Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Intro & Teaser

அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை.

அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள்.

தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். அராஜகத்திற்கு பெயர் போனவர்கள்.

ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் ஆண்களிடமும் கருணை காட்ட மாட்டார்கள். ஆதிக்க குணம் கொண்ட அவர்களின் பயணம்.

அன்பினியன் கதையின் நாயகன். எந்த ஒரு உதவியை செய்வதற்கு பிரதி பலனை எதிர் பார்ப்பவன். வாழ்க்கையில் எல்லாம் அவனுக்கு டீல் தான்.அது தந்தையாக இருந்தாலும் சரி.

அமுதன் தீனா அன்புக்கு நெருங்கிய தோழர்கள். வாழ்க்கையில் அவன் நம்பும் இரு ஜீவன்கள். எல்லோரிடமும் டீல் பேசும் அன்புனியன் இவர்களிடம் மட்டும் பேசுவதில்லை.

நட்புக்காக உயிரை கொடுக்கும் ஜீவன்கள். அன்பு எது கூறினாலும் அதற்கு ஆமாம் போடும் ஆசாமிகள். அது நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அவனை ஆதரிக்கும் ஆத்மாக்கள்.

ஆராதனா இசையை போன்றவள். காதலையே காதலிக்கும் பெண் அவள். சுயமரியாதையையும் சுதந்திரமும் யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என எண்ணுபவள்.

ஆனால் தன்னை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய பெற்றோரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. சுதந்திரத்தையும் கூட.

கூண்டுக்கிளியிலிருந்து சுதந்திரமாய் பறக்க காத்திருக்கும் இசை அவள்.

கல்லூரி காதல் நட்புடன் சுதந்திரமாக பயணிப்போம், "ஓவிய காதலி" யுடன்.

👹👹👹👹👹

டீஸர்

"அன்பு, திரும்பவும் இதே காலேஜுக்கு வர ரொம்ப போரடிக்குது. நாம ஏன் வேறு காலேஜ் ட்ரை பண்ணக்கூடாது."

"அங்க போய் நம்ம ஆதிக்கத்தை செலுத்த குறைஞ்சது ரெண்டு மாசமாவது ஆகும். எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும். இருக்கவே இருக்கு நம்ம காலேஜ்."

......

"உனக்கு புடிக்கலைன்னா ஏண்டி இந்த காலேஜ் அப்ளை பண்ற ஆராதனா."

"நான் என்ன பண்ணட்டும். அப்பா இந்த காலேஜ்ல தான் படிக்கணும்னு சொல்லிட்டாரு."

......

"எல்லாரும் ரெண்டு ரெண்டு பேரா சுத்துறாங்க மச்சி. ஆனா நம்மள பார்த்து மட்டும் ஏண்டா பொண்ணுங்க பயப்படுறாங்க."

"ஏன்னா நாம்ம அதிர்ஷ்டம் செஞ்சவங்க. அதனால்தான் இந்த காதல் கத்தரிக்காய் இருந்து விலகி இருக்கோம் அமுதா."

.....

" உங்க அப்பா யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணிப்பியா?"

"மாட்டேன். இவ்வளவு நாள் கூண்டுல நான் அடைந்து கிடந்தது போதும். இனிமேலாவது சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படறேன். என்னோட சுதந்திரங்குறது லேட் நைட்டு வர்றது. தண்ணியடிக்கிறது, ஆம்பளைங்க கூட சுத்துறதுன்னு இல்ல.

எனக்கு புடிச்சத நான் செய்யணும். நல்லது எது கெட்டது எதுன்னு பிரிச்சு பார்க்கிற அளவு மெச்சுருட்டி எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன்.

அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லி இனிமே என்னால ஒருத்தரோட பேச்சை கேட்டு எல்லாம் செய்ய முடியாது."

......

"காதல் தப்பா மச்சி..."

"இவனுக்கு தேவை அவர உடம்பு. அவளுக்கு தேவை இவனோட பணம். இதுதான் காதல்."

.......

"இப்ப நீ என்ன சொல்ல வர..."

" பெண்களுக்கு மதிப்பு கொடுக்குற, எல்லா விஷயங்களையும் தன்னோட மனைவியோட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கிற, என்னை இதை செய்யாதே இதை செய்யாதே என எதுவுமே தடை செய்யாத, எனக்கு பிடிக்காதத என்மேல திணிக்காதே ஒருத்தர தேடி கல்யாணம் பண்ணிக்க போறேன்."

......

"ஓகே டாட். கொடுக்கிறேன் பதிலுக்கு எனக்கு என்ன கிடைக்கும்?"

"உனக்கு என்ன வேணும்?"

"ஏகே என்டர்ப்ரைஸ்."

.......

"சாரி தெரியாம இடிச்சுட்டேன் சிஸ்டர்."

" உங்க கையில் உங்க கையில அடிபட்டுருக்குன்னு நினைக்கிறேன். ஐயோ ரத்தம் வருது. ஒரு நிமிஷம்" என்றவள் தன் கர்சிப்பை அவன் கையில் கட்டிவிட்டாள்.

"மச்சி நான் எவ்ளோ ஸ்டாராங்க் ன்னு நினைச்சேன். ஆனா இங்க பாரேன்‌. இவன் என்னை இடுச்சுட்டு போனான்.ஆனா அவனுக்கு ஒன்னுமே ஆகலே."

"என்ன மச்சி ஒன்னுமே ஆகலையா?" என அவனை சுற்றி வந்தவன். அவன் கையை முறுக்கினான்.

"ஆஆஆ....." அலறல் சத்தம் காதை வந்தடைந்தது.

" என்ன மச்சி ஒன்னும் ஆகலன்னு சொன்னா. இங்க பாரு கை பின்னாடி நட்டுக்கிச்சு." என்றான், தீனா.

அவன் அருகில் வந்த அமுதன் "இடிக்குறதுக்கு முன்னாடி யார இடிக்கறோம்னு சரியா பார்க்கனும். நல்ல மூட்ல இருக்குறதால இதோட விடுறோம். போ. எலும்பு உடைஞ்சு இருக்க போது. போய் கட்டு போட்டுக்கோ. இனி அன்பு பக்கம் வந்த கைமா தான். போ... போ... இப்போ ஹாப்பியா அன்பு மச்சி...."

" ஹாப்பின்னு சொல்ல முடியாது. ஆனா ஓ.கே. வா முக்கியமான வேலை இருக்கு."

......

"இந்த உலகத்துல எல்லாரும் பிரதிபலன் பார்த்துதான் நடந்துக்குவாங்க அமுதா..."

.....

"ஒரு பிரின்ஸ்பல்லா என்னால உன்கிட்ட இத மட்டும் தான் சொல்ல முடியும்."

"நீங்களே இப்படி சொன்னா எப்படி?"

"சாரிமா என்னால எதுவும் பண்ண முடியாது. அந்த அன்ப பகைச்சுக்காத."

.....

"மிஸ். ஆராதனா இந்த டீல் பத்தி எதுவுமே சொல்லலயே..."

"மிஸ்டர். அன்பினியன் உங்களோட இந்த ஆதிக்கத்துக்கு அடிமையாக போற பொண்ணு நான் இல்ல."

.......

டீசர் எப்படி????? எல்லா திங்கட்கிழமையும் அப்டேட் வரும்.

"நீயே என் ஜுவனடி" க்கு கிடைக்குற ஆதரவு இந்த கதைக்கும் கிடைச்சா நல்லா இருக்கும்...

என்றும் அன்புடன்,

சல்மா காதர் பாட்சா....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro