👹7👹
"ஏய், நீ யாரு அவளுக்கு கொடுக்கா?" என முன்னால் வந்த பிரியாவை கேட்டான், அமுதன்.
கோபம் வந்தாலும் இவர்களிடம் வாலாட்ட முடியாமல் பொறுமை காத்தாள்.
" நான் ப்ரீயா. ஆராதனா பிரண்ட்."
"ஓ நீ தான் அந்த கழகத்தின் ராணியா?" என மேலிருந்து கீழ்வரை அளவெடுக்க அவனை முறைத்தாள்.
"ஏய் என்ன முறைக்கிற? கண்ணை நோண்டி உப்புக்கண்டம் போட்டுருவேன். ஞாபகம் வச்சுக்கோ. போ இங்க இருந்து மொதல்ல.
அவ எங்க லவ்வோட லவ். அவளுக்குன்னு இங்க ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. இனிமே நீ அவகிட்ட பேசக்கூடாது. பழகக்கூடாது. புரிஞ்சுதா?" என கேட்க அவளோ பயத்துடன் தலையை மட்டும் ஆட்டினாள்.
"மண்டைய மண்டைய ஆட்டாம இங்கிருந்து நகரு." என்றவன் அவளின் தோளை பற்றி பின்னால் தள்ளிவிட அவளோ நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த தூணில் மோதி நின்றாள்.
ஆராதனாவை பார்த்து உடல் நடுங்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அச்சோ உட்பி மிஸஸ் ஆராதனா அன்பினியன். நீங்க ஏன் இங்க நிக்கிறீங்க. நீங்க உள்ள போங்க."
உள்ளே கைகாட்ட அவளோ அத்துனை கடவுள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
உள்ளே தீனா கையில் பேனாவுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க கண்களை சுழல் விட்டு அன்பை தேடினாள், ஆராதனா.
"யாரை தேடற?" என்ற குரல் பின்னால் இருந்து வர திரும்ப அங்கு ஆராதனா அன்பினியன் நின்றிருந்தான்.
"நம்ம டீலை பத்தி என்ன யோசிச்சுருக்க ஆராதனா?"
"என்ன மன்னிச்சிடுங்க. நான் இப்போ இல்ல நீங்க எத்தனை தடவை கேட்டாலும் என்னால முடியாதுன்னு தான் சொல்லுவேன்."
அவளை மேலிருந்து கீழ்வரை அளவெடுத்த அன்பினியன், பெருமூச்சு ஒன்றை விட்டான்.
"சரி. உனக்கும் இதில இஷ்டம் இல்லைனா போய்க்கோ. நான் உன்னை இனிமே கூப்பிட மாட்டேன். உன்னோட சாய்ஸ் முடிஞ்சிடுச்சு." என கூற அவள் திருதிருவென முழித்த வாறு நின்றிருந்தாள்.
நேற்று வரை வேறு மாதிரியாக பேசிக் கொண்டிருந்தவன் இன்று இப்படி கூறுவதை அவளால் நம்ப முடியவில்லை.
இவன் கூறுவது உண்மைதானா என குழம்பிய ஆராதனா திரும்பி தீனாவையும் அமுதனையும் பார்க்க அவர்களோ புன்னகையை முகத்தில் சூடியவாறு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் சிரிப்பில் கேலி இருக்கிறதோ என தெரியாமல் புலம்பி அன்பிடம் திரும்பினாள்.
" நிஜமாத்தான் சொல்றீங்களா?" என தயங்கியவாறே கேட்டாள்.
ஏனென்றால் இவர்கள் ஒருவரை சும்மா விடுவது சாத்தியமில்லாதது. அதுவும் இவ்வளவு சீக்கிரம் ஆராதனை விட்டு விட்டதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.
"நிஜமா தான் சொல்றேன். இனிமே நான் உன்னை லவ்வர் ன்னு சொல்ல மாட்டேன். நீ தைரியமா போகலாம்."
"தேங்க்ஸ்... ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்....என்னால நம்பவே முடியல.
உங்கள பத்தி எல்லாரும் தப்பா சொன்னப்ப கூட நான் கூட நீங்க எல்லாம் ரொம்ப டெரரா இருப்பீங்கன்னு நெனச்சேன்.
நீங்க பேசும்போது கூட நான் பயந்து கிட்டே இருந்தேன். ஆனா இப்பதான் எனக்கு புரியுது. நீங்க ரொம்ப நல்லவங்கன்னு.
சாரி உங்கள தப்பா நினைச்சிட்டேன்.அண்ட் வெரி வெரி வெரி தேங்க்ஸ்." என அவன் கையை பற்றி குலுக்கி அவள் விட்டுவிட அவனோ முகத்தில் புன்னகையுடன் அவளை ஏறிட்டான்.
"சரி எனக்கு கிளாசுக்கு லேட் ஆச்சு ரெண்டு நாளா கிளாஸ் எதுவுமே கவனிக்கவே இல்ல. நான் போறேன். உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்கிட்ட கேளுங்க. என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன். பாய். உங்களுக்கும் பாய்..." என தீனா அமுதனை பார்த்துக் கூற அவர்களும் கையை ஆட்டினர்.
முகம் முழுவதும் புன்னகையுடன் பெரிய பிரச்சனை தன்னைவிட்டு நீங்கியதை எண்ணி சந்தோஷமாக திரும்ப ஆராதனா செல்ல, "ஆராதனா..." என்ற அன்பின் குரலில் நின்றாள்.
அதே மாறாத புன்னகையுடன் திரும்பி அன்பை பார்த்தாள்.
" எனக்கு என்ன ஹெல்ப்னாலும் பண்றேன்னு சொன்ன. அதான் கேக்குறேன். எனக்கு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?"
"கண்டிப்பா...என்ன ஹெல்ப்?" என்றவாறு அவன் அருகில் வந்தாள்.
"ஒன்னும் இல்ல எனக்கு தெரிஞ்ச அவருக்கு ஒரு மெயில் பண்ணனும். நீ போற வழியில ஏதாவது போஸ்ட் பாக்ஸ் இருந்தா அதுல போட்டுடு. இல்லாட்டி நம்ம காலேஜ் என்ட்ரன்ஸ் கிட்ட ஒரு போஸ்ட் பாக்ஸ் இருக்கு. அதுல கூட போட்டுட்டு போகலாம்."
"கண்டிப்பா உங்களுக்காக இது கூட செய்ய மாட்டேனா? கொடுங்க."
அவள் கையை நீட்ட அன்போ தீணாவிடம் திரும்பினான்.
"மச்சி அந்த கவரை நம்ம ஆரா கிட்ட குடுத்துடு அவங்க போஸ்ட் பண்ணிடுவாங்க."
"கண்டிப்பா மச்சி ஆனா இன்னும் அட்ரஸ் நான் எழுதலையே?"
"என்னடா அத எழுதாம எப்படி சென்ட் பண்ண முடியும்."
"சாரி மச்சி அட்ரஸ் எனக்கு தெரியல. நீ சொல்லு. நான் எழுதுறேன்."
தன் கையிலிருந்த பேனாவை போஸ்ட் கவரின் மேல் வைத்து அன்பின் வார்த்தைகளுக்காக காத்திருந்தான்.
"மச்சி சொல்லு மச்சி எந்த ஊருக்கு போஸ்ட் பண்ணனும்?"
"மதுரை."
"எந்த தெரு, எந்த ஏரியான்னு பெயர் தெரிஞ்சா தானே போஸ்ட் பண்ண முடியும்?"
"இஸ்மாயில்புரம், ஐந்தாவது தெரு."
இவ்வளவு நேரம் அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆராதனை இஸ்மாயில்புரம் என்றதும் ஏதோ ஒன்று தவறாக பட நிமிர்ந்து பார்த்தாள்.
அவர்களோ புன்னகையுடன் ஆராதனைவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது அவள் கண்களுக்கு அவர்கள் கண்ணில் தோன்றும் எள்ளல் பட உடலெல்லாம் ஒரு நிமிடம் நடுங்கியது.
"டோர் நம்பர்?"
"42"
"நேம் சொல்லு மச்சி"
"நடராஜன் ஃபாதர் ஆப் ஆராதனா"
என கூறியவாறு ஒரு அடி ஆராதனாவின் முன்னே வர, அவள் கண்களும் கலங்கி நடப்பதை புரியாமல் வேறொரு உலகத்தில் இருந்தாள்.
எது இருக்கக் கூடாது என நினைத்தாலோ அதுவே நடக்கிறது.
அவள் பாவனையில் சிரித்த அமுதன் அவள் அருகில் வந்து, சிரிப்பை அடக்கி சீரியஸான குரலில்
"மச்சி இது நம்ம ஆராதனை அட்ரஸ் ஆட்சே. எதுக்கு போஸ்ட் பண்ணனும். நம்ம ஆரா கிட்ட குடுத்தாலே அவ அப்பா கிட்ட கொடுத்திடு வா.
ஏன் ஆரா நாங்க எவ்ளோ நல்லவங்க...
எங்களுக்காக இதைகூட நீ செய்ய மாட்டாயா? என கேட்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
"அ....து....எ...எ.... என்ன லெ...ட்டர்...." என வார்த்தைகளை தொடுக்க முடியாமல் குரல் நடுங்க கேட்டாள்.
" நீயே பார்த்துக்கோ. பார்த்துட்டு உங்க அப்பா கிட்ட கொண்டு போய் சேர்த்துரு." என அவள் கையில் திணிக்க அதை திறந்து பார்த்த அவளின் கண்கள் அகல விரிந்தது.
ஒரு மரத்திற்கு அருகில் ஆராதனா நின்றிருக்க அவள் பின்னால் அவளை அணைக்க செல்வதைப் போல் நெருங்கி நின்றிருந்தான், அன்பினியன்.
அடுத்த புகைப்படத்தில் அன்பின் விரல்கள் அவள் இடையை அணைத்து இருக்க அவனின் கைகளில் பூக்களாய் கிடந்தாள், ஆராதனா.
அதற்கு அடுத்த புகைப்படத்தில் ஆராதனா வெட்கி தலை குனிந்து இருக்க தன் ஒற்றை விரலால் அவளின் முகத்தை நிமிர்த்திய வாறே அவளருகே நெருங்கி நின்றான்,அன்பினியன்.
அதற்கு அடுத்த புகைப்படத்தில் அவர்கள் கண்கள் இரண்டும் கவி பாடிக் கொண்டிருக்க, அவன் நெஞ்சில் அவள் கைகள் படர்ந்திருக்க, அவனின் அணைப்புக்குள் இருந்தாள், ஆராதனா.
(( இந்த போட்டோ எல்லாம் எப்படி வந்ததுன்னு தெரியனும்னா 5 வது யூடி லாஸ்ட் பார்ட் திரும்ப ரீட் பண்ணு பாருங்க.)
நேற்று நடந்தவை யாவும் இவள் கண் முன் நியாபகம் வர, இவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவான் என தெரியாது, கூனி குறுகி நின்றாள்.
அப்போது தான் மற்றவர்கள் அன்பினை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. அதிலும் சதாசிவம் கூறிய,
" அவன் அவனுடைய வேலை ஆக எந்த எல்லைக்கு வேணாலும் போவான். அது உனக்கு ஆபத்தாக கூட முடியலாம்." என கூறியது ஞாபகம் வர, கூடவே இலவச இணைப்பாக தன் தந்தையின் முகமும் வர கண்ணீருடன் தன் எதிர்காலத்தை எண்ணி ஒரு நிமிடம் உடல் தூக்கி வாரி போட்டது.
"ஆரா என்ன ட்ரீம்ல இருக்கீங்களா? ஓகே நீங்க ட்ரீம் ம கண்டின்யூ பண்ணுங்க. நான் வெளியே தான் போறேன். நானே போஸ்ட் பண்ணிக்கிறேன்." என அவள் கையிலிருந்த புகைப்படத்தையும் போஸ்ட் கவரையும் பிடுங்கிய அமுதன் வெளியே சென்றான்.
" வேணாம். ப்ளீஸ்.... நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க ....." என கேட்டாள்,ஆராதனா.
" எனக்கு என்ன வேணும்னு உனக்கு நல்லாவே தெரியும்."
அன்பு கூறியவாறு அங்கிருந்த மேஜை மேல் ஏறி அமர, ஒரு பெரு மூச்சை இழுத்து விட்ட ஆராதனா,
" சரி நான் ஒத்துக்குறேன். ஆனால் எனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது."
" நீ அன்போட நேம சொன்னா உனக்கு எந்த பிரச்சனையும் வராது." அமுதன் கூற,
அவளோ, 'அதுதான் பிரச்சனையே...' என மனதுக்குள் கருவிக் கொண்டாள்.
" ஓகே. நீ என்னோட டீலுக்கு ஓகே சொல்லிட்ட. இனி நீதான் என்னோட அபிஷியல் லவ்வர். இதை எல்லார்கிட்டயும் சொல்லிடலாம்." என கூற ஆராதனாவோ கசந்த புன்னகையை மட்டும் சிந்தினாள்.
"ஹலோ.... ஹலோ... மைக் டெஸ்டிங்...." என்ற அமுதனின் குரல் கேட்க ஆராதனா திரும்பி பார்த்தாள்.
அந்த நூலகத்தின் ஓரத்தில் கையில் மைக்குடன் நின்றிருந்தான்.
"இங்க இருக்கிற எல்லா பசங்களுக்கும் நான் ஒரு அந்நௌன்ஸ்மெண்ட் பண்ணிக்கிறேன்.
நம்ம லவ்வோட லவ் வுட்பீ மிஸ்ஸஸ் ஆராதனா அன்பினியன் நம்ம காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் மேட்ச் டிபார்ட்மெண்ட்ல இருக்காங்க.
அன்பினியனுக்கு என்ன மரியாதை இந்த காலேஜ்ல கொடுக்கிறோமோ அதே மரியாதைய வுட்பீ மிஸஸ் ஆராதனா அன்பினியனுக்கும் கொடுக்கணும்னு உங்க எல்லாருக்கும் சொல்லிகிறேன்.
அவங்ககிட்ட யாராவது பேசினாலோ, இல்ல சைடு லவ்னு நான்சென்ஸ்ஸா பிஹேவ் பண்ணுனா லோ என்ன நடக்கும்னு உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.
அன்ட் கேர்ள்ஸ் உங்களுக்கும் அந்நௌன்ஸ்மெண்ட் இருக்கு. இனி அன்பினியனை எட்டி நின்னு பார்க்குறது சைட் அடிக்குறதலாம் இனி வேணாம். ஹீ இஸ் கமிடட். உங்களுக்கு சைட் அடிக்கணும்னு தோணுனா நான் கூட ஃப்ரீ தான்.சைட் அடிச்சுக்கலாம்."
ஆராதனா அமுதனின் அருகில் வந்து அவனிடம் இருந்த மைக்கை பிடுங்கி அணைத்தவள், " ஏன் இப்படி ஊர் கூட்டி சொல்லி என் மானத்தை வாங்குறீங்க."
" லுக் ஆரா..."
" ஆராதனா..."
" வாட்எவர்... யு ஆர் ஆரா ஃபார் மீ... நான் ஒன்னும் உன் அழகுல மயங்கி லவ் பண்ணல. இந்த காலேஜ் காக தான் லவ் பண்றேன். அப்ப ஆபியஸா இந்த காலேஜ்க்கு சொல்லி தானே ஆகணும். இதனால உனக்கு தான் பெனிபிட்."
"உங்க பேர சொல்லி வர்ற எந்த பெனிஃபிட்டும் எனக்கு வேண்டாம். உங்களுக்கு லவ்வர் ன்னு சொல்ல நான் வேணும். அவ்ளோ தானே. என் பேர சொல்லிக்கோங்க. ஆனா எனக்கு உங்க பேர் வேணாம். நான் ஆராதனா.. ஆராதனா வா மட்டுமே இருக்க ஆசை படுறேன்."
என்றவள் அமுதனின் புறம் திரும்பினாள்.
" இங்க பாருங்க. இந்த காலேஜ்க்கு வேணா இந்த டீல் தெரியாம இருக்கலாம். உங்களுக்கு தெரியும் தானே. அப்புறம் வுட்பீ மிஸ்ஸஸ் ஆராதனா அன்ப..." என அவன் பேரை கூட தன் பெயரோடு சொல்ல முடியாமல் திணறினாள்.
" இங்க பாருங்க இனி யாரோட பேரையும் என் பேரோட சேர்த்து சொல்லாதீங்க..." என கூறிய அடுத்த நொடி அருகில் இருந்த மேசையில் மோதி நின்றாள்.
என்ன ஆனது என யூகிக்கவே நிமிடங்கள் ஆனது.
யாரோட பேரையும் என் கூற கோபமடைந்த அன்பினியன் ஆராதனாவை இழுத்து அருகில் இருந்த மேசையில் தள்ளி அவள் கைகளை அழுந்த பற்றினான்.
" ஆனா எவ்ளோ கூலா என்னோட நேம யூஸ் பன்னிக்க சொன்னா நீ என் பேரையே ரிஜக்ட் பண்ற... அவ்ளோ தைரியமா உனக்கு.இப்போ சொல்லுடி ..." என்றவாறே அவள் கழுத்தை நெறிக்க, அமுதனும் தீனாவும் அவனை இழுத்து தடுத்தனர்.
" அவ எப்டி டா என்னை ரிஜக்ட் பண்ணலாம்." என சீறினான்.
மீண்டும் ஆராதனா அருகில் வந்தவன்,
" இங்க பார் நீ பேருக்கு என்னோட லவ்வர் னாலும். என்னோட லவ்வர். நான் சொல்றத தான் நீ கேட்கனும். உன்னை பேச விட்டு அழகு பார்ப்பேன்னு மட்டும் நினைக்காத... இந்த அன்பினியன் கை தான் எங்கேயும் ஓங்கி இருக்கணும்...புரிஞ்சுதா..."
அவள் தலையை மட்டும் ஆட்ட, " லீவ் நௌ..." என கத்த அவள் அங்கிருந்து ஓடினாள்.
அங்கிருந்து ஓட அவள் எதிரே வந்தாள், பிரியா.
"என்னாச்சு? அன்னௌன்ஸ்மெண்ட்ல மிஸஸ் ஆராதனா அன்பினியன் சொல்றாங்க. என்ன நடக்குது இங்க?
என்ன ஆச்சு நீ அவங்ககிட்ட முடியாதுன்னு சொல்லிட்டு தானே?" என வரிசையாக கேட்டு கொண்டிருக்க ,
" நான் ஓகே சொல்லிட்டேன். " என்ற ஒற்றை வரியில் கூறிவிட்டு அவளைத் தாண்டி யாருமில்லா மரங்களுக்கு இடையே தஞ்சம் புகுந்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro