தேடல் - 15
அந்த அழகிய காலை வேளையில் வீட்டின் வளாகத்தில் நுழைந்த காரிலிருந்து காக்கி உடையில் வேர்த்து விருவிருக்க உடலை முறுக்கிய சோர்வுடன் வெளியேறினான் ஷ்ரவன்...
அரை மணி நேரம் முன்பாக வந்த ஒரு அவசர அழைப்பினால் உறக்கத்திலிருந்து திடுதிபுவென எழுந்த ஷ்ரவன் காலை நான்கரை மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்த காண்டில் வீட்டை விட்டு கெளம்பிச் சென்றான்...
அவன் சென்ற இடம் இவர்கள் வீடு அமைந்திருக்கும் அருகிலே உள்ளதால் இவன் நினைத்ததை விடவும் விரைவாய் அவ்விடத்தை சென்றடைய தன் காரை விட்டு இறங்கியவனின் கண்கள் மூன்றாண்டுகள் பின் அதிர்ச்சியில் விரிந்தது...
மூன்றாண்டுகள் முன் அந்த பறந்து விரிந்த வானில் அவன் கண்ட அந்த எரிக்கல்லிற்கு பின் எதுவும் இவனை இந்தளவிற்கு அதிர்ச்சியடையச் செய்யவில்லை...
அந்த ஒரு ஏக்கர் வேற்று நிலத்தை சுற்றியிருந்த வேலியை பிடித்து கொண்டு நின்றிருந்த ஐம்பதிற்கும் மேற்பட்டோரின் கண்கள் அந்த நிலத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தையே துளைத்தெடுக்க பலரும் தங்களின் செல்பேசிகளால் பசக் பசக் என படம் பிடித்தவாறு ஏதேதோ முனுமுனுத்து கொண்டிருந்தனர்.... அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றி பல காவலர்கள் தடுப்பமைத்து அது மற்றவர்கள் பார்வையில் படாதவாறு வேகாவேகமாய் செயல் பட்டு கொண்டிருந்தனர்...
ஒரு பக்கத்தில் பத்திரிக்கை நிபுனர்கள் காவலர்களை தாண்ட முயற்சி செய்து கொண்டிருக்க கேமராமன்கள் அவர்களின் கமராக்களால் அந்த நிலத்தை வெவ்வேறு அங்கிலில் புகைபடமெடுத்து பிசியாக அவரவர் நிறுவனத்தின் தொகுப்பாளர்கள் பேசுவதை லைவ் டெலிகஸ்ட் செய்து கொண்டிருந்தனர்...
ஷ்ரவன் வேகமாய் அவர்களை தாண்டி நேர் வழியில் செல்ல அந்த தொகுப்பாளர்கள் வேகமாய் வந்து ஷ்ரவனை சுற்றி வளைத்தனர்...
" இந்த சம்பவத்த பத்தி என்ன நினைக்கிறீங்க சர் "
" இது நமக்கான ஆபத்தா.. இல்ல வேற எதாவதுமா "
" இப்டி ஒரு சம்பவம் நடந்தும் அத ஏன் காவல்துறை உலகத்து கிட்டேந்து மறைக்க நினைக்கிது "
" ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மீடியாவ உங்க போலீஸ் டிப்பார்ட்மென்ட் உள்ள விட மாற்றாங்க... நாங்க அங்க இருக்குரது பாக்க ஏன் நீங்க தடுக்குறீங்க "
" சொல்லுங்க ஸர்... ஏன் அமைதியா இருக்கீங்க .. "
" இது விண்வெளிலேருந்து வந்த ஆபத்தா இல்ல எதாவது ஒரு கிரகம் நம்ம கூட தொடர்பு வைக்க முயற்சி பன்னுதா ஸர் "
இவ்வாறாக பதிலளிக்கவே விடாமல் தொடர்ச்சியாக தொடுக்கப்பட்ட கேள்விகளில் ஷ்ரவனின் மூளை ஒரு கேள்வியில் செயழிலந்து உறைந்திருக்க அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்காமல் அவர்களனைவரையும் தாண்டி கொண்டு அவன் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்றான்....
ஷ்ரவனை பற்றி வெகுவாய் அறிந்திருந்த மீடியா துறையினர் அவனிடம் வம்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு மனதை கொண்டு வராததால் மேலும் அவனை பிடித்து உலுக்குவதை விட்டு விட்டு அவரவர் சனலில் நடந்ததையும் அசிஸ்ட்டன்ட் கமிஷ்னர் பதிலளிக்க மறுத்து விட்டதாகவும் கூவத் தொடங்கினர்...
அதை அனைத்தையும் ஷ்ரவனின் செவிகள் தீட்டினாலும் எதுவும் மூளையில் பதியவில்லை... வேகவேகமாய் அந்த இடத்தை நோக்கிச் சென்றவனை நோக்கி காக்கி உடையிலிருந்த இளைஞன் ஓடி வந்தான்...
அவன் வாய் திறக்கும் முன்பாக அந்த இடத்தை அடைந்த ஷ்ரவன் வேகமாய் தடுப்புகளை அகற்றி முன்னேறி சென்று அவனுக்கு பத்தடிக்கு முன்பாக இயற்கையாய் உருவாகியிருந்த அந்த ஆழமான பள்ளத்தை நோக்கினான்...
அந்த பள்ளத்திற்குள் ஆழமாக சென்று மண்ணோடு மண்ணாக பாதி புதைந்த நிலையில் ஏதோ ஒரு ஊதா நிற கல்லின் மேடான பகுதி முட்டையின் மேடை போல் தென்பட்டது...
அந்த பள்ளத்திற்குள்ளே இருவதிற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வேகவேகமாய் அந்த கல்லை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்... அவர்களை சுற்றி பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களால் முடிந்த வரை மண்ணை தோண்டி தோண்டி அந்த கல்லை மணலை விட்டு எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்....
ஷ்ரவன் அந்த இடத்தை தன் அகல விரிந்த கண்களால் படம் பிடித்து கொண்டிருக்க அவனருகிலிருந்த இளைஞனோ நடந்தவையை கூறத் தொடங்கினான்..
இரவு நடுநிசியில் விண்ணிலிருந்து வேகமாய் முன்னோக்கி வந்த ஒரு குட்டி ஒளி மெதுமெதுவாய் பெரும் ஒளியாய் உருப்பெற்று இறுதியாய் இத்துனை பெரிய கல்லாய் மாறி மண்ணில் விழுந்து நிலத்தை உள்வாங்க வைத்து தனது அதீத வேகத்தை நிலத்தில் காட்டி ஐம்பதடிக்கும் மேலாக சென்று வேகம் குறைந்திருக்கிறது...இதை இரவு நேர பயணத்தில் இருந்த ஒருவர் கண்டு காவலர்களுக்கு தெரிவித்துள்ளார்..
ஷ்ரவன் அவன் கூறிய அனைத்தையும் அமைதியாய் கேட்டு கொண்டே அந்த கல்லை உறுத்து நோக்கிக் கொண்டிருந்தான்... அது எரிக்கல் போல ஒரு உருவை கொண்டிருந்தாலும் அதை ஆய்வு செய்திருந்த விஞ்ஞானிகள் ஒரு சாதாரண எரிக்கல் தான் என கூறியிருந்தாலும் அவன் மனம் அதை நம்பும் நிலையை தாண்டி மூன்றாண்டுகள் கடந்திருந்தது...
தன் பொருப்பை முடித்து விட்டு அந்த இடத்திற்கு பலத்த காவலை பிரப்பித்து விட்டு தன் குழப்ப மனநிலையிலே வீட்டை நோக்கி புறப்பட்டான் ஷ்ரவன்...
காரை விட்டு இறங்கியதும் கரங்களை நீட்டி முறுக்கியவன் முதல் வேலையாக தன் அறைக்குச் என்று குளித்து விட்டு கீழே வந்தான்...
தலையை துவட்டி கொண்டே வந்தவன் குலம்பி அருந்தலாம் என்ற எண்ணத்தில் சமையலறையை நோக்கிச் செல்ல திடீரென அவனின் போலீஸ் மூளை எழுந்து கொண்டு அவன் பார்வையை அந்த ஹால் முழுவதும் சுழல விட்டது...
தன் சுற்றுவட்டாரத்தை நோக்கிய ஷ்ரவன் மெதுவாய் கேட்ட அந்த முனுமுனுத்தலை பின் தொடர்ந்துச் சென்றவன் பின் பக்கமிருந்த கார்டனிற்கு செல்ல வீட்டிற்குள் இருந்த கதவின் பின்னே அந்த சத்தம் கேட்பதை உறுதி படுத்தினான்...
தெளிவின்றி கேட்டு கொண்டிருந்த அந்த முனுமுனுப்பு திடீரென " முளிச்சு முளிச்சு பாக்காத டி.. தூங்கு டி.. சித்தியும் தூங்கனும்ல " என சினுங்கலாய் கேட்ட குரலில் அந்த கதவை திறந்து அடிக்கப் போனவன் சட்டென சமைந்து நிற்க குழந்தையுடன் பதறி போய் திரும்பும் முன்பாக தடுமாறி தன்னவனின் மீது சாய்ந்தாள் ஸ்வத்திக்கா...
அல்ற்றா மூன்
நீல நிற நவீன ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந்த எண்கள் இறுதியாய் பூஜியத்தில் முடிவடைய தன் நெஞ்சில் சாய்ந்து உறங்கிய மகளை அணைத்த படி அந்த நவீன கடிகாரத்தை தன் தலை திருப்பி நோக்கினாள் அஜிம்சனா
நார்ப்பத்தி எட்டு மணி நேரம்... அவன் கூறிய நார்ப்பத்தி எட்டு மணி நேரம் முடிவடைந்தும் அவன் இன்னும் வராதது பெண்ணவளின் மனதை நெருடலாக்கியிருக்க மெல்ல மனதில் தலைதூக்க தொடங்கிய பதட்டத்துடன் அந்த கதிரையை விட்டு வேகமாய் எழப் போனவளின் அசைவில் உறக்கத்திலே சினுங்கிய அவளின் மகள் தன் பிஞ்சு விரல்களால் அவளின் உடையை சுரண்டி தலையை அழுந்த பதித்து கொண்டாள்...
வேகமாய் அவளை அணைத்த படியே எழுந்த அஜிம்சனா யாரியின் சினுங்கல் நின்றதை உறுதி படுத்தி விட்டு அவளின் நெற்றியில் மென்மையாய் ஒரு இதழ் முத்தம் பதித்தாள்...
அடுத்த சில நொடிகளில் அவளின் கழுத்திலிருந்த டாலர் ஒளிர்வதை கண்ட அஜிம்சனா சடாரென அவள் இதயத்தில் பல நூறு ஊசிகளை இறக்கியதை போன்ற ஒரு பெரும் வலியை உணர்ந்தாள்...
அந்த வலி திடீரென எழுந்ததால் அஜிம்சனா தடுமாறி கீழே விழ உறக்கத்திலிருந்து எழுந்த யாரி வீரிட்டு அழத் தொடங்கினாள்...
கரங்கள் இரண்டாலும் அவளை விழும் முன் இறுக்கி பிடித்திருந்தவள் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு தன் இதயத்தை இறுக்கி பிடிக்க அவளின் கண்கள் கண்ணீரால் நிறம்பியது... அவளின் அதரங்கள் தனிச்சையாக " நிரன் " என அவளவனின் பெயரை உச்சரிக்க யாரியின் அழுகை இன்னும் அதிகமானது...
தன் வலியினால் எழ இயலாமல் தடுமாறி அவளை மீண்டும் தூக்க முயன்ற அஜிம்சனா தன்னிலை இழந்து தன் இதயத்தை பிடித்த படியே அந்த கட்டிலில் விழுந்தாள்...
அந்த வலி அவளை அசைய ஒரு நொடியும் அனுமதிக்கவில்லை... அதற்கு மேலும் பொருத்துக் கொள்ள இயலாமல் அஜிம்சனாவின் வலி மிகுந்த அலரல் அந்த அறையோடு எதிரொலித்தது...
ஆனால் அது வெளியே தப்பிச் செலும் அளவிற்கு அந்த அறையின் சுவருகள் இளகுவானதாய் இருக்கவில்லை...
அவளின் அலரலினால் மீண்டும் யாரி கத்தி அழ தன் உயிர் இங்கு அனுபவிக்கும் வேதனையை அங்கு மூர்ச்சையாகியிருந்த நிரனின் மனதிற்கு அந்த நீல டாலர் வலியை உயர்த்தி உணர்த்திக் காட்டியது...
அந்த டாலர் நிலவில் உள்ளோர் அனைவரிடமும் பொதுவாய் உள்ள ஒன்று.. அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்றதை போல் அது தன் செயல் பாட்டை மாற்றி அந்த அளவு கடந்த உணர்வை சரி படுத்த கூடிய அந்த ஆடியோ ரெக்கார்டரை ஒலி பரப்பும்.. இதுவே அந்த மனிதரின் உயிருக்கும் உடலுக்கும் ஏதேனும் தீங்கிழைக்கப்பட்டால் அம்மனிதரின் உடலோடு ஓருயிரான மறு மனிதரிடம் உள்ள டாலர் அவர்களுக்கு அதே வலியை கொடுக்கும்...
இன்றளவும் நிரன் மற்றும் அஜிம்சனா ஒருவரோடு ஒருவர் இணையாதிருந்தாலும் இந்த தொடர்பு இருவருள் எவ்வாறு இருந்து வருகிறதென குரோபடரான் ராஜாவிற்கும் தெரியவில்லை... ஆனால் அந்த டாலரின் உண்மை செயல்பாடு ஒருவரோடு ஒருவர் மனம் இணைந்து அந்த பிணைப்பு அனைத்தையும் சீர் படுத்த அந்தந்த மனிதரின் மனதை நிலையாய் வைத்திருந்தாலே அந்த மறு உயிரை கண்டு கொண்டு அவர்களை இவ்வழியிலும் இணைக்கும்...
இவர்களின் இந்த தொடர்பை முறிக்க அந்த இரு டாலர்களில் ஏதேனும் ஒன்றை அந்த மனிதரிடமிருந்து அகற்றினால் மட்டுமே முடியும்...
நிரனின் உடலில் அரை மணி நேரம் விட்டு விட்டு விழுந்த அடிகள் இப்போது அஜிசனாவின் மீது ஒரேடியாய் வந்து விழ அதை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவளின் உடல் வலு கொண்டிருக்காததால் அந்த அழுகையின் ஊடே தன் இயலாமையோடு மயங்கினாள் அஜிம்சனா..
தன் அன்னையின் அருகாமையை உணர்ந்திடாத குழந்தை தன் தூக்கத்தை துறந்து படுக்கையிலிருந்து பிரண்டு தலையை தூக்கி அழுது கொண்டே அஜிம்சனாவை நோக்கியதும் அவளிடம் ஊரினாள்...
அஜிம்சனாவின் கன்னத்தை இவளின் பிஞ்சு கரத்தினால் அடித்து ம்மா ம்மா என அவளை அழைத்த படியே அழ சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிரனின் கரங்கள் வேகமாய் முயன்று சென்று தன் கழுத்தில் இருந்த டாலரை பிடுங்க முயசிக்க அவன் உயிரோடும் உடலோடும் இந்திருக்கும் அந்த டாலர் அவன் காழுத்தை விட்டு இம்மியும் நகரவில்லை...
இங்கு வந்திருந்த அப்பெண் என்ன செய்தாலோ... அந்த செயல் எக்காரணத்தினாலோ அவனின் டாலரை உயிர்பிக்க வைத்து விட்டது.. தான் அஎதற்காய் தனது அனைத்து செயல்பாட்டையும் முறித்து கொண்டோமோ அதுவே நடப்பதை நிரனின் இதயத்தால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை... அவன் வேண்டுமென்றே தான் டெக்கரானிக் கடிகாரத்தையும் அவன் செல்பேசியையும் அணைத்தான்... இவன் டெக்கரானிக் கடிகாரத்தோடு தன் டாலரை இணைத்திருந்ததால் அதையும் மிக எளிதாய் அணைத்திருந்தான்...
எனெனில் மெடர்மானில் உருவாக்கப்பட்ட அந்த டெக்கரானிக் கடிகாரத்தின் மின்சார அமைப்பை எந்த உலகத்தின் செயலியினாலும் எதிர்க்க முடியாது...
நிரனாலும் அதற்கு மேல் முடியவில்லை... மீண்டும் அவனை மயக்கம் அன்பாய் சென்று அணைத்து கொண்டது...
தன் அன்னை தனது எண்ணற்ற அழைப்பிலும் எழாததால் யாரி அவளோடு ஒன்றி கொண்டு பயத்தில் சுருங்கியபடி அழுதாள்...
அந்த அறையை சூழ்ந்த ஒரு வெள்ளி நிற ஒளியை கவனிக்கும் அளவிற்கு அங்கு எவரும் இல்லாததால் தன் பாட்டிற்கு மெதுவாய் தோன்றிய அந்த ஒளி இருள் சூழ்ந்திருந்த அறையில் ஒளியை பரப்ப அது மெதுவாய் மறைந்ததும் கட்டிலில் மயங்கி கிடந்த அஜிம்சனாவை நோக்கிச் சென்றது அந்த நிழல்...
அந்த நிழலின் கரங்கள் குழந்தையை நோக்கிச் செல்ல மேலும் மேலும் தன் தாயோடு ஒன்றிய யாரி அந்நிழலின் கரம் பட்டதும் இன்னும் வீரிட்டு அழ அந்நிழலோ அதை பொருட்டாய் எண்ணாமல் யாரியை தூக்கி சமாதானம் செய்யத் தொடங்கியது...
" குட்டி பாப்பா அழக் கூடாது.. அங்க பாருங்க அம்மாவும் அழராங்க ... அவங்கள எழுப்பனும்ல ... அழ கூடாது நீங்க... இங்க பாருங்க " என்றதும் ஏதோ புரிந்து கொண்டதை போல் யாரி மெதுமெதுவாய் சமாதானமடைந்தாள்... ஆச்சர்யமே
யாரி சமாதானமடைந்து அழுகையை நிறுத்தியதும் அவளின் கண்ணீர் மழையை மென்மையாய் துடைத்து விட்ட நிழல் அஜிம்சனாவை நோக்கிச் சென்று யாரியை அவளோடே படுக்க வைத்தது
தன் கருவண்டு விழிகளால் அந்நிழலை விழித்து விழித்து பார்த்த யாரியின் நெற்றியில் அந்நிழல் அன்பாய் ஒரு முத்தம் பதித்து அஜிம்சனாவின் தலையை வருடியது
ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட அந்நிழல் அவளின் காதருகில் குனிந்து " ரிலக்ஸ் அஜிமா.. ரிலக்ஸ்.. நிரன் ஈஸ் ஆல்ரைட் நௌ " மெல்லிய குரலில் கூறி விட்டு நிமிர்ந்தது....
அது அஜிம்சனாவின் சித்தத்திற்கு எட்டியதோ இல்லையோ அந்த டாலரின் வாயிலாக மனதிற்கு பாய்ந்திருந்தது...
வலியினால் இறுக்கி மூடியிருந்த அவளின் கரம் தளர தனிச்சையாய் அவளின் நெஞ்சில் சாய்ந்து அவளோடு ஒன்றி கொண்ட யாரியை அவளின் கரங்கள் மெதுவாய் அணைத்து கொண்டது
அதை கண்டு அந்நிழல் மெதுவாய் புன்னகைத்து விட்டு அங்கிருந்து அந்த வெள்ளி ஒளியிலே மீண்டும் மறைய கண்களை மெதுவாய் திறந்து தன்னால் முடியவில்லை என்றாலும் கடினப்பட்டு எழுந்து தன் கண்களை அந்த அறை முழுவதையும் சுற்ற விட்டு ஏமாற்றத்துடன் இறுதியாய் மகளின் மீது பதித்தாள் அஜிம்சனா..
தன் ஆராய்ச்சி கூடத்தில் கைகளை முறுக்கி கொண்டு அந்த காகிதத்தை பார்த்து கொண்டிருந்த ஃத்வருணின் மூளையில் பலவாறான சிந்தனைகள் சுழன்றடிக்க அவனின் சிந்தை இறுதியாய் சென்று அந்த காகிதத்திலே நிலைத்தது
அதில் புரியாத மொழியில் ஏதோ எழுதப்பட்டிருக்க அதன் கீழ நீல நிற மையில் ஒரு சிறிய கோடாய் " ஃத்வருணின் மதி மட்டும் " என எழுதியிருந்தது....
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே... யாரும் கதைய தூக்கி போட்டு போய்டாதீங்க ப்லீஸ்... எல்லா ட்விஸ்ட்டையும் ஓப்பன் பன்றதுக்கு முன்னாடி நா எல்லாத்தையும் காமிக்கனும்னு தான் பொருமையா போய் கிட்டு இருக்கேன்... கோவப்படாதீங்க... ஒன்ஸ் நிரன் அஜிம்சனா அப்ரம் சத்யன் பூமில இவங்க கூட ஜாய்ன் ஆய்ட்டா நா எல்லாத்தையும் ஓப்பன் பன்ன ஸ்டார்ட் பன்னீடுவேன்... ஹிஹிஹி அதுவர பொருமையா இருங்க... குட்நைட்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro