Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Butterfly - 15

உன்னோடு வாழ ஏங்கும் மனதை

என்ன சொல்லி கட்டி போட

கடந்து போன தூரங்கள்

உதிர்ந்து போன நேரங்கள்

உன்னை என்னை சேர விடாமல்

செய்யும் கோலம் தான் வாழ்க்கையா?

அடுத்த நாள் பொழுது இனிமையாகவே விடிந்தது. அந்த ஞாயிற்றுக் கிழமை. அனைவரும் எதிர்பார்த்திருந்த நாள். அன்று காலை 8 மணி போல அனைவரும் தங்கள் தங்கள் வேலைகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தனர். ஸ்ரீதர் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்க, பவித்ரா தீபாவளிக்கு ஒளிபரப்பப்பட இருக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பை ஒழுங்கு செய்து கொண்டு இருந்தாள். ரேஷ்மா காலையிலேயே சென்று ஷ்ரவனை எழுப்பிக் கொண்டிருந்தாள். அங்கு ஷ்ரவனோ ஆழந்த நித்திரையில் இருந்தான்.

"ஷ்ரவன், டேய், ஏந்திரிடா... டேய்..." அவள் உலுக்கியதில் மெதுவாக கண்விழித்த ஷ்ரவனோ சிணுங்கியபடி,

"ஹே, ரேஷ்மா, எதுக்கு இப்போ எழுப்புற?"

"ஆ, என்னடா இப்டி கேக்குற? நாம இன்னைக்கு வெளிய போறோம் ல?" என்க கண்களை கசக்கியபடி எழுந்த ஷ்ரவன் அவளிடம் தூக்க கலக்கத்தில்,

"வெளியவா? எங்க?"

"டேய், கொன்னுடுவன் டா. இன்னைக்கு சென்னைய சுத்திக் காட்றன்னு சொன்னல?" என்றதும் தான் அவன் கூறியது ஞாபகத்துக்கு வரவும் முகத்தில் பிரகாசத்துடன்,

"ஐ... அப்போ நாம இன்னைக்கு வெளிய போறோமா?" என எழுந்து அமர்ந்தான்.

"Shock அ, கொறடா. சீக்கிரம் ready ஆகி கீழ வா, உனக்காக wait பண்றன்." என கூறி விட்டு செல்ல, அவனும் ஒரு வித புத்துணர்ச்சியுடன் எழுந்து தயாராகிக் கொண்டிருந்தான். இருவரும் சீக்கிரம் கிளம்பி வந்தனர். ரேஷ்மாவும், ஷ்ரவனும் வெளியே செல்லப் போகும் நேரம் அங்கு வந்த ராதிகா,

"டேய், எங்கடா போற?"

"அ... சும்மா வெளிய Outing மா."

"யார் கூட?" என அருகே நின்ற ரேஷ்மாவை முறைத்தபடி ராதிகா கேட்க,

"ரேஷ்மா கூட தான்மா."

"அவ கூட நீ எதுக்கு போற?" என கோபப்பட்ட ராதிகாவைப் பார்த்த ஷ்ரவன்,

"எதுக்குன்னா என்னம்மா சொல்றது? சென்னைய சுத்திப் பாக்கணும் னு கேட்டா அதான்."

"அவ கேட்டா நீ கூட்டிட்டு போகணுமா? நீ என்ன அவளுக்கு வேலக்காரனா?"

"ஐயோ, ஏன்ம்மா இப்டிலாம் பேசற?"

"வேற எப்டி பேச சொல்ற? யாரோ ஒருத்தியோட தங்கச்சி கூட ஊர் சுத்தப் போறன்னு சொல்ற? நீ பண்றதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டிருக்கியா?" என பவித்ராவையும் சுட்டிக் காட்டி பேச ஆரம்பிக்க கோபம் வந்த ஷ்ரவன்,

"இங்க பாரும்மா, இவ யாரோ ஒருத்தியோட தங்கச்சி இல்ல. என் அண்ணியோட தங்கச்சி. எனக்கு மொறப்பொண்ணு."

எனக் கூறிக் கொண்டிருக்க, இதையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்கள் கலங்க நின்று கொண்டிருந்த ரேஷ்மா ஷ்ரவனின் கையைப் பிடித்து நிறுத்தி,

"Sorry Aunty, நான் ஏதோ தெரியாம ஷ்ரவன் கிட்ட கேட்டுட்டன். நாங்க 2 பேரும் வெளிய போகல."

"ஏய், நீ பேசாத." ரேஷ்மாவின் மேல் எரிந்து விழுந்த ராதிகாவைப் பார்த்த ஷ்ரவன்,

"இப்போ எதுக்கும்ம்மா அவள திட்ற?"

"ச்ச, நேத்து வந்த ஒருத்திக்காக என்னையவே எதிர்த்து பேசறல்ல? இவளப் போய்..." என அவர் மேலும் பேச வருவதற்குள் அங்கு வந்த மூர்த்தி,

"ராதிகா, இப்போ எதுக்கு பசங்கள திட்டிட்டிருக்க?"

"ஏன், என் பையன நான் திட்டக் கூடாதா?"

"உனக்கு திட்ட எல்லா உரிமையும் இருக்கு. ஆனா இப்டி தேவல்லாத விஷயத்துக்கெல்லாம் அவங்கள திட்ட வேணாம்ங்கறன். ஷ்ரவன் நீ ரேஷ்மாவ கூட்டிட்டு கெளம்பு." என்க கணவனின் பேச்சில் அமைதியான ராதிகா ரேஷ்மாவையே முறைத்துக் கொண்டிருந்தார்.

"ரேஷ்மா வா..." என ஷ்ரவன் அவளை அழைத்துப் போக முயல அவளோ,

"இல்ல வேணாம் ஷ்ரவன், உன் அம்மா திட்டுவாங்க." என்றாள் கண்களை துடைத்தபடி,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ வா."

அவளது கையைப் பிடித்து ஷ்ரவன் இழுத்து சென்ற பின், இதைப் பார்த்த ராதிகாவோ மூர்த்தியிடம் புலம்பத் துவங்க, அவரோ அதைக் காதிலும் வாங்காமல் சென்று விட்டார். இது வழமையாக நடைபெறுவது தானே என அனைவரும் அமைதியாக இருந்து விட்டனர்.

இங்கு ஆனந்தி அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். அவள் எங்கோ வெளியே கிளம்புவதைப் பார்த்த பார்வதியோ அவளிடம் வந்து,

"ஏய், ஞாயித்துக் கிழம அதுவுமா எங்கடி கிளம்பிட்டிருக்க?"

"அதுவாம்மா, திடீர்னு எங்க Hospital dean special shift போட்டுட்டாரும்மா. அதான் Hospital க்கு கிளம்பிட்டிருக்கன்."

"ஓ, எத்தன மணிக்கு டி வருவ?"

"அ... lunch time க்கு வீட்டுக்கு வந்திடுவன்."

"ம்... சீக்கிரம் வந்திடு சரியா? பத்திரமா பொய்ட்டு வா." என பத்திரம் கூற,

"நான் என்ன சின்னக் கொழந்தையா? இப்பவும் பத்திரம் சொல்லி அனுப்பிட்டிருக்க?"

"நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நீ எனக்கு சின்ன கொழந்த தான். போ." என்று கூற அவளும் சிரித்து விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என தன் Scooty ஐ எடுத்துக் கொண்டு கிளம்பினாள். ஆனந்தியும் சக்தி அனுப்பிய முகவரியை கண்டுபிடித்து அது சக்தியின் வீடுதான் என் உறுதிப்படுத்திய பின் அவன் வீட்டு Calling bell ஐ அழுத்தினாள். 5 நிமிடமாக அழுத்தியும் யாரும் திறக்கவில்லை. கதவு உள் வழியாய் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தவள் அவன் வீட்டின் பின் பக்கமாய் சென்ரு பார்த்தாள். அங்கு அவன் வீட்டு மாடியின் பின் பக்க கதவு திறந்திருப்பதைப் பார்த்து விட்டு அங்கிருந்த ஏணியை வைத்து கஷ்டப்பட்டு மேலே ஏறி அந்த கதவின் வழியாக உள்ளே சென்றாள். வீடே வெறுமையாக இருந்தது. இதைப் பார்த்த ஆனந்தி மனதினுள்

"என்ன வீட்ல யாருமே இல்ல, ஒரு வேள வீட்ட பூட்டிட்டு வெளிய எங்கயாச்சும் போயிருப்பானோ..." என எண்ணியபடி அங்கிருந்த ஒரு அறைக்கதவைத் திறந்தாள். அந்த அறைக்குள் தான் சக்தி இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த ஆனந்தி தன் மனதினுள்

"என்ன தூங்க விடாம பண்ணிட்டு நீ மட்டும் நல்லா தூங்கிட்டிருக்கியா?" என அவன் அருகில் வந்து முட்டி போட்டு அமர்ந்து கொண்டு அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ரொம்போ அழகா இருக்கடா நீ. உண்மைய சொன்னா உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும் னு வார்த்தையால சொல்ல முடியாது. நீ என் பக்கத்துல வரும் போதெல்லாம் எனக்குள்ள என்னமோ ஆகுதுடா. உன் கண்ண பாத்ததும் நான் என்னையே மறந்திட்றன். ஆனா இதெல்லாம் நிரந்தரம் இல்லன்னு நெனைக்கும் போது தான் மனசுக்கு கஷ்டமாருக்கு. இது காதலா மட்டும் இருக்கக் கூடாதுன்னு என் மூள சொல்லிகிட்டே இருக்கு. ஆனா அத என் மனசு ஏத்துக்க மறுக்குது. நான் என்ன பண்ணட்டும் சொல்லு?"

என மெல்லிய குரலில் அவனுக்கு கேட்காத வண்ணம் அவனுடன் பேசிக் கொண்டிருந்த ஆனந்தி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவனும் கண்முழித்து எழுந்து பார்க்க அவனருகில் ஆனந்தியின் முகம்,

"கனவுல வந்து ரொம்ப Disturb பண்றடி நீ..." எனக் கூறி விட்டு மறுபடியும் கண்ணை மூடப் போக,

"என்ன சொன்ன?" என ஆனந்தியின் குரல் கேட்டு அதிர்ந்து கண் விழிக்க, அவள் உண்மையிலேயே அருகில் இருப்பதைப் பார்த்ததும் தன்னுடைய கை வலியை மறந்து திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அவசரமாக எழுந்ததில் grip band போட்டிருந்த அவனது கை வலிக்க,

"ஆ!" எனக் கத்தியே விட்டான். ஆனந்தியோ பதறியபடி,அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"ஹே, பாத்துப்பா..." என கூறி அவனைப் பக்குவமாக அமர வைத்து விட்டு அப்போது தான் அவனை முழுதாகப் பார்த்தாள். வலது கையிலும் காலிலும் பெரிய Bandage சுற்றப்பட்டிருந்தது. அதைப் பார்த்து உண்மையிலேயே ஆனந்தி பயந்து விட்டாள்.

"ஹே, நீ சின்ன அடின்னு சொன்ன? இவ்ளோ பெருசா கட்டு போட்டிருக்காங்க? என்னாச்சு? ரொம்ப வலிக்குதா? சொல்லுடா..." என கண்களில் ஒரு வித கலக்கத்துடன் கேட்க சக்திக்கு ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வர அதை அடக்கி கொண்டவன் ஆனந்தியின் அழைப்பில் அவளைப் பார்த்து,

"ஹே, அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. அது சரி நீ எப்டி என் வீட்டுகுள்ள வந்த?"

"ஹ்ம், சார் தான் calling bell அ அமுக்குனா கதவ தொரக்க மாட்டேங்குறீங்களே, அதான் மாடி வழியா வந்தன்."

"மாடி வழியா... அப்போ ஏறி வந்தியா?"

"ஆமா..." என்க தன் கவலை மறந்து சிரித்தவன்,

"பரவால்லயே எனக்காக Spider man range க்கு போயிருக்க?"

"ஆமா, பொய்ட்டாலும்..." சலித்துக் கொண்ட ஆனந்தி அவனையே பார்த்திருக்க அவனும் புன்னகைத்தபடி,

"சரி ஓகே... நீ Hall ல wait பண்ணு நான் 5 Minutes ல வந்திட்றன்." என்க கூறி விட்டு மெதுவாக எழ அவளும் சென்று முன் Hall இல் அமர்ந்து கொண்டாள். அங்கு மாட்டப்பட்டிருந்த அவனது புகைப் படங்களை ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருக்கும் போது சக்தி அறையிலிருந்து வந்தான்.

"ஹே, என்ன வீடு ரொம்ப அமைதியா இருக்கு?"

"வீடுன்னா அமைதியா தான் இருக்கும்."

"அப்போ உன் வீட்ல இருக்கறவங்கெல்லாம் எங்க?

"யாருமில்ல நான் மட்டும் தான்." என அவன் சற்று சோகமாக கூற ஆனந்திக்கோ அவனது முக வாட்டம் கவலையை கொடுத்தது.

"ஹே, Sorry எனக்கு தெரியாது."

"பரவால்ல..." இன்னமும் அவன் முகம் கவலையாய் இருப்பதைப் பார்த்தவள் நிலைமையை சமாளிக்க அங்கிருந்த ஒரு சிறுபிள்ளைகள் இருவரின் புகைப் படத்தை காண்பித்து,

"இது யாரு?"

"அதுவா? அது நானு, மத்தது பவித்ரா."

"பவி... அப்போ பவித்ரா உன் friend ஆ?" என தெரியாதவளாய் கேட்க,

"ஏன், இருக்கக் கூடாதா? நானும் அவளும் சின்ன வயசுலருந்து friends."

"ஓ, அப்டியா?சூப்பர்..." எனக் கூறியபடியே மற்ற புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்க, சக்தி

"நீ evening தான் வருவன்னு நெனச்சன். அதான் தூங்கிட்டன்."

"ம், பரவால்ல, இன்னைக்கு எனக்கு ஒரு புது அனுபவத்த குடுத்திருக்கல்ல? அதுக்கு Thanks." எனக் கூறி சிரிக்க அவனும் சிரித்தபடி வந்து அமர்ந்தான்.

"சரி சொல்லு என்ன சாப்பிட்ற? Coffee, Tea or Green Tea?"

"ஆமா, இந்த கைய வச்சிட்டு நீ எனக்கு Coffee போட்டு குடுப்ப?" என்றதும் அவனும் தலையில் அடித்துக் கொண்டு சிரிக்க அவனது சிரிப்பை ரசித்தப்படி,

"சரி Kitchen எங்கருக்குன்னு சொல்லு. நானே போட்டு எடுத்துட்டு வர்ரன்."

"ஹே இல்ல உனக்கு எதுக்கு..."

"எனக்கு எந்த கஷ்டமும் இல்ல சொல்லு..."

"அத சொல்லல, நீ இந்த Dad's little princess லாம் இல்லியே, அப்டி இருந்தா Coffee குடிக்குற நான்ல பாவம் அத சொன்னன்." என்றதும் ஆனந்தி சிரித்துக் கொண்டே அவன் தலையில் செல்லமாக அடித்து விட்டு சமயலறை நோக்கி சென்றாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சக்தி மனதினுள் ஆனந்தியைப் பற்றி எண்ணியபடியே ,

"நீ என் மேல இப்டி care எடுத்துக்கறது என்ன என்னமோ பண்ணுது ஆனந்தி. நீ இப்டியே என் life full ஆ என் கூட இருக்கணும் னு தோணுது. நீ ஒத்துப்பியா?" என இவனும் அவளைப் போலவே தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். சிறிது நேரத்தில் கையில் Coffee cup உடன் வந்து அமர்ந்தாள். அவள் Coffee ஐக் கொடுத்ததும் அதை இடது கையால் வாங்கியவன் அதைக் குடிக்கலானான்.

"ஹப்பா, உன் Kitchen க்குள்ள Coffee டப்பா, Sugar டப்பான்னு தேடுரதுக்குள்ள ஒரு வழி ஆயிட்டன்." என சலித்துக் கொண்டு அவளும் Coffee குடிப்பதைப் பார்த்து விட்டு,

"ஹே, நீ எப்பவும் Green tea தானே குடிப்ப? இன்னைக்கு புதுசா Coffee குடிக்குற?"

"அது, சும்மா ஒரு Change ஆ இருக்கட்டுமேன்னு தான்." எனக் கூறி சிரிக்க அவளது சிரிப்பில் ஒரு நிமிடம் தன்னை மறந்தான் சக்தி.

"அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு உடம்பு சரியாகுற வரைக்கும் உனக்கு சாப்பாடு யார் குடுப்பா?"

"அ... Friend க்கு Phone பண்ணா, அவன் Hotel அ வாங்கிக் குடுத்திட்டு போவான்."

"Hotel லயா? Hotel ல சாப்ட்டா உடம்பு என்னதுக்காகும்?" என சற்று நேரம் யோசித்தவள்,

"இல்ல, இனிமே Hotel ல எல்லாம் order பண்ணாத நானே உனக்கு சமச்சு எடுத்திட்டு வர்ரன்."

"ஹே எதுக்கு நீ எனக்காக..."

"சுப்... அமைதியா இரு. நான் சொல்ரத தான் கேக்கணும். ஹ்ம்?" என அவள் கண்களை உருட்டி கேட்க, அவனும் மந்திரித்து விட்டதைப் போல தலையாட்ட, அவளும் சிரித்துக் கொண்டே மீண்டும் சமயலறைக்குள் நுழைந்தாள். அவளது இந்த அன்பு சக்தியை உண்மையிலேயே கண் கலங்க வைத்து விட்டது. இந்த அன்பு தனக்கு வாழ்கை முழுதும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் கூடவே அவனிடம் எழுந்தது.

இங்கு 11 மணியளவில் கவின் ஸ்வாதி சொன்ன அந்த Coffee shop இல் வந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். எப்போது வருவாளோ என நிமிடத்திற்கு ஒரு முறை அவன் மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருப்பதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்வாதியோ தனக்குள் சிரித்துக் கொண்டு 11.30 போல அங்கு வந்து அமர்ந்தாள். அவள் வந்ததும் அவளை ஒரு ஏக்கத்தோடு பார்த்தவன்,

"Hi Partner." என முகம் முழுவதும் பிரகாசத்தை படர விட்டு கூற சிறு புன்னகையுடன் வந்து அவன் முன் அமர்ந்தாள். கவினும் எப்படி ஆரபிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். பல் நிமிடங்கள் அமைதியாக கரைந்து கொண்டிருந்தது. பின் கவின் தான் அந்த அமைதியைக் கலைத்தான்.

"அ... இன்னைக்கு உன் Dress ரொம்ப அழகா இருக்கு."

"ஓ... அப்போ இன்னைக்கு மட்டும் தான் அழகா இருக்கா?"

"இல்ல நேத்துவரைக்கும் உன்ன பாக்கும் போது எனக்கு எந்த Feelings உமே பெருசா இல்ல. ஆனா இப்போ நீ என் கண்ணுக்கு ஒவ்வொரு நிமிஷமும் அழகா தெரியுற." எனக் கூற அதைக் கேட்டு புன்னகைத்தவள்,

"ஓஹோ... அப்டியா?" என புருவத்தை உயர்த்திக் கேட்க கவின் அந்த உலகத்திலேயே இல்லை. வேறு ஏதோ ஒரு உலகத்தில் பறப்பது போலிருந்தது.

"ஹ்ம்... நேத்து நைட்டு நீ அத சொன்னதுல இருந்து எனக்கு தூக்கமே வரல்ல தெரியுமா?" என்க என்ன என்பதைப் போல யோசித்த ஸ்வாதி,

"என்ன சொன்னன்?"

"என்ன புடிச்சிருக்குன்னு..."

"அப்டியா சொன்னன்?" எனக் கேட்க கவினோ அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

To be continued...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro