Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Butterfly - 06

கடலலைகளில் உன் வாசம்

அதை உணர்ந்த நொடி 

உன் தேகத் தென்றலில் தொலைந்தேன்

மறையும் சூரியனாய் வாழ்வில் போனவள் போல்

நீயும் ஆகிடுவாயா? இல்லை...

மீண்டும் என் மனதில் உதிப்பாயா?

ஸ்ரீதர் அப்சராவை சந்தித்த நாளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவளது முகம் கண்களின் முன் வந்து சென்றது. அவளை நினைத்து அவனுக்கு அழுகை வந்த அதே நேரம், அவள் கூறிய வார்த்தைகளும் ஞாபகத்துக்கு வர கோபத்தில் பவித்ரா கொடுத்த மல்லிகைப் பூங்கொத்தை தூக்கி குப்பை தொட்டியில் வீசினான் ஸ்ரீதர். அப்போதென்று பார்த்து உள்ளே வந்தான் கவின்.

"டேய், என்னடா பண்ணிட்டிருக்க? இத எதுக்குடா தூக்கி போட்ட?"

"எனக்கு என்ன பண்றதுன்னே தெரில்லடா. எப்பெல்லாம் அவள மறக்கணும்னு நெனைக்குரனோ அப்போல்லாம் ஏதாவது ஒரு விஷயம் அவள நியாபகப் படுத்திட்டே இருக்கும் டா. இதோ இந்த Jasmine bouquet. இப்டிதானே டா அவள first time பாத்தன். மறக்க முடில்லடா. ஏன் இப்போ வந்தாளே அந்த பொண்ணு பவித்ரா. அவ voice கேக்கும் போது கூட அப்டியே அப்சராவோட voice கேக்குற மாதிரியே இருக்குடா." என்றதும் பாதி அதிர்ச்சியும், பாதி சந்தோஷமுமாய் அவனை திரும்பிப் பார்த்தான் கவின். பின்பு அவனிட திரும்பி,

"நீ அப்சராவ மறக்குறதுக்கு try பண்றல்ல, வேணாம் விட்டுடு டா. இதப்பத்தியே யோசிச்சிட்டிருந்தா உனக்கு தான் மனவேதன அதிகமாகும் வேணாம் விட்டுடு. நீதான் அவள நெனச்சி கவலப்பட்டுட்டு இருக்க. ஆனா அவ..." அவன் முடிக்க முன்னமே கண்ணீருடன் அவனைப் பார்த்த ஸ்ரீதர்,

"ஹும்... கரக்ட் டா. என்ன இங்க அழ விட்டுட்டு அவ அங்க கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருப்பால்ல?"

கண்களில் பாதி கண்ணீருடன் கூறியவன், அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அங்கிருந்து தனது காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான். கடற்கரை அவனது அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்தது. அவன் நிம்மதியாக இருக்கும் ஒரே இடம் அதுதான். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் பல பேர் தங்களது குடும்பங்களை அழைத்துக் கொண்டு வார இறுதியை கொண்டாட வந்திருந்தனர். மேலும் அன்று சிறுவர்கள் தினம் வேறு என்பதால் சிறுவர்களுக்கான போட்டிகளும் ஆங்காங்கு நடந்து கொண்டிருந்தது.

அவர்களுடன் மக்களோடு மக்களாய் ஓரிடத்தில் அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். அதே நேரம் அவனுக்கு சற்று தொலைவில் பவித்ராவும் அமர்ந்திருந்தாள். இருவரும் இருந்த மன நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

கதிரவன் மறைய ஆரம்பித்தான். ஸ்ரீதர் அதையே வெறித்துப் பர்த்துக் கொண்டிருந்தான். இந்த சூரியனைப் போல தன்னுடைய காதலும் எங்கோ மறைந்து போய் விட்டதே என அவன் மனதில் வருத்தம். ஆனால் அதே சூரியன் அடுத்த நாள் அதற்கு எதிர்ப்புறம் உதிக்கப் போவதை அவன் சிந்திக்கவில்லை. அதே போல் தான் அவன் காதலும் என்பதும் அப்போது அவனுக்கு புரியவில்லை.

அதே நேரம் இங்கு பவித்ரா அமைதியாக அமர்ந்து மறையும் ஆதவனை தன் கண்களால் ரசித்துக் கொண்டிருந்தாள். சூரியனும் மஎது மெதுவாக மறைய இருள் சூழ ஆரம்பித்தது. அதனால் ஸ்ரீதர், பவித்ரா இருவரும் ஒரே நேரத்தில் எழுந்து செல்ல எத்தனிக்கும் போது தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பவித்ரா அவனைப் பார்த்ததும் பரிச்சயமாக புன்னகைக்க அவனும் சிறிதாக புன்னகைத்தான். இருவரும் அருகே வந்ததும்,

"ஹாய் ஸ்ரீதர்."

"ஹாய்..." கூறி அவளைப் பார்த்து புன்னகைத்தான் ஸ்ரீதர்,

"நீங்க டெய்லியும் இங்க வருவீங்களா?"

"டெய்லியும் இல்ல, எப்பவாச்சும் தோனுச்சின்னா வருவன்."

"ஓ..." எனப் பொதுவாக பேசியவர்கள் இரண்டு நிமிடத்திற்கு அமைதியாகவே வந்தனர். அப்போது நடந்து வந்து கொண்டிருந்த பவித்ராவை ஸ்ரீதர் ஓரக் கண்ணால் கவனித்தான். அவள் விரித்து விட்டிருந்த கூந்தல் கடற்கரைக்காற்றுக்கு நடனமாட அதனுடன் இணைந்து அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவும் ஆடியது. செதுக்கி வைத்த முகம் அதில் சிவப்பு நிற உதடுகள், கருமை தீட்டப்பட்ட அழகிய கண்கள், வரைந்து வைத்த புருவங்கள் என அவளது அழகு அந்த மாலை நேரத்திலும் தெளிவாக தெரிந்தது.

அவள் எவ்வளவு அழகோ, அதே போல் அவள் குணத்திலும் சிறந்தவள் என்பதை ஸ்ரீதர் இந்த ஒரு மாத காலத்திற்குள் அறிந்திருந்தான். இவளை திருமணம் செய்து கொள்ள போகிறவன் கொடுத்து வைத்தவன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். இப்படி இருவரும் வெவ்வேறு யோசனையில் நடந்து வந்து கொண்டிருக்க முன்னால் அவசரமாக ஓடி வந்த ஒருவன் பவித்ராவை தெரியாமல் இடித்து விட தடுமாறி கீழே விழுந்தாள் பவித்ரா. இதைப் பார்த்ததும் ஓடி வந்து அவளது கையை பிடித்து தூக்கி விட்டான் ஸ்ரீதர்.

"ஐயோ, I'm sorry ங்க. ஏதோ தெரியாம. நான் கொஞ்சம் அவசரமா வந்தன் அதான்." என ஓடி வந்தவன் விளக்க முயற்சிக்க அதைக் கேட்காத ஸ்ரீதர்,

"அவசரமா வந்தா முன்னாடி யாரு வர்ராங்கன்னு பாக்க மாட்டீங்களா? கண்ணு தெரியாதவன் மாதிரி வந்து மோதறீங்க?"

"Sorry sir." என மறுபடியும் மன்னிப்பு கோரினான். அதைப் பார்த்த பவித்ராவும்,

"இல்ல, பரவால்ல, நீங்க போங்க. நான் பாத்துக்கறன். இனிமே என்ன அவசரம்னாலும் பாத்து போங்க bro." என தன்னை இடித்தவனிடம் பவித்ரா கூற,

"ஓகே, Sister sorry நான் வர்ரன்." என அவன் சென்று விட பவித்ரா ஸ்ரீதரை பார்க்க அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஸ்ரீதர், என்ன அப்டி பாக்கறீங்க?"

"உங்களுக்கு உண்மையாவே நல்ல மனசுங்க." என அவன் மனதார கூற பவித்ராவும் சிறு புன்னகையுடன்,

"Thanks, போலாமா?"

"ம்..."

என நடக்க ஆரம்பித்தனர். நடக்க ஆரம்பிக்கும் போதே, பவித்ரா விழுந்ததில் காலில் லேசாக அவளுக்கு சுளுக்கு பிடித்து விட நடக்கும் போது சற்று தடுமாறினாள். இதைப் பார்த்த ஸ்ரீதர்,

"என்னாச்சு பவித்ரா?"

"இல்ல, கீழ விழுந்ததுல லேசா சுளுக்கு பிடிச்சிடுச்சின்னு நெனைக்குரன். கொஞ்சம் வலிக்குது."

"அ... support க்கு என் கைய புடிச்சிகங்க." என அவன் கையை நீட்ட சிறு தயக்கத்துடன் அவனது கையை பற்றினாள்.

"Thanks."

"ம்... வீட்டுக்கு எதுல போவீங்க?"

"அந்த side என்னோட car நிக்குது. அதுல போய்டுவன்."

"ஓ, அப்போ வாங்க. நானே உங்கள அங்க கொண்டு போய் விட்றன்." என அவள் கைபற்றி அவள் கார் நிற்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் ஸ்ரீதர். தன் காரினுள் ஏறி அமர்ந்த பவித்ரா ஸ்ரீதரிடம்,

"மறுபடியும் Thanks." என்றதும் ஸ்ரீதரும் புன்னகைத்து விட்டு அவளிடம் விடை பெற்று தன்னுடைய காருக்கு வந்தான். ஆனால் அதற்குள் ஏற்கனவே கவின் அமர்ந்திருந்தான்.

"டேய், நீ என்னடா இங்க?" எனக் கேட்க கவினோ அவனை முறைத்தான்.

"நான் தான் சொன்னன்ல, என் வண்டி பஞ்சர் னு. நீதானே என்ன வீட்டுக்கு கூட்டிட்டு போறன்னு சொன்ன? சொல்லிட்டு நீ feelings ங்கற பேர்ல இங்க வந்து உக்காந்தா நான் என்ன குதிரைலயா வீட்டுக்கு போறது? மரியாதையா என்ன வீட்ல drop பண்ணு."

என்றதும் அவன் கூறிய விதத்தில் மெலிதாக சிரித்துக் கொண்டே ஸ்ரீதர் வண்டியை எடுத்தான். ஆனால் கவின் வந்ததிலிருந்து ஸ்ரீதர் பவித்ராவுடன் நடந்து வந்தது, அவளது கையை பிடித்து கார் வரை அழைத்து சென்றது என எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். அவனுக்கு மனதிற்குள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே நேரத்தில் இங்கு கடற்கரையில் பவித்ராவை தெரியாமல் இடித்ததாய் கூறியவன் ஸ்ரீதரும், பவித்ராவும் செல்வதைப் பார்த்து விட்டு யாருக்கோ செல்போனில் அழைப்பு விடுத்தான்.

"ம்... ஆமா, இப்போ தான் கெளம்பி போறாங்க. பையன் பாக்கறதுக்கு பணக்கார வீட்டு பையன் மாதிரி தான் இருந்தான். ம்... அப்போ நான் அப்றோம் கூப்பிட்றன்."

எனக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தான். ஸ்ரீதரையும் பவித்ராவையும் ஒன்றாக பார்த்ததில் மகிழந்த கவின் அப்போது ஒரு முடிவெடுத்தான். வீட்டுக்கு சென்று இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் கவின்.

"Yes, பவித்ரா தான் ஸ்ரீ க்கு correct ஆன ஆளு. என்ன பாடு பட்டாவது ஸ்ரீக்கும் பவித்ராக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரணும்." என சிந்தித்து கொண்டிருக்க திடீரென கவின் முன்பு வந்தது அவனது மனசாட்சி,

"ஏண்டா லூசுப் பயலே, கொஞ்சமாச்சும் அறிவிருக்கா உனக்கு?"

"டேய் நீ எங்கருந்துடா வந்த?"

"உனக்குள்ளருந்து தாண்டா அர மெண்டல்."

"ஹான்? எதுக்கு வந்த? அதுக்கு முன்னாடி என்ன எதுக்கு திட்ன?"

"பண்ணி, பண்ணி, நீ பாட்டுக்கு ஸ்ரீதருக்கு பவித்ராக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ப்ளான் பண்ற?" எனக் கேட்டதும் மனசாட்சியை முறைத்ததும் கவின்,

"ஏன் அதுல என்ன தப்பு?"

"என்ன தப்பா? எப்ப பாத்தாலும் selfish ஆவே யோசி. ஸ்ரீதர்கிட்ட பேசலாம் சரி. பவித்ரா கிட்ட என்ன பேச போற? அவங்கள பத்தி எந்த details உமே தெரியாது. Maybe அவங்களுக்கு கல்யாணம் கூட ஆகிருக்கலாம்."

"அதுக்கு chance இல்ல. ஏன்னா நான் அவங்கள நல்லா watch பண்ணிட்டன். அவங்க கழுத்துல தாலியோ, கால்ல மெட்டியோ, கைல மோதிரமோ இல்ல." இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்ட கவின் தன் மனசாட்சியை பெருமையோடு பார்க்க அதுவோ இவனை ஏளனமாக பார்த்து விட்டு,

"ஆ, இதெல்லாம் நல்லா watch பண்ணு. ஒரு வேள அவங்க யாரையாச்சும் இப்போ Love பண்ணிட்டிருந்தா என்ன பண்ணுவ?"

"ஆமால்ல, நான் அத யோசிக்கவே இல்ல. Hint குடுத்ததுக்கு Thanks. சரி அவங்க love பண்றாங்களா இல்லையான்னு எப்டி கண்டுபிடிக்கிறது? அதுக்கும் நீயே ஐடியா குடேன்."

"ம்... இதுக்கு தான் நான் வேணுங்கறது. உன் நண்பனைப் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன். இப்போ உன்கிட்ட கேட்டா ஸ்ரீதர பத்தி சொல்லுவல்ல? அதே மாதிரிதான். அதனால first பவித்ராவோட best friend அ போய் பாரு." என்க சிந்தித்த கவின் அதுதான் சரியாக இருக்கும் என எண்ணி,

"Wow, செம ஐடியா. அவங்களோட best friend அ நான் எங்கென்னு போய் தேடுறது?"

"போடா, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா அப்போ உன் மூள எதுக்கு இருக்கு? Fresh ஆ தானே வச்சிருக்க? போய் யோசி." என்றதும் கவின் பாவமாக பார்க்க,

"என்ன பாக்குற?"

"நீ என்னோட மனசாட்சியா, இல்ல Enemy ஆ? என்ன இந்த திட்டு திட்ற?"

"போடாங்... போ, போய் யோசி...... இப்போ என்னடா பாக்குற?"

"இல்ல, பொதுவா இந்த மனசாட்சில்லாம் heroes க்கு தானே வரும்?"

"ஓ, அப்போ உனக்கு hero ன்னு நெனைப்போ?" என்கவும் மனசாட்சியை முறைத்த கவின் கையெடுத்து கும்பிட்டு,

"யப்பா போதுண்டா சாமி, என் மானத்த வாங்குனது போதும் நீ மொதல்ல கெளம்பு." என்றதும் அவனது மனசாட்சி மறைந்து விட கவினும் யோசிக்க ஆரம்பித்தான்.

2 நாட்களுக்கு பின் பவித்ராவைப் பற்றி தீவிரமாக விசாரித்து அவள் தங்கியிருக்கும் வீட்டு முகவரியை கண்டுபிடித்தான் கவின். பவித்ராவும், அவளது நண்பி ஸ்வாதியும் தான் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் என அறிந்து பவித்ரா இல்லாத நேரமாக பார்த்து அவளது வீட்டுக்கு சென்றான் கவின்.

அங்கு சென்று அவளது வீட்டுக் கதவை தட்ட "Coming..." என்ற குரலுடன் வந்து கதவைத் திறந்தாள் ஸ்வாதி. ஸ்வாதி கதவைத் திறந்ததும் அவளைப் பார்த்து சொக்கிப் போய் நின்றான் கவின்.

"யார் நீங்க? என்ன வேணும்?"

ஸ்வாதி. அவளது அழகிய குரலில் கேட்க, கவின் இங்கு மனதிற்குள் ஸ்வாதியுடன் டூயட் பாடினான்.

ஆள சாச்சுபுட்ட கண்ணால, ஐயோ தாங்கலையே என்னால

மூச்ச வாங்கி போற முன்னால, பேச்சே நின்னுரிச்சி தன்னால

நெஞ்சுக்குள்ள...

என பாட வரும் போது அவன் முன் மீண்டும் வந்தது அவனது மனசாட்சி,

"டேய் உன்கிட்ட நான் அன்னைக்கே சொல்லிட்டன். நீ Hero இல்ல. தயவு செஞ்சு இந்த பாட்டெல்லாம் நெனச்சு பாக்காதடா. என்னால முடில்ல." எனக் கூறி விட்டு மறைந்தது. இங்கு ஸ்வாதியோ ஐந்து தடவைக்கு மேல் அவன் முன் கத்தி விட்டு கதவை சாத்த போனாள்.

"ஏங்க, ஏங்க... கொஞ்சம் இருங்க."

"யார் நீங்க? எதுக்கு வந்தீங்க?"

"I'm கவின். Seetha constructions ஓட Manager. ஒரு முக்கியமான விஷயமா உங்ககிட்ட பேசணும்."

"ஏங்க, உங்கள எனக்கு முன்ன பின்ன தெரியாது. என்கிட்ட என்ன முக்கியமா பேசணும்?" என முறைத்தபடியே ஸ்வாதி கேட்க,

"அ... உங்க friend பவித்ராவப் பத்தி பேசணும். அவங்களுக்கு என்ன நல்லா தெரியும்."

பவித்ரா என்றதும் சிறு யோசனையுடன் ஸ்வாதி கதவைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தாள்.

To be continued...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro