தேடல் - 11
என்ன தான் குழப்பத்தில் இருந்தாலும் அவர்களின் கண்ணீரும் முகத்தில் படர்ந்திருந்த மகிழ்ச்சியும் யதீஷை பின் வாங்கியே நிற்க வைத்தது...
அவன் எண்ணியதை போல் பல சந்தேகங்கள் அவனுக்குள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது.. அவன் புத்தகத்தில் வாசித்ததை போல் அந்த ஒரு வீட்டின் அருகில் ஈ காக்காவை தவிர்த்து வேறு எவரும் வீடு கட்டியிருக்கவில்லை.. இந்த வீடு நகரத்தை விட்டும் தள்ளி எல்லையில் தான் அமைக்கப்பட்டிருந்தது...
அவர்கள் மகிழ்ச்சியில் திலைத்ததால் இவனை ஒருவரும் கவனிக்கவில்லை... ரியாவும் மறந்திருந்தாள்...
தாரா ரியா : வி மிஸ்ட் யு ஆல் என புன்னகையுடன் கூற மற்றவர்களும் தலையசைத்து அமோதித்தனர்...
மீனா : இந்த திடீர் முடிவு எதுக்கு டி என தாராவை பார்க்க தாரா திரும்பி தான் பார்த்து கொண்டிருந்த மடிக்கணினியை பார்க்க அனைவரும் அவளூடே அம்மடிக்கணினியை கண்டு நடந்தவை நினைவு பெற்று சற்று அதிர்ச்சியுடுன் அவளை நோக்கினர்...
தாரா : நாம இதுக்கு மேலையும் ஒளிஞ்சிருக்க வேண்டாம்னு நெனச்சேன் அண்ணா...
ராவனா : நிரன் அண்ணாவும் அஜியும் வரலையா டி
டிவின் : வருவாங்க டி ... கொஞ்சமாவது உன் ஆள கண்டுக்குட்டியா நீ
ராவனா : ஐய்யோ போ டா நீ வேற என அவனை கண்ணீரோடு அணைத்து கொள்ள மற்ற ஜோடிகளும் அவர்களை பார்த்து சிரித்தனர்...
ரியா : அப்ரம் ... இது என தன் கடிகாரத்திற்கு " கெட் தி ஒன் டு அவர் ஹோம் ஹு சேவ்ட் ரியா " என வந்திருந்த கோடிங்கை காட்டவும் அனைவரும் அவளை போலவே அவரவர் கடிகாரத்தை காட்ட அங்கிருந்த அனைவரின் கடிகாரத்திலும் அந்த கோடிங் மிளிர இப்போது அனைவரும் ஒரு சேர திரும்பி வாயிலில் நின்றிருந்த யதீஷை நோக்கினர்...
திடீரென தன்னை நோக்கி அனைவரும் திரும்பவும் யதீஷ் பேய் முளி முளிக்க தாரா ரியாவை தோளில் இடித்து ஹஸ்கி வாய்சில் " உன் ஆளு டி " என்க அதற்கு ரியா அவளுக்கு டெத் க்லரை பரிசாய் கொடுத்தாள்...
ரியா : ம்க்குக்கும் அப்போ அவர நம்பலாமா..
ஷ்ரவன் : அஃப்கோர்ஸ் நம்பலாம்.. அண் அவன் நீ யாருன்னு கூட தெரியாம உன்ன சைத்தான்யா கிட்டேந்து காப்பாத்தீர்க்கானே டா குட்டிமா என்றவனை தாண்டி சென்ற வினய் யதீஷின் முன் நின்று அவன் கரத்தை நீட்டினான்..
வினய் : ஹாய் ... ஐம் வினய்..
யதீஷ் : ஐம் யதீஷ் யமர் என அவனோடு ஒரு குழப்பத்திலே கை குலுக்கிக் கொண்டான்...
வினய் : ஃபீல் ஃப்ரி பாஸ்.. உங்கள நாங்க முழுசா நம்புறதால தான் நீங்க இங்க இருக்கீங்க...
யதீஷ் : ஹ்ம்.. என் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்றீங்களா..என இரு புருவத்தையும் தூக்கி ஒரு வருத்தமான குரலில் கூறவும்
வினய் : யா ஷ்யுர் கேளுங்க என இவனும் ஒரு குழப்பத்தோடே அனுமதி தொடுக்க அவன் கேட்கவிருக்கும் கேள்வியை அறிந்திருந்த ரியா உண்மையை கூறலாமா என்னும் குழப்பத்தில் இருக்க அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த அனைவரையும் குழப்பிவிட்டது
யதீஷ் : சத்யன் லியான் இவங்க இரெண்டு பேர்க்கும் என்ன ஆச்சு என்றவனை வினய் புரியாது அதிர்ச்சியுடன் பார்த்தான்...
தில்வியா : உங்களுக்கு எப்டி அவங்கள தெரியும்.... நீங்க ஏன் இத கேக்குறீங்க...
யதீஷ் : தாரா ... அவங்க எல்லாரையும் கூப்டும் போது லியான் அன் சத்யாவ மட்டும் கூப்டல... ஒருவேளை உண்மையில அப்டி இரெண்டு பேர் இல்லையா...கதைல மட்டும் தானா என்கவும் இன்னும் அனைவரும் குழம்ப ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட ரியா
ரியா : நீங்க படிச்ச மதி மர்மம் கதை இல்ல... உண்மை தான்...
என திடீரென கூறவும் அனைவரும் அவளை பாக்க்க அவள் தலையசைத்து அனைவரையும் அசுவாசப்படுத்தினாள்...
இப்போது அனைவருக்கும் அவன் பாதிக்கும் மேற்பட்ட உண்மைகளை அறிந்தவன் என விளங்கியது..
யதீஷ் : அத நா எப்பவோ கன்ஃபார்ம் பன்னீட்டேங்க.. இப்போ அதிர்ச்சியெல்லாம் போய்டுச்சு... நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க...
நரா : ம்ம் அது வந்து.. அந்த கதை முழுசும் உண்மை கிடையாது... அதுல சில விஷயம் பொய் தான்...
யதீஷ் : என்ன சொல்ல வரீங்க...
சக்தி : ப்லீஸ் கம் இன் யதீஷ்.. சொல்றதுன்னு ஆய்டுச்சு.. நீங்க வந்து உக்காருங்க... நாங்க சொல்றோம்...
யதீஷ் : நா தெரிஞ்சிக்கிரதுல உங்களுக்கு ப்ராப்லம் இருக்காது இல்லையா..
மித்ரான் : ப்ராப்லம் இருக்குன்னு சொன்னா நீ தெரிஞ்சிக்காம இருப்பியா தம்பி என நக்கலாய் கேட்க
யதீஷ் : அண்ணா அப்டிலாம் சொல்லாதீங்க அந்த கதைய படிச்சிட்டு ஒரு மாசமா நா தலைய பிச்சிட்டு உக்காந்துருக்கேன்
ஷ்ரவன் : அப்ரம் என்ன கேள்வி வேற கேக்குரீங்க பாஸ் வாங்க உள்ள... என தோள் மீது கை போட்டு உள்ளே இழுத்துச் செல்ல நாயகிகளும் அவர்களை பின் தொடர்ந்தனர்...
ஷ்ரவனே அனைவரையும் யதீஷிற்கு அறிமுக படுத்தி வைக்க தான் படித்த கதை உண்மை தான்.. மெடர்மான் உண்மை தான்... அல்ற்றா மூன் உண்மை தான்... இரு வேறு கிரகங்களுக்கு இருந்த தொடர்பு உண்மை தான என உணர்ந்ததும் யதீஷிற்கு புல்லரித்தது
அரானா : சோ இந்த கோடிங் அவன் கிட்டேந்து தான் வந்துர்க்கனும் இல்லையா என இவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்தவள் வாயை திறக்க அதற்கு தலையசைத்து அமோதித்த ஆர்வின்
ஆர்வின் : நம்ம செட்லையே அவன தவிர வேற யாரும் கோடிங் அனுப்ப மாட்டோம்.. ஹ்ம் ஓக்கே ஓக்கே அவங்க இரெண்டு பேரு தவிர... பட் இப்போ ஒருத்தன் தானே இருக்கான்... சோ இந்த கோடிங் அனுப்பனது நம்ம சத்யா தான் ..
ஸ்வத்திக்கா : அப்போ லொக்கேஷன க்ரக் பன்ன முடியுமா.. என்கும் போது சரியாக தாராவின் மடிக்கணினியை கண்ட யதீஷ் அதை தாரா தன் நகத்தை வைத்து திறப்பதை கண்டு வாயை கட்டுப்படுத்த இயலாமல்
யதீஷ் : இது உங்களுக்கு லியான் குடுத்த லப்டாப் தானே என கேட்டு விட ஒரு நொடி அனைவரும் தாரா என்ன பதில் சொல்வாளோ என அவளை பார்க்க தான் ஏதேனும் தவறாய் கேட்டு விட்டோமோ என முளித்த யதீஷிற்கு ஒரு புன்னகையை அளித்த தாரா
தாரா : ஆமா என்றாள் மெதுவாய்..
வினய் : எல்லாரையும் எதுக்கு தாரா மா வர சொன்ன..
தாரா : வட்ரன் ஈஸ் பக் அண்ணா என உணர்ச்சி துடைத்த குரலில் கூற அனைவரும் அவளை நம்பாத பார்வை பார்த்தனர்...
அனாமிக்கா : தட்ஸ் இம்ப்பாசிபில்...
தாரா : இப்போ பாசிபில் தான் டி.. வட்ரன் ஈஸ் பக் அகெய்ன்... என அழுத்தம் திருத்தமாய் தன் கருத்தை மீண்டும் வெளியிட்டவளை அனைவரும் வாயடைத்து நோக்கினர்...
யதீஷ் : சாரி டு இன்ட்டருப்ட் சிஸ்.. ஆனா மதி மர்மம் கதைல தான் லியான் வட்ரனோட திரும்ப வந்துட்டதா இருந்துச்சே... திரும்ப லான்ச் பன்னிட்டீங்களா
அனாமிக்கா : எல்லாமே உண்மை இல்லைன்னு சொன்னோமே ப்ரதர்
யதீஷ் : அப்டீனா என்ன சொல்ல வரீங்க சிஸ்டர்
அரானா : சம்த்திங் டின்ட் கோ வெல்... என எங்கோ பார்த்வாறு கூற தான் கதையில் படித்த அரானாவிற்கும் தான் இப்போது நேரில் பார்க்கும் அரானாவிற்கும் உள்ள வேறுபாட்டை யதீஷால் குறிக்க முடிந்தது...
யதீஷ் : வாட் டு யூ மீன் சம்த்திங் டோன்ட் கோ வெல் என மீண்டும் கேட்டவனுக்கு மனம் அடித்துக் கொள்ள பாவம் அவனும் என்ன செய்வான்... வாசிப்பாளனுக்கு இரசித்து வாசித்த ஒரு கதை உண்மையான சம்பவம் என்றும் அதில் ஏதோ ஒன்று பொய் என்றும் தெரிந்தால் மனம் தவிப்பதில் ஆச்சர்யமில்லையே...
எவருக்கும் யதீஷ் மீது சந்தேகம் இருக்கவில்லை.. அவன் ரியாவை காத்திருக்கிறான்... அதிலும் அவனை வீட்டிற்கு அழைத்து வர கூறியது அவர்களின் சத்யாவாயிற்றே... இனி என்ன பின் வாங்கப் போகிறார்கள்... அவனை நம்பக் கூடிய அளவிற்கு அவர்கள் வந்திருந்ததாலும் ரியா அவனை நம்பி இங்கு அழைத்து வந்ததிலுமே அவனை பற்றி சிலவையை கனித்திருந்தனர்...
அத்தோடு ஷ்ரவன் சக்தி டிவின் மற்றும் ஆர்வின் நாழ்வரும் முன்பே யதீஷை அறிந்திருந்தனர்... தொழில்ரீதியாகவும் அதே நேரம் ரியாவை ஒன்றிரண்டு முறைக்கும் மேலாக சந்தித்த ஒருவன் என்று ஷ்ரவனின் டிடெக்ட்டிவ் கூறிய அடிப்படையிலும் அறிந்திருந்தனர்...
பின்ன தங்கைகளை மொழி தெரியா ஊரில் தனியே விட்டால் அவன் என்ன அண்ணனாம்...
ஸ்வத்திக்கா : அன்னைக்கு உண்மையாவே என முழுதாய் தொடங்கும் முன்பாக அம்மாஆஆஆஆஆஆ என திடீரென கேட்ட ஒரு குழந்தையின் அலரலில் அனைவரும் திடுக்கிட படக்கென தன் கடிகாரத்தை நோக்கிய அனாமிக்கா தலையிலடித்து கொண்டு அவர்கள் வந்த அதே வாயிலில் உள்ளே ஓட அவளை பின் தொடர்ந்து ராவனாவும் ஓடினாள்...
எங்க போறாங்க இவங்க என யதீஷ் குழப்பத்துடன் பார்க்க தன் கடிகாரத்தை நோக்கிய டிவின் யாவரும் அறியாது அங்கிருந்து எங்கோ மறைந்து சென்றான்... சில நிமிடங்களில் அங்கே ஒரு குழந்தையின் அழுகுரல் மொத்த வீட்டையும் நிறைக்க அனாமிக்கா ஒரு அழகிய பெண் குழந்தையை தூக்கி கொண்டு வந்தாள்...
அந்த குழந்தையை கண்டு யதீஷ் அதிர்ச்சியுடன் புன்னகைக்க சக்தியை கண்டதும் அக்குழந்தை அப்பா என்ற குட்டி கத்தலுடன் டக்கென அவனிடம் தாவியது...
அவள் சக்தி மற்றும் அனாமிக்காவின் இரண்டு வயது மகள் சனாயா..
சக்தி : சனா குட்டி ... எப்டி இருக்கீங்க.. இங்க பாரு நம்ம வீட்டுக்கு நாம வந்துட்டோம் என்க அழுகை மறந்து தன் பிஞ்சு கையை தட்டி சிரித்தாள் அவள்...
அவளின் நான்கு பல் தெரிய விரியும் சிரிப்பில் சிரிக்காத ஒருவரையும் நம்மால் காண முடியாது.. மெடர்மானில் இருந்தவர்களின் ஒரே சந்தோஷம் அவள் தான்...
அனாமிக்கா : ஹ்ம் அப்பாவ பாத்ததும் அழுகைய காணும் பாரு.. அப்டியே அப்பாவ மாரி என செல்லமாய் கோபித்து கொள்ள
சக்தி : ஏய் கண்ணம்மா உன்ன நா கொஞ்சலன்னு தான கோவம்.. என் புள்ளைய சொல்றன்னு சைடு கப்புல என்ன திற்றியா...
அனாமிக்கா : ம்க்கும் அப்டியே கண்டுப்புடிச்சிட்டாளும் என முனகியவளை அவன் மறு கரத்தால் இழுத்து அணைத்து கொள்ள
ஷ்ரவன் : அய்யைய குழந்தைய வச்சிக்கிட்டு ரொமேன்ஸ் பன்ற நேரமாடா இது... சனாகுட்டி வா வா மாமா கிட்ட வா என சக்தியிடமிருந்து தன்னிடம் வந்தவளை தூக்கிக் கொண்டு அந்த ஜோடிக்கு தனிமை அளித்து மற்றவர்களிடம் வர அந்த சோபாக்களுக்கு இடையே வந்ததும் அனைவரையும் பார்த்து தன் பொக்கை வாயை காட்டிய சனாயா யதீஷை கண்டதும் தன் முட்டை முளியை காட்டினாள்...
யதீஷ் அவளின் சைகை புரியாமல் முளிக்க புதியவனை கண்டு அவள் அழ தொடுங்குவதற்குள் தாரா ஓடிச் சென்று ஷ்ரவனின் பின் நின்று கொண்டு சனாயாவிற்கு விளையாட்டு காட்டத் தொடங்கினாள்...
ராவனா : தில்வி.. ப்ரஜு எங்க
தில்வியா : மீரு தான் டி ப்லே ஸ்கூல்ல விட்டுட்டு வந்துர்க்கா...
ஃத்வருண் : நா போய் கூட்டீட்டு வந்துடவா என வேகமாய் கேட்டவனை நிமிர்ந்து பார்த்த அனைவரும்
நரா : டேய் அண்ணா நீ போனா புள்ளைய குடுக்க மாட்டாங்க.. அங்க இருக்கவங்கள்ளையே புள்ளைக்கு மட்டும் தான் நீ அவன் அப்பான்னு தெரியும்.. மத்தவங்களுக்கு தெரியாது...
மித்ரான் : அப்போ எங்க செல்லத்த நாங்க எப்போ பாக்குறது என பாவமாய் கேட்க அதே பார்வை தான் வினய் முகத்திலும் இருந்தது...
டிவின் : இப்போவே பாக்களாம் டா மச்சான் என்றவனை அனைவரும் திரும்பி நோக்க டிவினின் தோளில் சாய்ந்தபடி அரை தூக்கத்தில் இவர்களை பார்த்து சிரித்தான் ஃத்வருண் மற்றும் தில்வியாவின் ஒன்றரை வயது மகன் ப்ரஜின்..
வினய் : ப்ரஜு குட்டி என கத்தியபடி இவன் அவனிடம் ஓட டிவினிடமிருந்து பிரிந்து வினயிடம் வந்த ப்ரஜன் அவனது இதழால் வினயின் கன்னத்தை ஈரமாக்கினான்...
யதீஷ் : ஏங்க உங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சா ... சொல்லவே இல்ல என நம்ப முடியாமல் கேட்க
தில்வியா : ஹிஹி இல்ல ப்ரோ.. எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல...
யதீஷ் : அப்போ குழந்தைங்க...
ஃத்வருண் : எங்க குழந்தைங்க தான்.. ஆனா பயலோஜிக்கல் பரென்ட்ஸ் நாங்க இல்ல.. அடாப்ட்டட் பரென்ட்ஸ்...
யதீஷ் : அடாப்ட்டட் பரென்ஸா...
நரா : ஹாஹா அமாம்... அவங்க தான் எங்க ஃபமிலிய சூஸ் பன்னாங்க... சோ நாங்க தானே அடாப்ட்டட் ஒன்ஸ் என அழகாய் கேட்க யதீஷுஷ் அழகாய் புன்னகைத்தான்...
பூமியிலிருந்தோருக்கு ப்ரஜின் தான் எல்லாமே.. ப்ரஜின் மற்றும் சனாயா இருவரும் மெடர்மானில் ஒரு முறை ஏற்பட்ட விபத்தில் கிடைத்த பொக்கிஷங்கள்.. அந்த விபத்தினால் மெடர்மானில் பலரும் உயிர் நீத்தனர்.. அன்று தான் ப்ரஜின் முதல் முதலாய் மெடர்மானில் தன் காலையே பதித்திருந்தான்... ஆனால் அன்றைய நாளே இவ்வாறிருக்க அவனை ஈண்டெடுத்த தாய் அவனை கண்ட பின் உயிர் நீத்ததால் அவரை காத்து மருத்துவமனையில் சேர்த்த ஃத்வருணிடமே அக்குந்தை ஒப்படைக்கப்பட தில்வியா அன்றே அவனுக்கு ப்ரஜன் என பெயரிட்டு ஃத்வருணிடம் தன் விருப்பத்தை கூறி இருவருமாய் அன்றே ப்ரஜனை அவர்களின் மகனாய் தத்தெடுக்க நான்கு மாத குழந்தையாய் இருந்த சனாயாவை மெடர்மானில் விட மனமில்லா சக்தி அனாமிக்காவின் சொல்லை கேட்டதும் அவளுக்கு சனாயா என பெயரிட்டான்... அதன் பின்பு தான் அவளை இவர்கள் அன்றே தத்தெடுத்தனர்...
யதீஷ் : சரி நீங்க சொல்ல வந்தத சொல்லவே இல்லையே.. அதோட சத்யன் எங்க என சக்தி அனாமிக்காவும் அங்கு வந்ததும் இவன் மீண்டும் கேட்க
தாரா : ஹ்ம்ம்ம் சத்யன் எங்க இருக்கான்னு இன்னும் எங்களுக்கு தெரியல...
யதீஷ் : அப்போ லியான்....
அரானா : லியான் ஈஸ் டெட்.. கதைல சொன்னது போல இரெண்டு மாசம் களிச்சு லியான் பூமிக்கு வரவே இல்ல...
தேடல் தொடரும்...
தீரா எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro