Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிஜமா???நிழலா??

நள்ளிரவு நேரம்.... யாருமற்ற சாலை.... சாலையின் இருபுறமும் நீண்டுயர்ந்த மரங்கள்..... பால்நிலா மற்றும் ஒளிமீன்களான விண்மீன்கள் மட்டுமே அச்சாலைக்கு ஒளியூட்டியது....

அச்சாலையில் இருவிளக்குகளை எரியவிட்டபடி ஒரு கார் சென்றுகொண்டிருந்தது..... அக்காரை செலுத்திய படி......

"இதோ கிளம்பிட்டோமா..... வந்துட்டே இருக்கோம்..... சரி ஓகே..... சாரி டி செல்லம்.... இன்னும் ஒரு மணி நேரத்தில அங்க இருப்போம்.... ".... என காதில் ப்ளூ டூத் வழியே தன் மனைவியை சமாதனம் செய்தவன்.......

தன் மனைவியின் கோபத்திற்கு காரணமான......தன் அருகில் அமர்ந்திருந்த குட்டி தேவதையின் புறம் தன் பார்வையை செலுத்தினான்....,பிரபஞ்சன்...

அவளை சிறிது முறைத்தபடி.... "உன்னால தான் எல்லாம்.... நீ தான் எல்லாத்துக்கும் காரணம்..... நீ தானே சர்க்கஸ் போனும்னு அடம்பிடிச்ச..... இப்போ பாரு மணி 12 ஆச்சு.... உங்க அம்மா போன்லயே சாமி ஆடுறா..... " என சிறிது கோபத்தை தன் மகளிடம் வெளிப்படுத்த.....

அக்குட்டி இதழை இடவலமாக வளைத்து, மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டாள்.... அவனின் சின்ன தேவதை....

அவளின் முகத்தை கண்டவன்..... "தப்புயெல்லாம் இவ பண்ணிட்டு, ஏதோ நான் தப்பு பண்ண மாதிரி கோச்சுக்குறா ...அப்படியே அவங்க அம்மா மாதிரி.... "என நினைக்கும் போதே பிரபஞ்சனின் இதழ் மென்மையாக விரிந்தது......

அவளை கண்டும், காணாதவாறு பிரபஞ்சன் வண்டியை செலுத்த அச்சாலையில், இவன் வண்டியை தவிர வேறு வாகனம் இல்லை....

தன் மகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வண்டியை செலுத்திய பிரபஞ்சன், திடீரென சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.... அங்கே 60 வயது மதிக்க தக்க ஒருவர், கையில் ஒரு பையுடன் வண்டியின் முன்னால் நின்றிருந்தார்..

..

வண்டியில் இருந்து இறங்கா வண்ணம், "சாரி சார்...உங்களுக்கு ஒன்னும் ஆகலையே???......"என அவரை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தபடி, பதட்டத்துடன் வினவினான்.... பிரபஞ்சன்.

அவர், "உன்மேல தப்பு இல்ல தம்பி... என்மேல தான்.... நான் தான் வண்டிக்கு குறுக்கே வந்தேன்..... எனக்கு ஒன்னும் ஆகலப்பா...என்னை கொஞ்சம் என் வீடு வர ட்ராப் பண்ண முடியுமா??? ".....என பாவமாய் கேட்க....

அவன் செய்தியில் வாசித்த இரவு நேர வழிப்பறி, கொலைகள் நியாபகம் வர....பிரபஞ்சனின் அடிவயிற்றில் சிறிது பயம் தொற்றிகொண்டது.....

அதை வெளியில் காட்ட வண்ணம்.... "நீங்க இந்த ராத்திரி நேரத்துல இங்க என்ன பண்றீங்க??? அதுவும் தனியா???" என தைரியமாய் கேட்டிட.....

சிறிது சிரித்த அவர்....."நீ நினைக்குற மாதிரி இல்லப்பா.... நான் இந்த வழியா கார்ல வந்தேன்.... ரோட்ல ஒரு பொண்ணு மயங்கி கிடந்துச்சு.... நான் கார்ல இருந்து இறங்கி போய் பாத்தேன்....

அப்போ ஒருத்தன், கத்திய காட்டி மிரட்டி, என் கார் சாவி, என் செயின், மோதிரம், செல்போன் எல்லாத்தையும் வாங்கிட்டு, என் காரை எடுத்துட்டுபோய்ட்டான்.... இந்த பையில என் துணி மட்டும் இருந்ததால, கார்ல போகும் போது என் மேல வீசிட்டு போய்ட்டான்.....

ரொம்ப நேரமா இங்க இருக்கேன்..... எந்த வண்டியும் நிறுத்த மாட்றாங்க... போனும் இல்ல, காசும் இல்ல...... வீட்டுக்கு எப்படி போறதுன்னு தெரியல... "என அவர் முடிக்க....

அவர் கதையை கேட்ட பிரபஞ்சனுக்கு அவரின் மேல் இரக்கம் சுரந்தது..... "சரி வாங்க நான் ட்ராப் பண்றேன்...." என பிரபஞ்சன் சொல்ல, அவர் காரின் பின்னிருக்கையில் அமர்ந்தார்.....

கார் கிளம்பியதும், "நான் ராஜேந்திரன்... ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர்.... "என அவர் பிரபஞ்சனிடம், அறிமுகபடுத்திக்கொள்ள,

"நான் பிரபஞ்சன் , சைக்காட்ரிஸ்ட்... அப்பறம் இவ என் பொண்ணு "...என பிரபஞ்சன் ஆரம்பிப்பதற்குள்....

"நான் லியா......"..என அவ்வாண்டு ராஜேந்திரனிடம் அறிமுகமாகியது.... அவளின் குறும்பை ரசித்த, பிரபஞ்சன் , புன்னைகை அரும்ப, காரை செலுத்திக்கொண்டிருந்தான்..

"லியா.....பேர் நல்லா இருக்கே.... லியா என்ன படிக்குறீங்க??? "என ராஜேந்திரன் வினவ,

"எழு.கே. ஜி " என விடையளித்தாள் அவ்வாண்டு...

"வெரி குட் " என்றவர்.... "லியாக்குட்டிக்கு இந்த தாத்தாவோட கிப்ட் "என அவர் ஒரு பார்பி பொம்மை மற்றும் டைரி மில்க் சாக்லேட்டை நீட்ட....

லியா பிரபஞ்சனை பார்க்க, அவன் வாங்கி கொள்ளுமாறு கண்ணசைக்க, அதை சிரித்தவாறு பெற்றுக்கொண்டாள் லியா......

லியா சாக்லேட்டை மென்றபடி, பார்பி பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்....

"இங்க இருந்து, உங்க வீட்டுக்கு எப்படி போனும் சார்...??."என பிரபஞ்சன் வினவ,

"நேரா, போய் லெஃப்ட் எடுங்க.... அங்க ராஜேந்திரன் இல்லம்னு ஒரு வீடு இருக்கும்..... "என ராஜேந்திரன் சொல்ல,

சிறிது நேரத்தில் ராஜேந்திரன் இல்லத்தின் முன் நின்றது.... பிரபஞ்சனின் கார்...

"சார் உங்க வீடு வந்துருச்சு சார்.... " என பிரபஞ்சன் சொல்ல...

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி, நீங்க என் வீட்டுக்கு வந்து காபி சாப்டுட்டு தான் போனும்.... " என ராஜேந்திரன் அழைக்க...

"இல்ல பரவால்ல சார், எங்களுக்கு லேட் ஆச்சு சார் " என பிரபஞ்சன் நாகரீகமாய் மறுக்க....

"லியாவ பாத்த என் பேத்தி மாதிரியே இருக்கு.... என் மனைவி லியாவ பாத்த ரொம்ப சந்தோசபடுவா " என ராஜேந்திரன் சொல்ல, வேறுவழியின்றி, பிரபஞ்சன் வருவதாய் சம்மதித்தான்....

வீட்டின் கேட் கதவு பூட்டப்பட்டிருக்க.... பிரபஞ்சன் தொடர்ந்து ஹாரன் அடித்தான்... . யாரும் வராமல் போகவே,

"இருப்பா.... நான் போய் பாக்குறேன் " என ராஜேந்திரன் இறங்க செல்ல..

"நீங்க இருங்க சார் , நான் போய் பாக்குறேன்" என கீழே இறங்கினான் பிரபஞ்சன்....

அங்கே அப்பொழுது வந்த, வாட்ச்மேனிடம் , "கதவ துறந்து விடுங்க "என பிரபஞ்சன் கேட்டிட

"எதுக்கு சார்???" என வினவினான் வாட்ச்மேன்...

"ராஜேந்திரன் சார் வீட்டுக்கு போனும்" என பிரபஞ்சன் சொல்லிட....

"அவர் வீட்டுல யாரும் இல்ல சார், எல்லாரும் வேற வீட்டுக்கு போய்ட்டாங்க, ரெண்டு மாசமா வீடு பூட்டிதான் இருக்கு "என வாட்ச்மேன் சொல்லிட

"ஆனா, ராஜேந்திரன் சார் அவர் மனைவி இங்க இருக்கறதா சொன்னாரே " என பிரபா குழப்பத்துடன் சொல்ல,

"ராஜேந்திரன் சார்ரா?? என்ன சார் உளறுறீங்க??.... குழப்பத்துடன் ஆரம்பித்த வாட்ச்மேன்........ "அவரை, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த வழிபறில யாரோ கொன்னுட்டாங்க சார்.... ரொம்ப நல்ல மனுஷன், இப்போ அவர் உயிரோடு இல்ல " என வருத்தத்துடன் முடித்தான்.....

அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி பிரபஞ்சனின் மூளையை எட்ட, பிரபஞ்சன் அதிர்ச்சி கலந்த திகிலுடன், அவன் காரை நோக்க, ராஜேந்திரன் அமர்ந்த இடம், வெற்றிடமாய் இருந்தது....

பின் லியாவை , பிரபஞ்சன் நோக்க, பார்பியை வைத்து விளையாடிகொண்டிருந்த, லியா, தன் அப்பாவை பார்த்து புன்னைகைத்தாள்.....
.
.
.
.

---------முற்றும் --------

Author note :

..Intha paguthiya, unga library la add panikonga, enaku time irukurapo ithula update panren....Epdi irukunu marakama sollunga...

Catch u later makkale...👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro