Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பேயுக்கும் பேயுக்கும் சண்டை:39

தன் முன் ருத்திரமூர்த்தியின் மறு உருவம் பெண்ணாய் உருவெடுத்து வந்ததைப் போல் இருந்தது வனோஜாக்கு... கண்களிள் எரிமலை வெடிக்க... நரம்பு புடைக்க வெறித்திருந்தாள் அவள்....உயிருடன் இருந்தபோதே ஒவீயின் அதட்டலுக்கு நடுங்கும் வனோஜா... பேயாய் மாறினால் மட்டும் நடுங்க மாட்டாளா??? ஒவீயின் முறைப்பிலே பாதி சக்தியை பயத்திலே இழந்திருந்தாள்.... எறிந்து போன கைகள் இரண்டும் நடுங்க தொடங்கியது... யாரோ சங்கூதும் சத்தம் தெளிவாய் கேட்டது... வீட்டின் வாயிலில் புன்னகைத்தவாறு நின்றிருந்தார் அம்முதியவர்...ஒவீக்கு உண்மையை புரியவைத்தவர்... துன்பத்தில் நாயகர்களுக்கு உதவிய அதே முதியவர்...

அவர் ஒவீயை புதைத்த இரண்டு நாட்கள் பின் மரணமடைந்தவர்... ஏதோ ஒரு காரணத்தினால் மறுவாழ்ப்பேட்டையில் ஆத்மாவாய் சுற்றிக் கொண்டிருந்தார்... ஆத்மா என்பதால் ஒவீயை எளிதாக அறிந்துக் கொண்டார்.... வருடங்கள் களித்து வந்த நாயகர்களை காக்கவே காத்துக் கொண்டிருந்தார்... அவள் வரும் முன்பு அவர்களை எச்சரிக்கை செய்ய முனைந்தார்... ஆனால் அவரின் வார்த்தைகளை ரனீஷை தவிர்த்து மற்ற எவராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை... நடந்ததை தெரிந்துக் கொண்டு அதை ஒவீக்கு புரிய வைத்து அவளின் தவறை உணர்த்தினார்... தன்னால் இயன்ற வரை கதறி அழுத ஒவீ... அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்... மரணிக்கப்படும் ஆன்மா புவியில் மூன்று நாட்கள் கடவுலின் கட்டுபாடின்றி சுற்றி திரிந்து தான் நினைத்ததை நிறவேத்திக் கொள்ளும்... தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துக் கொள்ளும் .... அது போலவே... வனோஜா... இறந்து.... ஆன்மாவாய் உருவெடுத்துவிட்டாள்.... இப்போது உன் சகோதிரியையும் அவளை சார்ந்தவர்களையும் கொள்ள வந்துக் கொண்டிருக்கிறாள் என கூறினார்.... நான் அவங்கள காப்பாத்த போறேன்... என கிளம்பியவளை தடுத்து...அது உன்னால் முடியாது.... நாளை காலை மூன்று மணி வரை... நீ வெரும் ஆத்மா தான் என்று அடுத்த குண்டை வீசினார்....அதனால் தான் அவர்கள் படும் அனைத்து துன்பங்களையும் கண்ணீர் சிந்த பார்த்துக் கொண்டிருந்தாள் ஒவீ...

லேசாய் தன் தலையை திருப்பி வாயிலில் நின்ற முதியவரை நோக்கி புன்னகைத்தாள் ஒவீ.... அவரும் இவளை பார்த்துக் கொண்டே.... நான் செய்ய வேண்டிய கடமை முடிந்தது என கூறி காற்றில் கறைந்தார்...

தன் பார்வையை வனோஜாவின் புறம் மெதுவாய் திருப்பினாள்... கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்த வனோஜா விலக எத்தனிக்கும் முன்பே... அவளை சிறை வைத்தாள் ஒவீ.... அவள் சுதாரிக்கும் முன்பே அவள் மேல் விசிரி எரியபட்டது பல பொருட்கள் ..... ஒவீயின் கண்ணசைவில்... கோரமாய் இருக்கும் அவள் முத்தை சில கூறிய பொருள் கிழித்து இன்னும் கோரமாக்கியது....

நேரம் குறைய குறைய ஒவீக்கு பலம் கூடியது...

ஒவீ : என்ன டி செத்ததுக்கு அப்ரமும் திருந்த மாட்டியா நீ??? எவ்ளோ அனுபவிச்சாலும் திருந்த மாட்டியா??? ஏன் டி இப்டி பன்ற??? ஏன் தங்கச்சி உன்ன என்ன டி பன்னா??? அவளுக்கு அக்ஸிடென்ட் நடக்குரதுக்கு ஒரு செகென்ட் முன்னாடி கூட உன் மேல அன்பாவும் நம்பிக்கையோடையும் தானடி இருந்தா???ரவி ரனீஷ் தான்யா ரக்ஷா உன்ன என்ன டி பன்னாங்க??? நா தா நீ பன்ன சதி தெரியாம என் ரொவீய சந்தேகப்பட்டு அவக்கூட இருக்குரவங்களும் சந்தோஷமா இருக்கக்கூடாது ன்னு கொல்ல நெனச்சேன்... ஆனா நீ... உன்ன சும்மா விட மாட்டேன் வனோ... என ஆத்திரம் தாங்காமல் ஆவி என்பதையும் மறந்து தன் கூர் கைக் கொண்டு அவளின் முகத்தில் கீறினாள்...

ஒவீ : நான்னு நெனச்சி என் தங்கச்சி இப்டி ஒரு நிமிஷம் தப்பா யோசிச்சதால.... அவக் கழுத்துல எப்டி டி நீ கீறலாம்??? அவளுக்கும் எனக்கும் ஒரு கீறல் படாம குடும்பமே சின்ன வயசுலேந்து வளத்தாங்களே டி... ஆனா நீ என்ன அடிக்க வச்சி... எரிச்சு... சாவடிச்ச... எனக்கு வலிச்சிர்க்கும் ங்குரத நீ யோசிக்க வேணா.... சின்ன புள்ளயா இருந்ததுலேந்து உன் பின்னாடி உன் குணம் தெரியாம நா சொல்றத கேக்காம உன்ன மூடத்தனமா நம்பி சித்தி சித்தி ன்னு சுத்துனாலே டி...அவ வலி தெரியலையா உனக்கு???? வீரா அண்ணா என்ன டி பன்னா ??? சித்தி சித்தா வ கொண்ணு அவன அனாதை ஆக்கி அவன உன் கூட அழச்சிட்டு போகாம ஆஷ்ரமத்துல தன்னந்தனியா விட்டுட்டு போயிர்க்கியே.... அவன் நெனச்சிர்ந்தா உன்ன தேடி வந்துர்க்க முடியும் டி.... ஆனா அவன் எங்க நியாபகத்துல அதக்குட செய்யல...நீ எங்களுக்கு செஞ்ச துரோகத்தால தான் டி சொத்து முழுசும் உன் கைக்கு கிடைக்காம அப்பாலி குழந்தைகளுக்கு உதவியிருக்கு... ஏன் அம்மா... அழுகை பீரிட்டு வந்தது... அம்மா வ நாங்க நேர்ல பாத்ததே இல்லையே... அவங்கள நீ கொல பன்னப் போறேன்னு தெரிஞ்சும் ஏன் அமைதியா இருந்தாங்க தெரியுமா???? உன் மேல உள்ள பாசம்னு மட்டும் தப்பா நெனச்சிராத.... உனக்கு தக்க தண்டனை வேர யாரோ ஒருத்ரோட கையால கிடைக்கனும் னு...அதுக்கு நீ உயிரோட இருக்கனும் னு தான்... உனக்கு மரண தன்டனைய குடுக்க போறது அவங்க மக ன்னு தெரிஞ்சிர்ந்தா இன்னும் நிம்மதியோட செத்துருப்பாங்க....

அவளின் வார்த்தைகளை எல்லாம் கேட்க கேட்க பத்தி எரிந்தது வனோஜாக்கு... அவ்வளவு அடி வாங்கியும் வீரையாவது கொல்ல வேண்டி அருகில் சென்றாள்... ஒவீ அவள் புறம் கத்தியவாறே வீனாவின் கையை வீசினாள்...

ஒவீ : ஏஏஏஏஏஏ இனிமேலும் உன்ன சும்மா விட மாட்டேன் டி...வீராவையே கொல்ல பாக்குரியா??? உனக்கு முழு தன்டனை ய ஏற்க்கனவே தந்ததால.. இப்போ உன்ன நரகத்துக்கு தள்ளி விட... நாங்க இரண்டு பேர் மட்டும் இல்ல....

வனோஜா ஒவீயால் வெட்டப்பட்ட தன் கையை பிடித்துக் கொண்டு குழம்பி வீரை நெருங்க முடியாமல் நிற்க...

ஒவீ : அந்த குரு ஜி குடுத்த கையிறு உன்ன காப்பாத்தும் னு நம்பி நின்னியே... அவனையே ஈசியா கொண்ண நான் உன் ஆத்மாவ கொல்ல ஏன் காத்துருக்கேன்னு புரியல.... இன்னைக்கு என்ன நாள்னு தெரியுதா???

என ஒரு பக்கம் கைக் காட்ட... அங்கு தொங்கப் பட்டிருந்த கேலேண்டரில் கிழிக்கப் படாத தாள்கலெல்லாம் சர சரவென கிழித்து அன்றைய தேதியில் நின்றது.... 15 / 8 / 2019......

தேதியை பார்த்து பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் வனோஜா.... 23 வருடங்கள் முன் ஷான்த்தி பரிதாபமாய் இறந்த நாள்... 7 வருடத்திற்கு முன் விபத்தில் இறந்த விக்ரம் விமலாவின் இறந்த நாள்... ஒவீ துடிக்க துடிக்க கொலை செய்யப் பட்ட நாள்... வசன்த் வேதனை தாங்காமல் உயிர் நீத்த நாள்...வீர் தன்னந்தனியாய் விட பட்ட நாள்.... ஒவீ ரொவீ யின் பிறந்த நாள்....

ஒவீ அன்றே மரணித்ததால் அத்துனை வலிமையான ஆத்மாவை எதிர்க்க அன்று சக்தி இருக்காது அதையே அம்முதியவர் முன்பு கூறினார்....

அவள் கண்கள் வெளியில் வரும் அளவு பிளந்துக் கொண்டு ஒவீயின் புறம் திரும்ப.... அங்கோ வீனாவும் ஒவீயும் ஒரே உருவத்தில் நிர்க்க... அவர்களின் பின் இரு திசையிலும் ஷான்த்தி விமலா வசன்த் விக்ரம் ஆன்மாவாய் நின்றுக் கொண்டிருந்தனர்.... தவித்து போனாள் வனோஜா.... மரணமடைந்த பலர் அவர்களின் மரண நாள் அன்று முக்தி அடைந்தவர்களும் ஆன்மாவாய் மாற 100 ரில் பாதி சதவீதம் வாய்ப்பிருக்கிறது என ஒரு நாள் ஒவீ என்றோ படித்து விட்டு குடும்பத்தில் அனைவரிடமும் கூறியது நினைவில் கூப்பிடாமலே வந்து போனது...

வனோஜா : ஏன் குரு ஜி யோட கயிறு வேலை செய்யல??? எப்டி நீ திரும்பி வந்த????

வீனாவின் உள் இருந்து ஒவீ வனோவின் மேல் பாயப்போக அவளின் பின் நின்ற நான்கு ஆத்மாக்களும் அவளுள் சென்று ஒன்றாய் வனோஜாவின் மேல் ஓங்க.... சரியாய் மணி நான்கை தொடும் இரண்டு நிமிடம் முன்பே... கீழே விழுந்தாள் வனோஜா....

ஒவீ : சஸ்பென்ஸோடையே திரும்ப சாவு... என கூறிய அடுத்த நிமிடம் அவர்கள் கொடுத்த அடியில் காற்றில் அலரியவாறு கறைந்து போனாள் வனோஜா....

அமைதி நிலவ... நான்கு ஆத்மாக்களின் பின்னும் ஒளி தோன்றியது...

வீனாவின் அருகில் வந்த ஷான்த்தி... கண்ணீர் திரையிட

ஷான்த்தி : ஒவீ ரொவீ .... நீங்க வளர்ரத பாக்க ஆசப்பட்டேன்.. ஆனா அவளாள உங்க பக்கத்துல கூட என்னால இருக்க முடியல டா.. அம்மா வ மண்ணிச்சிருங்க டா... ஒவீ நீ அனுபவிச்ச கஷ்டத்த நெனச்சாலே நஅவள கொல்ர அளவு கோவம் வந்துச்சு டா... ஆனா என்னால அது முடியாத காரியம் டா... ஏன் இரெண்டு பொண்ணுங்களையும் பிரிச்சி ரொம்ப பெரிய பாவம் பன்னீட்டா டா....

ஒவீ : அம்மா என அனைக்க முனைந்தாள் ஆனால் காற்றில் மிதந்தது கைகள்...

வசன்த் : கவலப்படாத டா நம்ம வாழ்க்கை திரும்ப தொடங்கும்... அப்பவும் நீங்க இரெண்டு பேரும் எங்களுக்கு பொண்ணுங்களா பொரப்பீங்க டா... வீரை நெருங்கியவர் மயங்கி இருந்தவனிடம் பேசினார்... என்ன மன்னிச்சிடு வீரா... நீயும் எனக்கில்ல ங்குர வேதனைல நா செத்துட்டேன் டா.. ஆனா நீ பொலச்சிப்ப ன்னு எனக்கு இருந்த நம்பிக்கைய அந்த வனோஜா கொரச்சி மன வேதனைல அன்னைக்கே கொண்ணுட்டா டா...

விமலா : நாங்க இல்ல ன்னா என்ன ரொவீ... எங்க இரெண்டு பேர் உருவத்துலையும் ரக்ஷாவும் தான்யாவும் இருக்காங்க... வீர் ஒருத்தனே உன் சித்தா அப்ரம் அப்பாவோட இரண்டு உருவத்தையும் ஒரே மாரி இருக்குரான் டா... உன் ரவி இருக்கானே... அவன் அன்னைக்கு வந்ததால தான டா நீ பொலச்ச... எனக்கு அவன் இன்னோரு புள்ள டா... ரனீஷும் தான்... நா உயிர விட்ரப்போ உங்க அஞ்சி பேர் முகம் தான் வந்துச்சு...ஒவீ மா சித்திய மன்னிச்சிடு டா... உன்ன காப்பாத்த முடியாத பாவி ஆய்ட்டேன் டா...

ரவி ரனீஷிடம்
விக்ரம் : டேய் ரவி ரனீஷ் வீர் .... நாங்க உங்கள பாத்துக்குட்டு தான் டா இருக்கோம்.... உங்கள விட்டுட்டு போய் தப்பு பன்னீட்டோம் டா... மன்னிச்சிடுங்க டா... ஒவீ ரொவீ என்னைக்கு இருந்தாளும் நீங்க என் பொண்ணுங்க தான் டா.. சித்தாவையும் மன்னிச்சிடுங்க டா...

வசன்த் : ரக்ஷா தான்யா ரொம்ப நன்றி மா... உங்களுக்கு அப்பா அம்மா இல்ல ன்னு யாருடா சொன்னது... அப்பா இரெண்டு பேர் அம்மா இரெண்டு பேர் இருக்கோம் டா... உங்கள பாத்துக்குட்டே தான் இருப்போம்....

ஒவீ : நடக்கனும் னு இருந்தத மாத்த முடியாதுல்ல சித்தி... அதுக்கு ஏன் மன்னிப்பு கேக்குரீங்க.??? ரொவீய மட்டும் இல்ல இவங்க ஆறு பேரையும் இனி பாதுகாக்க நா எப்பவும் இவங்க கூட தான் இருப்பேன்... ஏன் மரணத்த நெனச்சி எனக்கு கவலை இல்லை.... இவங்க சந்தோஷமா இருந்தாளே போதும்....

நான்கு ஆத்மாக்களும் வீனாவையும் அவள் உள்ளிருக்கும் ஒவீயையும் ஆரத்தழுவிக் கொண்டனர்... ஆனால் வீனாவாலும் ஒவீயாலும் தான் அவர்களை தொட முடியவில்லை.....

மயங்கியிருந்த ஐவரையும் தாய் தந்தை பாசத்தில் கட்டிக் கொண்டு முத்தம் வைத்தனர்... மயக்கத்திலும் கண்களிள் இருந்து கண்ணீர் வலிந்தது....

இறுதியாய் புன்னகைத்துக் கொண்டே காற்றில் மறைந்து போனார்கள் நாழ்வரும்...

தொடரும்.....

Hiii guys...epdi irukku ud???? na aathma erantha annaikki thirumba varum nu sonnathullam karpanai thaan ppa...Aprm en ivanga varlannu laa kekatheenga... avanga en kanavula kinavula vanthura poraanga.... aprm oru vishaym na oru saavi oru saavu kku innum 1 illa nna 2 uds la end card poda poren... aprm en imsai irikkathunnu laa nimmathi perumoochu vidatheenga... second stry la thirumba ungala meet pannuven.... 😜 tatta

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro