தேடல் - 16
தன்னை கண்டு முளித்த இருவரில் எவர் குழந்தையென தெரியாமல் சிரித்தான் ஷ்ரவன்.. அவனின் கரம் அவனோடு மோதிய ஸ்வத்தியை பாதுகாப்பாய் பிடித்திருக்க ஸ்வத்தியின் கரங்கள் சனாயாவை பத்திரமாய் ஏந்தியிருந்தது...
ஷ்ரவன் : என்ன பன்றீங்க குட்டி பேபீஸ்...
சனாயா : மா...மா என அவனை பார்த்து அழகாய் கைகளை நீட்டி அழைக்க ஸ்வத்தி அவளை ஷ்ரவனிடம் கொடுத்து விட்டு கைகளை நீட்டி முறுக்கினாள்...
ஷ்ரவன் : சனாயா குட்டி... என்ன டா தூங்கலையா பேபி இன்னைக்கு... அத்தைய ரொம்ப நைட் ட்யூட்டி பாக்க விட்டீங்க போலருக்கே என கண்களை தேய்த்த படி இவர்களை பார்த்து கொண்டிருந்த ஸ்வத்தியை ஒரு கரத்தால் அணைத்த படி பொருமையாய் கேட்க சனாயாவோ புரியவே இல்லையென்றாலும் அவன் வாயசைப்பதையே உன்னிப்பாய் உலக அதிசயமென பார்த்து கொண்டிருந்தாள்...
தன்னை தன்னவன் அணைத்ததும் இதற்காகவே காத்திருந்ததை போல் ஸ்வத்தியின் மனம் சற்று திருப்தியடைந்தது
சனாயா : மா...மா... மா..மா.. என இழுத்து இழுத்து தன்னை அழைத்தவளை பார்த்து
ஷ்ரவன் : என்ன சனாயா குட்டி ... என இவனும் அவளை போலே கேட்க அவன் கன்னத்தை தன் இரு கைகளாலும் பிடிப்பதை போல் கரத்தை பதித்து இன்னும் ஏதோ புரியாத தன் மழலை மொழியில் பேசினாள்...
ஸ்வத்திக்கா : இதத்தான் டா இவ அரை மணி நேரமா பேசிக்கிட்டு இருக்கா... கொஞ்சம் உன் மருமக கிட்ட கேட்டு ட்ரன்ஸ்லேட் பன்னுடா என கண்கள் மூடி அவனின் மீது சாய்ந்திருந்தவள் பாவமாய் கூறவும் ஷ்ரவன் சிரிக்க சனாயா ஒரு புறம் கை காட்டுவதை கண்டதும் அப்புறம் நோக்கிய ஷ்ரவன் அங்கு அந்த பழங்கால மண்டபம் இருப்பதை கண்டான்...
அதை ஒரு சில நொடிகள் பார்த்து கொண்டிருந்தவன் சனாயாவின் அழைப்பில் அவளிடம் திரும்பி அவள் மரபெஞ்சை காட்டுவதை கவனித்தான்...
ஷ்ரவன் : குட்டி பேபிக்கு அங்க போனுமா... சரி சரி வாங்க போவோமா... என ஸ்வத்தியை ஒரு புறம் இழுத்து கொண்டு அந்த மரபெஞ்சருகில் சென்றவன் அங்கே அமர்ந்து கொண்டான்...
அமர இடம் கிடைத்ததும் இன்னமும் அவனின் அணைப்பிலிருந்த ஸ்வத்தி வாகாய் அவன் மீது சாய்ந்து கொண்டு அவன் தோளில் தலை சாய்ந்து கொண்டாள்...
சனாயா : அத்தஅஅ என சத்தமாய் அழைக்க
ஸ்வத்திக்கா : ம்ம்ம்ம்
சனாயா : அவ்அவ்அவ்
ஸ்வத்திக்கா : உன் மாமாவ தான் உன் கிட்ட புடிச்சு குடுத்துட்டேன்ல.. அவன்ட்ட பேசு டி என்ன தூங்க விடு என சினுங்கியவளை தன்னோடு மேலும் சாய்த்து கொண்டே
ஷ்ரவன் : சனா குட்டி இங்க பாரு மாமாவ பாரு.. அத்த தூங்கட்டும் நாம அங்க பாப்போமா... என அவளை திசை திருப்பி வானத்தை காட்ட அதை திரும்பி பார்த்தவள் மீண்டும் ஷ்ரவனிடம் திரும்பி அவன் கன்னத்தை அடிக்க ஸ்வத்தி அதை கண்டு சிரித்தவாறு தன் வாகை மாற்றி ஷ்ரவனின் மடியில் தலை வைத்து கொண்டாள்...
சனாயாவும் ஷ்ரவனும் அழகாய் அவர்களின் மொழியில் மூழ்கி போக ஸ்வத்தி ஷ்ரவனின் மடியில் அவனின் மென்மையான தலை கோதலினால் தன்னை அறியாமலே உறங்கி போயிருந்தாள்...
சனாயாவும் பேசி பேசி ஒரு கட்டத்தில் ஷ்ரவனின் நெஞ்சிலே சாய்ந்து உறங்க தூங்கும் இருவரையும் தன் அரவணைப்பிற்குள் பாதுகாப்பாய் வைத்து கொண்டு கிழக்கில் உதித்த சூரியனை நோக்கிக் கொண்டிருந்தான் ஷ்ரவன்....
ஆனால் ஷ்ரவனின் பின் சரியாக முன்பு சனாயா கண்டிருந்த அதே இடத்தில் ஒரு வித்யாசமான பொருள் விழுந்து கிடந்தது... அதன் கீழ் பகுதியில் விட்டு விட்டு ஒரு ஒளி எரிந்து கொண்டிருக்க அந்த கல்லை கவனிக்காமல் ஷ்ரவனும் சற்று கண்ணையர்ந்தான்...
அந்த கல் கல் போல் இல்லா விட்டாலும் கல்லால் ஆன பொருள் போல் தான் இருந்தது... காலையிலே விழிப்புத் தட்டி எழுந்து வந்து பால்கெனியில் நின்ற யதீஷ் கொட்டாவி விட்டு கொண்டே எதற்சையாய் இந்த அழகிய காட்சியை காண அவனின் முகத்தில் விரிந்த புன்னகை அந்த கல்லை கண்டதும் பட்டென சுருங்கியது
பாரமான தலையை தூக்கியபடி தட்டுத்தடுமாறி தரையிலிருந்து எழுந்து நின்றான் முபல்லன்.. அவனின் சுற்றம் அனைத்தும் ஏதோ மரங்களால் சூழப்பட்டிருக்க தலையை பிடித்தவாறே நடந்து ஒளியை நோக்கி வந்தவன் சுல்லென அடித்த வெயிலில் பட்டென மீண்டும் நிழலுக்கு பார்வையை மாற்றினான்...
கண்கள் ஒளிக்கு பழகியதும் கண்களை திறந்து தன் சுற்றத்தை அவனித்தவன் பல வருடம் களித்து வெயிலில் பிற்பதை போல நிழலை விட்டு வெளியே செல்ல சற்று தயங்கினான்...
தீரா : அன்ட்டர்ட்டிக்கால இருந்துர்ப்பானோ...
முபல்லனின் தலை வலி வெயிலை கண்டதும் இன்னும் வீரியமாகியிருக்க சற்று ஒரு மரத்தை பிடித்தவாறு கீழே அமர்ந்து தன்னை சோதித்தான்...
அவனுக்கு பெரும்பாலும் ஏன் வந்தோம் எதற்காய் வந்தும் எங்கு வந்தோம் என அனைத்தும் தெரிந்திருந்தாலும் எப்படி வந்தோம் எங்கிருந்து வந்தோம் என்பதற்கான ஐடியாவே இல்லாமல் இருக்க அவன் " நான் யாரு " என்ற கேள்வியை கேட்காமல் இருந்ததே நிம்மதி தான் என நினைத்து கொண்டே அவனை கண்காணித்து கொண்டிருந்தாள் அவள் முபல்லனின் நினைவுகள அழித்து இங்கு அனுப்பிய ஷரூரா...
ஷரூரா அமர்ந்திருந்த அறையை பாதிக்கும் மேலாக பல நவீன கருவிகள் சூழ்ந்திருக்க அவை அனைத்திற்கும் மத்தியில் தனித்துவமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது நம் டெக்கரானிக் கடிகாரம்..
அங்கு தோன்றிய வெள்ளி ஒளியில் அந்த நிழல் வெளிவர வந்ததும் முதல் வேலையாக அந்த கடிகாரத்தை எடுத்து பார்த்தது...
அதன் அரவத்தில் தன் மடிக்கணினி மீதிருந்து கண்களை பிரித்து அந்நிழலை நோக்கினாள் ஷரூரா
ஷரூரா : ஹ்ம்ம் வாட்ச்ச கொண்டு வந்துட்டேன்... பட் நீங்க சொன்னது அதுல இருக்குமான்னு எனக்குத் தெரியல... என்றதும் அந்நிழல் அவளை பார்த்து தலையை மட்டும் அசைத்தது...
ஷரூரா : ஹவ் ஷி ஈஸ் டூயிங்.. ஆர் தே ஆல்ரைட் என சற்று கவலைத் தேய்ந்த குரலில் கேட்க தலையசைப்பையோ அல்ல கோடிங் போன்ற எழுத்துக்களையோ எதிர்பார்த்தவளை அதிர்ச்சியாக்குவதை போல்
அந்நிழல் : தெ ஆர் ஆல்ரைட் .. ஷி ஈஸ் ஃபைன் என மெல்லிய குரலில் ஒரு புன்னகையுடன் கூறியது
ஷரூரா சற்றும் நம்ப முடியாமல் அந்நிழலை பார்த்திருக்க அறிமுகமானதிலிருந்து வாயே திறக்காமல் எழுதி காட்டியும் தலையசைத்தும் தலையாட்டியும் தன் கருத்தை தெவித்து விட்டு திடீரென பேசியதும் அவளுக்கு நம்ப சில நொடிகள் தேவைப்பட்டது...
ஆனால் அவளின் அதிர்ச்சியை உணர்ந்ததை போல் பார்வையை கடிகாரத்திற்கு மாற்றி கொண்டு
அந்நிழல் : நிரன் நல்லா இருக்கான் இல்லையா
ஷரூரா : உங்களுக்கு தமிழ் தெரியுமா என அதிர்ச்சியாய் கேட்க அந்த கடிகாரத்தை பார்த்தவாறே அருகில் இருந்த ஒரு காகிதத்தில் பென்னை எடுத்து ஏதோ எழுதி விட்டு கடிகாரத்தை விட்டு கண்ணெடுக்காமல் அக்காகிதத்தை அவளிடம் நீட்டியது...
அக்காகிதத்தில் " வொய் நாட் " என அவளின் கேள்விக்கு ஒரு கேள்வி பதிலாய் வந்திருந்தது...
ஷரூரா : ஹ்ம் உங்களுக்கு இங்லிஷ் மட்டும் தான் தெரியும் போலன்னு நினைச்சேன்... யா ஹி ஈஸ் சம்வாட் ஃபைன் நௌ.. அஜிம்சனா அவங்கள தேடி போய்ட்டா இப்போ இருக்குரதுக்கு இன்னும் பெட்டரா ஃபீல் பன்னுவாங்க..
அந்நிழல் : கண்டிப்பா சீக்கிரமே அஜி அவன தேடி போவா.. என நிமிர்ந்து அந்த கடிகாரத்தை ஷரூராவிடம் நீட்டியது
ஷரூரா : இது எனக்கெதுக்கு.. என கேட்டதற்கு அந்நிழல் பதிலளிகவில்லை.. மாறாக " தேவைப்படலாம்... உங்க கிட்ட இருக்குரது சேஃப் " என எழுதி காட்டியது
ஷரூரா : நீங்க ஏன் இப்டி நடந்துக்குறீங்கன்னு எனக்கு புரியல... பட் அவங்கள பத்தி கேக்கும் போது வாய திறந்து பேசுறீங்க... அதுக்கு காரணமென்ன
அந்நிழல் : அவங்க தான் என் ஃபமிலி.. அவங்களபத்தி எழுதி காற்றத விட சொல்லி கேட்டு தெரிஞ்சிக்கத் தான் நான் விரும்புறேன் என கூறி விட்டு இவ்வளவு நேரம் அதன் கரத்தில் " அன்ஸர் மீ அன்ஸர் மீ அன்ஸர் மீ " என விடாப்பிடியாய் வந்து கொண்டே இருந்த கோடிங்கை காட்டி ஒளிர்ந்தது பச்சையும் வெள்ளையும் கலந்த அதே டெக்கரானிக் கடிகாரம்...
சில நிமிடங்கள் முன்பு
தமிழகம்
மித்ரான் நிரனின் கடிகாரம் அக்டிவான சில நொடிகளிலே அவன் அருகிலே இருந்த மற்றொரு வாட்சின் சின்னம் மறைந்திருப்பதையும் அந்த நேரம் சரியாக நிலவிலிருந்து மற்றொரு வித்யாசமான சிக்னல் வருவதையும் கண்டறிந்தான்...
ஆனால் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அஜிம்சனாவின் கடிகாரத்தை குறித்த குறியீட்டின் அருகிலே வேறொரு குறியீடு சட்டென வந்து விட்டு வந்த வேகத்திலே பட்டென மறைந்ததை இவர்கள் இருவரும் கவனிக்கவில்லை...
நரா உடனே வேகவேகமாய் நிரனின் கடிகாரத்திற்கு தன் கடிகாரத்திலிருந்து என்ன ஆனதென்று கேட்க விடாமல் கோடிங் அனுப்ப மறு புறம் வியாட்னம் அருகில் காட்டி கொண்டிருந்த சத்யாவின் கடிகாரத்திற்கு மித்ரான் வேகவேகமாய் கோடிங் அனுப்பி கொண்டிருந்தான்...
இருவருக்கும் எந்த பதிலும் வராததால் ஒரு கட்டத்தில் இருவரும் வேகவேகமாய் அன்சர் மீ அன்சர் மீ என அனுப்பி கொண்டே இருக்க சத்யா அந்த அனைத்து கோடிங்கையும் பார்க்கிறான் என மித்ரானுக்கு தெரிந்த ஒரு சில நொடிகளிலே வியாட்னத்தில் தெரிந்து கொண்டிருந்த சத்யாவின் குறியீடும் மறைந்து போனது...
நீல வானத்தை நோக்கிக் கொண்டு அந்த உயர்ந்த பில்டிங்கின் மீது அமர்ந்திருந்தான் சத்யா... அவனின் கேசம் தோள் வரை நீண்டு கழுத்து வரை அழகாய் வளர்ந்திருந்தது...
அதை வெட்ட மனமே வராததாலோ அல்ல கொரோனாவினாலோ முடிவெட்டும் கடைக்கே செல்லாததை போல் தலை மமுடியை நன்கு வளர்த்து வைத்திருந்தான்...
வேர்வையால் அவன் குளித்திருக்கையில் அருகிலிருந்த பாட்டிலை எடுத்து கதவிலிருந்து நீர் அனைத்தையும் அவன் தலையில் ஊற்றினான்...
அவனின் ஈரமான கூந்தல் நெற்றியில் ஒட்டி கொண்டு அவன் பார்வையை அதிகபடியாய் மறைக்க அதை பின்னுக்கு அழுந்த தள்ளி தலையை சிலிப்பியவன் அந்த வானத்தை இலக்கின்றி நோக்கிக் கொண்டிருந்தான்...
அவனின் டெக்கரானிக் கடிகாரம் இப்போது அமைதியடைந்திருந்தது... அவன் அதை முழுமையாய் அணைத்து வைத்திருந்தான்...
மித்ரானின் கேள்விகளுக்கு இப்போதைக்கு பதிலளிக்க அவனுக்கு மனம் வரவில்லை... அவனின் மனக்கண்ணில் அனைவரின் சிரித்த முகமும் வந்து வந்துச் செல்ல லியானை இறுதியாய் கண்ட காட்சி அவன் கண்கள் முன் படமாகி அவனை இம்சிக்கத் தொடங்கியது...
ஆழப் பெருமூச்சை இழுத்து விட்ட சத்யன் அவனின் கடிகாரத்தை மீண்டும் உயிர்பிக்க அவன் உயிர்பித்த அடுத்த நொடியே நிரன் என அஜிம்சனாவின் அலரல் அங்கு எதிரொலிக்க திடுக்கிட்டு தன் கடிகாரத்தை நோக்கினான்....
அதில் ஏதோ ஒரு காரணத்தினால் அஜிம்சனாவின் கடிகாரத்தோடு அவன் கடிகாரம் இணைக்கப்பட்டிருந்தது.... அஜிம்சனாவின் அழுகுரலோடு ஒரு குழந்தையின் அழுகுரலும் சத்தமாய் கேட்க சில நொடிகளிலே அஜிம்சனாவின் சத்தம் நின்றதும் பதட்டம் முகத்தை நிறைக்க நிரனை தொடர்பு கொள்ள முயற்சித்து அது முடியாமல் போகவும் பதறி எழுந்தான்...
ஷரூரா : ஹலோ என கத்தவும் நடந்ததை நினைத்து பார்த்து கொண்டிருந்த அந்நிழல் வெளி வந்தது....
அல்ற்றா மூன்
மயக்கம் மெதுமெதுவாய் மட்டுப்பட தன் இதயத்தின் மீது எவரின் கரமோ வருடுவதை போலுணர்ந்த நிரன் சட்டென அக்கரத்தை பிடிக்க மற்றொரு கரம் அவன் கேசத்தை வருடவும் அந்த தொடுகை தன்னவளுடையதென உணர்ந்து கொண்டவன் கடினப்பட்டு தன் கண்களை பிரிக்க அவன் முன் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அஜிம்சனா
நிரன் : நீ போகலையா என மெதுவாய் கேட்க அவள் அதற்கு மறுப்பாய் தலையசைக்க வாயில் ஒரு குட்டி ஊட்டியை வைத்திருந்த யாரி அஜிம்சனாவை தாண்டி நிரனிடம் ஊரி வந்தாள்...
அஜிம்சனா : உன்ன விட்டு எப்டிடா போவேன்.. இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சு தான் என்ன போக சொன்னியா
நிரன் : நீ கெளம்பு டி... உடனே பூமிக்கு போ... என்னால இதுக்கு மேல முடியாது... நம்ம வீட்ட கிங் கண்டுப்புடிக்க கூடாது... உடனே கெளம்பு
அஜிம்சனா : என் கூட வா நிரன்... திரும்பத் திரும்ப என்ன அழ வைக்காத டா என அவனின் கன்னத்தை ஏந்தி அழுகையுடன் கூற கரத்தை உயர்த்தி அவளின் கண்ணீரை துடைத்தவன்
நிரன் : நா உன்ன விட்டு எங்கையும் போக மாட்டேன் டி... என்றவனை அவள் வலிக்கக் கூடாதென மென்மையாய் அணைக்க அப்போதும் அவனுக்கு வலி எழுந்தது...
அஜிம்சனா : சாரி டா .. சாரி சாரி என அவனின் அரவத்தில் சட்டென எழுந்தவளின் தலையை கீழ் அழுத்தி அவளின் இதழை சிறை பிடித்தான்...
அஜிம்சனா அவனின் காயத்தை தொடாதவாறு அவனின் கழுத்தை மட்டும் பிடித்துக் கொள்ள இதழ் அணைப்பிலிருந்து பிரிந்து அவளின் நெற்றிறோடு நெற்றி முட்டினான்.... தான் நலமாய் உள்ள தகவல் வார்த்தையை விடுத்தும் அவனின் செயல் அவளுக்கு உணர்த்தியது...
அவனின் இதயம் இருக்க வேண்டிய பகுதியில் ஒரு பெரிய வடு தழும்பாய் அமைந்திருந்தது... அதையே அஜிம்சனா வருட யாரியை கேட்க வந்த நிரன் அவள் மகளின் " ம்..ம்..யா...ப்..யா.. " என்ற தெளிவின்றி வந்த மழலை மொழியில் திரும்பி பார்க்க அவளோடு திரும்பி பார்த்த அஜிம்சனா அவளை விட்டு விட்டு நிரனின் மடியில் அமர்வதற்காக அவனை நோக்கி ஊரி வந்தவளை தூக்கச் சென்றாள்...
நிரன் யாரியை தூக்க முன் வர இவ்விருவருக்கும் முன்பாக அவர்களின் முன்னிருந்து வந்த ஒரு கரம் யாரியை தூக்கியது
இருவரும் அதிர்ந்து போய் நிமிர அவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குவதை போல அவர்களை பார்த்தபடி ஒரு குறுநகையுடன் நின்றான் சத்யா...
யாரி அழத் தயாராகி சத்யாவை கண்டதும் அமைதியானதை எவரும் கவனிக்கவில்லை... அவள் பாட்டிற்கு அவன் நெஞ்சில் சாய்ந்த படி அவனின் கேசத்தை பிடித்து விளையாட " யாரி குட்டி ... அம்மாப்பாவ விட்டுட்டு நாம மட்டும் போய்டலாமா பூமிக்கு... நீங்க என் கூட வரீங்களா " என்ற சத்யாவின் குரலிலே இருவரும் நிலையடைந்தனர்...
அஜிம்சனாவின் முகத்தில் லியான் வந்து விட்டானோ என்று தெரிந்த ஒரு இரேகை சில நொடிகளிலே அவன் கடிகாரத்தை பார்த்ததும் தெளிவடைந்தது...
அஜிம்சனா : சத்யா அண்ணா... என அழைக்க
சத்யா :பேச டைமில்ல தங்கச்சிமா... நாம இங்கிருந்து உங்க வீட்டுக்கு போகலாம்...
நிரன் : இ..இல்ல மச்சான் பூமிக்கு போகனும் உடனே
சத்யா : பூமிக்கா..
அஜிம்சனா : பேச டைமில்ல நாம கெளம்பளாம்... எழுந்திரு நிரன் என பொருமையாய் எழுப்பினாள்...
சத்யா : நீ புள்ளைய புடி தங்கச்சிமா... மச்சான் இரு டா என யாரியை அஜியிடம் கொடுத்து விட்டு வேகமாய் நிரனுக்கு எழ உதவினான்...
அஜிம்சனா அவளின் கடிகாரம் மூலமாக ஒரு நீல நிற பட்டனை அழுத்தி அவர்கள் நாழ்வரையும் அங்கிருந்து கண்ணிமைக்கும் பொழுதில் மறைய வைத்தாள்....
தேடல் தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro