Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வீடு:9

ஊர் தலைவரும் நம் கதாநாயகர்களும் கந்தசாமியின் வீட்டை நோக்கி சென்றனர்.....
அவன் வீட்டை சுற்றி சிலர் நின்று கதவை திறக்க சொல்லி கத்திக்கொண்டிருந்தனர்....
தலைவர்: இதல்லாம் வேளைக்காகாது கதவ ஒடங்கடா....

சிலர் வீட்டின் கதவை உடைக்கும் வேளையில் ஈடுப்பட்டனர்.... கதவை உடைத்து உள்ளே சென்றவர்களுக்கு அதிர்ச்சி.... கந்தசாமி கதவிற்க்கு அருகிலே விழுந்து கிடந்தான்..... அவனை தூக்கி பார்த்ததில் தான் மயங்கி விழுந்திருக்கிரான் என தெரியவந்தது.... நெற்றியில் சிறிதாக இரத்தம் கசிந்திருந்தது.....
அதனைக் கண்டவுடன்....
ரவி: ஐயா அவர கீழ படுக்க வைங்க.. என்ன ஆச்சுன்னு நாங்க பாக்குரோம்.....

ரனீஷ்: கூட்டமா நிக்காதீங்க காத்த வர விடுங்க .... என ஓரமாக நிற்க்க வைத்தான்....

கீழே படுக்க வைத்ததும் ரவி தன் Stethoscope பை வைத்து அவரின் இதயதுடிப்பை கேட்களானான்... வீர் மற்றும் ரனீஷ் கந்தசாமியின் சில்லிட்டிருந்த கால்களையும் கைகளையும் தேய்த்து விட்டுக்கொண்டிருந்தனர்.... வீனா அவன் நெற்றியில் மருந்திட்டு இரத்தம் மீண்டும் கசியாதவாரு சிறிய கட்டு கட்டினாள்....

ரவி : இவர் எதையோ நினைச்சு Stress ஆ இருக்காரு... ரொம்ப பயந்து வேர போய்ர்க்காரு... எதனாலையோ மயங்கி விலரப்ப அந்த Table ஓட கூர் முனைல அவரோட நெற்றி இடிச்சிர்க்கனும்... அதனால ஏர்ப்பட்ட காயம்தா

வீனா: இவருக்கு மருந்து போட்டுட்டேன் சீக்கிரமே எந்திருச்சுருவாரு.....

ரக்ஷா: இவரு இப்போ நல்லா இருக்குராரு ஐயா .....

ஐயா:ரொம்ப நன்றி பசங்களா .... வந்த நாளே ஒரு உயிர காப்பாத்தீர்க்கீங்க.....

தான்யா: இதுதா ஐயா எங்க கடமை இதுக்கு போய் பெரிய வார்த்தை யெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே....

ஐயா: சரி மா... டேய் இங்க வாடா ... என்று கூட்டத்தில் இருந்து ஒருவனை அழைத்தார் ... அவன் வந்ததும்.... இவங்களுக்கு பெரிய வீட்டுக்கு போரதுக்கு உதவி செய்... பத்திரமா ஆறுபேரையும் போய் விட்டுட்டு வா

வீர்: ஐயா எங்களுக்கு Hospital சின்ன Form குடுக்க வேண்டிய வேல இருக்கு.... அதனால இவங்க மூணு பேர மட்டும் அங்க விட சொல்லுங்க.....

ஐயா : சரி தம்பிகளா பாத்து போய்ட்டு வாங்க....

நாயகன்கள்: ஹே பாத்து போய்டுவீங்கள்ள???? என்றனர் நம் நாயகிகளிடம்...

நாயகிகள்: நாங்க பாத்து போய்க்குரோம்... நீங்க சீக்கிரமா வேலய முடிச்சுட்டு வந்து சேருங்க....
ஆறு பேரும் அவரவர் வழியில் நடக்கத்தொடங்கினர்...
சில மணித்துளிகல் சென்றவுடன் அவ்வீட்டை அடைந்தனர் நம் நாயகிகள்.....அவர்களுடன் வந்தவன் வீட்டை திறந்துவைத்து விட்டு சாவியை அவர்களிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டான்...வாசலில் நின்றுக்கொண்டு வீட்டை மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டிருந்தனர்......
தான்யா: ஏன்டி இவ்வளவு பெருசா வீட்ட கட்டீட்டு எங்க டி போனான்....???

வீனா:எவன் டி? ??

தான்யா: அஅ உன் புருஷன்

வீனா: Hospital போரேன்னு சொல்லீட்டு தான டி போனாங்க???? ரவியின் நினைவில் ஒலரிவிட்டாள் மறுநொடி நாக்கை கடித்துக்கொண்டு Mind voice : (அய்யோ ஒலரீட்டனே ... இவளுக துருவி துருவி கேப்பாலுகளே சரி சமாளிப்போம்.... )

என்னது என இருவரும் ஆச்சர்யத்துடன் வாயைப்பிலக்க

வீனா : ஏன்டி வாயப்பொலக்குரீங்க ரனீஷ், வீர், ரவி ய தான கேட்ட???

ரக்ஷா: பைத்தியமே அவ உன் புருஷன பத்தி கேட்டா???

வீனா: ஹோ அப்புடியா???

தான்யா: என்ன நொப்புடியா சும்மா இர்ரீ

ரக்ஷா: சரி வாங்க உள்ள போவோம்....

வீனா: ஹே இருங்க டி இங்க பாருங்க Garden மாரி இருக்கு போய் பாப்போம் வாங்க டி

தோட்டமாக அல்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது... செடி கொடிகளெள்ளாம் வாடி வதங்கி இருந்தது.... சேரும் சகதியுமாக இருந்தது.. முவரும் அத்தோட்டத்தில் நுழைந்தவுடன் சிறு நடுக்கம் ஏற்ப்பட்டது... காற்று பலமாக வீசத் தொடங்கியது..... வீனாவின் பாதத்திற்க்கு அடியில் எதொ ஒன்று இருப்பதைப்போல் உணர்ந்தால்... காலை எடுத்துவிட்டு கிழே பார்த்ததில் பழைய சாவி தென்ப்பட்டது.... அதை எடுக்க கீழே குனிந்தால்.... அவ்வுரின் எல்லையில் உள்ள கோவிலின் மணி அதிவேகமாக அடிக்க தொடங்கியது.... பறவைகள் நடக்கப்போகும் அசம்பாவிதத்தை தெரிந்துக்கொண்டு வேகமாக அவ்வீட்டின் திசையில் வானில் பறந்தது.... சாவியை எடுத்தவுடன் அவ்வூரில் உள்ள ஒரு மரத்தில் மின்னல் தாக்கி எரிந்துபோனது .... பறவைகளின் திடீர் கூச்சலில் மூவரும் திரும்பி பார்க்க வானமே இருள்சூழ்ந்து கானப்பட்டது.... வீனாவின் கையில் இருந்த சாவி அவள் திரும்பும்பொழுது தவறுதலாக தேங்கி இருந்த மழைநீரில் விழுந்தது... அதை உடனே கையில் எடுத்த

தான்யா: என்ன சாவி டி இது? ?? ரொம்ப பழசா இருக்கு??

ரக்ஷா : துருப்புடிச்சி வேர இருக்கு???

வீனா: தெரீல டி கீழ கடந்தது எடுத்தேன்... மணி நாழு தான ஆகுது அதுக்குள்ள இப்புடி இருட்டீருச்சு....???

ரக்ஷா: ஆமா டி மழை வரப்போதோ? ??

தான்யா: இருக்களாம் டி ... இவனுங்க வேர போனவனுங்கள ஆலக்கானூ....

வீனா : வருவானுங்க டி

நம் நாயகர்கள் Hospital ல் வேலையை முடித்துவிட்டு சாலையில் நடந்து வந்தனர்....

ரனீஷ்: மச்சான் வீட்டுக்கு எப்புடி டா போறது???

வீர்: நாங்களு உன்க்கூட தானடா வரோம் எங்களுக்கு எப்புடி தெரியும்.???

ரவி : அந்த ஐயா சொல்லும்போதே போய்ர்க்களாம்... இப்போ வழித்தேடி தெருத்தெருவா சுத்தீற்றுக்கோம்.. அந்த வேளைய நாம அப்ரம் முடிச்சிர்க்கக்கூடாதா டா

ரனீஷ்: அப்ரம் குக்கர் சட்டி அங்கேந்து போன் பன்னி கத்துவான் டா

ரவி : அதுவும் சரி தா .. சரி யாராவது வந்தா அவங்கள்ட்ட வழி கேப்போம்.....
அந்த சமயம் சரியாக ஒருவர் நம் நாயகன்கள் கண்களில் பட்டார்.....அவரிடம்..
ரனீஷ்: Sir இந்த ஊர்ள ஒரு பழைய வீடு இருக்குள்ள அதுக்கு வழி சொல்லமுடியுமா??? நாங்க வழி தவரீட்டோம்.....

அவர் மூவரையும் ஜந்துவை பார்ப்பதை போல் ஓர் லுக்கு விட்டு விட்டு சென்றார்....

ரனீஷ் : ஏன்டா நா தமிழ்ழ தானடா கேட்டேன்...??? பாஷ புரியலையோ???

வீர்: சரி அவருக்கு காது கேக்காது போல விடு...

ரவி: அப்புடியே போவோம் டா ...யாராவது வருவாங்க அவங்கள்ட்ட கேக்களாம்...

சிறிது நேரத்திலே பலமாக காற்று வீச தொடங்கியது.... திடீரென்று ஓர் மரத்தை மின்னல் தாக்கியது... அதைக்கண்வுடன் அந்த இடத்தை நோக்கி ஓடினர் நம் நாயகன்கள்.... அம்மரம் மின்னல் தாக்கியதில் பாதி எரிந்து சாம்பலாகவும் மீதி கவிழ்ந்தும் இருந்தது... ஊர் மக்கள் எந்த சேதமும் இல்லாமல் தப்பினர்... இருள் சூழ்ந்து இருந்த வானை பார்த்த மக்கள் அனைவரின் மனதிலும் அச்சம் ஆணி அடித்தார் போல் நின்றது.... நாயகிகளின் நினைவு வந்த நாயகன்கள் அருகே இருந்தவரிடம் முகவரி கேட்டு வீட்டை நோக்கி ஓடினர்.... Heros ஓடி வருவதை கண்ட Heroins அவர்கள் அருகே விரைந்தனர்....
ரக்ஷா: ஏன்டா இப்புடி ஓடி வரீங்க????

வீனா: எதாவது பிரச்சனை யா? ???
மூவரும் மூச்சு வேகமாக வாங்குவதாள் பேச முடியாமல் தவித்தனர்... உடனே நம் நாயகிகள் தங்கள் Bag ல் இருந்த Water bottle ஐ எடுத்து மூவரிடமும் குடிக்குமாரு கூறினர்... தண்ணீர் அறிந்தி தங்களை சமன்சைதுக்கொண்டனர் நாயகன்கள் .....

வீர்: உங்களுக்கு பிரச்சனை இல்லையே??

ரக்ஷா: எங்களுக்கு என்ன??? நாங்க நல்லா தா இருக்கோ....

வீனா: சரி என்ன ஆச்சுன்னு மொதல்ல சொல்லுங்க டா????

ரனீஷ்: ஊர்ல இந்த வீட்ட தேடி அலஞ்சிக்குட்டு இருந்தோம்... அப்போ திடீர்னு மின்னல் தாக்கி ஒரு மரம் பாதி எரிஞ்சு கவுந்து விழுந்துருச்சு....

தான்யா: என்னடா சொல்ற ??? யாருக்கும் ஒன்னு ஆகலல்ல??? என பதற்றத்துடன் கேட்டாள்...

ரவி: All are safe யாருக்கும் ஒன்னு ஆகல???

வீர்: உங்களுக்கு எதாவது Problem ஆ இருக்கப்போதுன்னு தா இங்க இவ்ளோ வேகமா ஓடி வந்தோம்....

மூவரும் (Heroins) : Cool யா நாங்க நல்லா இருக்கோம்...

வீனா: உங்களுக்கு அடி எதுவு படலைல டா? ??

வீர்: ம்ம்ம் எங்களுக்கு ஒன்னு இல்ல

ரவி: ஏன் வாசல்லயே நிக்கிரீங்க??? உள்ள போலையா???

தான்யா: தோ வீனா தா Garden பாக்கனும்னு இழுத்துட்டு போனா

ரக்ஷா: அங்க ஒரு சாவி கெடச்சுது அதா பேசீட்டு இருந்தோம் .... நீங்க ஓடி வரதப்பாத்துட்டு அந்த விஷயத்த மறந்துட்டோம்...

ரனீஷ்: சாவியா??? எங்க காமி என அவள் கையில் இருந்ததை வாங்கி பார்த்தான்...

ஆறு பேரும் மாற்றி மாற்றி வாங்கி பார்த்துக்கொண்டிருந்தனர் ...இறுதியில் வீனாவின் கையிலே அச்சாவி வந்து சேர்ந்தது....
ஆறுப்பேரும் ஒன்றாக கைக்கோர்த்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர்..... சட்டென தன்னை ஏதோ ஒன்று தான்டி சென்றதைப்போல் உணர்ந்த ரக்ஷா சுற்றுப்புறத்தை நோட்டமிட்டாள்....
ரனீஷ்: என்ன டி பாத்துற்றுக்க???

ரக்ஷா: இல்லடா என்னமோ போனமாரி இருந்துச்சு அதா பாத்துற்றுந்தேன்....

ரனீஷ்: உன் பிரம்மை யா இருக்கும் டி ... போட்டு கொளப்பிக்காத வா

அவன் சொல்லை தட்ட முடியாமல் அவனுடன் நகர்ந்தாள்..... வீனாவும் தான்யாவும் வீட்டை சுற்றி பார்ப்பக்கப் போவதாக கூறிவிட்டு மாடிக்கு ஓடினர்....

வீர்: பாத்து போங்க டி

கீழே மூன்று அறைகள் ,இரண்டாம் தளத்தில் மூன்று அறைகள் மற்றும் மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு.... கீழே கதைத்துக் கொண்டிருந்த நாயகன்களும் ரக்ஷாவும் திடீரென தான்யா கத்துவதைப் போல் தோன்ற 4வரும் திடிக்கிட்டு மாடிக்கு சென்றனர்.....

இருள் சூழ்ந்த ஒரு இடம்..... கண்ணிற்க்கு எட்டிய தூரம் வரை ஒரு மனிதர்க்கூட அங்கு இல்லை....சில ஓனாய்கள் பதுங்கி பதுங்கி தங்கள் இடத்திற்க்கு சென்றுக்கொண்டிருந்தது......பயத்தில் வேர்த்து விருவிருத்து போய் நின்றுக்கொண்டிருந்தான் அவன்.......
சட்டென அவன் வயிற்று பகுதியில் வலி உண்டாக... குனிந்து கீழே நோக்கினான்..... தன் வைற்றில் சாவி போன்ற ஏதோ ஒன்று கூர்மையாக கிழித்திருப்பதைக்கண்டு வலியில் அலர தொடங்கினான்..... தன்னை விட்டு விடுமாறு கையேந்தி கெஞ்சினான்......அப்பொழுது ஒரு குரல் சில வருடங்கள் முன் அவனிடம் கெஞ்சியே அதே குரல்......

அக்குரல்: நானும் அன்னைக்கு அப்டி தான கெஞ்சுன??? என்ன அன்னைக்கு நீங்க விற்றுந்தா நானும் எல்லார மாரி வாழ்ந்துருப்பல்ல??? ஏன் என்ன கொன்னீங்க??? என அலுகுரல் கேட்டது..... மீண்டும் மீண்டும் ஏன் என்ன கொன்னீங்க? ? என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது..... ஆனால் ஒரு ஒரு முறையும் அக்குரலில் வலிமைக்கூடிக் கொண்டே இருந்தது..... இறுதியில் கடுங்கோபம் கொண்டதாக மாரி வந்தது அந்த குரல்.... ஓடிவிடலாம் என திரும்பியவன் எதிரில் இருந்த மரத்தில் இடித்து சரிந்து விழுந்தான்......

தொடரும்.............

Innikku key epdi irunthuchu? ?? Mokkaiya irukka??
Mistakes iruntha please atha ignore pnnidunga ... mudinja vara mistakes varaama paththukkuren .... Thappu iruntha sorry pa ..... marakkama comment pannunga ungal kariththukkaga kaththirukkum ungal thangai matrum thozhi
Dhiradhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro