என் வீட்டு மகாராணி
தாயை இழந்தவள்..
தந்தை இருந்தும் அனாதையாக வளர்ந்தவள்...!!!
ஏழு வயதில் பள்ளியைவிட்டு ஏறு பிடித்தவள்...
பத்து வயதில் தன் தங்கைகளுக்கு தாயானவள்...
பதினைந்து வயதில் பெண்மையில் பூரித்து நின்றவள்...
பதினாறு வயதிலயே திருமணமானவள்...
பதினேழாம் வயதிலிருந்து அடுத்தடுத்த
முன்று முத்துமணிகளை பெற்றவளுக்கு
முழு தாய், தந்தையாக உன் கணவர் இருக்க.. அவரையும் சேர்த்து பாசத்தையும் இருபத்தி ஐந்து வயதில் இழந்தவள்..!!
இன்று உன் பிள்ளைக்கு இருபத்தி மூன்று வயதாகியும் தனியாளாக ஒரு வீரமங்கையாக எங்களை வளர்த்த என் அன்னைக்கு என்ன கைமாறு செய்வேனோ..!!
கவிதையல்ல... உண்மை..
இப்படிக்கு:
என் அம்மாவின் முத்துகளில் ஒருவள்..
*****
இன்று
நான் முழுவதும் ஐந்து நிமிடம் அமர்ந்திருக்க என் தங்கை என் அருகில் வந்து என் மொபைலை பார்த்தவள்
"அம்மா.... இந்த புள்ளை உங்களுக்கு என்னமோ கவிதை எழுதிட்டு இருக்க .."
என் கையிலிருந்து மொபைலை பிடுங்கி கொண்டு "படிக்கற கேளுங்க.. ம்ம் கேளுங்க" என என் தங்கை கூவீக் கொண்டே செல்ல இதனை முழுவதும் கேட்ட என் அன்னை கூறிய பதில்..
"ஒழுங்கா வந்து அவளை பாத்திரத்தை விளக்க சொல்லு.. காலங்காத்தால போனை நோண்டிட்டு இருக்கா..." என என்னை திட்டினாலும் அவரின் உதட்டில் சிறு புன்னகையை கண்டேன்..
" இப்போ அவ வர போறாலா இல்லையா.."
"ஐயோ வந்துட்டேன்.."
tatta frds amma thitting...😂😂
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...😍😍😍🤗🤗🤗🤗
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro