👹1👹
அவனுடைய கால்கள் ஓரிடத்தில் நிலைக்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்க அவன் டென்னிஸ் ராக்கெட்டை ஏந்திய விதத்தில் கையில்லா டீசர்ட் வழியே அவனுடைய நரம்புகள் எல்லாம் முறுக்கேறி அவனுடைய புஜங்களை இன்னும் வலிமையாக காட்டிக் கொண்டிருக்க, கலோரிகள் எரிந்து வியர்வையாக அவனுடைய மார்பகங்களிலும் தோள்களிலும் நெற்றியிலும் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் ராக்கெட்டை அவன் தந்தையிடமிருந்து வந்த பந்தை லாவகமாக திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான், அன்பினியன்.
அன்பினியன், அன்பானவன் இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூறத்தான் முடியவில்லை. அன்பிற்கும் இனிமைக்கும் அர்த்தம் தெரியாத இளைஞன் இவன்.
தன் தந்தை அனுப்பிய பந்தை ஓங்கி அடிக்க அது பறந்து சென்று தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது.
அவரின் தந்தை பரத் கைகளை மேலே தூக்கியவாறு தான் தோற்று விட்டதை ஒத்துக் கொண்டு அங்கு இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டார்.
அன்பினியன் நக்கலாக அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் டி-ஷர்டை கழட்டி அதிலேயே தன் மேலிருந்த வியர்வைகளை துடைத்து கொண்டே தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.
"சரி சொல்லுங்க டாட். என்ன விஷயம்?"
பரத்தோ இவன் எப்படி தன்னை அறிந்து கொண்டான் என்னும் பார்வையையை அவனை நோக்கி வீசினார்.
"போதும் டாட். நான் வாக்கிங் போயிட்டு வரும்போது நீங்க டென்னிஸ் ராக்கெட்டோட நிக்கும்போதே எனக்கு தெரியும். உங்களுக்கு ஏதும் வேனும்னா சொல்லுங்க. என்ன விஷயம்?" என நேரடியாக விஷயத்தை கூறுமாறு கூடினான்.
"ஒன்னுமில்ல சன். பெரிய புராஜக்ட் கிடைச்சிருக்கு. அதற்கு ஒரு சைன் வேணும்." என அவரும் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
அவரை ஏற இறங்க பார்த்தவன் "கையெழுத்து தானே வாங்கிடலாம். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?" என ஒற்றை புருவத்தை தூக்கி காட்டினான்.
"உனக்கு என்ன வேணும்?" என அவரும் ஒற்றை புருவத்தை தூக்க முயற்சித்து தோற்றுப் போனார்.
"ஏ.கே. என்டர்பிரைசஸ்"
அவன் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தார்.
" உனக்கு இன்னும் டீல் பேச வரலன்னு நினைக்கிறேன். நீ இன்னும் வளரணும்.
இந்த சின்ன விஷயத்திற்காக என்டர்பிரைசஸ் உன்கிட்ட தருவேன்னு நீ எப்படி நினைச்ச." என்றவர் சிரித்துக் கொண்டே முகத்தை வேறு பக்கம் திருப்ப, அன்பினியனுக்கோ கோபம் வந்தது.
ஆனால் அதை அடக்கிக்கொண்டான்.
' எனக்கு தான் டீல் பேச வராது. உங்களுக்கு தான் அது கை வந்த கலை ஆச்சே. நீங்களே சொல்லுங்க என்ன டீல்?"
"நீ வேர்ல்ட் டூர் போகணும்னு சொன்னியே. அதை அரேஞ்ச் பண்றேன்."
ஒரு நிமிடம் யோசித்தவன் என்டர்பிரைசஸ் எப்படியாவது அடைந்து கொள்ளலாம் என்று எண்ணினான்.
" சரி அப்போ அமுதா,தீனா இரண்டு பேருக்கும் சேர்த்து அரேஞ்ச் பண்ணிடுங்க. பேப்பர என் ரூம்ல வச்சுருங்க. நான் பிரஷ்ஷாகிட்டு வரேன்." என்றவன் நொடியும் அங்கு அமராமல் எழுந்து சென்றான்.
குளித்து முடித்த வெளியே வந்தவன் கப்போர்டில் இருந்த துணிகளை எல்லாம் கலைத்து தான் தேடிய துணி கீழே விழ அந்த டி-ஷர்ட்டை எடுத்து அணிந்துகொண்டே அலறிக் கொண்டிருந்த அலைபேசியை எடுக்க கட்டிலுக்கு சென்றான்.
அலைபேசியின் அருகே இருந்த பத்திரத்தை பார்த்துக்கொண்டே அலைபேசியை காதில் வைத்தான்.
"சொல்லு தீனா."
"மச்சி கிளம்பிட்டியா?"
"ஒரு சின்ன வேலை இருக்கு." என்றவன் பாத்திரத்தை கையில் எடுத்து முன்னும் பின்னும் பார்த்தான்.
"முடிச்சுட்டு வந்துர்றேன்."
"சரி சீக்கிரம் வா."
"அமுதா எங்க?"
"கிளம்பிட்டேன்னு சொன்னான். வந்துட்டு இருப்பான்."
"சரி நானும் சீக்கிரமா வரேன்" என்று அலைபேசியை அணைத்து விட்டு பத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றான்.
"ஆரா... ஆரா.... நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க." என இடுப்பில் கையை வைத்துக் கொண்டு கேட்டான், 14 வயது சிறுவன் நவீன்.
"டேய் இந்த ட்ரஸ் எப்படி இருக்கு." என தன்னை ஒரு முறை சுற்றி அவனிடம் காட்ட அவனோ முகத்தையும் சுழித்நுக்கொண்டான்.
"கேவலத்தின் உச்சகட்டமா இருக்கு." என தன் அக்காவிற்கு அழகாய் இருந்தாலும் அவளை வம்பிழுக்க கூற அவனை அடிக்க துரத்தினாள், ஆரா.
அவளிடம் போக்கு கட்டியவன் வாய் விட்டு ஓடினான்.
"என்னடா பெயர் சொல்லிக் கூப்பிடுற. அக்கான்னு கூப்பிடு." என அவனை துரத்திக்கொண்டு இருந்தாள்.
"அக்கா தானே கண்டிப்பா கூப்பிடுறேன். அதுக்கு முன்னாடி அப்பா உன்னை கூப்பிடுறாரு. அதை சொல்லத்தான் வந்தேன்." என அவள் கால்கள் சடன் பிரேக் அடித்தது.
"என்னடா சொல்ற?"
'அப்பா கூப்பிட்டார்ன்னு சொன்னேன்." என ஆற அமர வந்து கட்டிலின் மேல் அமர்ந்தான், நவீன்.
அவனருகே வந்தவள் , "எதுக்குடா?" பயத்துடன் கேட்டாள்.
"என் கிட்ட கேட்டா? என்கிட்ட சொல்லிட்டுத்தான் அவர் எல்லாமே செய்றாரா? நீ வா என்ன தான் சொல்றார்ன்னு கேட்போம்." என அவள் கையை பிடித்து கொண்டு கீழே சென்றான், அவள் தம்பி.
ஆரா....
ஆராதனா.....
ஆராதனா இசையை போன்றவள். காதலையே காதலிக்கும் பெண் அவள். சுயமரியாதையையும் சுதந்திரமும் யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என எண்ணுபவள்.
ஆனால் தன்னை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்திய பெற்றோரிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. சுதந்திரத்தையும் கூட.
கூண்டுக்கிளியிலிருந்து சுதந்திரமாய் பறக்க காத்திருக்கும் இசை அவள்.
"அப்பா கூப்பிட்டீங்களா?"
"ஆரா... வா. வந்து உட்காரு." என கூற தயங்கியபடியே தன் தந்தையின் அருகே அமர்ந்தாள்.
அவளின் தோள் மேல் கையை போட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
" எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. என் பொண்ணு நிறைய மார்க் வாங்கி எனக்கு பெருமை சேர்த்துட்டா." முகத்தில் பெருமை பொங்க கூற ஆராதனா முகத்திலும் புன்னகை குடிகொண்டது.
"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க."
"அப்பா... அது..."
"என்கிட்ட என்ன தயக்கம். சும்மா சொல்லு."
"அப்பா, கார்ட்டியாலஜிட் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசைப்பா..."
"நல்ல படிப்பு தான். உன்ன டாக்டருக்கு படிக்க வச்சா அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளை பாக்கணும். அதுக்கேத்த மாதிரி மாப்பிள்ளை பார்த்தாலும் வரதட்சனை அது இதெல்லாம் எப்படியும் அதிகமா கேட்பாங்க."
"அப்பா , நான்..."
"உன்னை வேலைக்கு அனுப்பி பொண்ணு காசுல தின்கிறாங்குற பேரு எனக்கு வர வேணாம். அதனால சும்மா படிக்கனும்ல அதுக்காக ஏதாவது எடுத்துபடி."
"ஆனா..."
"எம். என். டி காலேஜ்ல மேத்ஸ் எடுத்து படி. உனக்குதான் மேத்ஸ் நல்லா வருமே. அதான் சென்டம் வாங்கி இருக்கியே. அதை எடுத்து படி. ஃபார்ம டேபில வச்சிருக்கேன். இன்னிக்கு போயி ஃபில் பண்ணி கொடுத்துட்டு வந்துரு." என்றவர் அவள் கண்ணம் தட்டி விட்டு வெளியே சென்றார்.
அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,ஆரா.
அவள் அருகில் அமர்ந்த நவீன், "அதுக்கு எதுக்கு என்ன படிக்கிறன்னு உன்கிட்ட கேட்கணும். பார்மை கொடுத்து பில் பண்ணி கொடுத்துடு வான்னு சொல்லி இருக்கலாமே." என கேட்டான்.
"விடுடா அப்பா எது சொன்னாலும் சரியாதான் இருக்கும்." தன் தந்தையை தம்பியிடம் கூட விட்டுக் கொடுக்காமல் எழுந்து தன் அறைக்கு சென்றாள்.
தன் அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்ததும் கண்ணீர் ஆறாக பெருகிக் கொண்டிருந்தது.
தன் தந்தைக்காக கணிதத்தையே படித்துக் கொள்வோம் என முடிவெடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் தோழியை அழைத்து கல்லூரிக்கும் சென்று விண்ணப்பத்தை கொடுத்து வர அவளையும் அழைக்க அவளும் சிறிது நேரத்தில் வருகிறேன் எனக்கூறி வைத்தாள்.
"ஏன்டி, டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லிட்டு இந்த காலேஜ்ல அப்ளை பண்ற."எனக்கேட்டாள், ப்ரீயா.
பிரியா, ஆராதனாவின் நெருங்கிய தோழி. ஆராதனாவை பற்றி எல்லாம் அறிந்த தோழி.
இப்போது இருவரும் ஒரே கல்லூரியில் சேர விண்ணப்பிக்க சென்றுள்ளனர்.
"எனக்கு மட்டும் என்ன பிடிச்சா அப்ளை பண்றேன்."
"உனக்கு புடிக்கலைன்னா ஏண்டி இந்த காலேஜ் அப்ளை பண்ற ஆராதனா."
"நான் என்ன பண்ணட்டும். அப்பா இந்த காலேஜ்ல தான் படிக்கணும்னு சொல்லிட்டாரு."
"உங்க அப்பா சொன்னாருன்னு நீ எதுக்கு இந்த காலேஜ்ல படிக்கிற."
"என் அப்பா எது சொன்னாலும் கேட்பேன்.
"அப்போ உங்க அப்பா யாரை சொன்னாலும் கல்யாணம் பண்ணிப்பியா?"
"மாட்டேன். இவ்வளவு நாள் நான் என் அப்பா பேச்சை தான் கேட்டேன். இனிமேலும் கேட்பேன். நில்லுன்னா நிப்பேன். உக்காருன்னா உக்காருவேன்.
ஆனா என்னோட கல்யாண விஷயத்தில் மட்டும் இல்ல.
இவ்வளவு நாள் கூண்டுல நான் அடைந்து கிடந்தது போதும். இனிமேலாவது சுதந்திரமா இருக்கணும்னு ஆசைப்படறேன். என்னோட சுதந்திரங்குறது லேட் நைட்டு வர்றது. தண்ணியடிக்கிறது, ஆம்பளைங்க கூட சுத்துறதுன்னு இல்ல.
எனக்கு புடிச்சத நான் செய்யணும். நல்லது எது கெட்டது எதுன்னு பிரிச்சு பார்க்கிற அளவு மெச்சுருட்டி எனக்கு இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லி இனிமே என்னால இன்னொருத்தரோட பேச்சை கேட்டு எல்லாம் இருக்க முடியாது."
"இப்ப நீ என்ன சொல்ல வர..."
" பெண்களுக்கு மதிப்பு கொடுக்குற, எல்லா விஷயங்கள்லயும் தன்னோட மனைவியோட விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுக்கிற, என்னை இதை செய்யாதே அதை செய்யாதேன்னு எதுவுமே தடை செய்யாத, எனக்கு பிடிக்காதத என்மேல திணிக்காதே ஒருத்தர தேடி கல்யாணம் பண்ணிக்க போறேன்."
"அப்ப நீ காதல் கல்யாணம் பண்ண போறீங்க?"
"கண்டிப்பா இல்ல. நான் அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணிப்பேன். என் அப்பா எனக்கு பார்க்குற பையன்ல எனக்கு யாரு ஏத்தவரா இருக்கிறாரோ அவரை கல்யாணம் பண்ணிப்பேன். ஆனால் காதல் மட்டும் சான்சே இல்ல."
"ஒருவேளை உங்க அப்பா மாதிரியே ஒருத்தர உங்க அப்பா பாத்தா என்ன பண்ணுவ?"
"கல்யாணமே பண்ணாம ஔவையார் ஆவேனே தவிர அந்த மாதிரி ஒருத்தர கல்யாணம் பண்ணி இன்னொரு கூண்டுக்குள்ள போகமாட்டேன்."
"ஹலோ ஃபார்ம் சப்மிட் பண்றீங்களா? இல்ல கதை பேச போறீங்களா?" என்ற குரல் கேட்கும்போது தான் ஃபார்ம் சப்மிட் செய்ய வந்தது ஞாபகம் வர முன்னே இருந்த வரிசை காலியாக இருக்க பின்னால் இருந்தவர்கள் அவர்களை முன்னால் செல்ல சொல்ல சரி என்று முன்னேறினாள், ஆராதனா மற்றும் பிரியா.
"பேர் என்ன?"
"ஆராதனா."
"என்ன டிபார்ட்மெண்ட்?"
"மேத்ஸ்."
"சீக்கிரம் சைன் பண்ணிட்டு, ஃபார்ம் சப்மிட் பண்ணுங்க." என கையெழுத்து கேட்க அவள் கையெழுத்து போட செல்லும்பொழுது அந்த பதிவேடு பிடுங்கப்பட்டது.
"லுசு ஏன்டா புடுங்குற? "என சீனியர் மாணவி சீனியர் மாணவனுடன் சண்டை இட்டாள்.
"மான்ஸ்டர்ஸ் வந்திருக்காங்க. அவங்க சைன் பண்ணனுமா. அதான் ரிஜிஸ்டர் எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்து கொடுக்கிறேன்."
"என்னடா சொல்ற மறுபடியுமா?"
"ஆமாம். இங்க தான் எம்.பி.ஏ பன்ன போறாங்களாம்."
என அவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொள்ள, ஆராதனாவும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு யார் என ஒருவரையொருவர் கேட்டு தெரியவில்லை என தோளைக் குலுக்கிக் கொண்டனர்.
பிரியா தான், "சீனியர், மான்ஸ்டர்ஸ்னா யாரு லெட்க்சரர் ராம்?" என ஆர்வத்துடன் கேட்டாள்.
"லெக்சரர்ஸ் இல்ல. ஸ்டூடண்ட் தான் எங்களை விட சீனியர். பிபிஏ முடிச்சுட்டு போயிட்டாங்க. இப்போ எம்.பி.ஏ பண்ண திரும்ப வந்து இருக்காங்க."
"ஸ்டூடன்ட்க்கு தான் இவ்வளவு சீனா?"
"சீனியர் இல்ல. மான்ஸ்டர்ஸ். அன்பினியன், அமுதன், தீனா மூணு பேருமே மான்ஸ்டர்ஸ்.
லெக்சரர்ஸே அவங்களை பார்த்து பயப்படுவாங்க. இந்த காலேஜ்ல அவங்க வச்சதுதான் சட்டம். பிரின்ஸிபல்லும் அவங்கள பார்த்து பயப்படுவாங்க. "
"பேர்லாம் ரொம்ப சாஃப்டா இருக்கு."
"பேருதான் சாஃப்ட். ஆளுங்க ரொம்ப டேன்ஜர்.இங்கதானே படிக்க போறீங்க. போகப்போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க."
அதற்குள் பதிவேட்டை வந்து கொடுக்க இருவரும் அதில் கையெழுத்திட்டு படிவத்தை கொடுத்து விட்டு சென்றனர்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro