
Butterfly - 41
அவனது உடைகளுக்கு கீழே ஒரு கோப்பு இருப்பதைப் பார்த்து அதை எடுத்துப் பார்த்தாள். அதில் இருந்த காகிதங்களில் இருந்ததை வாசித்துப் பார்த்ததும் அவளின் தலையில் இடியே இறங்கியது போலானது. ஏனெனில் அது ஒரு விவாகரத்துப் பத்திரம்... அதில் ஸ்ரீதரின் பெயரும், பவித்ராவின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்த்ததும் பவித்ரா இடிந்து போய் அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. "எனில் இது நாள் வரை ஸ்ரீதர் தன் மீது காட்டிய அன்பு எல்லாமே பொய் தானா? இதற்காகத் தான் ஸ்ரீதர் தன் மீது அன்பு காட்டுவது போல் நடித்தாரா? அவர் கொடுக்கப் போகும் விவாகரத்துக்கு நான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த நாடகமா? எல்லாமே பொய்யா? ஸ்ரீதருக்கு அப்போது என் மீது காதல் இல்லையா? எனில் அன்று கடற்கரையில் வைத்து கொடுத்த முத்தம் கூட பொய்தானா? எதுவுமே நிஜமல்ல, நிழல் மட்டும் தான் எனும் எண்ணம் அவள் மனதில் ரண வேதனையை விதைத்தது. அப்படியே அமர்ந்தவளுக்கு கண்களில் கண்ணீர் மட்டுமே வடிந்து கொண்டிருந்தது. கீழே பார்வதியின் குரல் கேட்கவும் தான் உணர்வுக்கு வந்த பவித்ரா எழுந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர் கேட்ட அந்த லிஸ்ட்டை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
அழுது சிவந்திருந்த அவளது கண்களைப் பார்த்த பார்வதியோ,
"என்னாச்சுமா பவித்ரா? கண்ணெல்லாம் சிவந்திருக்கு... அழுதியா?"
"அது... இல்ல, ஒண்ணுமில்லம்மா, கண்ணுல தூசு விழுந்திரிச்சி..." என வழக்கமாக கூறும் காரணத்தையே சற்று தடுமாறிக் கூற அதில் அவளுக்கு ஏதோ பிரச்சினை என அறிந்த பார்வதி அவளிடம் தனியாக,
"என்னம்மா? ஏதாச்சும் ப்ரச்சனையா? என்கிட்ட தயங்காம சொல்லும்மா... நீ என்ன அம்மான்னு தானே கூப்புட்ற?" என்றதும் அவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
"ஆமா... நீ என்னோட பொண்ண, அக்கான்னு தானே கூப்பிட்ற? அப்போ நானும் உனக்கு அம்மா மாதிரி தானே... எதுவாருந்தாலும் சொல்லும்மா, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?" எனக் கேட்க அதற்கு முயன்று முறுவலித்தவள்,
"ப்ரச்சனைலாம் ஒண்ணுமில்லம்மா, நான் நல்லா தான் இருக்கன் எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு, அதான். நான் கெளம்புறன்..." என்று கூறவே பார்வதியும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தாது அவளை அனுப்பி வைத்தார்.
அன்று ஒரு முக்கியமான meeting என கூறி ஸ்ரீதர் காலையிலேயே கிளம்பிப் போயிருந்தான். இதைப் பற்றி அவனிடம் போன் செய்து கேட்கலாம் என்றாலும் அதற்கு அவளது அழுகை இடம் கொடுக்கவில்லை. தனக்குள் வைத்திருக்கவும் முடியாமல், அதை பிறரிடம் கூறவும் முடியாமல் பவித்ரா அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள். அலுவலகத்துக்கு போய் அமர்ந்தவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எந்த விடயங்களையும் வெளியே காட்டி விட்டால் அதன் தாக்கம் குறைவாகத் தான் இருக்கும். உள்ளே வைத்து புழுங்குவதால் வேதனை தான் அதிகரிக்குமே தவிர அது ஒரு போதும் குறையாது. அவளது அழுது வடிந்த முகத்தைப் பார்த்த அவளது நண்பர்கள் சிலர் அவளிடம் வந்து கேட்ட போதும் கூட தலைவலி என்று கூறி சமாளித்து விட்டாள்.
இங்கு ஸ்ரீதரின் அலுவலகத்தில்....
ஸ்ரீதர் அமர்ந்து எதையோ பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். வேறு என்ன "எப்படி பவித்ராவிடம் தன் காதலைக் கூறுவது என்று தான். சரி இதைப் பற்றி கவினிடமே கேட்டு விடலாம் என எண்ணி அவனது காபினிற்குள் நுழைந்தான் ஸ்ரீதர். ஆனால் அங்கு கவின் இருக்கவில்லை. அவன் வேலை விஷயமாக எங்கோ சென்றிருப்பது அப்போது தான் ஸ்ரீதருக்கு ஞாபகம் வரவே அவன் வந்ததும் கேட்டுக் கொள்ளலாம் என செல்லப் போனவன் கவினின் அலைபேசி சிணுங்க, அப்போது தான் கவனித்தான் கவின் தன் செல்போனை விட்டுச் சென்றிருப்பதை. அதை எடுத்தவன் அதிலிருந்த எண்ணைப் பார்க்க அதில் "Control Room" என பெயரை save செய்திருந்தான் கவின். அதைப் பார்த்ததும் ஒரு நிமிடம் புரியாத பார்வை செலுத்தியவன் பின் அதை எடுத்து காதில் வைத்தான். ஒரு பெண்குரல்... அவனை உரிமையோடு... (வேற யாருங்க நம்ம ஸ்வாதி தான்)
"டேய் லூசு, எத்தன வாட்டி போன் பண்றது? ஒரு முக்கியமான விஷயம் டா... நம்ம கல்யாணத்துக்கு என் அம்மா அப்பா ஒத்துகிட்டாங்க... எனக்கு எவ்ளோ Happy ஆ இருக்கு தெரியுமா? நான் சீக்கிரமே இந்த விஷயத்த பவித்ரா கிட்ட சொல்லிட்றன். நீயும் ரொம்ப லேட் பண்ணாம ஸ்ரீதர் கிட்ட சொல்ற வழியப் பாரு... என்ன புரிஞ்சதா?"
என அவள் மூச்சு விடாமல் பேசி முடிக்க இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதருக்கோ கவின் மீது கொலை கோபம் வந்தது. அவள் பவித்ரா எனக் கூறியதும், தான் அவனுக்கு அது ஸ்வாதி என்றே புரிந்தது. அன்று பவித்ராவின் பிறந்தநாள் அன்று கூட கவின், ஸ்வாதி இருவரின் பார்வையும் சரியில்லையே என்று யூகித்திருந்தான் தான். அப்போது விட்டு விட்டவனிடம் இன்று இருவரும் வசமாக மாட்டிக் கொண்டனர்.
"அப்போ, 2 பேரும் எனக்கு தெரியாம ரொம்ப நாளா காதலிச்சிட்டிருக்கீங்க போல?" என்றதும் அந்த குரலில் ஒரு நிமிடம் அதிர்ந்த ஸ்வாதி,
"அ... அது... வந்து... இது, க... கவின் போன் தானே?"
"ஆ... அவன் போன் தான், But பேசறது அவன் friend ஸ்ரீதர்..." என்க எச்சில் முழுங்கிய ஸ்வாதி மனதினுள்,
"ஐயையோ, இவன் கிட்டயா இவ்வளவு நேரம் உளரிகிட்டிருந்தோம். இப்டி என்ன இவன் கிட்ட மாட்டி விட்டு பொய்ட்டியேடா கவின்..." கவினுக்கு மனதினுள் திட்டிய ஸ்வாதி இங்கு ஸ்ரீதரிடம் என்ன கூறுவதென தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அவனே...
"நீ ஸ்வாதி தானே?"
"அ... ஆ... ஆமா..."
"சரி, நீ போன வை. நான் அவன் கிட்ட பேசிக்கிறன்." எனக் கூறி போனைக் கட் செய்து விட்டான்.
இவனது பேச்சு ஸ்வாதிக்கு பீதியைக் கிளப்பியது என்றால், ஸ்ரீதருக்கு தன் நண்பன் தனக்கு தெரியாமல் காதலித்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எந்த நண்பனாயிருந்தாலும் கோபப்படுவான் தான்... (அனுபவம்) இவன் இங்கு கோபத்தில் கையை முறுக்கியபடி அமர்ந்திருக்க கவின் பாட்டுப் பாடிக் கொண்டே (சின்ன திருத்தம் கத்திக் கொண்டே) உள்ளே வந்தான்.
"மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே... பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே..." என பாடிக் கொண்டு வந்தவன் ஸ்ரீதரைப் பார்க்க அவன் மேசையில் அமந்து அங்கிருந்த கதிரையில் தன் ஒரு காலை வைத்து மறுகாலை கீழே போட்டு கைகள் இரண்டையும் இணைத்து அமர்ந்திருக்க,
"இவன் என்ன வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி உக்காந்திருக்கான்..." எண்ணியபடியே அவன் அருகில் சென்று,
"என்ன மச்சி, புதுசா என் cabin க்கு வந்திருக்க? Any doubt?"
"ஓ... உன்கிட்ட நான் doubt கேட்டு வர்ர அளவுக்கு உன் மூள வளந்திரிச்சா?" என்பதற்கு கவின் சிரித்துக் கொண்டே,
"ஆமா மச்சி, தினமும் Horlicks குடிக்குறனா அதான்."
"ஓ... குடி குடி..."
"சரி, நான் கேட்டதுக்கு நீ இன்னும் சொல்லவே இல்லியே?"
"இல்ல மச்சி, நீ லவ் பண்ர வேலைல ரொம்ப பிஸியா இருப்ப அதான் உனக்கு help பண்ணலாம் னு வந்தன்." என்றான் கோபமாக. ஸ்ரீதர் அப்படிக் கூறியதும் கவின் அவனை Slow motion இல் திரும்பிப் பார்த்தான். (மாட்னியா...)
"மச்சி..."
"பேசாத நாயே, பேசாத... பேசாத..." எனக் கூறி அவனது முதுகிலேயே நாலு மொத்து மொத்தினான். அடி வலி தாங்க முடியாமல் கத்திக் கொண்டே அவனது கையை விலக்கிய கவின்,
"டேய், என்னடா ப்ரச்சன உனக்கு? ஒரு அப்பாவி அம்பியப் போட்டு இப்டி அடிக்குற?"
"யாரு, நீ அப்பாவியா? ஊசி போட்ட கொழந்த மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு நீ என்னென்ன வேலையெல்லாம் பண்ண?"
"நான் என்னடா பண்ணன்?"
"நீ என்ன பண்ணல? லவ் மட்டும் தான் பண்றியா இல்ல..."
"டேய், பக்கி... அப்டில்லாம் இல்ல. உன் கிட்ட சொல்லாம மறச்சது தப்பு தான். எதுக்கு ?" என கேள்வியாக கேட்டவனிடம் ஸ்ரீதர் முறைத்துக் கொண்டே,
"அததான் நானும் கேக்கறன் எதுக்கு?" என்க சட்டென யோசித்த கவின்,
"ஆஹ்... நீயும் பவித்ராவும் ஒண்ணு சேரணும். வாழ்க்கைல சந்தோஷமா இருக்கறத பாக்கணும். அதுக்காக தாண்டா உன்கிட்டருந்து இந்த விஷயத்த மறச்சன் (மனதினுள்: அப்பாடா தப்பிச்சன்)"
"ஓஹோ... அப்போ நாங்க ஒண்ணு சேந்தா தான் உனக்கு கல்யாணம் அப்டிதானே?"
"ஆமாண்டா..."
"அப்டியே செவுல்லயே ஒண்ணு விட்டன்னா... லூசு நான் என்ன கேனையா? ஸ்வாதி அம்மா அப்பா கிட்டல்லாம் சம்மதம் வாங்கினதுக்கு அப்றம் தான் நீங்க இத எங்க கிட்ட சொல்லுவீங்களோ?" மீண்டும் கோவமாக கத்தியவனைப் பார்த்து விழி பிதுங்கிய கவின்,
"தெரிஞ்சிடிச்சா?"
"நான் காஞ்சனா படம் பாத்துட்டன்."
"அது இல்ல மச்சான்... நான் உன்னையும் பவித்ராவையும் சேக்கதான் போனன். ஆனா ஆண்டவன் அதுல இன்னொண்ணு plan பண்ணி என்னையும் ஸ்வாதியையும் இணச்சிட்டாண்டா..."
"அந்த ஆள தாண்டா ரொம்ப நாளா தேடிட்டிருக்கன். என் வாழ்க்கைல மட்டும் ஃப்ரன்ட் சீட் ல உக்காந்து ஃபுட்பால் ஆட்றான்." என ஆண்டவனைத் திட்டிய ஸ்ரீதர் மீண்டும் கவினிடம்,
"அது இருக்கட்டும், என்னயும் பவித்ராவையும் சேத்து வைக்கணும்னு தானே வந்த? சேத்திட்டியா?"
"ஹீ... இல்ல..."
"அப்போ மொதல்ல அதப் பாரு..."
"டேய், அது உன் லவ்வு டா. நீதானே அவள லவ் பண்றன்னு சொன்ன? அப்போ நீயே போய் அந்த 3 வார்த்தைய சொல்லித் தொலைக்க வேண்டியது தானே..."
"அத தான் சொல்ல முடில்லயே... எப்ப சொல்ல போனாலும் ஏதாவது ஒரு தட வந்து அத தடுத்திடுது. நான் என்ன பண்ண?" என்க சிந்திப்பது போல் நாடியின் கைவைத்த கவின்,
"ம்... பேசாம மல்லிப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு போய்..."
"டேய்! பைத்தியம்..."
"இல்ல மச்சான், மல்லிப்பூ உனக்கு ரொம்ப புடிக்கும், அல்வா வாங்கிட்டு போனா சாப்டுவாங்களேன்னு சொன்னன்." என்றான் சமாளிப்பாக. அவனைப் பார்த்து முறைத்த ஸ்ரீதர்,
"நீ ஒண்ணும் சொல்லி கிழிக்க வேணாம். நானே ஏதாச்சும் யோசிச்சுக்கறன்."
"மச்சான்... என் மேல கோபம் லாம் ஒண்ணுமில்லையே?"
"ச்சீ, ச்சீ, கோபம் லாம் இல்ல வெறியே வருது... முன்னாடி நிக்காத போடா..." என அவனைத் திட்டி விட்டு செல்ல அவனோ ஸ்ரீதரை சமாதானப்படுத்த அவன் பின்னே சென்றான்.
சிறிது நேரத்தின் பின்...
ஸ்ரீதர் நன்றாக யோசித்து விட்டு பவித்ராவுக்கு போன் செய்தான். அங்கு மனவேதனையிலிருந்த பவித்ராவோ அலைபேசி சிணுங்கவும் அதை எடுத்தாள். அதில் ❤️ Hubby ❤️calling... என்று ஸ்ரீதரின் உருவப் படத்தோடு வரவே அதை எடுத்து அவனது புகைப்படத்தை வருடியவள் அருகிலிருந்த சவித்தா,
"ஹே, பவி, உன் போன் ரொம்ப நேரமா அடிச்சுகிட்டே இருக்கு பாரு..." என்றதும் தான் நினைவுக்கு வந்தாள்.
அவளுக்கு அவனது அழைப்பை எடுத்துப் பேச தோன்றவில்லை. எங்கே அவனது குரல் கேட்டால் அழுது விடுவாளோ எனும் பயம் தான். இன்னும் சிறிது நாட்கள் தானே அவனுடன் இருக்கப் போகிறேன்... இருக்கும் வரைக்கும் அவனை தூரத்திலிருந்து ரசித்துக் கொள்ளலாம் என எண்ணியிருந்தாள் (ஆமா, இவ பெரிய தியாகி...) ஆனாலும் அவன் தொடர்ந்து அழைக்கவே ஏதாவது முக்கியமான விஷயமாக இருக்குமோ என எண்ணி அதை எடுத்து பேசினாள்.
"ஹலோ..."
"ஹலோ, பவி... ஏன் இவ்ளோ நேரம் போன் எடுக்கல?"
"அது... நான் கொஞ்சம் வேலைல இருந்தன் அதான்." அவள் பேசுவதிலேயே அவள் குரலில் இருந்த சோர்வை அறிந்து கொண்டவன்,
"ஹே, என்ன voice ஒரு மாதிரி dull ஆ இருக்கு? உடம்பு எதுவும் சரியில்லையா?"
"இல்ல, இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்ல, light ஆ தலவலி அவளோ தான்."
"தலவலியா? மாத்திர போட்டியா?" அவனது அக்கறை அவள் கண்களில் கண்ணீரையே வரவழைத்தது.
"ம்..."
"சரி, ஓகே... அது நான் எதுக்கு உனக்கு கால் பண்ணன்னா, இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும். So சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு."
"என்ன விஷயம்?"
"அதெல்லாம் இப்போ சொல்ல மாட்டன். ரொம்ப important, நம்ம life சம்மந்தப்பட்டது." என்று கூறவே பவித்ரா ஸ்ரீதர் விவாகரத்து பற்றி கூறத்தான் தன்னை அழைக்கிறார் போலும். என எண்ணிக் கொண்டாள். ஆனால் அங்கு ஸ்ரீதரோ இன்று எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் எனும் முடிவில் இருந்தான். பார்க்கலாம் என்ன நடக்கிறதென...
To be continued...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro