காதல் கனவுகள்...
சிமிக்கின்ற கண்ணே!
என் சிற்றிடைப் பெண்ணே!
உன் பூப்போன்ற உதட்டில்
பூங்காதல் சொல்வாயா?
சிந்தனை, செயல்,சித்தமெங்கும்,
சுத்தமாய் மறந்தாலும்!
கொண்ட காதல் மட்டும்,
மாறாதடி பெண்ணே!
விட்டெறிந்த விதைதான்,
வீரம் கொண்டு முளைக்கும்!
சுட்டெறிந்த காதல்தான்
சுகங்களைத் தாங்கும்...
நித்தம் நித்தம் நடக்கும்,
நீ நடத்தும் நாடகம்..
சுற்றி வாழும் மற்றவர்
விட்டு விட்டு சென்றாலும்!
கை தட்டும் சத்தம் கேட்கும்
என் சிவந்த கைகளால்,
உனக்காக எப்பொழுதும்...
கொஞ்சி வாழும் சத்தம்,
பறவை வாழும் கூடுபோல்,
மகிழ்ந்து வாழும் இன்பம்,
உன் நினைவு கொண்ட உள்ளம்,
அஞ்சி நடக்க ஆசை
அன்பு காண வேண்டி! உன்
பண்பு கொண்ட கண் பார்த்து,
பறிபோனதடி என் ஒத்திகை!
காவல் வைத்த கட்டளை!
கட்டவிழ்க்கும் நேரம்..
வென்ற காதல்
கொண்ட வீரம்!
காதல் கடவுளிடம்
வேண்டினேன் பல கோடி!
இடைக்கால தடை நீங்கி
இணைய வேண்டும் இதயங்கள்
என்றென்றும் உனை நாடி....
என்றும் அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro