👹6👹
"நீ என்ன பண்ண போற , ஆராதனா. அந்த அன்பினியன் உன்ன அவ்ளோ சீக்கிரம் விடமாட்டான்னு நினைக்கிறேன். எதுவாயிருந்தாலும் நீ தான் முடிவு எடுக்கணும்."
"இதுல நான் என்ன முடிவு எடுக்கமுடியும். உனக்குதான் என் அப்பாவை பத்தி நல்லா தெரியும் தானே. காலேஜுக்கு அனுப்பும் போதே அப்பா எவ்வளவு கண்டிஷன் போட்டாங்க.
நான் தேவையில்லாமல் இந்த பிரச்சனைல வந்து மாட்டிக் கிட்டேன். இது அப்பாக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். என்னோட படிப்ப நிப்பாட்டி இருப்பாரு.
அப்பாகிட்ட கெட்ட பேர் வாங்கற மாதிரி நான் நடந்துக்க வேணாம்னு நினைக்கிறேன்."
"இப்ப நீ என்ன சொல்ல வர கண்டிஷனுக்கு ஓகே சொல்ல போறியா? இல்ல ன்னு சொல்ல போறியா?"
"நான் எப்பவுமே அவன் கண்டிஷனுக்கு ஓக்கே சொல்ல போறதில்லை. நான் இங்க படிக்க தான் வந்தேன். படிக்க மட்டும் தான் செய்யப் போறேன்."
"ஆனா உன்னை எந்த கிளாஸ்லயும் அலோவ் பண்ண மாட்டேங்கறாங்கலே அவனால"
" அதுக்காக நான் அவன் சொல்ற டீல்ல்க்கு எல்லாம் ஒத்துக்க மாட்டேன்." என கூறக் கொண்டிருக்க அங்கு சதாசிவம் வர மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள், ஆராதனா.
ஆராதனா எழுந்து நிற்க பிரியாவும் எழுந்தாள்.
"ஏன் கிளாஸ் போகாம இங்க உட்கார்ந்து இருக்கேங்க."
"அது வந்து சார்..."
"என்னாச்சு திரும்பவும் ஏதாவது பிரச்சனையா?"
"சார் அந்த டீல்க்கு ஒத்துக்காம என்னை யாரும் கிளாஸ்ல அல்லோ பண்ண மாட்டேங்கறாங்க."
ஆராதனை அந்த ஸ்டோன் பெஞ்சில் அமர கூறியவர் சிறிது இடைவெளி விட்டு அவரும் அமர்ந்தார்.
"நீங்க விளையாட்டா செய்த ஒரு விஷயம் எவ்வளவு வினையா வந்து இருக்குன்னு பாருங்க.
கண்டிப்பா எனக்கு தெரிஞ்சு அன்பு அவனோட டீலுக்கு நீ சாதகமா பதில் சொல்லாம விடமாட்டான்.
நீ தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. எனக்கு என்ன தோணுதுனா நீ அவனுக்கு சரின்னு சொல்றது தான் எனக்கு சரின்னு படுது."
"சார் நீங்களும்...."
"நானும் ஒரு பெண்ணுக்கு அப்பா தான்மா... உன்னையும் என்னோட பொண்ணா தான் பார்க்கிறேன்.
அதனால்தான் அந்த அன்புகிட்ட உன்னை பத்தி பேச போனேன்.
ஆனா அவனோட முடிவுல இருந்து மாறுற மாதிரி தெரியல.
நீ போ அன்போட டீலுக்கு ஒத்துக்கல நா உன்ன ஒத்துக்க வைக்கிறதுக்கு அவன் எந்த எல்லைக்கு வேணாலும் போவான். அது உனக்கு இன்னும் ஆபத்தான கூட முடியலாம்.
என்கிட்ட கேட்டேனா அவன் உன்கிட்ட தான் இவ்வளவு பொறுமையா ஹேண்டில் பண்ணிருக்கான். வேற யார்கிட்டயும் இவ்வளவு பொறுமையாய் ஹாண்டில் பண்ணதில்லை.
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு அந்த நிமிஷமே அவனுக்கு வேணுங்குறத முடிச்சிடுவான்.
அன்பினியன் கோபக்காரன். திமிரு புடிச்சவன். கர்வம் அதிகமானவன்.
ஆனா பொண்ணுங்ககிட்ட கண்ணியமா இருப்பான். அந்த ஒரு நம்பிக்கையில் தான் நான் உனக்கு இத சொல்றேன். இத விட்டா உன்கிட்ட வேற ஜாய்ஸ்ஸீம் இல்ல. நல்லா யோசிச்சுகோமா."
என்றவர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
"ஹலோ.... ஹலோ... மைக் டெஸ்டிங்... இளந்தென்றல் உடன் உறவாடும் செடிகளுக்கிடையே ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்து அந்த இனிமையை பருகிக் கொண்டிருக்கும் நம்ம லவ்வோட லவ் கொஞ்சம் லைப்ரேரிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்ற அமுதனின் குரல் கேட்க ஆராதனை உடல் நடுங்கியது.
அருகிலிருந்த பிரியா ஆதரவாக அவள் கையைப் பற்ற எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் எழுந்து சென்றாள்.
Sorry rmba chinna ud ah iruku.... Nalaki periya ud ya kuduren pa....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro