👹8👹
உள்ளுக்குள் சில உதறல்கள் இருந்தாலும் வேறு வழியின்றி அன்பினியனின் காதலியாக கல்லூரியை வளம் வந்தாள், ஆராதனா.
வீட்டில் தன் தந்தையின் முன் குற்ற உணர்வுடன் இருக்க முடியாமல் அறைக்குள் தஞ்சம் அடைந்தாள்.
செல்லும் இடமெல்லாம் சிறப்பு கவனிப்பு இருந்தாலும் அவர்களின் பார்வையில் இருந்த மாற்றம் கவலை கொள்ள செய்தது.
"ஆரா என்ன பண்ற?"
" ஒன்னும் இல்ல. சும்மாதான் நோட்ஸ் பார்த்துட்டு இருந்தேன்."
"தலைவலிக்குது வாயேன். கேண்டீன் போயிட்டு வரலாம்."
"நான் வரல. வேணும்னா நீ போயிட்டு வா."
"ஏன்டி இப்படி பண்ற. உன் கூட போனால்தான் சும்மா கெத்தா இருக்கும்."
ஆராதனா பிரியாவை முறைக்க அவளோ 'ஈஈஈஈ' என இளித்து வைத்தாள்.
"வாய மூடிரு. உன்னால தான் இவ்வளவும்." என்றாள், அடக்கப் பட்ட கோபத்துடன்.
"நான் என்னமோ உனக்கு கேட்டது பண்ண மாதிரி சொல்ற. அதான் எந்த பிரச்சினை இல்லாம நல்லா தானே இருக்க.
சொல்லப்போனா என்னாலதான் உனக்கு இவ்வளவு கவனிப்பு தெரியுமா?
நீ அசைன்மென்ட் சப்மீட் பண்ணாலனா கூட அந்த சொட்ட சார் எதுவும் சொல்ல மாட்டேங்குது. ஆனா நாங்க மறந்து வைச்சுட்டு வந்தா மட்டும் என்னமோ காட்டு கத்து கத்திது.
எல்லா பசங்களும் உன்ன சிஸ்டர் சிஸ்டர்னு பாசமா கூப்பிடுறாங்க. எங்க போனாலும் உனக்கு கிடைக்கிற மரியாதையே தனி."
"போதும் ப்ரியா. உனக்கு இதெல்லாம் தான் கண்ணுக்கு தெரியுது. ஆனா யாராவது என்னை பார்த்தா எனக்கு உடம்பெல்லாம் கூசுது. என்னை ஏதோ கேவலமான பிறவி மாதிரி பாக்குற மாதிரி தோணுது.
நீ சொன்னியே பசங்க சிஸ்டர் சிஸ்டர்னு சொல்லுறாங்கனு. அவங்க எனக்கு பின்னாடி என்ன சொல்றாங்க தெரியுமா?
பரவால்லடா ஆளு செமையா தான் இருக்கா. அதான் அன்பினியனையே வளைச்சு போட்டுட்டான்னு சொல்றாங்க.
என்னோட அப்பா என்னை இத்தனை வருசமா கண்ணியாம வளர்த்தாரு. என்ன தான் என் அப்பா ஸ்ட்ரிக்ட் டா இருந்தாலும் என் நடராஜனோட பொண்ணுன்னு வெளியே சொல்ல கர்வமா இருக்கும். ஆனா அந்த அன்பினியனோட காதலி னு சொல்லும் போது ஏதோ உடம்பெல்லாம் ஊறுர மாதிரி இருக்கு.
உனக்கு இதெல்லாம் புரியாது. இது எல்லாத்துக்கும் அந்த அன்பினியன் தான் காரணம். அதைவிட முக்கியம் இது எல்லாத்துக்கும் நீதான் காரணம்."
தியா குற்றவுணர்வுடன் தலைகுனிந்தாள்.
"இதுல ஒரே ஒரு நல்லது என்னென்னா அந்த அன்பினியன் இல்லாம இருக்குறது தான்.
கடைசியா நான் டீலுக்கு ஓகே சொன்னப்போ அவனை பாத்தது. அதுக்கப்புறம் அவன பாக்கவே இல்ல. அதுவே ஒரு பெரிய நிம்மதியா இருக்கு. அதுக்கு இது எவ்வளவோ மேல்னு அமைதியா போய்கிட்டு இருக்கேன்.
இன்னும் ரெண்டு வருஷம் தான் அந்த அன்பு படிப்ப முடிச்சுட்டு அவனோட கூஜா தூக்கிகளை கூட்டிகிட்டு இந்த காலேஜ் விட்டு போய்ரும். அதுக்கப்புறம் தான் என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடியும்."
.....
"டேய் மச்சி ... உனக்கு லவ்வர் லவ்வர் னு ஒருத்தி இருக்கா. ஞாபகம் இருக்கா."
"இருக்கு. அதுக்கு இப்போ என்ன பண்ணனும்ன்னு சொல்றே."
"ஆனா நீங்க லவ்வர்ஸ் மாதிரி இல்லையடா?"
"நாங்க உண்மையான லவ்வர்ஸ் இல்லங்கறது உங்களுக்கே தெரியும் தானே."
"ஆனா காலேஜ்க்கு தெரியாதே. மத்த லவ்வர்ஸ் மாதிரி உங்களையும் காலேஜுல உள்ளவங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தனும்னு நினைக்க மாட்டாங்களா?"
"அவங்களுக்கு எனக்கு ஒரு லவ்வர் இருக்காங்குறது தெரிஞ்சா போதும். இவங்களுக்கு காட்ட எல்லாம் அந்த அடங்கா பிடாரி கூட இல்லாம என்னால இருக்க முடியாது."
"என்ன மச்சி லவ்வர நீ அடங்காபிடாரினு சொல்லுற." என தீனா கூற அன்பினியனோ அவனை கொலைவெறியுடன் பார்த்தான்.
'அவனை ஏன் முறைச்சு பார்க்கிற. நீதான் எனக்கு லவ்வரா இவதான் இருக்கணும் அடம் பிடிச்ச. இப்போ அவள அடங்காபிடாரினு சொல்ற."
"ஆமா நான் தான் சொன்னேன். அழகோட கொஞ்சம் ஆட்டிடியூட் இருந்ததால எனக்கு லவ்வரா இருப்பான்னு நெனச்சேன். அதுக்காக அவ என்னையே ரிஜெக்ட் பண்ணுவாளா?"
"மச்சி உன்னை இல்ல. உன்னோட நேம் தான். அவ சொன்னது கூட நியாயம் தான். அவ லவ்வரா இருக்க மட்டும் தான் சரின்னு சொன்னா. அதுக்குள்ள வுட்பீ மிஸஸ் எல்லாம் சொன்னது கொஞ்சம் ஓவர் தான். அதுல தப்பு என் மேலதான்."
"நீ என்னடா தப்பு பண்ண. அதெல்லாம் சரியா தான் சொன்ன. அவளுக்கு கொழுப்பு ஜாஸ்தி. அதான் அவ என்னை ரிஜெக்ட் பண்றா."
"சரி அவ ரிஜெக்ட் பண்ணிட்டா. அதனால் நீயும் அவளை கண்டுக்காம விட்டுட்டா எப்படி..."
"நான் ஒன்னும் அவள கண்டுக்க போறது இல்லை. நமக்கு பிஜி ரெண்டு வருஷம் தான். அது வரை அவ என்ன பண்ணுனாலும் எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை."
"என்னடா இப்படி சொல்ற."
"இதுக்கு மேல அவள பத்தி பேச வேணாம்." என முற்றுப் புள்ளி வைத்தான்,அன்பினியன்.
இரண்டு பேரும் இப்படி முற்றுப் புள்ளி வைச்சா நான் எப்படி ஸ்டோரிய கன்டின்யூ பண்றதாம், நெக்ஸ்ட் யூடில ஒரு கமா போட்டு ஸ்டோரிய கன்டின்யூ பண்றேன்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro