நட்பின் ஆழம் :19
கொடிகளின் அருகே வந்த வீர் சட்டென Break போட்டதைப்போல் நின்றான்... அவன் இதயம் லப்டப் லப்டப் என துடிக்கும் சத்தம் தெள்ளத்தெளிவாய் கேட்டது...முதன்முதலில் தான்யா அருகில் வரும்பொழுது துடித்ததைப்போல் ( அது யாருக்கும் தெரியாமல் நடந்த சம்பவம் மீ(தீரா) க்கும் தெரியாது ப்பா...)இம்முறையும் துடிப்பதை உணர்ந்தவன் தனு இங்குதான் இருக்கிறாள்... ஆனால் எங்கே??? என தேடினான்...
கொடிகளை நகர்த்தி அதன் உள் நுலைந்தவனுக்கு லேசாக சருக்கியது...மேடான பாதை என்பதை அறிந்தவன் நின்ற இடத்திலிருந்தே தன் கண்களை டெலஸ்க்கோப்பாக உபயோகித்தான்...அவன் கண்கள் சரியாக தான்யா பிடித்திருந்த பாரையை அடையாலம் காட்டியது... அவள் கையிலிருந்த R என்னும் எலுத்து வடிவ டட்டூவில் அது தான்யாவேதான் என உறுதிப்படுத்திக்கொண்டான்...சற்று நன்றாக பார்த்ததிலே தெரிந்தது... அவள் தொங்கிக்கொண்டே தல்லாடுகிராள் என்று.... தன்னால் இயன்ற அலவு விரைவாக சென்றவன் ஒரு இடத்தில் சறுக்கி விலுந்து அருகிலிருந்த மரத்தின் வேரை பிடித்து மீண்டும் எலுந்துக்கொண்டான்...வேகவேகமாக இருப்பதிலேயே அழுத்தம் நிறைந்த மற்றும் நீண்ட வேரை கண்டுபிடித்தவன் தன் இடுப்பில் இருக்கிக்கட்டிக்கொண்டான்....
அவன் பள்ளத்தை நோக்கி திரும்பி அவ்வேரை போடப்போன நேரம் சரியாக பிடிக்கமுடியாமல் பாரையை தலரவிட்டாள் தான்யா... கொஞ்சமும் தன்னை பற்றி யோசிக்காமல் சட்டென அப்பள்ளத்தில் குதித்தான்...அவளருகில் வேகம் கொண்டு விழுந்தவன் தன் இடது கரத்தால் அவள் இடையை வளைத்துப்பிடித்து தன் வலது காலை பள்ளத்தின் செவற்றில் ஊன்றி நின்றான்.... விலாமல் தப்பித்தோம் என பெருமூச்சிட்டவன் அவள் கண்கள் திறப்பதைக்கண்டு...." நா இருக்குர வர உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்னு சொன்னேல்ல வந்துட்டேன் பாத்தியா??? எனஅவளிடம் கூறினான்.. அவனைக்கண்டு புன்னகைத்தவள் மெதுவாக கண்களை மூடிக்கொண்டாள்... அவள் மூடும் முன்னே கூற நினைத்தவன் அவள் கண்களை மூடியதன் பின்பே முடித்தான்....I love you Thanu என்ற வாக்கியத்தை....
அப்பொழுதே அவள் முகத்திலும் கழுத்திலும் இருந்த காயத்தை கவனித்தான்... பதறியவன் அவளை அவளின் துப்பட்டாவைக்கொண்டே தன்னோடு கட்டியவன் வேரையும் மறுக்கையில் தான்யாவையும் பிடித்துக்கொண்டு ஏறினான்... வேர்களைப்பிடிப்பதால் கைகள் வலித்தாலும் தான்யாவிற்கு சிகிச்சை அலிக்கவேண்டுமென பொருத்துக்கொண்டான்...தான்யா பிடித்திரிந்த பாரை வரை வந்துவிட்டான்...வலது கரத்தை அப்பாரையின் மேல் அழுத்தி அவளையும் பாதுகாப்பாக மேல் தூக்கினான்....
புலுதியாக இருந்த இடத்தை அடைந்த ரவியும் ரனீஷீம் சுற்றி முற்றி பார்க்க... வீனா கழுத்தை பிடித்தவாரே வந்தாள்...ரக்ஷா எப்பவும் போல் ரனீஷின் கைகளை தன் வசத்தில் வைத்திருந்தாள்...
தான்யாவை தன்னுடன் சேர்த்துக்கட்டியிருந்த அவளின் துப்பட்டாவை அவிழ்த்து... அவன் இடுப்பில் கட்டியிருந்த வேரையும் கலட்டி எரிந்தான்... அவளைத்தன் மடியில் கிடத்தியவன் தன் கர்ச்சிப்பைக்கொண்டு அவள் தலையில் கட்டு போட்டான்... அவள் துப்பட்டாவில் சிறிதாக கிழித்து கழுத்தில் அழுத்தி இரத்தம் வெளியேராதவாறு பிடித்துக்கொண்டான்....
ரனீஷ்: என்ன டா இங்க யாருமே இல்ல...
ரவி: இங்க யாரோ இருந்துர்க்கனும் டா...பாரு இரத்தம் லேசா கொட்டீர்க்கு...
ரக்ஷா: இரத்தமா???
வீனா: ஆமா டி... அங்க பாரு... என ஒரு இடத்தை சுட்டிக்காட்டினாள்...இப்பொழுது வீனாவின் கழுத்தில் ஏற்ப்பட்டிருந்த எரிச்சல் தானாக அடங்கியிருந்தது...
ரக்ஷா: யாராவது ஆபத்துல இருக்காங்களோ???ஹே அங்க பாருங்க டா வீரோட வாட்ச்...
வீனா: இது எப்புடி இங்க வந்துச்சு... அப்போ அவன் இங்க தான் எங்கையோ பக்கத்துல இருக்கான்...
ரனீஷ்: வீர் ....வீர். எங்கடா இருக்க..???
ஆளுக்கொரு பக்கத்தில் அவன் பெயரை ஏலம் போட்டுக்கொண்டிருந்தனர்... வீர் இருக்கும் வரை தான்யாவை எதுவும் நெருங்கவிடமாட்டான் என பயத்திலிருந்து கொஞ்சம் விடுப்பட்டனர் நம் நாயகன்கள்....
தன் மடியில் கிடந்தவளை உலுக்கி எலுப்ப முயன்றான்... எந்த அசைவுமில்லாமல்... ஆழ்ந்த உறக்கத்திள் தள்ளப்பட்டாள் தான்யா.... நேரம் கடப்பது ஆபத்தென உணர்ந்தவன் அவளை தன் கைகளிள் குழந்தையைப் போல் தூக்கி நடக்கத்தொடங்கினான்...தன் நண்பர்களின் ஏலத்தை கேட்டவன் அவர்களை நெருங்கினான்...
கத்திக்கொண்டிருந்த நாழ்வரும் ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தனர்... அங்கு ஒரு உருவம் வந்துக்கொண்டிருந்தது... காற்றின் புலுதியில் அது யாரென இவர்களாள் கண்டுக்கொள்ள முடியவில்லை....புலுதியை விட்டு வெளியே அவ்வுருவம் வந்ததுமே அது வீரென கண்டுக்கொண்டனர்.... அவன் நெற்றியில் இரத்தம் வலிந்துக்கொண்டிருந்தது... அவன் கைகளிள் மயக்கத்தின் பிடியில் இருந்த தான்யாவை கண்டவுடன் பதறிவிட்டனர்....அவளை தூக்கிக்கொண்டு இவர்களை தான்டி சென்றான்...ரக்ஷா ரவி ரனீஷ் மற்றும் வீனா தங்களை இவன் பார்க்கவில்லையோ... முன்னிருப்பவர்களை கண்டுக்கொள்ளாமல் போரானே! !!! என யோசித்துக்கொண்டிருக்க.... அவனோ...
வீர்: அங்க என்ன டா பன்னிக்கிட்டு இருக்கீங்க??? இவள வீட்டுக்கு கூட்டீட்டு போனும் சீக்கிரம் வாங்க டா... உங்களுக்கு தனியா சொல்லனுமா... நீங்களும் வேகமா வாங்க டி... என திரும்பி பாராமல் நடந்துக்கொண்டே கத்தினான்....
அவன் கத்தியதும் நம்மல பாத்துட்டு தா போப்ருக்கான்... என கூறிக்கொண்டே அவனை பின் தொடர்ந்தனர்.... தான்யாவின் நிலையே அனைவரையும் நடுங்க செய்தது... என்ன ஆனது இவளுக்கு??? எப்படி ஆனது..??? இவன் வேர வாய திறக்க மாற்றானே😥 என புலம்பிக் கொண்டே வந்தனர்...ரவிக்கும் ரனீஷுக்கும் உள்ளம் அடித்துக்கொண்டது தான்யா மற்றும் வீரின் நிலையை கண்டு....மதியம் வரை அழகாக சிறகடித்து பறந்துக்கொண்டிருந்தவள் இப்போது வலியில் முகம் சுருங்குவதைக்கண்டு கண்கலங்கி விட்டனர்... 😢😢அவர்கள் இருவர் மனதிலும் எலுந்தது ஒரே விஷயமே... தோழன்களாக மட்டுமல்லாமல் அண்ணண்களாய் தாங்கள் இருவரும் இருக்கும்பொழுது தங்கை அவள் வலியில் துடிக்கிறாளே... ஏன் அவளை பாதுகாக்க தாங்கள் வரவில்லை.... அந்த கடவுல் ஏன் தாமதமாக நமக்கு உணர்த்தினார்... என தங்கள் மீதும் அக்கடவுல் மீதும் கோபத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர்....😡😡😡
(பழகி இரு நாட்களே ஆனாலும் அவ்வாறு பேருக்குள்ளும் இருக்கும் உறவு புனிதமானது...ஒருவருக்காய் ஒருவர் துடிக்கத் தொடங்கிவிட்டனர்....அவர்களின் நட்பின் ஆளம் விண்ணையும் தான்டிவிடும்...)
எப்படியோ வழியை கண்டுப்பிடித்து காட்டைவிட்டு வெளியே வந்தனர்.... திரும்பி அக்காட்டை ஒரு மிரட்ச்சியுடன் பார்த்தவன் கண்களிள் கோபமும் ஒரு ஓரத்தில் தனுவை கண்டுக்கொண்டதில் மகிழ்ச்சியுமிருந்தது....அவனின் பார்வை புதியதாக இருந்தது நம் ரவி மற்றும் ரனீஷுக்கு...😕. என்றும் கனிவும் கட்டுப்பாட்டும் தெரியும் கண்களிள் இன்று கோபம் கொப்பளித்ததை கண்டு குழம்பிப்போயினர்...
அவனை எதுவும் கேட்டு இன்னும் கடுப்பாக்க வேண்டாமென்று தன்னவல்களை சமாதானம் பன்னும் பணியில் இரங்கினர் இருவரும்...
வீரை காயத்துடன் கண்டதுமே துடித்துப்போன வீனாவும் ரக்ஷாவும் அவன் கைகளில் இருந்த தான்யாவைக் கண்டு அழுகவே தொடங்கிவிட்டனர்....😭😭😭 வீர் அவளை பார்க்கும் பார்வை எதையோ உணர்த்தினாலும் அதை இப்போது ஆறாய வேண்டாமென ஓரம் கட்டி வைத்திருந்தனர்...
தன்னவனை கட்டிக்கொண்டு அவன் தோலில் சாய்ந்து கண்ணீர் விட்டவாரே வந்தாள் வீனா...
இன்னோறு பக்கம் ரக்ஷா அழுவதை நிறுத்தாமல் ரனீஷின் தோலில் தன் முகத்தை புதைத்தவாரே வந்துக்கொண்டிருந்தாள்... நம் மூன்று நாயகன்களில் மிகவும் சிறமப்பட்டது ரனீஷே... அழுதுக்கொண்டே இருக்கும் தன்னவளை வலியுடன் நோக்கியவன் அவள் தோல்களை இருக்கிபிடித்தவாறே வந்தான்... வலர்ந்திருந்தாலும் இன்னும் சிறு பிள்ளையாய் இருக்கும் தன்னவலை நினைத்து சிரிக்கத்தோன்றினாலும் தான்யாவின் நிலை அதை தூக்கியெரிந்தது....
ரவி: வீனா ஏன் டி அழுகுர??? தான்யாக்கு ஒன்னும் இல்லை டி...
வீனா: ஏன்டா நமக்கு இப்டிலாம் நடக்குது.???? வீரப் பாத்தியா??? அவனுக்கு தலைல காலுல ன்னு பெரிய பெரிய அடி பற்றுக்கு டா... ஆனா தான்யா வ தூக்கிக்கிட்டு எப்டி இவ்ளோ வேகமா நடக்குரான்...???அவனுக்கும் வலிக்கும் ல டா...
ரவி: அவன் இன்னும் அவன் வலிய உணரல டி... அதவிட பெரிய வலியா தான்யாவோட நிலமை அவனுக்கு தெரியுது... அவளுக்காக தான் அவன் வலிய பொருத்துற்றுகான்... அவன் வீக்கில்ல டி... என்ன வலி இருந்தாலும் வெலிய சொல்லமாட்டான்...ஆனா அவன் Face அ பாத்தாலே நாங்க இரண்டு பேரும்கண்டுப்புடிச்சுர்வோம்...அவனுக்கு வலியிருக்குன்னு... ஆனா இப்போ அவன் முகத்துல கொஞ்சம் கூட வலிக்கான தடயமில்ல... கண்ல தா வலி நெரஞ்சு இருக்கு...
வீனா: அவன் அழுது நாங்க பாத்ததே இல்ல டா... ஆனா இப்போ.???
ரவி: அவன் அழுது பல வர்ஷம் மாச்சு டி...ஆனா இப்போ அழுகுரான் டி...
இருவரும் சொல்வதும் உண்மையே.... தான்யாவைக்கண்டு வீரின் மனம் கதறிக்கொண்டிருந்தது.... அவனே அறியாமல் அவன் கண்களிள் நிற்க்காமல் கண்ணீர் வலிந்துக்கொண்டுதான் இருந்தது😢😢😢....அவன் கண்ணீரில் ஒரு துளி தான்யாவின் முகத்தில் படவும்தான் உணர்ந்தான் தான் அழுதுக்கொண்டிருக்கிறோமென்று....கண்களை அழுத்த துடைத்தவன் வீட்டின் அருகில் வந்துவிட்டோம் உள் செல்லலாமா?? வேண்டாமா??? என யோசிக்க...தன் நண்பர்களையும் தனுவையும் காக்க இவ்வீட்டில் இருந்தால் மட்டுமே முடியுமென வீட்டில் காலடிஎடுத்துவைத்தான்....
எங்கோ திடீரென தோன்றிய உருவம்....அவன் காலடி எடுத்துவைத்ததை எப்படியோ தெரிந்துக்கொண்டது.. " அவள காப்பாத்தீட்டியா???? ஒரு தடவ காப்பாத்தீட்டா? ?? திரும்ப என்னால ஒன்னும் பன்ன முடியாதுன்னு நெனச்சியா??? வருவேன் டா....வருவேன்... உங்க ஆறுபேரையும் சும்மா விட மாட்டேன்.... நா வருவேன்னு தெரிஞ்சும் அந்த வீட்ல திரும்ப காலடி எடுத்து வச்சிட்டீல்ல??? பாக்களாம்... நீ என்ன பன்னப்போறேன்னு....
கோவையில்...
அன்று முழு பௌர்ணமி தன் வீட்டு மாடியிலமர்ந்து அந்த நிலாவைப்பார்த்துக்கொண்டே பணத்தை எண்ணிக்கொண்டிருந்தாள் வனோஜா....
வனோஜா: இந்த குமாரு(Rowdy:5) எங்க போய் தொலஞ்சான்னே தெரியல...பாலா செத்த மறுநாளு பேசுனா... அப்ரம் எனக்கு தகவல் தரேன்னு சொன்னவன ஆலக்கானும்... இதுல அவ வேர வந்துடுவாளோ ன்னு பயமுருத்தீட்டான்... அவ வந்தா என்ன என்ன பன்னீட முடியும் ???? குரு ஜி குடுத்த கயிரு இருக்குர வர என்ன ஒன்னும் பன்ன முடியாது....
அருகிலிருந்த மொபைல் அடிக்கவும் எடுத்து காதில் வைத்தவளுக்கு அதிர்ச்சி....
தான் முதலில் திட்டிக்கொண்டிருந்தவனும் அவனுடன் சேர்த்து பாலாவின் அடியாட்கள் மற்றொரு மூவரும் இறந்து சடலமாக இருக்கின்றனர் என்ற செய்தியை கேட்டு....
போனை அதிர்ச்சியில் கீழே போட்டவள் எலுந்தே நின்றுவிட்டாள்....
வனோஜா: இது எப்புடி நடந்துச்சு??? எவனாவது போட்டானா??? இல்ல அவ திரும்பவும்....
என முடிக்கும் முன்பே தீயின் வாடை அடித்தது... திடிக்கிட்டு திரும்பியவளின் முன் அவள் எண்ணிக்கொண்டிருந்த நோட்டுக்கட்டுகள் தீப்பிடித்து எரிந்துக்கொண்டிருந்தது.....
வனோஜா: ஐயோ என் பணம்...என் பணம்....1 லட்ச்சமாச்சே நா என்ன பன்னுவேன்..என கூக்குரலிட்டால்....
பணத்தை தொடப்போனவலின் கைகளில் ஒரு கை விரல்கள் தீ காயமாய் இடம்பிடித்தது...
வனோஜா: ஆஆஆஆ எரியிதே....
தீக்காயம் பட்டும்
மீண்டும் அப்பணத்தை எடுக்க முன் வந்தாள்...முன்பெரிந்தை விட தீ அதிகமாகியது.... திடீரென அவள் தொடப்போன நோட்டுகள் பாதி கருகியும் மீது கிலிந்துமென இருந்தவையெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு முகம் போல் உருவானது....வனோஜா அருகில் வாயைதிறந்துக் கொண்டு வந்தது....அம்முகத்தை வனோஜாவாள் அடையாலம் காண முடியவில்லை....அது அருகில் வரவும் வெடவெடத்து நின்றுக்கொண்டிருந்த வனோஜாவின் மேல் தீ சுட்டது....அலரத்துடங்கினாள்...அவள் கத்தியது அவளுக்கே கேட்க்கவில்லை பாவம் வனோஜா அவள் என் செய்வாள்.... அவள் கழுத்தை பிடித்திருந்த ஒரு கூர்மையான கையினால்... குரல் வலையத்திலிருந்து சத்தம் வெளிவர மறுத்தது.... திமிரினாள்.... தலையை இடவலமாய் ஆட்டினால்... ஒன்றும் எடுப்படவில்லை நம் உருவத்தின் கைகளிடம்....
உருவம்: நா உனக்கு என்ன பாவம் பன்ன??? ஏன் என்ன கொன்ன????அன்னைக்கு நானும் இப்டிதான அலருன??? கொஞ்சம்க்கூட இரக்கம் வரலையா உனக்கு????
கழுத்தில் அழுத்தம் கூடியது... மூச்சுவிடமுடியாமல் தினறினாள்....
வனோஜா என்ன செய்தால்???? யார் இந்த வனோஜா??? ஏன் நம் உருவம் அவளை கொலை செய்ய முயர்ச்சிக்கிரது???? இனி என்ன நடக்க காத்துக்கொண்டிருக்கிறதோ.??????
தொடரும்......
Hiii ennai ethirpaarthukkondirukum hearts gale....itha ud epdi irukku????epdiyo Thanya va kaappatheeten pa... pothuma???neenga inga kolai merattal vidreenganna ....anga veer mattumillama matha heros heroinsum vanthu enna ethavathu panniduvaanga pola...😰😰😰ennathaan irunthaalum en heroin aa na viduvena 😜😜
Summa bayam katteettu irunthen...inime thaan en attame i mean namma uruvathoda aatam aarambamaga poguthu...👿 poruthirunthu paarunga
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro