👹3👹
"அன்பு..... மச்சி..... நில்லுடா...."என அமுதனும் தீனாவும்அன்பினியன் பின்னால் ஓடினர்.
"டேய், கொஞ்ச நேரம் சும்மா கத்தாம பின்னாடியே வாங்க. நான் நல்ல மூடுல இருக்கேன். அத கெடுக்காதீங்க." என அவர்களை திரும்பி பார்த்து கூறியவன் முன்னால் திரும்பிக்கொண்டான்.
சரியாக அவன் திரும்பி நடக்க ஆரம்பிக்க எதிரே வந்த ஒருவன் மேல் மோதி நின்றான்.
அன்பினியனை மோதி விட்டோமே என பயந்து நடுங்கிக் கொண்டே அவர்களை பார்க்க, அன்பினியனோ அவனை எரித்து விடும் அளவிற்கு முறைத்துக் கொண்டிருந்தான்.
"சா....ரி சீ...னி....யர் தெ...ரியாம" என உடல் வேர்க்க விருவிருக்க நடுங்கி நின்றான்.
அவன் மன்னிப்பு கேட்டதும் அன்பின் முகம் புன்னகையை தத்தெடுத்தது. ஆனால் அதில் வில்லங்கம் இருப்பது எதிரில் நின்றிருந்தவன் உணர்ந்தே இருந்தான்.
"என்னாச்சு மச்சி அப்படி பாக்குற?" தீனா அன்பினியனிடம் கேட்டான்.
"மச்சி நான் எவ்ளோ ஸ்டாராங்க் ன்னு நினைச்சேன். ஆனா இங்க பாரேன். இவன் என்னை இடுச்சுட்டு போனான்.ஆனா அவனுக்கு ஒன்னுமே ஆகலே."
"என்ன மச்சி ஒன்னுமே ஆகலையா?எங்க பார்ப்போம்." என அவனை சுற்றி வந்தவன். அவன் கையை முறுக்கினான்.
"ஆஆஆ....." அலறல் சத்தம் காதை வந்தடைந்தது.
" என்ன மச்சி ஒன்னும் ஆகலன்னு சொன்ன. இங்க பாரு கை பின்னாடி நட்டுக்கிச்சு." என்றான், தீனா.
அவன் அருகில் வந்த அமுதன் "இடிக்குறதுக்கு முன்னாடி யார இடிக்கறோம்னு சரியா பார்க்கனும். நல்ல மூட்ல இருக்குறதால இதோட விடுறோம். போ. எலும்பு உடைஞ்சு இருக்க போது. போய் கட்டு போட்டுக்கோ. இனி அன்பு பக்கம் வந்த கைமா தான். போ... போ... இப்போ ஹாப்பியா அன்பு மச்சி...."
" ஹாப்பின்னு சொல்ல முடியாது. ஆனா ஓ.கே. வா முக்கியமான வேலை இருக்கு."
"அப்படி என்ன மச்சி முக்கியமான வேலை?"
"இருக்கு மச்சி. பாக்கத்தானே போற." என அவன் தோளில் கை போட்டு அழைத்து சென்றான்.
"வெல்கம் டு எம் என் சி காலேஜ். என் பெயர் சதாசிவம். உங்களோட மெண்டர். உங்களுக்கு எப்பவும் எந்த உதவினாலும் என்கிட்ட தாராளமா தயங்காமல் கேட்கலாம்.
உங்களோட படிப்பா இருந்தாலும் சரி, பர்சனல் விஷயங்களா இருந்தாலும் சரி, கண்டிப்பாக ஒரு பிரிண்ட் மாதிரியோ, இல்ல உங்க அப்பா மாதிரியோ நினைச்சு என்கிட்ட ஆலோசனை கேட்கலாம்.
என்னால முடிஞ்சா கண்டிப்பா அதை தீர்த்து வைப்பேன்.
நீங்கள் படிக்கப் போற இந்த மூணு வருஷமும் நீங்க ஏன் கன்ட்ரோல்ல தான் இருக்க போறீங்க.
அதுக்காக உங்களை நான் எப்பவும் எனக்கு கீழ வைக்க விரும்பமாட்டேன்.
நீங்க தாராளமா இந்த கல்லூரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. ஏன்னா இந்த மூணு வருஷம் தான் நீங்க நீங்களா இருக்க முடியும். அதுக்கு அப்பறம் கெரியர் பின்னாடியோ குடும்பத்துக்கு பின்னாடியோ ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
அதுக்காக என்ஜாய் மட்டுமே பண்ணனும்னு நினைக்காதீங்க. உங்களோட பிஹேவ்வியரும் பர்சன்டேஜீம் உங்களோட கேரியர்ல உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும்.
முதல் நாளே உங்கள அறுவை போடுறேன்னு நினைக்காதீங்க. ஜஸ்ட் சொல்லணும்னு தோணுச்சு. சொல்லிட்டேன்.
இன்னைக்கு முதல் நாள் அப்படிங்கறதால நாம ஃப்ரியா பேசலாம்.
நாளிலிருந்து சிலபஸ் ப்ரிபர் பண்ணிக்கலாம். உங்களுக்கு மொத்தம் எட்டு லக்சரஸ் கிளாஸ் எடுப்பாங்க.
யார் யார் எப்ப வருவாங்க,எந்த பேப்பர் ஹாண்டில் பண்ணுவாங்கன்னு அப்படிங்கற டீடெயில்ஸ் நான் உங்களுக்கு அப்புறமா தாரேன்.
முதல்ல நீங்க உங்களை அறிமுகப் படுத்திக்கோங்க."என பேராசிரியர் சதாசிவம் கூற அங்கிருந்த அனைவரும் அவர்களை அறிமுகப்படுத்தி கொண்டனர்.
சதாசிவத்தின் பேச்சும் தோழமையும் தந்தையாக நினைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதும் ஆராதனாவிற்கு தன் தந்தையின் நினைவு வர்ற அவரை சதாசிவதோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள்.
அப்பாவும் சதாசிவம் பேராசிரியர் போல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எண்ணிக்கொண்டாள்.
" பொண்ணே, என்ன ஆச்சு? முதல் நாளே கனவு கண்டுட்டு இருக்க?" என சதாசிவம் ஆராதனா நினைவலைகளை கலைக்க, அவள் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.
"சாரி அப்பா... இல்ல சார்...." என தடுமாற அவரும் சிரிப்புடன்,
"உன் பேரு என்னமா" பரிவோடு கேட்டார்.
"ஆராதனா."
"எதுக்காக இந்த கோர்ஸ் எடுத்த." என கேட்க அவளோ பிரியாவை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
'அவ அப்பா சொன்னாரு அதான்.' என பிரியா மனதுள் நினைத்துக் கொண்டே அவளை முறைக்க சிரித்துக்கொண்டே "மேத்ஸ் எனக்கு நல்லா வரும் சார்." என கூற அவரும் சிரித்துக் கொண்டே உட்கார சொன்னார்.
இங்கு அறிமுகப் படலம் நடந்து கொண்டிருக்க எங்கோ மைக் கரகரக்கும் ஒலி கேட்டது.
யாரோ அறிவிப்பு செய்ய போகிறார்கள் என சதாசிவம் அவர்களை நிறுத்திவிட்டு காதுகளை தீட்டிக்கொண்டார்.
"ஹலோ... ஹலோ... மைக் டெஸ்டிங்..."
என்ற குரல் கேட்டதுமே சதாசிவத்தின் முகம் சுழித்தார்.
"ஹலோ.... ஹலோ... மைக் டெஸ்டிங்... லவ்வோட லவ் எங்க இருந்தாலும் உடனடியாக லைப்ரேரி வருமாறு கேட்டுக் கொள்கிறேன்ன்ன்ன்ன்...."என அமுதன் இழுத்து அறிவிப்பை முடித்தான்.
"இது ஒண்ணுதான் நடக்காமல் இருந்தது. இப்போ இதுவும் ஆரம்பிச்சுடுச்சா. கலிகாலம். எங்கிருந்துதான் வந்து சேர்ராங்களோ. இவங்களுக்கு காதல் ஒண்ணு தான் கேடு. இவன் நம்பி காதலிக்கிற பாரு ஒருத்தி அவள சொல்லணும்." என தலையில் அடித்துக் கொண்டார், சதாசிவம்.
மாணவர்களில் ஒருவன் எழுந்து ,"யார் சார் இவங்க?" என அவர்களைப் பற்றி அறியாது கேட்டான்.
"இந்த காலேஜ் ஓட குண்டர்கள். சனியன் விட்டது நெனச்சா திரும்ப வந்து சேர்ந்துட்டாங்க. நீங்க யாரும் அவங்க கிட்ட வம்பு வச்சுக்காதீங்க.
அவங்க இருக்கிற பக்கமே போகாம இருக்கிறது உங்களுக்கு நல்லது. இது தான் என்னால சொல்ல முடியும்." என கூற அப்பொழுது தான் அவர் அன்பினியனின் கூட்டணியை பற்றி கூறுவதை ஆராதனா உணர்ந்து கொண்டாள்.
ஆனால் அவர்கள் ஆராதனாவைத் தான் அழைக்கிறார்கள் என பாவம் அவளுக்கு தெரியாமல் போனது.
இந்நிலையில் வேறு ஒருவரை அழைக்கிறார் என்பது போல் அமர்ந்திருந்தாள்.
அவர்களை பற்றி தன்னுடைய வகுப்பிற்கு கூறியபின் மீண்டும் அறிமுகப் படலத்தை தொடங்கி வைத்தார்.
மீண்டும் மைக் கரகர ஒலி கேட்டது.
"ஹலோ.... ஹலோ... மைக் டெஸ்டிங்... நான் அன்னௌன்ஸ் பண்ணி சரியா ஆறு நிமிஷம் ஆகுது. லவ்வோட லவ் இன்னும் வரல. அவங்க கிளாஸ்ல எந்த லக்சரர் இருந்தாலும் அவங்கள சீக்கிரம் வர சொல்லுங்க."
"டே ய்... ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ்ல யாரு டா இப்போ..." என அமுதன் தீனாவிடம் திரும்பி கேட்க, அது மைக்கின் வழியே ஒலித்தது.
ஃபர்ஸ்ட் இயர் மேத்ஸ் என்றதும் சதாசிவம் வகுப்பறையில் இருந்த அனைவரையும் ஒரு பார்வையைத் பதற்றத்துடன் பார்த்தார்.
"நம்ம பாப்பா டா..."
"அட நம்ம பாப்பா வா? பாப்பா கொஞ்சம் உன் கிளாஸ்ல படிக்கிற ஆராதனாவ லைப்ரரிக்கு அனுப்பிவை. அண்ணி சங்கடப்படறாங்க ன்னு நினைக்கிறேன்." என அமுதன் கூற சதாசிவம் கண்கள் ஆராதனைவை தொட்டு நின்றது.
ஆராதனாவிற்கோ ஆராதனா பெயரைக் கேட்டதும் சர்வமும் அடங்கி போயிற்று.
மூச்சு விடவும் மறந்து அமர்ந்திருந்தாள்.
பிரியா உழுக்க சங்கடமாக சதாசிவத்தை பார்த்து இருந்தாள்.
அவரின் பார்வையில் இருந்தது என்னவென்று புரியவில்லை.
பாவம் இந்த பெண் என்ற பரிதவிப்பா இல்லை அருவருப்பா என்று தெரியாத ஒரு பார்வையில் போ என்றவாறு கையை மட்டும் வெளியே கை நீட்ட அவளும் பதறி போய் எழுந்தாள்.
"பாப்பா, ஆராதனா இன்னும் இரண்டு நிமிசத்தில இங்க வரலைன்னா அப்புறம் என்ன நடக்கும்னு நான் சொல்ல தேவையில்லை.
ஆமா உன் பொண்ணு பேரு கௌசல்யா தானே" என சந்தேகமாக கேட்க சதாசிவம் பதறி ஆராதனா வை நெருங்கினார்.
"நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சிடுங்க , ஆராதனா. நான் எதோ...." என வார்த்தைகளின்றி அவர் தடுமாறியபடி நிற்க,
"சார், என் கிட்ட போய் சாரி அது இதுன்னு" என அவள் தயங்கி கேட்க,
" இல்ல மேடம். இப்ப நீங்க சீக்கிரமா போங்க." என அவர் கெஞ்சி கேட்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
தன் அப்பா வயதில் இருக்கும் ஒருவர் தன்னை இறைஞ்சி நிற்கின்றார் என்பதை உணர்ந்தவள், நகர செல்ல, ஆராதனாவின் கையைப் பற்றினாள், பிரியா.
அவளை பார்த்தவள் நான் பாத்துக்கிறேன் என அவளுக்கு கண்ணசைவில் பதில் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அங்கு நின்றிருந்த பெண்களிடம் நூலகத்திற்கு செல்லும் வழியை அறிந்து நூலகம் இருக்கும் திசையை அடைந்தாள்.
தன் இஷ்ட தெய்வங்கள் எல்லோரையும் வணங்கிவிட்டு தைரியத்தை உள்ளுக்குள் கொண்டு வந்து மெதுவாக நூலகத்தின் வாயிலில் தயங்கி நின்றாள்.
விசாலமான அந்த நூலகத்தின் இடது பக்கம் நடுவில் இருந்த அந்த பெரிய மேசையின் அருகில் யாரோ ஒருவன் அமர்ந்து கால்களை மேசையின் மீது வைத்த வண்ணம் அவன் முகத்தை மறைத்து இருந்தான்.
அவனருகே மற்றொருவன் மேஜையின் மீது சாய்ந்த வண்ணம் அவளுக்கு முதுகை காட்டியபடி நின்றிருக்க மற்றொருவன் ஜன்னலின் அருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
அவன் யாரோ நிற்குமாறு தெரிய திரும்பி ஆராதனா பார்த்தான்.
"வெல்கம் , வெல்கம் , would-be ஆராதனா அன்பினியன்." என வரவேற்க அவனின் வரவேற்பு வெளியே நின்ற ஆராதனாவிற்கு அவள் ஒருங்கிணைத்த தைரியம் எல்லாம் நொறுங்கி கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.
அவனின் வரவேற்பில் தன் மேஜையின் மீது இருந்த தன் இரண்டு கால்களையும் நகர்த்தி அதன் நடுவே தெரிந்த அழகான பெண் உருவத்தை பார்த்தான், அவன்.
ஆராதனா முன் இரண்டு பாதங்களுக்கு நடுவே தரிசனம் தந்த அன்பினியனை பார்க்க அவனின் பார்வையில் மேலும் உடல் நடுங்கி போயிற்று.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro