Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மிக முக்கியமான அறிவிப்பு📣❌

அனைவருக்கும் என் மாலை வணக்கம் இதயங்களே...

அனைவரும் நலமுடன் இருக்கிறீர்கள் என்று நபுகிறேன்... இப்போது நான் கூற வந்தது உலகை ஆட்டி வைத்துக் கொண்டாருக்கும் NOVEL CORONA VIRUS ஐ பற்றி தான்... கொரானா வைரஸ் ஃபமிலியில் உலகளவில் இதுவரை 6 வைரஸ்களை மனிதர்கள் கண்டுபிடித்தனர்... இப்போது வந்துள்ள இந்த வைரஸ் அக்குடும்பத்தில் கண்டுப்புடிக்க பட்ட ஏழாவது வைரஸாக இருக்கிறது... உலகில் ஏறகுரைய 26 நாடுகளில் இந்த வைரஸ் பறவி உள்ளது... முதல் முதலில் இது பறவ தொடங்கியது சீனாவின் உஹான் என்னும் நகரத்தில் தான்... அதிலிருந்து அடுத்தடுத்து இப்போது பல நாடுகளில் பறவிவிட்டது... 305 மனிதர்கள் இவ்வைரஸால் மரணத்தை தழுவி இருக்கின்றனர்.... அதில் 304 நபர்கள் சீனாவை சார்ந்தவர்கள்.. ஒருவர் பில்பின்ஸ் நாட்டை சேர்ந்தவர்... சில நாட்கள் முன் வரை இவ்வைரஸை சீனாவின் பிரச்சனை என சிலர் கருதினர்... ஆனால் இப்போது இது உலக பிரச்சனை என அறிவித்துள்ளனர்... நம் இந்திய நாட்டிலும் கேரளா மாநிலத்தில் இருவர் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... இப்போது இருவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்... உலகளவில் கிட்டதட்ட 14,500 நபர்கள் இவ்வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி படுத்தப்பட்டுள்ளது... காட்டுத்தீயாய் பறவும் இந்நோயிற்கு மருந்தை இன்னும் கண்டுப்பிடிக்கும் ஆய்வில் உள்ளனர்... அதை கண்டுப்பிடிக்க மாதங்களாகும் எனவும் கூறியிருக்கின்றனர்... ஏனெனில் அதை எலியிலிருந்து குரங்கு வரை பரிசோதித்து விட்டு தான் மனிதர்களுக்கு உபயோகிப்பர் ஆதலால் தான்.... இந்நோயிலிருந்து நாம் தான் நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.... அதற்கு நம் சுற்றுச்சூழலையும் நம்மையும் சுத்தமாய் வைத்துக் கொள்ள வேண்டும்... சுத்தத்தை பின் பற்ற வேண்டும்... இவ்வைரஸ் காற்றிலும் பறவுவதாக தெரிய வந்துள்ளது... இவ்வைரஸால் காற்றில் ஒரு நாளுக்கு ( அல்லது ஐந்து நாட்கள்) மேலாக உயிர் வாழ முடியும்... அதனால் வெளியே செல்லும் நாம் கவனமாய் இருக்க வேண்டும்... இந்த வைரஸால் பாதிக்கப்பட்டாலும் அதன் அறிகுறிகள் 15 நாட்கள் பின் தான் தெரியவருமாம்... அறிகுறிகள் தொண்டையில் ஏதேனும் வலியோ.. அல்லது எரிச்சல்... மூச்சு விட சிரமமாய் இருப்பது... ஜலதோசம் போல் இருப்பது... அதெற்கென சாதாரண ஜலதோசம் உள்வர்கள் பதற வேண்டாம்... சீனாவிலிருந்து வந்தவர்கள் அல்லது... வந்தவர்கள் அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள்... உணவுண்ணும் முன் கைகளை நன்கு கழுவிவிட்டு உணவில் கை வையுங்கள்... வெளியில் எங்கேனும் சென்று வந்தால் கை கால்களை எல்லாம் கழுவி விட்டு அதன் பின் மற்றவர்கள் அருகில் செல்லுங்கள்... இந்நோய் எளிதாக வயதானவர்களிடம் பறவுவதாக கூறுகிறார்கள்.. ஆதலால் வீட்டு பெரியோர்களை சுத்தத்தை பின் பற்ற கூறுங்கள்... இதை பற்றி நான் விவரிப்பதே... சிலர் இந்நோயை பற்றி அறியாமல் இருக்கின்றனர்... அவர்களை எச்சரிக்க தான்.... சீனாவை முற்றிலுமாக அடைத்து விட்டனர்... அதாவது சீன மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் தான் முடங்கிக் கிடக்கின்றனர்... இரு நாட்களுக்கு ஒரு முறை வேண்டுமானால் ஒருவர் மட்டும் வெளிவரலாமாம்... அங்கு உணவுக்கு கூட பற்றாக்குரை வந்து விட்டது... தனிமை மிக பெரிய பிரச்சனையாய் முன் நிற்கிறது.... இந்நோய் 8000 (கிருஸ்த்துவ பிறப்புக்கு முன் BC) யில் விலங்குகளுக்கு மட்டும் பறவியதாம்.. இப்போது தான் மீண்டு வந்துள்ளது... இது எப்படி பறவ தொடங்கியது என்று இதுவரை தீர்மானமாக பதில் கூறவில்லை.... அங்கிருக்கும் உயிர் விலங்கு கண்காட்சியிலிருந்து தான் பறவியதென கூறுகின்னனர்... சிலர் அதில்லை என்றும் கூறிகின்றனர்.... இவ்வளவு துயரதிலும் ஒரே ஒரு நல்ல விஷயமெனில்.... வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுள் 300 நபர்கள் மருத்துவத்தினால் பழைய நிலைக்கு திரும்பியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது... இவை நம் உலகின் பிரச்சனை... நம்மால் அதை அழிக்க முடியாது... ஆனாலும் நம்மிடம் பறவுவதிலிருந்து தடுக்கவும்... பிரார்த்திக்கவும் முடியும்.... இந்த கொடிய நோயிலிருந்து நாம் விரைவில் வெளிவருவோம் என்று நம்புவோம்.... சுத்தத்தை பின் பற்றுங்கள்.... எதை உண்டாலும் நன்கு சமைத்து விட்டு உண்ணுங்கள்... உலகத்திற்காய் பிரார்த்தனை செய்யுங்கள்....

#Prayforworld #prayforourhealth #prayforchina #prayforaffectedpatients

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro