ஒளிராத மின் விளக்குகள்...
தூங்கும் நேரம் தொழில்,
துயில் வந்தவுடன் விடிவு,
புறப்படும் நேரம் புயல்,
சாலையெங்கும் மழை!
இச்சராசரி வாழ்க்கை, ஓர்
பழகிப்போன பாதை...
இதில் நெடுநேர பயணம்,
நினைக்காத சோகம்,
வெள்ளைச் சிரிப்பு,
வெளிக்காட்டாத பயம்,
போராடும் வேகம் இருந்தும்!
உதவாத பொருளாய்,
ஒளிராத மின்விளக்காய்,
இவ்வாழ்க்கை....
ஓடிக்கொண்டிருக்கிறோம்,
என்றாவது ஒளிர்வோம்
என்ற நம்பிக்கையில்...
சிரித்து மகிழும் சின்னவர்கள்,
பார்த்து ரசிக்கும் சொந்தங்கள்,
வீசிச் சென்ற பந்தங்கள்,
செல்வம் காக்க ஒதுங்கிய உறவுகள்,
கடினம் கண்டு விலகிய,
கண்ணியமற்ற காதல்கள்,
உடைக்கத் துடிக்கும் எதிரிகள்,
மறந்த இதயத்தின் மிதியடிச்சொற்கள்,
இருந்தும்! இருக்கிறோம்,
இன்னும் வெடிக்காமல்!
எதிர்கால ஒளிர்வாற்றலை தேடி...
என்றும் அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro