தேடல் - 13
சைத்தான்யா தமிழகத்தில் தர்மன் உருவாக்கிய அவரின் சொத்துப்பத்துக்கள் அனைத்திற்கும் ஒரே வாரிசு... தர்மன் பேராசைக்குரியவராய் இருப்பினும் குடும்பத்தின் மீது கொள்ளை பிரியம் கொண்டவர்...
சைத்தான்யா தர்மன் மற்றும் வேதவள்ளி தம்பதியினர் தவமிருந்து பெற்ற பிள்ளை என்பதால் தர்மனுக்கு சைத்தான்யா அவரின் உயிருக்கு சமமானவன்.. அவனை நெஞ்சிலே சுமந்து வளர்த்தவர்...
தந்தை திடீரென காணாமல் போனதும் வெளிநாட்டிற்கு படிப்பிற்காய் அனுப்பப்பட்டிருந்த சைத்தான்யா தமிழகம் திரும்பினான்... வேதவள்ளி தர்மனை எண்ணி மனதுக்குள்ளே குமுறினாலும் அவர் செய்த பாவங்களை அறிந்திருந்த அவருக்கு அவரை எண்ணி கண்ணீர் விட மனமில்லை...
தன் பொருப்பிற்கு வந்த எந்த நிறுவனத்தையும் நடத்த மாட்டேன் என வேதள்ளி ஒற்றை காலில் நின்றதால் அவை அனைத்திற்கும் சைத்தான்யா தலைமை பொருப்பானான்..
இயல்பிலே முன்கோபியான சைத்தான்யா தன் தந்தையின் மறு முகம் அறியாமல் அவர் இறுதியாய் காணாமல் போகும் முன்பு அவரை எவரோ கடத்தி சென்றதாய் கூறுவதை கேட்டு அவரை அநியாயமாய் கொலை செய்து விட்டனர் என நம்பினான்...
அவர் உயிருடன் இருக்கிறாரா அல்ல மரணித்து விட்டாரா.. உயிரோடு இருந்தால் எங்கு வாழ்கிறார்.. ஏன் இன்னும் வீடு திரும்பவில்லை... அப்படி மரணித்திருந்தால் அவரின் உடல் எங்கே.. கடத்தப்பட்டிருந்தால் ஏதேனும் உபாயம் இருக்க வேண்டாமா என பலவாறு அவனையும் குழப்பி வழக்கை மூடியது காவல் துறை
இருந்தும் தந்தை பாசம் அவனுள் இன்னும் கொதிக்க தானே முன் வந்து இறுதியாய் தர்மன் இருந்தார் என நம்பப்பட்ட இழுத்து மூடிய தர்மனின் விண்மில் ஆர்கனைஸேஷனின் சீசிட்டீவி ஃபூட்டேஜுகளை அலசி அதில் ஒன்றையும் கண்டறிய முடியாமல் இறுதியாக ஒரு தனி அறையில் ஒரு பெண் அன்றைய தினத்தில் அடைக்கப்பட்டிருப்பதையும் அவளை முகமுடி அணிந்த ஒருவன் கதவை உடைத்து வெளியே இழுத்து செல்வதையும் கண்டு அதை பற்றி அலசி அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ரியாவை தர்மன் அடைத்து வைத்திருந்ததாய் அறிந்து கொண்டான்...
தன் ஊழியரையே ஏன் தந்தை அடைத்து வைக்க வேண்டுமென சிந்திக்க சைத்தான்யாவிற்கு அதற்கு மேல் துப்பு கிடைக்காததால் இவன் ரியாவை தேடி அலைய அதை அறிந்ததும் நம் நாயகர்கள் திட்டம் தீட்ட தொடங்கினர்...
அன்று மொத்த சிசீட்டிவிக்களையும் இவர்கள் சென்ற போது ஹக் செய்திருந்தாலும் அந்த ஒரு அறையை மறந்திருந்தனர்...
இவர்களின் நல்ல நேரமோ கெட்ட நேரமோ அந்த அறையின் சீசிட்டீவி முன்பே பழுதடைந்திருந்ததால் சைத்தான்யாவினால் வேறு எதையும் தெளிவாய் கண்டறிய முடியவில்லை...
அவனை எதிர்த்து போரிடவோ அல்ல அவனை சந்தித்து பேசவோ இவர்கள் நிதானித்து இருக்கவில்லை.. ஒரு ஒருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்ததால் ரியாவை மெடர்மான் அனுப்ப முடிவெடுத்தனர்...
ஆனால் மெடர்மானிற்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு இருக்க வேண்டுமென்று இவர்களின் ஒற்றை குழு இரண்டாய் பிரிந்தது...
மித்ரான் வினய் மற்றும் ஃத்வருணுடன் ரியா அனாமிக்கா ஸ்வத்திக்கா மீனா ராவனா மற்றும் அரானா
சக்தி ஆர்வின் ஷ்ரவன் மற்றும் டிவினுடன் மீரா தாரா நரா தில்வியா
இவர்களுடன் குட்டி சனாயா மெடர்மானிலும் குட்டி ப்ரஜினை பூமியிலும் இருக்க வைக்க முடிவு செய்தனர்...
தாரா மெதுமெதுவாய் மனதால் பாதிக்கப்படுவதை உணர்ந்து அவளை சரி செய்ய இயலாமல் இவர்கள் தினற பூமியில் உள்ள எவரையும் தாராவிற்கு துணையாய் தூரமாய் அனுப்ப முடியாதென்பதாலும் அவளையும் தனியே அனுப்ப மனமின்றி நாயகன்கள் தயங்க அனைவரையும் மீறி கொண்டு உயிர் இருந்தும் உயிரற்று வாழ்ந்து கொண்டிருந்த தாராவுடன் கேத்ரியனாக வெளிநாட்டை அடைந்தாள் ரியா
அல்ற்றா நிலவில் சைத்தான்யா என்ற ஒருவன் எழுந்ததே தெரியாமல் நிரன் மற்றும் அஜிம்சனா குரோபடரான் ராஜாவை சமாளிப்பதிலே காலத்தை ஓட்டினர்.. அவர்களின் வாழ்வை ஒளியூட்டக் கூடிய நிலவாய் அமைந்தது நிரனின் செல்லமகள் யாரி...
யாரி சனாயா மற்றும் ப்ரஜினை போல் நாயகர்கள் அனைவரிடமும் செல்ல மாட்டாள்... சாதாரண குழந்தைகளை போல் விளையாடி கொண்டே எதாவது பேச முயற்சித்து கொண்டோ இருக்க மாட்டாள்... அவள் ஒரு குழந்தையாய் உணர்வது அஜிம்சனாவின் மடியிலும் நிரனின் தோளிலும் தான்...
அவர்களிருவரை தவிர்த்து யாரி ஒருவரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள்... இவர்கள் பூமிக்கு வந்த இரு வாரங்களும் யாரி அஜிம்சனாவிடமே ஒட்டி கொண்டதாலும் நிரன் எழுந்த சில நாட்களில் அவ்விருவரையும் கூட்டிக் கொண்டு நிலவிற்கு சென்றதாலும் யாரியுடன் பழக மற்ற எவருக்கும் காலம் இருக்கவில்லை...
அமைதியாகவே இருந்தாலும் தன் தாய் தந்தை அருகிலிருக்கையில் அந்த மழலையின் வாய் மொழிகள் அஜிம்சனாவையே தோற்கடித்து விடும்.. மழலை மொழியால் நிரனை மயக்கும் அவனின் தேவதை.. பின்ன அவன் மனைவி தான் இராட்சசி என்ற பட்டத்தை பிடித்து விட்டாளே...
சைத்தான்யா ஒன்றுமே தெரியாமல் ரியாவின் ஒரு புகைபடத்தை வைத்து வலை வீசி தேடி கொண்டிருந்தான்.. அவளை எதிர்பார்க்காமல் யதீஷின் நிறுவனத்தில் கண்டதும் தன்னை இனிமேலும் நம்புவானா தங்களுக்குள் இருந்த நட்பு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது யதீஷின் மனதில்..
மழை நின்றதையும் அறியாமல் பால்கெனி அருகில் சாயும் நாற்காலியில் அமர்ந்து தன்னையறியாது உறக்கத்தை தழுவியிருந்த யதீஷ் ஏதோ கரகரவென சத்தம் கேட்கவும் பட்டென எழுந்து பார்த்தான்...
மழை பேய் அடி அடித்து கொண்டு பேய அந்த சத்தத்தில் கதவை யாரோ தட்டும் சத்தம் மெதுவாகவே அவனை வந்து அடைந்தது...
கண்களை தேய்த்து கொண்டு தன் செல்பேசியை தேடி எடுத்தவன் மணி இரவு பத்தரையை கடந்திருப்பதை கண்டு தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என தன்னைத் தானே கடிந்தவாறு கதவை திறந்தவனை கண்டு புன்னகைத்தாள் அனாமிக்கா
அனாமிக்கா : ஹாய் பிரதர்.. தூங்குனீங்களா டிஸ்டர்ப் பன்னிட்டனா
யதீஷ் : ஹையோ இல்ல சிஸ்டர்.. நா டைம் பாக்காம தூங்கீட்டேன்.. நீங்க சொல்லுங்க..
அனாமிக்கா : சாப்ட கூப்ட வந்தேன் பிரதர்.. சாரி இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு வந்ததால வீட்ட க்லீன் பன்னி சாப்பாடுக்கு தேவையான இங்ரீடியன்ட்ஸ் டிஷ்ஷஸ்லாம் சேர்க்கவே டைம் ஓடீடுச்சு.. தப்பா எடுத்துக்காதீங்க என தயக்கத்துடன் கூறவும் அவளை பார்த்து அவன் புன்னகைத்தான்...
யதீஷ் : அட நீங்க வேற சிஸ்டர்.. என்னலாம் யாரும் சாப்ட வாங்கன்னு கூப்ட்டதே இல்ல.. நீங்க இந்த நேரத்துலையும் என்ன மெனக்கெட்டு வந்து கூப்ற்றுக்கீங்க.. நா எப்டி தப்பா நினைப்பேன்...
அனாமிக்கா : தன்க்ஸ் பிரதர்.. நீங்க ஃப்ரஷ்ஷப் ஆய்ட்டு நேரா சாப்ட கீழ வந்துடுங்க... நா டிவின் அண்ணா கிட்ட உங்களுக்கு ஸ்பர் ட்ரெஸ் எடுத்து குடுக்க சொல்லீட்டேன்.. மறக்காம உங்களுக்கு கம்ஃபர்ட்புலா இருக்குரதையே வாங்கிக்கோங்க.. டூத் ப்ரஸ் பேஸ்ட் அண் டவல் இதுல இருக்கு... மத்த பொருட்கள நாளைக்கு நீங்க வினய் அண்ணா கூட போய் புடிச்ச மாரி வாங்கீட்டு வரலாம் ... சீக்கிரம் வந்துடுங்க ப்ரதர் .. என புன்னகையுடன் கூறியவள் அங்கிருந்து கீழ் நகர்ந்து சென்றாள்...
கதையில் ஒரு ஒருவரின் கதாபாத்திரத்தையும் முழுதாய் அறிந்திடாத யதீஷிற்கு அனாமிக்காவின் கள்ளமில்லா அன்பான பேச்சு மனதை லேசாக்கியது.. அவன் மேல் அக்கரை கொண்டு ஒருவர் பேசி அன்று தான் அவன் பார்க்கிறான்...
தன் அறைக்குள் உறைந்த புன்னகையுடன் சென்ற யதீஷ் குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவ அவன் கதவை மீண்டும் யாரோ தட்டினர்... அனாமிக்கா கொடுத்த ஹண் டவலால் முகத்தை துடைத்த யதீஷ் வேகமாய் சென்று கதவை திறக்க இப்போது அவனை கண்டு அங்கு புன்னகைத்த படி கைகளில் உடைகளுடன் நின்றிருந்தது டிவின்...
டிவின் : ஹாய் ப்ரோ.. உங்களுக்கு ஸ்பர் ட்ரெஸ் குடுக்க வந்தேன்.. அனாமி குட்டிமா சொன்னாளா
யதீஷ் : ஹான் சொன்னாங்க ப்ரோ.. தன்க் யூ சோ மச் என அவன் கொடுத்த ஆடைகளை வாங்கிக் கொண்டான்...
டிவின் : இதிலென்ன இருக்கு ப்ரோ... ஃபீல் ஃப்ரீ.. கீழ வாங்க .. நா போறேன் என்று விட்டு அதே புன்னகையுடன் அவன் கீழிறங்க " இந்த வீட்ல உள்ள எல்லாரும் இப்டி தான் போலையே " என எண்ணியவாறு டிவின் கொடுத்த உடைகளில் தனக்கேற்ற ஒன்றை மாற்றி கொண்ட யதீஷ் அங்கிருந்து கீழே சென்றான்...
அவனை கண்டதும் நரா அன்பாய் வரவேற்த்து உணவு பறிமாறினாள்... அனைவரும் ஒரு சிறிய கலந்துரையாடலுடன் உணவை முடித்து கொண்டு ஹாலில் அமர்ந்தனர்...
யதீஷ் தனக்கு காள் வரவுள்ளதாய் கூறி அவனது அறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டான்...
அவன் அறைக்கு வந்த இருவது நிமிடத்தில் அவன் அறை கதவு மீண்டும் தட்டப்பட்டது.. மணியையும் கதவையும் ஒரு முறை பார்த்து விட்டு கதவை திறந்த யதீஷ் அங்கு நின்றிருந்த அரானாவை கண்டு முளித்தான்...
அவளோ அவனின் முளியை சற்று வித்தியாசமாய் நோக்கினாள்...
அரானா : ஹலோ ப்ரதர் ஏன் முளிக்கிறீங்க...
யதீஷ் : அ.. இ..இல்ல..மா.. ஒ..ஒன்.னும் ..இல்..ல..
அரானா : நா என்ன டெரராவா இருக்கேன்.. ஏன் இப்டி தினறுரீங்க
யதீஷ் : அஹென் அப்டிலாம் ஒன்னும் இல்ல மா..
அரானா : சரிங்க ஹான் இந்தாங்க என ஒரு மஃக்கை நீட்ட அவளையும் அதையும் மாற்றி மாற்றி அவன் பார்க்க
யதீஷ் : என்னது இது
அரானா : கவலப்படாதீங்க உங்கள வச்சு ஆராய்ச்சிலாம் பன்ன மாட்டேன்.. இது ஜஸ்ட் பால் தான்.. நைட் தூங்குரதுக்கு முன்னாடி நாங்க எப்பவும் குடிப்போம்.. நீங்க குடிப்பீங்களா என்னன்னு தெரியல அதான் எடுத்துட்டு வந்தேன்
யதீஷ் : ஓஹ் தன்க் யு.. தன்க் யு சோ மச்
அரானா : இட்ஸ் ஓக்கே .. என அவனை பார்த்து சிறிதாய் புன்னகைத்தவளை கண்டவனுக்கு காலையிலிருந்து மூளையில் வட்டமிடும் கேள்வியை கேட்க எண்ணம் எழுந்தது...
யதீஷ் : நா ஒன்னு கேக்கலாமா என அந்த பாலை கொடுத்து விட்டு செல்லப் போனவளை இவனின் குரல் தடுக்க திரும்பி அவனை பார்த்து தலையசைத்தாள்...
அரானா : கேளுங்க...
யதீஷ் : எவ்ளோ நேரம் நிண்டுக்குட்டே இருப்பீங்க.. டெர்ரெஸ்க்கு போலாமா...
அரானா : ஹேம் போலாமே.. நா அங்க தான் போகலாம்னு இருந்தேன்.. கம்பெனி குடுக்குறேன் வரீங்களா என்றதும் யதீஷ் விரிந்த புன்னகையுடன் தலையாட்டினான்...
அவர்கள் இருவரும் அந்த ஃப்லோரின் முடிவிலிருந்த பெரிய டெரெஸில் போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அமர்ந்ததனர்...
யதீஷ் : கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க சிஸ்... நா படிச்ச மதி மர்மம் கதைல சில விஷயம் மட்டும் தான் நடக்கவே இல்லையே தவிர உங்க யாரோட குணமும் பெயரும் பொய் கிடையாது... நா கதைல படிச்ச அரானாவும் இப்போ நேர்ல பாக்குர அரானாவும் ஒன்னா இருக்குர மாரி எனக்கு தோனலமா...
அரானா : அப்போ இருந்தே அதே நிலமையும் இப்போ இல்லன்னு மறந்துட்டீங்களா என அவனை அவமதிப்பதை போல் எதாவது பேசி காயப்படுத்தி விடுவோமோ என பயந்து இவள் ஒரே வரியில் முடித்து கொள்ள குனிந்திருந்த அவளின் கன்னத்தில் திரையிட்ட கண்ணீரை அவன் கவனிக்க மறக்கவில்லை...
யதீஷ் : நா வளர்ந்த ஆஷ்ரமத்துல ஒரு மதர் ஒன்னு சொல்லுவாங்க... வாழ்கையும் வாணமும் ஒன்னு சிஸ்டர்.. மேகத்த போல நேரமும் மனிதர்களும் வந்து வந்து போய்ட்டே இருப்பாங்க... நம்மளால நேரத்தையும் சரி மேகத்தையும் சரி பிடிச்சு வைக்க முடியாது.. உங்களுக்கு அந்த நிலமை திரும்ப வரும்னு என்னால நிச்சயமா சொல்ல முடிடாது.. பட் அந்த நிலமையோட நினைவுகள் உங்க மனசுல எப்பவுமே இருக்கும்.. அத மறக்க வேண்டாம்.. அது கூடவே வாழ பழகுங்க... எனக்குத் தெரிஞ்சு இங்க இருக்குர எல்லாருக்கும் மத்தியிலும் என்ன தான் கஷ்டமா இருந்தாலும் அவங்க பழைய குணம் தெரியிது... ஆனா உங்களோட முகத்துல உங்க பழைய நிலைய குறிக்கிர மாரி எதுவுமே இல்ல... யாருன்னே தெரியாதவன் ஓவரா பேசுறேன்னு உங்களுக்கு தோனலாம்.. பட் நா உங்களுக்கு அன்பா சொல்லனும்னு தான் ட்ரை பன்றேன்... ரூடா சொன்னா மன்னிச்சிடுங்கமா... கடந்த காலத்த நினைச்சு நிகழ் காலத்த நீங்க இழந்துகுட்டு இருக்கீங்க.. நா கடமைக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க மா.. உங்க கதைய இரசிச்சு வாசிச்சிற்கேன்.. நீங்க எல்லாரும் என் மனசுல இடம் பிடிச்ச எனக்கு நெருங்குனவங்க... உங்கள உடனே மாற சொல்லல... தேவையான நேரத்த எடுத்துக்கோங்க.. யோசிச்சு பாருங்க.. உங்க சந்தோஷம் எல்லாருக்குமே முக்கியம்... நீங்க சந்தோஷமா இருந்தா உங்கள சுத்தி உள்ளவங்களும் சந்தோஷமா இருப்பாங்க இல்லையா... என கேட்டவனை கண்களில் வலிந்த கண்ணீரை துடைக்க மறந்து நோக்கினாள் அரானா
லியானுடன் அமர்ந்து பேசியதை போலிருந்தது அவளுக்கு.. கதையில் மட்டுமே தன்னை பற்றி படித்ததற்கா ஒருவன் இவ்வளவு கவலை கொள்கிறான் என அவள் மனம் வியக்க அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் இத்துனை நாட்கள் ஏன் தான் இவ்வாறு யோசிக்கவில்லை என கேள்வி எழுப்ப அவன் பேசிய பேச்சும் இறுதியாய் தன் உணர்வை வெளிப்படுத்திய முறையும் லியானை தான் அவளுக்கு நினைவூட்டியது...
அவளை யார் தான் சமாதானம் செய்தாலும் அழும் நேரத்தில் சத்யா கூறுவதை தவிர்த்து அவள் எதையும் கேட்டதில்லை.. அப்படியே கேட்டாலும் அதை மனதில் ஏற்றிக் கொண்டதில்லை... இன்று யதீஷ் அதே வால்த்தைகளை கூறுகையில் புதிதாய் கூறுவதை போலிருந்தது
தன்னால் அவ்வாறு அனைத்தையும் ஏற்று கொண்டு வாழ முடியுமென்ற நம்பிக்கை இருந்ததோ இல்லையோ அவனை கண்டு புன்னகைத்தாள் அரானா...
தேடல் தொடரும்...
ஹாய் இதயங்களே... இன்னும் எதாவது புரியாம இருந்தா கேளுங்க... சொல்றேன்.. லியானுக்கு என்ன ஆச்சுனு தியரியோட உங்களுக்கு விரைவிலே சொல்றேன்... அப்ரம்.. நீங்க தான் சொல்லனும்... குட் நைட்.. டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro