Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Butterfly - 40

அவன் கண்ணிமைக்கு நேரத்திற்குள் அடித்த புயலில் படகு கவிழ ஆரம்பிக்க பெரிய அலையொன்று வந்து அந்த சிறிய படகை சரித்துப் போட்டது. அதில் நிலை தடுமாறிய பவித்ரா, தான் பிடித்திருந்த கம்பியை விட்டு விட படகு சரிந்த வேகத்தில் கடலுக்குள் தவறி விழுந்தாள். அவள் விழுந்ததைப் பார்த்ததும் தன் இதயத் துடிப்பே ஒரு நிமிடம் நின்றது போல் உணர்ந்த ஸ்ரீதர்,

"பவித்ரா!" என அடிக்குரலில் அலறினான். பவித்ராவை அந்த இடத்தில் காணவேயில்லை. அவள் உண்மையாகவே கடலுக்குள் விழுந்து விட்டாளா? என அவன் மூளை சிந்திப்பதற்கிடையில், அவன் மனம் பவித்ராவைக் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணத்தை உந்த நொடி கூட தாமதிக்காமல் அவனும் கடலுக்குள் குதித்தான். இதை எதிர்பாராத அருகிலிருந்த படகோட்டியோ இருவரையும் எண்ணி கவலையோடு அங்குமிங்கும் தேட ஆரம்பித்தான். மழை வேறு அதிகமாக பெய்து கொண்டே இருக்க, இருட்டுக்குள் கண்கள் வேறு தெரியாமல் மங்கிய நிலையில் இருந்தது. அப்போதென்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்றிருந்தவர்கள் புயல் காரணமாக அந்தப் பக்கமாக வரவும் அந்த படகோட்டி விடயத்தை அவர்களிடம் கூறி ஸ்ரீதரையும், பவித்ராவையும் காப்பாற்ற முனைந்தான்.

கடவுள் தான் அந்நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். அங்கு வந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து அந்த சிரமமான நேரத்திலும் பவித்ராவைத் தாங்கியவாறு இருந்த ஸ்ரீதரை மீட்டனர். இருவரையும் காப்பாற்றி கரைக்கு அழைத்து சென்றதும் மழை கொஞ்சம் கொஞ்சமாக லேசாக விட ஆரம்பித்திருந்தது. ஆனால் பவித்ரா இன்னும் கண்விழிக்காமல் இருப்பதைப் பார்த்த ஸ்ரீதருக்கோ வலையில் சிக்குண்ட மீனின் நிலை தான். உள்ளத்திற்குள் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த மீனவர் ஒருவர் ஆதரவு கொடுக்க, அவருடைய குடிசைக்கே ஸ்ரீதரையும், பவித்ராவையும் அழைத்துச் சென்றார். பவித்ராவை குழந்தை போல் கையில் தூக்கிக் கொண்டவன் குடிசைக்குள் அவளை தூக்கிச் சென்று கிடத்தினான். கடலுக்குள் விழுந்ததில் ஸ்ரீதரின் செல்போன் உயிர் விட்டிருக்க, பவித்ராவின் செல்போன் காணாமல் போயிருந்தது. இருவரின் செல்போனுக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த ஆனந்தி இருவரின் செல்போனும் பதிலழிக்காததால் அந்த முயற்சியைக் கை விட்டு சக்திக்கு அழைப்பு விடுத்தாள்.

அதே வேளை இங்கு சுயநினைவற்று கிடந்த பவித்ராவை கன்னத்தில் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

"பவி... பவிம்மா... என்ன பாருடா." அவன் துடிப்பு அவன் குரல் மூலமாகவே வெளிப்பட அருகில் நின்றிருந்த மீனவனின் மனைவி,

"கடலுக்குள்ள பயத்தோட விழுந்திருக்குய்யா பொண்ணு. நெறைய தண்ணி குடிச்சிருக்கும். அதெல்லாம் வெளிய எடுக்கணும்." என்றவர் பவித்ராவின் காலுக்கருகில் அமர்ந்து அவள் கால்களையும் கைகளையும் தேய்த்து விட ஸ்ரீதரும் பவித்ராவின் வயிற்றில் கைவைத்து அழுத்தினான். குடித்த தண்ணீரை மெது மெதுவாக பவித்ரா கக்கினாலும் அவள் முழித்த பாடு இல்லை. வேறு வழியின்றி அவளைக் காப்பாற்ற அவள் உதடுகளோடு உதடு சேர்த்து உறிஞ்சி குடித்த நீர் முழுவதுமாக வெளியே எடுத்தான். சிறு இருமலோடு மெதுவாக கண் விழித்துப் பார்த்தவள் எதிரில் ஸ்ரீதரின் முகத்தைக் கண்டு ஒரே துள்ளலில் அவனைக் கட்டி பிடித்துக் கொண்டாள்.

ஸ்ரீதரைக் கட்டிப் பிடித்து அவள் அழ ஆரம்பிக்க ஸ்ரீதரும் அவள் பயம் புரிந்து அவள் முதுகைத் ஆதரவாக வருடியபடியே,

"ஒண்ணுமில்ல பவி... இங்க பாரு, உனக்கு ஒண்ணும் ஆகல. நான் இருக்கன். நான் இருக்கற வரைக்கும் உனக்கு ஒண்ணும் ஆக விட மாட்டன்." அவன் வார்த்தைகள் பவித்ராவின் மனதில் நம்பிக்கையூட்டியது. ஸ்ரீதர் தன்னை விட்டு விலகி விட மாட்டான் எனும் எண்ணம் அவள் மனதில் எழுந்தது. தான் சற்று முன்னிருந்த கடல் எனும் நரகத்திற்குள்ளிருந்து வெளியே வந்து விட்டதால் அவள் பயம் ஸ்ரீதரின் அருகில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து செல்ல பவித்ரா ஆசுவாசமாகியதும் அவளை அங்கிருந்து அழைத்துச் செல்லப் போனான் ஸ்ரீதர்.

"ரொம்ப நன்றிங்கையா. நீங்க மட்டும் இல்லன்னா, நாங்க பொணமா தான் வீட்டுக்கு திரும்பியிருப்போம்."

"அட என்ன தம்பி இப்டியெல்லாம் பேசிட்டிருக்க? பொஞ்சாதிய பத்திரமா பாத்துக்க. பத்திரமா பொய்ட்டு வா தாயி..." என அவர்கள் இருவருக்கும் விடை கொடுக்க ஸ்ரீதர் அவர்களுக்கு பதில் உபகாரம் செய்வதற்காக தன் காரிலிருந்து பணத்தை எடுத்து வந்து கொடுத்தான். அதை மறுத்த அந்த மீனவக் தம்பதியர் அதற்கு பதில் ஆசீர்வாதத்தையே வழங்கி அனுப்ப, உலகில் இன்னமும் மனிதாபிமானம் உயிரோடு இருக்கிறது எனும் திருப்தியுடனும், நிம்மதியுடனும் பவித்ராவை அங்கிருந்து கூட்டிச் சென்றான்.

பவித்ரா கடலில் விழுந்த பயத்தினாலும், குளிர் காற்றின் தாக்கத்தினாலும் நடுங்கிக் கொண்டிருக்க அவளைப் பார்த்து புன்னகைத்தவன் அவளை அப்படியே இடையோடு சேர்த்து தூக்கிக் கொண்டான். பயம் தந்த இயலாமையும், அதற்கு மேலே ஸ்ரீதரோடு இணைய வேண்டும் எனும் ஏக்கமும் பவித்ராவை பதில் சொல்ல விடாமல் ஊமையாக்க அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஈன்ஸ்வரத்தில்,

"ஸ்ரீதர்..." என முனகினாள். அவள் முனகலுக்கு தலை சாய்க்காதவன் அவளை தூக்கி வந்து காரில் அமர வைத்தான். அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கன்னங்களை வருடியபடி,

"Thanks ஸ்ரீதர்..."

"நமக்குள்ள இந்த Thanks, Sorry இதெல்லாம் வேணாமே?" என்க அதில் புன்னகைத்தாள் பவித்ரா. ஸ்ரீதரும், பவித்ராவும் மீனவர் குடிசையிலிருந்து வெளியே வந்தது, ஸ்ரீதர் பவித்ராவைத் தூக்கியது, அவளோடு காரில் ஏறியது என அனைத்தையும் அவர்கள் இருவரையும் தேடி வந்த ஆனந்தியும், சக்தியும் பார்த்து மகிழ்ச்சியடைந்தபடியே அவர்களும் வீடு திரும்பினர்.

"ஆமா நீ எதுக்காக பவித்ரா அந்த ஷிப் க்கு போன?" ஸ்ரீதர் காரை ஓட்டியபடியே கேள்வி கேட்க அவன் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்த பவித்ரா தன்னை சமாளித்துக் கொண்டு,

"அ... அதுவந்து ஸ்ரீதர்... நான் கவர் பண்ற நியூஸ் சம்மந்தமா ஜோதின்ற ஒரு பொண்ண பாக்க போனன். ஆனா அந்த பொண்ணு அங்க வரல... அதனால நான் தனியா அங்க மாட்டிக்கிட்டன்." தெரிந்தே பொய் கூறிய பவித்ராவின் கண்களைப் பார்த்த ஸ்ரீதர் நொடியில் கண்டுபிடித்துக் கொண்டான். அவள் கூறியது பொய் என்று. இதனை அவளுக்கே தெரியாமல் கண்டுபிடிக்க நினைத்தவன், தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.

அன்றைய இரவு பவித்ராவுக்கும், ஸ்ரீதருக்கும் நிம்மதியற்ற உறக்கமாகவே கழிந்தது. பவித்ரா அப்சரா கூறிய வார்த்தைகளை எண்ணி மனம் உருகியும், ஸ்ரீதர் பவித்ராவுக்கு தீங்கிழைக்க நினைப்பவர்கள் யார் என்பதையும் எண்ணி இருவருக்கும் உறக்கம் வராமலேயே போய் விட்டது.

சில நாட்களுக்கு பின் சக்தி, ஆனந்தியின் நிச்சயதார்த்தம் சக்தியின் வீட்டில் எளிமையாக நடந்து முடிந்தது. அதன் பின்னரான வேலைகள் கட கடவென நடந்து கொண்டிருக்க அனைவரும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொள்ளாத குறையோடு ஒடிக் கொண்டிருந்தனர். மூர்த்தி ஆனந்தியின் திருமணத்திற்கு இத்தனை செலவுகள் செய்வதைப் பார்த்த ராதிகா ஓயாமல் அவரிடம் கத்திக் கொண்டே இருக்க, அதை பொருட்படுத்தாமல் மூர்த்தியும் ஆனந்தியின் திருமணத்திற்கு வேண்டியவைகளை செய்து கொண்டே இருந்தார். அப்சராவும் வேறு எந்த விதத்தில் பவித்ராவை ஸ்ரீதரிடமிருந்து பிரிக்க முடியும் என திட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு சாதகமான நாளும் வந்தது.

சக்தி, ஆனந்தியின் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு...

பார்வதியும், மூர்த்தியும் கீழே அமர்ந்து பத்திரிகை கொடுக்க வேண்டியவர்களுக்கு பெயர் எழுதிக் கொண்டிருந்தனர்.

"ஏம்மா, நீங்க முன்ன இருந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு family இருந்திச்சில்ல, அவங்களுக்கும் பத்திரிக்க வச்சிரு."

"ஆ... சரிங்க அண்ணா..." எனப் பேசிக் கொண்டிருக்கும் போது வேலைக்கு கிளம்பியிருந்த பவித்ரா இன்னும் நேரம் இருக்கிறது என எண்ணி ஆனந்தியின் அறைக்கு சென்றால், அங்கு அவளோ சக்தியுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த பவித்ரா,

"அக்கா கல்யாணத்துக்கப்றம் பேசறதுக்கு கொஞ்சம் மிச்சம் வச்சிக்கோங்க..." பவித்ராவின் குரல் கேட்டதும் செல்போனுக்குள்ளிருந்தே சக்தி,

"யாரு? அந்த அதிமேதாவி பவித்ரா தேவியா?"

"ஆமா..."

"போன் அ கொஞ்சம் ஸ்பீக்கர் ல போடேன்..." என்று கூற ஆனந்தியும் போனை ஸ்பீக்கரில் போட்டாள்.

"யம்மா, பவித்ரா தேவி, கல்யாணத்துக்கப்றம் நாங்க பேசிட்டிருக்க மாட்டோம், Full action தான். நீ வேண்ணா உன் புருசன் கூட நிலா நல்லாருக்கு, நட்சத்திரம் நல்லாருக்குன்னு கடல போடு, நான்லாம் அப்டி கெடையாது."

"ச்சீ... போடா பண்ணி..." என அவனைத் திட்ட அதில் ஆனந்தி சிரித்தாள்.

"ஒவ்வொரு வாட்டியும் என் ஆளு முன்னாடி என்னைய insult பண்றதே உனக்கு வேலையாப் போச்சு. போடி குள்ள கொரங்கு..."

"என்ன தம்பி, 500m அங்கிட்டு இருக்கறங்கற தைரியத்துல பேசறியா? இரு உன்ன பத்தின மொத்த ஜாதகத்தையும் அக்கா கிட்ட போட்டு கொடுக்கறன்."

"ஐயோ, லூசு அப்டி எதுவும் பண்ணிடாத. இனிமே அப்டி சொல்ல மாட்டன்." என்க பவித்ராவும் கெத்தாக,

"அ... அந்த பயம் இருக்கணும்..." என்று கூறி சிரித்துக் கோண்டே வெளியே வர அங்கு அமர்ந்திருந்த பார்வதி,

"பவித்ரா..."

"அம்மா..."

"அது வந்தும்மா... ஸ்ரீதரோட side ல கூப்ட வேண்டியவங்க list எல்லாம் அவனோட cupboard ல வச்சிருக்கானாம். அதக் கொஞ்சம் எடுத்துக் குடுக்கறியாம்மா?"

"ஆ... இருங்க எடுத்திட்டு வர்ரன்." எனக் கூறி தங்கள் அறைக்குச் சென்றவள் அவனது அலமாரியைத் திறந்து பார்வதி சொன்னதை தேடிக் கொண்டிருக்க . அதில் இருந்த காகிதங்களில் இருந்ததை வாசித்துப் பார்த்ததும் அவளின் தலையில் இடியே இறங்கியது போலானது. ஏனெனில் அது ஒரு விவாகரத்துப் பத்திரம்... அதில் ஸ்ரீதரின் பெயரும், பவித்ராவின் பெயரும் எழுதப்பட்டிருந்தது.

To be continued...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro