அவளின் போலி சிரிப்பு
"இவளை பாறேன்.. எப்படி சந்தோஷமா சிரிச்சிட்டு இருக்கான்னு.. ஒன்னுமில்லை அப்படினாலும் இவளுக்கு இந்த சிரிப்பு போகவே இல்லை... என அருகில் இருந்த தன் தோழி திவ்யாவிடன் கூற
"இரு டி.. அவளுக்கு இன்னைக்கு இருக்கு.. என கூறியவள் ஏதோ ப்ரொஜெக்ட் விஷயமா மாலினியை அழைத்து அவளிடம் கூற
மாலினியும் அவளின் குட்டி சிரிப்பை உதிர்த்து.. சரிங்க மேம்.. என கூறியவள் மீண்டும் சிரிப்புடனே செல்ல
ஏய் என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு.. நான் என்ன காமெடியா ஏதாவது சொல்லிட்டு இருக்கானா.. நான் சீரியாஸா சொல்லிட்டு இருக்கேன் நீ என்னடானா..சிரிக்கற என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்க.. என கேட்க
"அப்படியெல்லாம் இல்லை மேம்.. நான் இந்த ப்ரொஜெக்ட்டை முடிச்சுட்டு வரேன் என சிரிப்புடன் கூற
எப்பவும் சீரியஸ் ஆஹ் இருக்க மாட்டாயா இப்படி தான் சிரிச்சுட்டு இருப்பியா..இடியட்" என அவளின் தோழி திவ்யா கேட்க
"சிரிச்சேன் தப்பா...'என மாலினி கேட்க
"உன்னோட சிரிப்பை பார்த்தா கோபம் வருது.."
"எப்படி இவ்வளவு அவமான படுத்தியும் உன் சிரிப்பு போகலை.." திவ்யா சொல்லவும்
அதற்கும் சிரித்தவள் அங்கிருந்து நகர்ந்தாள்.
"நீ என்ன பண்ணன்னு அவ அப்படி கத்திட்டு போறா.."என கேட்ட தன் தோழியிடம்...
" சிரித்தவள் "தெரியல.."
"எப்படி நீ இப்படி இருக்க.. எனக்கும் சொல்லிக்கொடு... உன்னை மாதிரி இருக்க"
"அது கஷ்டம் டி.."
"பரவல்லை சொல்லு.." என கூறியவளிடம் ஒரு காகிதத்தை நீட்டிட
மனதில் பல வலிகளை
சுமப்பவர்களுக்கு.. அந்த வலியை மறைக்க உதவும் மிக பெரிய ஆயுதம் சிரிப்பு..!!
பல கஷ்டங்களுக்கு மத்தியில் போலிப் புன்னகையுடன் நான்..
"என்ன டி இது..".என அவளின் தோழி கேட்க
"இப்போதைய என்னோட நிலைமை இது தான் டி.. நீ கேட்டதுக்கு பதிலும் இது தான்... நான் சிரிக்கல நடிக்கிற...
பொய்யா சிரிச்சு வாழற இந்த உலகத்தில.. நீயாவது உண்மையா சிரிச்சு வாழு...!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro