காதல் முயற்சி...
பார்த்து ரசித்தேன், சிரித்த ரோஜாவை
பறிக்க நினைத்தேன், முள் காம்புத் துணை மீறி,
சிகப்பு நீர் சிந்தினேன் விரல்களில்!
சிரித்துக்கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சியில்!
கைகளில் ரோஜா! கர்வத்துடன்,
காதலிக்கு கொடுக்கும் எண்ணத்துடன்....
வாழ்க்கையில் வசந்தம் ரோஜா போல்தான்,
காத்திருத்தல் வேண்டும் காலம் வரும் வரை,
பலர் தடுத்த நிறுத்த காரணமிருந்தும்,
பறிக்க முயல்வோம் தடைமீறி!
பார்த்து சிரிப்பர் தோல்வியுற்றால்,
நீங்கி விடுவர் நீ முயன்றால்....
நாம் காற்றடித்தால் ஒதுங்குவதில்லை!
மழை கண்டு மறைவதில்லை!
அன்பு கொண்டால் மட்டும் ஆணவம் கொண்டு,
ஏளனம் செய்யும் மனநிலை எதற்கு?
அகங்காரம் என்ற மாணவனுக்கு,
அங்கீகாரம் என்றும் இல்லை!
அன்பெனும் பள்ளியில்!
தயக்கமென்ன அன்பைச்சொல்ல?
கலக்கம் வேண்டாம் தோல்வியுற்றாலும்!
இருப்பதென்பது ஒரு வாழ்க்கை!
அர்த்தமுள்ள நம் வாழ்க்கை!
விட்டுச்செல்ல மனமும் இல்லை!
விட்டுக்கொடுக்க தியாகியும் இல்லை!
தோல்வி கண்டும் சிரிக்கும் பயிற்சியே!
வெற்றி மலர் பறிக்கும் முயற்சியே!
தடை மீறி முயற்சி செய்யும் காதல்,
அழிவதில்லை எந்நாளும்!
காதல் முயற்சி தொடரட்டும்...
ஆக்கமும் ஊக்கமும்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro