடால் அத்தை கிட்ட அப்டிலாம் கத்த கூடாது... நைட் ரைட் போலாம்.. இப்போ வாங்க நாம போய் தம்பி தங்கச்சி கூட விளையாடலாம் என அவளை சமாதானம் செய்ய
ஸ்வத்திக்கா : பாத்தியா உன் யதுப்பா அத்தை சைடு தான்... அப்டி தான அண்ணா
சனாயா : அஹென் யதுப்பா என் சைடு
யதீஷ் : ஆள விடுங்க சாமி... நா ஃப்ரெஷ்ஷப் ஆக போறேன்... மச்சான் வரலையா என சனாயாவை ஸ்வத்திக்காவிடம் கொடுத்து விடேடு ஷ்ரவனை தாண்டி ஓடினான்...
ஷ்ரவன் : வரேன் டா என யதீஷ் விரைவில் தங்கள் அனைவருடன் சகஜமானதை எண்ணி கொண்டு உள்ளே செல்ல வழியிலே டீவி பார்த்து கொண்டிருந்த சக்தி டிவினிக்கும் ஒரு அட்டெண்டென்சை போட்டு விட்டு அவர்களோடு மோட்டார் சைக்கிலை வைத்து ப்ரும் ப்ரும் என சத்தமெழுப்பி கொண்டு விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது ப்ரஜனையும் கொஞ்சி விட்டு மாடியேறியவன் படிகளிலே தன் மகளுக்கு உணவூட்ட கடினப்பட்டு கொண்டிருந்த அஜிம்சனாவிற்கு ஒரு புன்னகையளித்ததோடு அவனை கண்டு முறைத்த யாரியை தானும் செல்லமாய் முறைத்து அவளுடன் விளைளாடிவிட்டு மாடியில் தனக்காய் என்றும் பால்கெனியில் காத்திருக்கும் அரானாவிற்கு மாலை வணக்கத்தை கூறி விட்டு ஆராய்ச்சி கூடத்திலிருந்த ஃத்வருண் மித்ரான் ஆர்வினுக்கு ஹாயையும் அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த தங்கைகளுக்கு புன்னகையையும் வழியிலே அவனுக்கு தேனீரை கொடுத்த அனாமிக்காவிற்கு குட்டி நன்றியையும் அலுவலச அறையிலிருந்த வினய் மீரா மீனாவிற்கு ஒரு வணக்கத்தையும் ஓரக்கண்ணால் தன்னவளுக்கு ஒரு லுக்கையும் விட்டு விட்டு தன் அறைக்குச் செல்லும் முன்பாக வழியிலுள்ள ஜன்னலருகில் அமர்ந்து விண்ணை நோக்கி கொண்டிருந்த தாராவின் தலையை வருடி ஒரு புன்னகையளித்து விட்டு தன்னறைக்குள் நுழைந்தான் யதீஷ்...
இந்த ஒரு வருடத்தில் யதீஷை தவிர்த்து அவர்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் பெரிதாய் நடக்கவில்லை... ஒரு சில வாரங்களிலே யதீஷும் அக்குடும்பத்தீல் ஒருவனானான்... அவனுக்கு அக்குடும்பத்தில் ஒருவனாய் வாழ அத்துனை ஆனந்தம்... யதீஷே அறியாது ரியாவின் மீதான அவனின் காதல் அதன் பாட்டிற்கு வளர்ந்து கொண்டே தான் இருந்தது.... குழந்தைகள் யதீஷோடு ஆரம்பத்திலே ஒட்டி கொண்டாலும் யதீஷிற்கும் யாரிக்கும் எப்பொழுதும் குட்டி குட்டி சண்டை நடந்து கொண்டே இருக்கும்... அவளும் இவனுடன் இருக்க மாட்டான்.. அவனும் அவளை சீண்டாமல் இருக்க மாட்டான்...
சத்யா அரானாவினுள் சற்றே முன்னேற்றம் தெரிந்தாலும் இதுவரையிலும் அரானா சத்யாவை மன்னித்ததாய் தெரியவில்லை... அவனும் பேசி பேசி அலுத்து போய் விட்டான்....
இடையில் சக்தி அனாமிக்கா ஜோடியிற்கு திருமணமும் முடிந்திருந்தது.... அதை லியான் பார்க்கவும் மறக்கவில்லை... அவன் தன் நண்பனுக்காகவும் தங்கைக்காகவும் மனதார வாழ்த்தினான்... அது மட்டும் தான் அவனால் செய்ய முடிந்தது...
தாரா லியானுக்காய் காத்திருக்க இன்றளவும் மறக்கவில்லை... தினம் அந்த வானத்தை ஏக்கத்தோடு அவள் பார்க்கையில் லியானின் முகம் கற்பனையில் மிளிருமே ஒழிய கண் கூடாய் பார்க்க அவளுக்கு நேரம் அமையவில்லை...
தன் காதலி படும் வேதனை அனைத்தையும் அறிந்தும் பூமிக்கு செல்லும் வழியறியாது தன் ஆராய்ச்சியில் தன்னைத் தானே புகுத்தி கொண்டிருந்தான் லியான்... தான் அவளை காக்க வைப்பது தவறென அவன் உணர்ந்திருந்தாலும் அதை தவிர்த்து அவனுக்கு வேறு வழியும் இல்லை...
ஷரூரா... லியானிற்கு உடன் பிறவா தங்கையாகியிருந்தாள்... அவளின் குணத்தை நன்கு அறிந்து கொண்ட லியான் அவள் சிறு வயதிலிருந்தே அன்பிற்காக மட்டும் ஏங்கித்தவித்த குழந்தை என அறிந்து கொண்டான்... உண்மை தான்.. இன்றளவும் அறிவாளி விஞ்ஞானி என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் ஒன்றுமறியா குழந்தை தான் அவள்... லியானிற்கு மற்றொரு அரானாவாகிப் போனாள்....
மறுபுறம் சைத்தான்யா ரியாவை தேடும் வேலையை விட்டு விட்டு தன் சகோதரன் எழுவதற்காய் காத்திருந்தான்... இந்த ஒரு வருடத்தில் அவன் அன்புத் தாயை காண சென்றதை விட ... கோமாவில் விழுந்த முபல்லன் எழுந்தானா என பார்க்கச் சென்றது தான் அதிகம்...
சத்யா அன்று எந்த கோவத்தில் எப்படி அடித்தானோ... முபல்லனின் மூளை மொத்தமாய் வேலை நிறுத்தம் செய்து கோமாவிற்குள் ஆழ்ந்திருந்தது... உண்மைகள் அனைத்தும் அவனுள்ளே அடங்கியிருப்பதால் சைத்தான்யாவிற்கு காத்திருப்பதை தவிர்த்து வேறு வழி இருப்பதாய் தெரியவில்லை...
அதிலும் அவன் வாரத்தில் ஒரு முறையாவது பார்த்து வீடும் நீலக்கண்ணி அவனை மனதளவில் என்றும் நிலையிலே வைத்திருந்தாள்... அந்த நீலக்கண்ணியை மறக்க முடியாமல் திண்டாடி கொண்டு அவனின் அன்னையை பாடாய் படுத்து கொண்டிருக்கிறான்...
பாவம் வேதவள்ளியும் என்ன செய்வார்... தன் ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் சைடு கப்பில் கடாய் வெட்ட காத்திருக்க இவனோ அவர் முன்னும் சரி தூக்கத்திலும் சரி நீலக்கண்ணி என்றதையே உளறியவாறு கனவு காண்கிறான்...
தீரா : ஷரூக்கு வச்ச நிக் நேமாமாம்....
நம் சைத்தான்யாவின் அன்னையே அந்த நீலக்கண்ணியை கண்டுப்பிடித்தாக வேண்டுமென்ற முடிவுக்கு வருமளவிற்கு இந்த ஒரு வருடத்தில் அவரை பாடாய் படுத்தியிருந்தான் அவன்...
ஷரூரா வாரத்தில் ஒரு முறையேனும் வேண்டுமென்றே சைத்தான்யா ஏன் பார்க்கச் செல்கிறாளென அவளுக்குமே தெரியவில்லை... இதை கண்டும் காணாமல் லியான் ஒதுங்கியே இருந்தான்...
வட்ரன் ஒரு வருடத்தின் பின் லியான் அமைத்த வேகத்திற்கு பூமியை நெருங்கியிருந்தது... நிலவில் ஒரு பக்கம் குரோபடரான் ராஜா இரு ஒன்றரை வாரத்திற்கும் மேலாக காணாமல் போன இளவரசனை வளை வீசித் தேடி கொண்டிருந்தார்...
நிரன் அதை சாக்காய் வைத்து வேறு ஏதோ ஒரு காரணத்திற்காய் இரண்டு மாதமாய் மெடர்மானில் இருந்து வருகிறான்... அவனை மட்டும் அங்கு தன்னந்தனியாய் விட முடியாது என அனைவரும் புரட்சி செய்தாலும் தன்னவனின் செயலில் ஏதோ மறைந்துள்ளதை அறிந்து இம்முறையும் நிரனை " நீ கன்ஃபார்ம் என் கிட்ட மாட்டிக்கிட்ட ராசா " என்ற கன்ஃபர்மேஷனுடனே மெடர்மானுக்கு அனுப்பினாள் அஜிம்சனா
நிரன் மெடர்மான் சென்றதும் அவனை காண இயலாமல் யாரியை சமாளிப்பது தான் பெருந்துயராய் இருந்தது அனைவருக்கும்...
ஒரு வருடம் முன்பு கிடைத்த கோப்புகளை ஆராய்ந்து ஏதேதோ செய்து பல்வேறு முயற்சிகளின் பின் இப்போது தான் அதை ஒன்றிணைத்திருந்தனர் நமது விஞ்ஞானி நாயகர்கள்...
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே... இது ஷார்ட் யூடி தான்... ஃபில்லர் சப்ட்டரே எழுத வர மாட்டுதுப்பா... நா சீக்கிரமே ஸ்கூல் போ போறேன்... சோ யூடி அவசர அவசரமாவும் வரலாம்... ஸ்லோவாவும் வரலாம்... நீங்க தான் அட்ஜஸ்ட் பன்னிக்கனும்... சோஓஓஓ நாளைக்கு இன்னோறு யூடி குடுக்குறேன்... குட் நைட்... டாட்டா
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro