அது நட்பு தானோ.
நேரம் மதியம் 12,அது மழைக்காலம் என்பதால் வெயிலின் தாக்கம் எதுவும் காணப்படவே இல்லை. மிதமான வானிலையுடன் இருந்தது. கதிர் அவசரமாக எங்கோ கிளம்பிக்கொண்டு இருந்தான்.
நல்ல ஸ்லிம் ஃபிட் ஷர்ட் , நெற்றியில் ஒரு பொட்டளவு லேசான விபூதி, கையில் டிஜிட்டல் வாட்ச் என்று ஆளே அட்டகாசமாக தயாராகிக்கொண்டிருந்தவனை ஏற இறங்க பார்த்துக்கொண்டு இருந்தார் அவன் தந்தை சிவநாதன்.
"எங்கடா மகனே பொண்ணு பார்க்க கிளம்பிட்டியா " என்றார் சற்று நக்கலாக.
"இல்லை டேட் என் ப்ரண்ட்ஸை பார்க்க போறேன் "என்றான் கதிர் உற்சாகமாக. பொதுவாக நண்பர்களை சந்திக்க போகும் மிழ்ச்சியானது எல்லையற்ற ஒன்று. அவனுக்கும் அன்று அப்படிதான்.நீண்ட நாள் கழித்து தன் நண்பன் அகிலன் மற்றும் சரஸ்வதியை சந்திக்க போகும் மகிழ்ச்சியிள் மிதந்துக்கொண்டிருந்தான்.
நான்கு வருடங்கள் முன்பு :
"டேய் அகிலா..நம்ம க்ளாஸ்க்கு புதுசா ஏதோ பொண்ணு ஜாயின் பண்றாளாமே ", என்றான் கதிர்.
"அதான் டா எனக்கும் ஆச்சரியமா இருக்கு. மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட் பொண்ணுங்க ஜாயின் பண்ணவே யோசிப்பாங்க இவ எப்படி டா " என்றான் அகிலன். வகுப்புகள் ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து தான் சரஸ்வதி சேர்ந்தாள்.
"எக்ஸ்கியூஸ்மி மே ஐ கம் இன் " என்று அவளுடைய தேன் குரலில் கேட்டதுமே பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த அணைத்து மாணவர்களின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
'ஏ மச்சி செம்ம பிகர் ' என்று மாணவர்களில் சிலர் அவளை நோட்டமிட்டனர்.
இன்னும் சிலர் "இவ எல்லாம் வந்துட்டா மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட்டுக்கு ' என்று ஏளனம் பார்வையோடு அவளை எதிர்கொண்டனர். ஆனால் கதிருக்கு மட்டுமே அவளை பார்த்தவுடன் இனம்புரியாத ஒரு உணர்வால் ஈர்க்கபட்டான் .
'ஏன் இந்த உணர்வு ? ஒருவேளை பெண்களிடம் இதுவரை பழகாததாலோ என்னவோ புரியவில்லை என்றாலும் அந்த உறவுக்கு பெயர் எதுவும் வைக்காமல் அவளிடம் இயல்பாக பழகினான். அவளுக்கு தேவைப்படும் நோட்ஸ் அனைத்தையும் தந்து உதவினான். அதுமட்டுமில்லை அவள் வீடு தொலைவில் உள்ளதால் தினமும் தன்னுடைய பைக்கில் அவளுக்கு ட்ராப் கொடுக்கவும் செய்தான்.
அவள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட அன்றைய நாள் அவனுக்கு நாளாகவே இருக்காது.
"அகிலன் வா டா அவள் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரலாம் ஏன் டா அவள் லீவு ?", என்று தொலைத்து எடுப்பான் கதிர்.
"மச்சி நீ பண்றது ரொம்ப ஓவர் டா "என்பான் அகிலன்.
"அது என்னமோ தெரியலை டா அவள் ஒரு நாள் வரலைனா கூட எனக்கு மனசே சரியில்லை " என்பான் கதிர். கதிருக்கு அவள் மேல் இருப்பது காதலா ? என்ற சந்தேகமும் தோன்ற ஆரம்பித்தது. ஆனால் இதைப்பற்றி சரஸ்வதியிடம் பேசக்கூட அவனுக்கு தைரியம் இல்லை. எங்கு அவனுடன் பேசாமல் உறவவை முறித்துக்கொள்வாளோ என்ற பதட்டம் இருந்தது.
சில நாட்களாக அவள் கல்லூரிக்கு வருவது தவிர்த்தாள் சரஸ்வதி. இவளுக்கு என்ன ஆச்சு ஏதாச்சு என்று உள்ளம் பதைத்துக்கொண்டிருந்தது கதிருக்கு.
"கதிரு உன் கிட்ட ஒன்னு சொல்லனும்"என்றான் அகிலன்.
"என்ன மச்சி சொல்லு "
"இந்த இன்விடேஷன் திறந்து பாரு "
"எதுக்கு. யாருக்கு டா கல்யாணம்"என்றான் கதிர் ஒன்றும் புரியாதவனாய்.
"நீயே திருப்பி பாரு "
அதில்...
சரஸ்வதி வெட்ஸ் சரவணன் என்றிருந்தது.
"ச.... சரஸ்வதிக்கு கல்யாணமா "என்றான் ஆச்சரியத்தோடு
"ஆமாம் டா இப்பதான் என்னை பார்த்து இன்விடேஷன் தந்துட்டு போனாள் . இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு உன்னை பார்க்க வரேன்னு சொல்லிட்டு போனா டா "
"ஏய் என்னடா சொல்ற ? அவளுக்கு க...கல்யாணமா "
"உனக்கு இதெல்லாம் கஷ்டமா தான் இருக்கும்னு எனக்கு புரியுது ஆனால் இது நீ ஏத்துக்கிட்டு தான் ஆகனும். அவளை விட்டுட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது சொல்லுவியே இப்ப என்ன பண்ணப்போற "? என்றான் அகிலன்.
அவனிடம் எந்த பதிலும் இல்லை...
"டேய் கதிரு பேசாமல் அவள் கிட்ட உன் லவ்வை சொல்லி எதாவது ஐடியா பண்ணி கல்யாணத்தை நிறுத்திடலாமா "?என்றான் அகிலன்.
அதற்கு அடுத்த நொடி அவன் கன்னத்தை கதிரின் கை பதம் பார்த்தது.
"அடப்பாவி என்னை ஏன் டா அடிக்கிற "?
"பின்ன லூசு மாதிரி பேசுற "
"வேற என்ன தான் வழி "?, என்றான் அகிலன்.
"நான் பார்த்துக்குறேன் நீ கிளம்பு " என்றான் கதிர்.
சற்று நேரம் கழித்து சரஸ்வதி மலர்ந்த முகத்துடன் கதிரை சந்திக்க வந்தாள்.
"ஹாய் கதிர் ஐயம் ரியலி சாரி,இதை நான் முன்னாடியே சொல்லிர்க்கனும் சரவணனுக்கும் எனக்கும் கல்யாணம். ஆக்சுவலி நானும் சரவணனும் லவ் பண்ணிட்டு இருந்தோம். எங்க லவ் வீட்ல தெரிஞ்சிப்போச்சு. சரி அத்தை பையன் தானே அதனால உடனே பெரியவங்க பேசி இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க . " என்றாள் சரஸ்வதி.
அவள் பேச்சில் ஸ்தம்பித்து நின்றான் கதிர்.
"என்ன கதிர் ஒரு கங்க்ராட்ஸ் கூட சொல்ல மாட்டியா நீ எல்லாம் ஒரு ப்ரண்டா " என்று சிரித்து செல்லமாக கோபித்துக்கொண்டு நின்றாள் சரஸ்வதி.
"என்ன சொன்ன சரஸ்வதி "?
"ப்ரண்டுன்னு சொன்னேன். ஏன் டா நீ என் ப்ரண்டு தானே "?
"ம்ம்ம்...."
'என்னை விட்டு தூரம் போய்டுவாளோ என்ற நேரத்தில் அவளுடன் வாழ்நாள் முழுவதும் பேசிப்பழக கடவுள் தந்த வாய்ப்பு இது. ஆம் அவள் என்னோட ப்ரண்டாவே இருக்கட்டும். ' என்றது அவனுடைய உணர்வு.
"கங்க்ராட்ஸ் நண்பி " என்று கை குலுக்க கை நீட்டினான் கதிர். கை குலுக்கியபடி சிரித்தாள் சரஸ்வதி.
"அப்பாடா இதை சொல்ல இவ்ளோ நேரமா டா " என்றாள் சரஸ்வதி.
'இந்த உறவுக்கு பேரு ப்ரண்ட்ஷிப்னு எனக்கு இப்ப தான் டி புரிஞ்சிது ' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான் கதிர்.
'உன்னை விட்டு பிரியக்கூடாதுன்னு தான் நினைச்சேன். அதுக்கு நட்பு தான் ஒரே வழின்னு நீ புரிய வச்சிட்ட. இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் ப்ரண்டா பழகுனதே இல்லை. இதுவரைக்கும் எந்த பொண்ணையும் லவ் பண்ணதும் இல்லை...' என்று நினைத்தப்படி அவளை பார்த்தான்...
"என்ன கதிர் அப்படி பாக்குற . கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடியே வந்திடனும் புரியுதா . எதாவது சாக்கு சொன்ன அம்புட்டு தான் என்று செல்லமாக அவன் தோள் தட்டினாள்.."
"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டி. நான் எப்டி வரமால் இருப்பேன் " என்றான் கதிர்.
"எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் டா. நான் மெக்கானிக்கல் டிப்பார்ட்மெண்ட்ல ஜாயின் பண்ணப்ப நம்ம கிளாஸ்ல எல்லாரும் என்னை ஒருமாதிரி பார்த்தாங்க ஆனால் நீயும் அகிலனும் அப்படி இல்லை. ரொம்ப இயல்பா பேசுனீங்க. உங்களை நான் மறக்கவே மாட்டேன் டா கதிரு "
"கல்யாணம் முடிஞ்சு படிப்பு கன்டினியூ பண்ணுவியா "?
"இல்லை கதிர் , அவரு பெங்களூர்ல வொர்க் பண்றாரு. ஸோ கல்யாணம் ஆகி நான் அங்க வந்ததாகனும் சொல்லிட்டாரு. இவ்வளவு நாள் போராட்டத்துக்கு பிறகு கல்யாணம் ஆகப்போகுது அதனால பிரச்சனை வேண்டாமேன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன்" என்றாள் சரஸ்வதி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.
"சரஸ்வதி உனக்கு படிக்க ஆசை இருக்கா "?
"ம்ம் இல்லாம இருக்குமா டா "
"சரி பார்த்துக்கலாம் விடு "என்றான் கதிர்.
திருமணம் சொன்ன தேதியில் இனிதே நடந்தேறியது. அவர்களுக்கு வாழ்த்து சொல்லியவன் சரவணனின் பாக்கெட்டில் ஒரு கடிதத்தை வைத்தான் கதிர். நேரம் இருந்தால் அதை படியுங்கள் என்று சொல்லி விட்டு திரும்பினான். திருமணம் முடிந்து சற்று நேரம் அமைதியாக நாற்காலியில் தம்பதியர் இருவரையும் அமர வைத்திருந்தனர்.
அப்போது சட்டை பாக்கெட்டில் இருந்த கடிதம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. எடுத்து பிரித்தான்.
"சரவணன் , நீங்க சரஸ்வதியை லவ் பண்றீங்க தெரியும். நீங்க விரும்புவது உண்மை தான் அப்டிங்கிறது புரியுது. ஆனால் கல்யாணம் அப்படிங்கிற பேர்ல அவளோட ஆசையை கட்டிப்போடுறது தப்பு. அவள் படிக்கட்டும். 45 ஆண்பிள்ளைங்க நடுவுல ஒரு பெண்ணா நின்னு மெக்கானிக்கல் துறையில சாதிக்கும் திறமை அவளுக்கு இருக்கு. அவளோட படிப்பு நிப்பாட்டிராதிங்க ப்ளீஸ்...." என்று இருந்தது ..
அது படித்து முடித்ததும் அவன் மனது என்னவோ போல் ஆயிற்று.
"சரஸ்வதி , உனக்கு கதிர் என்ன முறை "
"ஹாஹா முறையா .? கதிர் என்னோட ப்ரண்டு "
"வாட்"?
"ம்ம் நீங்க சொல்ற அந்த முறை , அதெல்லாம் அதுக்கும் மேல உயர்வான நட்பு மட்டும் தான் எங்க இரண்டு பேரு நடுவுல "
"நீ இனிமே படிப்பு கன்டினியூ பண்ணு சரஸ்வதி "
"என்ன சொல்றீங்க"
"ம்ம் நான் ஜாப் சென்னைக்கு ட்ரான்ஸ்வர் வாங்கிக்கிறேன். நீ காலேஜ் விட வேண்டாம் " என்றான் சரவணன்.
அவளுக்கு கண்கலங்கி போனது. இதுக்கெல்லாம் காரணம் கதிர் என்று நினைக்கையில் பெருமிதம் வந்தது. படிப்பு தொடர்ந்தாள். காலங்கள் உருண்டோடின . இன்ஜினியரிங் நான்கு வருடம் முடிந்தது. மூவரும் அந்த நான்கு வருடத்தில் இணைபிரியா நண்பர்கள் ஆகினர். தற்போது மூவரும் சேர்ந்து ஒரு முதலீட்டு கொண்டு தொழில் துவங்க ஆலோசித்து இருந்தனர்.
இன்று :
"ஹாய் கதிர் " என்று அவனருகே வந்து தோள் சாய்ந்தாள் சரஸ்வதி.
"என்ன மா மிஸஸ் சரவணன் காலேஜ் முடிஞ்சு ஆளே காணோம்"என்றான் கதிர்.
"அடப்போடா காலேஜ் முடிஞ்சதும் அடுத்து குழந்தை பெத்துக்க சொல்லி ஒரே ப்ரஷர் எங்க வீட்ல " என்றாள் சரஸ்வதி.
"இதுக்கு ஒரு கடிதம் ரெடி பண்ணிருவானே கதிர் " என்று நக்கல் செய்தான் அகிலன்.
"ச்ச..ச்ச ஜூனியர் சரஸ்வதியை பார்க்கனும்னு எனக்கும் ஆவலா இருக்கு. சரஸ்வதி இந்த விஷயம் தள்ளிப் போடாமல் சீக்கிரமே நீயும் சரவணனும் குட் நியூஸ் சொல்லுங்க" என்றான் கதிர்.
வெட்கத்துடன் குனிந்துக்கொண்டாள் சரஸ்வதி.
"ஏய் நம்ம சரஸ்வதி வெக்கப்படுறா டா " என்றான் அகிலன்.
"ஆமாம் மச்சி "என்றான் கதிர்.
நீண்ட நாள் பிறகு இந்த சந்திப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
சரஸ்வதியை தோழியாக அன்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த அழகான உறவை தொலைத்திருப்பான் கதிர்.
வணக்கம்.
உங்கள் கருத்து பகிரவும்.
நன்றி .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro